தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் அனைவரையும் ஒன்று திரளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இலங்கைப் பேரினவாத அரசின் ஆதரவோடு தம்புள்ள பகுதியில் பௌத்த பிக்குகளால் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாழ்.முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கின்றனர். பாரிய அளவில் மேற்கொள்ள படவிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தை படையினரும், பெருமளவு ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். மானிப்பாய் வீதியிலுள்ள குறித்த பள்ளிவாசலில் இன்று மதிய நேர தொழுகையின் பின்னர் யாழ்.முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எதிரான பதாகைகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். எனினும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறப்போவதை உணர்ந்து கொண்டு அப்பகுதியில்
மத்திய அமைச்சரும், தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்பாளருமான மு.க., அழகிரி மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க.,போட்டியிடுமா என கேட்டதற்க நான் போட்டியிடவில்லை என கூறினார்.ஸ்டாலின் நிகழ்ச்சியில்கலந்து கொள்ளாத உங்களது ஆதரவாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரே என கேட்டதற்கு, தி.மு.க.,வில் நிர்வாகிகள் நீக்கம் என்பது சகஜமான ஒன்று. இங்கு அழகிரியின் ஆட்கள், ஸ்டாலின் ஆட்கள் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கருணாநிதியின் ஆட்கள்தான் எனக் குறிப்பிட்டார். தி.மு,க என்ற
கொத்துக் குண்டுகள் பயன்படுத்துவது உலகளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த தடைகளையும் மீறி இலங்கை ராணுவம் விடுதலைபுலிகளுக்கு ஏதிரான போரின் போது, இந்த கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியது. இன அழிப்பிற்கு மகிந்த ராஜபக்ச அரசு இந்தக் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை அழித்தமை இப்போது ஆதாரபூர்வமாகநிறுவப்பட்டுள்ளது. போர் நடைபெறும் போதே இலங்கை ராணுவம் கொத்துக் குண்டுகளை வீசி அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை இலங்கை ராணுவம் மறுத்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர்,
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தர் சிலைகளும் உடைத்து அகற்றப்பட வேண்டும் எனவும் தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் எந்த அடிப்படைவாத கருத்துக்களையும் தாம் வெளியிடவில்லை எனவும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் கொழும்பு மாநகர சபை ஐக்கிய, மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். நான் எந்த சந்தர்ப்பத்திலும் அடிப்படைவாத கருத்துக்களை வெளியிட்டதில்லை. எனினும் சட்டவிரோதமான அனுமதியற்ற சமய வழிப்பாட்டு தளங்களை அகற்ற வேண்டுமாயின் அனைத்து சட்டவிரோத மத வழிப்பாட்டு தளங்களையும் அகற்ற
ஹிலாரி கிளிண்டன் சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். 5 முதல் 8ம் தேதி வரை அவர் வங்கதேசம் மற்றும் இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். 7ஆம் தேதி இந்தியா வரும் ஹிலாரி கொல்கத்தா மற்றும் தில்லி ஆகிய நகரங்களுக்கும் செல்கிறார். உலகம் முழுவதிலும் உற்பத்தி சுரண்டலில் ஈடுபட்டிருக்கும் அமரிக்கா, அதனை ஆசியாவில் முழுஅளவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர். மத்திய கிழக்கு மற்றும் பால்கன் நாடுகளோடு ஒப்பு நோக்கும் போது ஆசியப் பிராந்தியத்தில் போர் அழிவுகள் குறைந்த
ஒன்றுபடுவதற்கு எதிரான தடை அன்றைய தமிழ்த் தேசியத்தின் பக்கமே இருந்தது. அவர்கள் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக இருந்ததோடு ஏகாதிபத்தியப் பிடிப்புகளைத் தகர்க்கும் சிங்கள முற்போக்கு சக்திகளின் முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விரோத ஐ.தே.க.வை ஆதரிப்பவர்களாக இருந்தார்கள்.
ஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தனி ஈழம் அமைப்பதற்கு 1980களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்களை மீண்டும் தொடங்க வேண்டும். அந்த இயக்கம் திமுகவின் துணை இயக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும். தமிழீழத்திற்காக அகிம்சை வழியில் போராடியவ தந்தை செல்வாவின் வன்முறையற்ற வழியில் அமைதிப்போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும். இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம். ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழி நாளின் இலட்சியம். தமிழீழத்தை
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது. பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயக் கட்டிடம் இனந்தெரியாதோரினால் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்மேளன அலுவலக கட்டிடத்தின் முன் கதவு தீயினால் கருகியதுடன், ஜன்னல் கதவுகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. தம்புள்ளையில் முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான எதிப்பலைகள் உருவாகியுள்ளன. இலங்கை அரச படைகளும் பேரினவாத ராஜபக்ச பாசிச அரசும் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்களைத் தீவிரப்படுத்தியுள்ளது பரவலாகக் காணக்கூடியதாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.