June, 2009

Page 7 of 10« First...56789...Last »

புலிகளின் தலைமை செய்த தவறுக்கு அதன் உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது: டக்ளஸ் தேவானந்தா.

  விடுதலைப் புலிகளின் தலைமை செய்த தவறுக்கு அதன் உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது. விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் அதன் தலைமைத்துவத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். தற்பொழுது சரணடைந்திருக்கும் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வும், பொதுமன்னிப்பும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் எஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்களும் நம்பிக்கையுடன் சரணடைவார்கள்” என்று டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.   தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை, விடுதலைப் புலித் தலைமைகளின் பிரச்சினையிலிருந்து வேறுபடுவதாகவும், விடுதலைப் புலி உறுப்பினர்களையும், அதன் தலைமையையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  இதேவேளை, தமிழ்

யாழ் மாநகரசபைக்கான முதல்வர் வேட்பாளராக சித்தார்த்தன் நிறுத்தப்படுவார்?

யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நியமிப்பது தொடர்பாக ஆராயப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் இணைந்து யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டணியொன்றை அமைக்குமாயின் யாழ்

நாம் இந்தியாவுடன் பொறிமுறையொன்றை ஏற்படுத்தியிருந்தோம்:கோதபாய.

   இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம்வரை வடக்கின் நிலைமை குறித்து இந்தியாவுக்கு விளக்கிய வண்ணமிருந்தோம். இந்திய அதிகாரிகளுடன் இதுவிடயத்தில்பொறிமுறையொன்றை ஏற்படுத்தியிருந்தோம்  என்று இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ  மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தியா விடுதலைப் புலிகள் மீது அக்கறை காண்பிக்கவில்லை என்பது இலங்கைக்கு தெரியும். புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்பதே அவர்களது எண்ணமுமாக இருந்தது.  இந்தியா இறுதியாக நாம் மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளை வரவேற்றதுடன் உதவியாகவும் இருந்தது என்றும்பாதுகாப்பமைச்சின்

தமிழ் நாட்டை இலங்கை அரசிற்கு ஆதரவாகக் கையாண்ட துணைத் தூதருக்குப் பதவி உயர்வு!

சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றி வரும் அம்ஸாவின் சேவையைப் பாராட்டி அவரை லண்டன் துணைத் தூதராக இலங்கை அரசு மாற்றியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போரின்போது திரைமறைவில் இருந்தபடி இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான ஆதரவைத் திரட்டியவர் அம்ஸா. மேலும், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தபோது அதை சமாளித்ததால் ராஜபக்சேவிடம் இவருக்கு நற்பெயர் கிடைத்தது. இந்த நிலையில், அம்ஸாவின் சேவையைப் பாராட்டும் வகையில் அவரை லண்டனில்

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் மரணம்.

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார்.நேற்றுக் காலை(06.06.2009) நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். தமிழ்ச்சூழலில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்த ராஜமார்த்தாண்டனை இழந்தது எல்லா இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.  கவிஞர் ராஜமார்த்தாண்டனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை இனியொரு தெரிவித்துக்கொள்கிறது.

ஈழத் தமிழ் மக்களுக்கு காந்தி தேசம் என்ன செய்யப் போகிறது?

  நூற்றாண்டு காலமாக புலம் பெயர்ந்திருந்த ஓரினம், இரண்டாம் உலகப் போருக்குப் பின், தங்களுக்கென்றொரு தாய் திருநாட்டைப் பெற்றதும், அதை எப்படி உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார். மூலம் : வீரகேசரி. இவர் அழுத்திக் கூறியிருக்கும் விடயம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழனத்தை நோக்கி, முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கருதலாம்.சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில், சர்வதேசப் பரப்பெங்கும், அதன் நீட்சியை அசைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு, எவ்வாறு

சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைகள் தேவையற்றது : பாலித கோகன்ன

சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து சிறிலங்கா தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கோகன்ன மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமானது தனது முன்னணி நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை. போர்க் குற்றம்

தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் , ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுடன்இணைகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!?

  யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியுள்ளது. இனப்பிரச்சினைக்குப் பொதுவான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ஜனநாயக தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் தாம் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா

போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்

இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் பன் கீ மூன் தெரிவித்துள்ளார். 05/06/2009 அன்று மூடிய கதவுகளுக்குள் நடைபெற்ற பாதுகாப்புச் சபையின் அமர்வில், சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், நம்பத்தகுந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். அங்கு சமூகமளித்திருந்த ஐ.நா அலுவலர்கள் மற்றும் இராஜ தந்திரிகளின் கருத்துப்படி எவ்வாறு

பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்..

பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்..

தமிழீழ விடுதலைப் புலிகளுக்ளின் தலைமை மற்றும் பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்கள் இலங்கை இராணுவத்தின் விசேட படைப் பிரிவுடன் நடாத்திய துப்பாக்கிவேட்டுச் சம்பவங்களின் பின்னர், புலிகளின் தலைமையும் பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களும் சரணடைந்ததாக இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவுடன் நெருக்கமான வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக டெக்கன் ஹெரால்ட் என்ற இந்திய வாரப் பத்திரிகை தெரிவித்துள்ளது நடேசனும் புலித்தேவனும் அவர்களுடைய குடும்பத்தாருடன் வெள்ளைக் கொடிகளை உயர்த்தியபடி சரணடைய முற்பட்டபோது இயந்திரத்துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் முழங்காலில் மண்டியிட்டு கருணைகாடுமாறு மண்டாடியதாகவும், ஆனால்

Page 7 of 10« First...56789...Last »