ஹை புரபைல் தேசியம் எண்டால் காடு மேடுகளையே நடத்துறது? அதெல்லாம் குறுக்கால போன தேசியம் கண்டியளே! வைன் கோப்பையும், லைட் மியூசிக்கும் போட்டு ஐஞ்சு நட்சத்திர ஹொட்டல்ல தேசியம் நடத்துறதைப் போல வருமே?
குந்தியிருக்க குடிசை கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊனமுற்ற போராளிகள், சிதைந்து போன குடும்பங்கள், அனாதைகள் தெருவில நிற்கேக்க ஏன் இந்த ஹை புரபைல் தேசியம் எண்டு கேக்காதையுங்கோ. இதெல்லம் சும்மா ஒரு குசும்பிலதான் இவையள் நடத்தீனம் எண்டு குளம்பாதையுங்கோ.
எல்லாம் விசையத்தோட தான் பாருங்கோ.
சந்திரனில முதல்ல கால் வைத்தவனுக்கு மேல் இண்டைக்கும் கை வைக்க ஏலாது தெரியுமோ? மூக்கிலை மட்டுமல்ல மூக்குக்கு உள்ளையும் விரலை வைச்சு வியக்கிற மாதிரி மாவீரர் பிசினசை ஓகோ என்று லாபத்தில நடத்திக்காட்டின ரீசீசீ கொம்பனிக்கு மேல ஒருத்தரும் கைவைக்க ஏலாது என்று நினைச்சால் தப்பு!
ரீசீசீ இன்ற பிசினசை முன் மாதிரியாகப் பின்பற்றி இப்ப புதிய வியாபாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எல்லாம் லெச்சுமி கடாட்சம் தான் கண்டியளே!
ஒரு காலத்தில ரீசீசீ இன்ற சுருட்டல்ல பங்கு இல்லையெண்டதும் தனியா இயங்கிய தலைமைச் செயலகம் இப்ப ரூம் போட்டு யோசித்ததில் ஹில்லடன் ஹொட்டலைப் போல தேசிய ஹொட்டல் இல்லை என்ற முடிவிற்கு வந்து சேர்ந்தனர்.
வருங்காலத்தில ரீசீசீ தன்ர மாவீரர் தினத்தை தலைமைச் செயலகத்திடம் டெண்டருக்கு விட்டாலும் விடலாம்!
அவங்கள் மெத்தப் பெரியாக்கள் பாருங்கோ! பிசினஸ் அங்குரார்பண நிகழ்வு எண்டால் இப்படித்தான் இருக்க வேணும்! உந்த்த பாழாப்போன போன அப்பாவிச் சனம் அவங்கள் பிசினஸ் செய்யுறாங்கள் எண்டு தெரியாமல் நம்பி நடுத்தெருவில போகுதுகள்!
போகிற போக்கில் மப்பு தலைக்கேற ஹில்டன் கோட்டல் கூரையில நிண்டு போர்க்குற்ற விசாரணை நடத்தினாலும் நடத்துவாங்கள்.