Archive for January, 2010

அமரிக்கத் தூதுவர் தலையீடு : ரனில் விடுதலை, ஏனையோர் காவலில்!

அமரிக்கத் தூதுவர் தலையீடு : ரனில் விடுதலை, ஏனையோர் காவலில்!

இலங்கைக்கான அமரிக்கத் தூதுவர் பட்டானிஸ் தலையிட்டு ரனில் விக்கிரமசிங்கவை தடுப்புக்காவலிலிருந்து  விடுவித்துள்ளார் என பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேளை சிரச தொலைக்காட்சி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீர மாத்தறையில்  அமைந்துள்ள அவரது இல்லத்தில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்படு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  ரூபவாகினி தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் மகள் மற்றும் மனைவி ஆகியோரும் இராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.   இதே வேளை அஸ்கிரிய மகா நாயக்கர்கள் தேர்தலை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more ›
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை நீடிக்க இந்தியா ஆதரவு?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை நீடிக்க இந்தியா ஆதரவு?

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கப்படை நீடிக்க இந்தியா ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் பேசி வருகிறது. ஆப்கன் நிலைமை குறித்து லண்டனில் வியாழனன்று சர்வதேச மாநாடு என்ற பெயரில் அமெரிக்கா ஒரு ஏற்பாட்டினை செய்துள்ளது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பங்கேற்கிறார். இம்மாநாட்டில் அமெரிக்காவின் ஆப்கன் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்தி ருப்பதாகத் தெரிகிறது.

Read more ›
தேர்தல் ஆணையாளர்  வீட்டுக்காவலில்? : முடிபுகள் திரிபுபடுத்தப்பட்டவை?

தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில்? : முடிபுகள் திரிபுபடுத்தப்பட்டவை?

தேர்தல் ஆணையாளர் தேர்தல் முடிபுகள் எதனையும் வெளியிட மறுத்துவிட்டார் என்றும் இதனை ஒட்டி அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் உறுதிப்படுத்தப்ப்பட்டாத தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியான தேர்தல் முடிபுகள் அனைத்தும் இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமன்டின் நிர்வாகப் பிரிவினராலேயே வெளியிடப்படுவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவ்வேளையில் தேர்தல் முடிபுகள் தவறானவையாயின் அவற்றைத் தான் வெளியிட மாட்டேன் என தேர்தல் ஆணையாளர் தேர்தலின் முன்னமே கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதே வேளை, நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் கொழும்பு சினமன் லேக் […]

Read more ›
பிரான்சில் முகத்திரை முக்காடு அணியத் தடை.

பிரான்சில் முகத்திரை முக்காடு அணியத் தடை.

பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும்போது முஸ்லிம் பெண்கள் நிகாப் எனப்படுகின்ற முகத்தை மூடும் முக்காடுகளை அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. ‘கடும்போக்கு மதவாத பின்பற்றல்’ என்று தாங்கள் கூறும் ஓர் விடயம் தொடர்பில் வெளிப்படையான சின்னங்களை அணிகிற அல்லது பயன்படுத்துகிற எவருக்கும் பிரான்ஸில் தங்குவதற்கான வதிவிட அட்டைகள், குடியுரிமை போன்றவற்றை வழங்கக்கூடாது என்றும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என்று கூறுவது பிரஞ்சுக் குடியரசின் விழுமியங்களான மதச்சார்பின்மை, சமத்துவம் […]

Read more ›
இலங்கை ஜனாதிபதித் தேர்தலும்  இந்திய குடியரசு தின விழாவும்!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலும் இந்திய குடியரசு தின விழாவும்!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற  இந்தியாவில் 61-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது   1.61-வது குடியரசு தினவிழா முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் ராணுவவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  நாட்டிற்காக வீர தீர செயல்புரிந்தோருக்கு அசோக்சக்ரா விருதுகளை வழங்கினார். விழாவில் ராணுவத்தை போற்றும்வகையில் ஆயுதம் தாங்கிய பல்வேறு வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. இந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, சபாநாயகர் மீராகுமார், துணை குடியரசுத் தலைவர் அமீத்அன்சாரி, […]

Read more ›
தொடரும்  ஊடக அடக்குமுறை :  இணையங்களுக்குத் தடை

தொடரும் ஊடக அடக்குமுறை : இணையங்களுக்குத் தடை

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் இத்தருணத்தில் இலங்கையில் இயங்கும் இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. லங்காஈநியூஸ், இன்போலங்கா உள்ளிட்ட சில இணையத்தளங்கள் இணைய வழங்குநர்களால் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மக்களின் கருத்தறியும் சுதந்திரத்தை இந்த நடவடிக்கை பெரிதும் பாதிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more ›
ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் வெளியாகின்றன

ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் வெளியாகின்றன

தபால் மூல வாக்குகளுக்கான முடிபுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. மகிந்த அரசினதும் அதன் துணைக்குழுக்கள், அரச படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்ட, ரத்னபுர போன்ற இடங்களில் ராஜபக்ச முன்னணியில் திகழ்வதாகவும், யாழ் மாவட்டத்தில் சரத் பொன்சேகா முன்னணியில் திகழ்வதாகவும் முடிபுகள் வெளியாகியுள்ளன. 67 வீத வாக்குகளை மகிந்த ராஜபக்சவும் , 23 வீத வாக்குகளை சரத் பொன்சேகாவும் பெற்றுள்ள நிலையில் பொதுவாக மகிந்த ராஜபக்சவிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தவிர, இன்று முழுவதும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற பிரச்சாரம் […]

Read more ›
எவரை இலங்கை மக்கள் தெரிவு செய்கிறார்களோ அத்தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா எதிர்பார்த்திருக்கிறது!:இந்திய வெளிவிவகார அமைச்சர்!

எவரை இலங்கை மக்கள் தெரிவு செய்கிறார்களோ அத்தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா எதிர்பார்த்திருக்கிறது!:இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கை மக்களுக்கு நாளை (இன்று) மிகவும் முக்கியமான தினமாகும். ஜனநாயகம் இறுதியில் வெற்றிபெற்றிருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார். தமது விருப்பத்திற்கு இணங்க அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்காக இலங்கை மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எவரை இலங்கை மக்கள் தெரிவு செய்கிறார்களோ அத்தலைவர்களுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா எதிர்பார்த்திருக்கிறது என்று கிருஷ்ணா நேற்று தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை குறிப்பிட்டது.இலங்கையில் இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நேற்று கருத்துத்தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையில் இறுதியாக […]

Read more ›
யாழ்ப்பாணம் தேர்தல் குண்டுவெடிப்பு  : மகிந்த அரசின் உள்நோக்கம்?

யாழ்ப்பாணம் தேர்தல் குண்டுவெடிப்பு : மகிந்த அரசின் உள்நோக்கம்?

யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதே வேளை வன்முறைகள் எல்லை  கடந்தால், தேர்தல் ஆணையாளர் சட்டப்படி தேர்த்லை  ரத்துச் செய்யமுடியும். தேர்தலில் தோல்வியடைந்தால் அதனைச் செல்லுபடியாக்கவே ராஜபக்ச குழு  தனது துணைக்குழுக்களின் அனுசரணையுடன் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

Read more ›
புலிகளின்  உறுப்பினராகும்  உமா  மகேஸ்வரன்  – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ( பாகம் ஆறு) : ஐயர்

புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ( பாகம் ஆறு) : ஐயர்

ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு இணைந்து நானும் ஆட்சேபிக்கிறேன்.

Read more ›