விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதி செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் சரண் அடைவது தொடர்பாக இலங்கை அரசுடன் விஜய் நம்பியார் ஆலோசனை நடத்தினார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிசேல் மொன்டாஸ் கூறியுள்ளார். பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய சென்றபோது ராணுவத்தால் வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தட்டிக் கேட்ட நடேசனின் சிங்கள மனைவியையும் ராணுவத்தினர் கொடூரமாக
காலம் சஞ்சிகையின் ஆதரவில் சுடர் ஏந்திய தொடர் ஓட்டம் மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு 2009 ஜூன்- 6 சனிக்கிழமை மாலை3.00 சிறப்புப் பேச்சாளர்கள் பேராசிரியர் எம்.ஏ. நுகுஃமான் பேராசிரியர் சித்திரலேகா, பேராசிரியர் மௌனகுரு, Scarborough Civic Centre McCowan & Ellesemere 150 Borough Drive, Toronto வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சி காலை 10.00 முதல் மாலை 6.00 வரை நிகழும் தொடர்புகளுக்கு:416-7311752 kalam@tamilbook.com ….”நாற்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்த மஹாகவி பாரதிக்குப் பின்தோன்றி,
வெற்றிக் களிப்பின் ஆபத்தை உணர்ந்து கொள்ளுமாறு இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் பன் கீ மூன் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார். வெற்றிக் களிப்பில் மிதப்பதை விட ஏற்பட்ட வடுவை குணமாக்க இணைந்து கொள்வதே இன்றைய தருணத்தில் பிரதானமானது என மேலும் அவர் தெரிவித்தார். எங்கேயாவது, எப்போதாவது மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்படுவது தொடர்பான நம்பிக்கையான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமானால், அது தொடர்பாக
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. அன்புடையீர், 10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை அவசியமா? நலன்புரி முகாம்களில் வாழும் 10 வயதடைந்த சிறுவர் சிறுமியருக்கு அடையாள அட்டை வழங்க அரசு எடுத்த தீர்மானம் எனக்கு பெரும் குழப்பத்தை தருகின்றது. இலங்கை மக்கள் சிங்கள, தமிழ், இஸ்லாமியர் என்ற வேறுபாடின்றி, நலன்புரி முகாமிற்குள்ளிருந்தாலும் சரி வெளியிலிருந்தாலும் சரி பெற்றோர் இத்திட்டத்தினை விரும்பி வரவேற்க மாட்டார்கள். ஒருவர்
இலங்கை போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை என்ற ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்திருக்கிறது. இலங்கை மோதல்களின் போது அனைத்து தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த முழுமையான விசாரணை தேவை என்று மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அவர்கள் கேட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்த சர்வதேச விசாரணைகள் தேவை என்று கூறிய அவர், அதற்கான ஐ. நா
மார்க்சிய புரட்சியாளர்களால் நிறுவப்பட்ட பாரபுன்டா மார்ட்டி நேஷனல் லிபரேஷன் பிரண்ட் (எப்எம்எல்என்) கட்சியின் தலைவர் மாரிசியோ ப்யூன்ஸ் எல் சால்வடார் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 50 ஆண்டுகளாக முறிந்திருந்த கியூபாவுடனான ராஜீய உறவுகளை மீண்டும் தொடங்கி வைத்து பிறப்பித்த, உத்தரவுதான் மாரிசியோவின் முதல் உத்தரவாகும். அமெரிக்காவுடனான நல்லுறவுகள் தொடரும் என்றும் அவர் அறிவித்தார். மாரிசியோ பதவியேற்பு விழாவில் கியூபா துணை ஜனாதிபதி ஆல்பிரடோ லாசோ, பிரேசில் ஜனாதிபதி லூலா, சிலி ஜனாதிபதி மிச்செல்லி, பேச்சலெட் ஆகியோர் கலந்து
அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் தெரிவித்தார். கட்டபுலாத் தோட்டக் கீழ்ப்பிரிவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்கி ஒடுக்கி விட்டதாக அமைச்சர்கள் மார்தட்டி மகிழ்ச்சியில் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் ஐ.நா. எதனை செய்தது, எதனை செய்யவில்லை என்பது தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்து உள்ளன. ஜூன் 3 இல் (நேற்று முன்தினம்) நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா.வின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ஆதாரபூர்வமான கேள்வி ஒன்றுக்கு ஐ.நா. பதிலளிக்கவில்லை என்று அங்குள்ள “இன்னர் சிற்றி பிரஸ்’ தெரிவித்திருக்கிறது. இன்னர் சிற்றி பிரஸ்: மே 17 இல் விஜேய நம்பியார் தான் இரண்டு விடுதலைப்புலிகளுடன் கதைத்ததாக கூறியிருந்தமை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த இருவரும் சரணடைய முயற்சித்ததாகவும்
இலங்கையில் ஒரு இனமே உள்ளது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என இனங்கள் இல்லையென தெரிவிக்கப்படுவதெல்லாம் பச்சைப்பொய் என தெரிவித்துள்ள இலங்கையின் உயர் பீடமான சட்ட பீடத்தின் தலைமை நீதிபதியான பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வவுனியா அகதிமுகாமில் உள்ள மக்கள் வார்த்தைகளினால் வர்ணிக்கமுடியாத துன்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அவர்கள் நம்மிடம் இருந்து நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு
யுத்தப் பிரதேசங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவர் என்றும் அதன் பின்னரே வழக்கு பற்றித் தீர்மானிக்கப்படும் என்றும் சிறீ லங்கா அரசு கூறுகிறது. விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்ற சந்தேகம் காரணமாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் என்றும், அதன் பின்னர் அவர்கள் மீது வழக்கு நடக்கும்