Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

NGO களால் கடத்தப்பட்ட வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு-கற்றுக்கொள்ளல் : சபா நாவலன்

சரியாக ஒரு வருடம். ! பல்தேசியக் கொள்ளைக்காரர்களின் தெருவான வால் ஸ்ரிட்டை ஆக்கிரமிப்போம் என ஆரம்பித்த போராட்டம் 17ம் திகதியோடு தனது ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்தது. ஜனநாயக நாடு என உலகத்தை ஏமாற்றிவந்த உலகத்தின் பேட்டை ரவுடியான அமரிக்காவில் போலீஸ் ஒடுக்குமுறை எல்லை கடந்தது.

17 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் நூற்றுக்கணக்கான மக்கள் மன்ஹாட்டனில் இருக்கும் ஜூகோட்டி பூங்காவில் முகாமிட ஆரம்பித்தனர். உலகம் அவர்களைப் பார்த்தது. கோப்ரட் கொள்ளைக்காரர்களைப் புரிந்துகொண்ட அவர்கள் அங்கே புரட்சி முழக்கங்களோடு முகாமிட்டனர். வீடற்றவர்கள், வேலையிழந்தோர், உழைப்பாளர்கள், மாணவர்கள், பெண்கள் என்று சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பல அங்கங்களைச் சேர்ந்தோர் ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைந்துகொண்டனர்.

பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் தெரிந்தெடுக்கப்பட்ட அடியாட்களுமான அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும், பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்தின் இருதயத்தில் மிதித்துப் போராட்டம் ஆரம்பித்தது.

உறையும் குளிரிலும் போராட்டக்காரர்கள் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். வால் ஸ்ரீட் அருகே இருந்த கிரனைட் வளாகம் அவர்களின் உறைவிடமானது. உலகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் காணப்பட்ட ஒடுக்கப்படும் மக்களுக்கு அது புதிய உத்வேகத்தை வழங்கியது.

போராட்டம் ஆரம்பித்து இரண்டே வாரங்களில் நூற்றுக்கணக்கானோரைக் கோரமாகக் கைது செய்தது அமரிக்கப் போலிஸ். கண்ணீர்ப்புகை, தடியடி, இரத்தம் சிந்தல் எல்லாமே நடந்தது.

ஒக்ரோபர் மாதம் போராட்டம் போராட்டம் புதிய நிலைக்கு மேலெழுந்தது. உலகம் முழுவதும் அதன் அதிவலைகள் கேட்க ஆரம்பித்தது. அதே வேளை அரபு நாடுகள் எங்கும் அமரிக்க ஆதரவு எழுச்சியை விதைப்பதற்குக் காரணாமக அமைந்த ஐவான் மார்கோவிக் இன் தலையீடு அக்ரோபர் மாத நடுப்பகுதியில் ஆரம்பித்தது.

அமரிக்க உளவு நிறுவனமான சி/ஐ/ஏ சார்பகா ‘புரட்சி வியாபாரம்’ நடத்தும் ஐவான் தலைமைதாங்கும் நிறுவனமான OTPOR – the Centre for Applied Non Violent Action and Strategies (CANVAS) வால் ஸ்ரிட் இயக்கத்தை ஆதரிக்க ஆரம்பித்தது. அன்றிலிருந்து அமரிக்க அரசும், பல்தேசிய நிறுவனங்களும் தமக்கு எதிரான எழுச்சியை தாமே தலைமைதாங்க ஆரம்பித்தன.
OTPOR பொறுத்தவரை புரட்சி ஒரு வியாபாரம். இலங்கையில் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தான் இந்த வியாபாரம் சிறிய குழுக்கள் வரை தீவிரமடைந்திருக்கிறது. பலருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது என்பது மர்மாகவே உள்ளது. புரட்சியும் போராட்டமும் நடத்துகிறோம் என்று உலகம் முழுவதும் உலாவருகிறார்கள். சில இணையங்கள் கூட தன்னார்வ நிறுவனங்களின் நிதிக்கொடுப்பனவில் ஆரம்பிக்கப்பட்டன.

சேர்பிய சர்வாதிகாரியான சிலொபொடன் மிலோசவிச் இன் ஆட்சியக் கவிழ்ப்பதற்கும் அமரிக்காவின் பொம்மை ஆட்சியை நிறுவுவதற்கும் அமரிக்க அரசின் நிதி உதவியோடு தோற்றம்பெற்றது OTPOR அமைப்பு. 2003 ஆம் ஆண்டு வரை நீடித்த இவர்களின் உள்நாட்டு இருப்பு அதன் பின்னர் சர்வதேச ‘புரட்சி வியாபாரத்திற்கு’ வந்தது.

National Endowment for Democracy (NED), International Republican Institute (IRI), and US Agency for International Development (USAID) ஆகிய அமரிக்க நிதி உதவி நிறுவனங்களிட்மிருந்து பெருந்தொகையான பணத்தை மிலோசவிச்சின் வீழ்ச்சிக்குப் பிறகும் பெற்றுக்கொண்ட இந்த அமைப்பு, உலகமு முழுவதும் அமரிக்காவின் ஆதரவு எழுச்சிகளை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

துனிசியாவில் அரபு நாடுகளின் முதல் ‘புரட்சி’ ஆரம்பித்த போது அதனைத் தலைமை தாங்கிய ‘அமரிக்க சார்பு ஜனநாயக கொள்ளைக்காரர்களுக்கு’ பெல்கிரேட்டில் பயிற்சி வழங்கியது இந்த அமைப்பு. உள்நாடுகளில் புரட்சி வியாபாரிகளையும், அவர்களால் ஏமாற்றப்பட்ட மத்தியதரவர்க்க அணிகளையும் கண்டறிவதற்கு பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களை வழங்கி அமரிக்க உளவு நிறுவனம் உதவியது.

அமரிக்க அரசினதும், பல்தேசிய நிறுவனனங்களதும் நேரடியான கட்டுப்பாட்டினுள் இயங்கும் போர்ட் (Ford foundation) அமைப்பும் அமரிக்க அரசையே இயக்குவதாகக் கருதப்படும் ரொக்கபில்லர் (Rockefeller) அமைப்பும் வால் ஸ்ரிட்டை ஆக்கிரமிக்கும்(Occupy Wall Street) இயக்கத்திற்கு நிதி வழங்க இதே காலப்பகுதியில் ஆரம்பித்துவிட்டன என்கிறார் இது குறித்து நூல் ஒன்றை வெளியிட்ட மைக்கல் ஷொசுடோவ்ஸ்கி.

இதன்பின்னர் அடிப்படையான மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்த முடியாத வெறும் சுலோகங்களை மட்டும் உச்சரிக்கும் இயக்கமாக மாறிவிட்டது வால் ஸ்ரிட்ட் இயக்கம். அதன் தலைவர்களில் பலர் நிதி நிறுவனங்களால் நியமிக்கப்பட்டனர். வால் ஸ்ரிட்டால் நியமிக்கப்பட்ட, அதன் கைப்பொம்மையான ஒபாமாவின் பொருளாதாரத் திட்டங்களைக் கூட ஆதரிக்கும் நிலைக்கு இந்த இயக்கம் வந்துவிட்டதாக அமரிக்க ஊடகவியலாளர் தனது குறிப்பில் குறிப்பிடுகிறார்.

Ford Foundation இன் ஆரம்ப கர்த்தாவும் அதன் அதிபருமான மக் ஜோர்ஜ் பனி (McGeorge Bundy ) அமரிக்க அதிபர் ஜோன் எப் கெனடியின் பாதுகாப்பு ஆலோசகர். அவர் பின்வருமாறு கூறுகிறார். நாம் செய்தெல்லாம் சமூக அழுத்தங்களைக் குறைத்து பாதுகாப்பான முதலாளித்துவத்தை உருவாக்குவதே என்கிறார்.(“Everything the [Ford] Foundation did could be regarded as “making the World safe for capitalism”, reducing social tensions…)

நிதி உதவியையும் கொள்கைக்கட்டமைப்பையும் தன்னார்வ நிறுவனங்களில் பணிபுரியும் அர்ப்பணிப்புடையோருக்கு வழங்குவதன் ஊடாக, ஆளும் வர்க்கம் அடிமட்ட சமூகங்களிலிருந்து இணைத் தலைமையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தனது நூலில் போல் கிவெல் என்பவர் குறிப்பிடுகிறார்.(Paul Kivel, You Call this Democracy, Who Benefits, Who Pays and Who Really Decides, 2004, p. 122 )

1970 களின் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கட்சிகள் உட்பட பல அமைப்புக்கள் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டதாக மைக்கல் ஷொசுடோவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.

ஒன்றரை தசாப்தங்களாக ஒரு புரட்சிகர அமைப்பத் தலைமை தாங்கிய நேபாளத்தின் ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா இன்று ஒரு தன்னார்வ நிறுவனத்தின் இணைத்தலைவர் என்கிறார் தோழர் ரிஷி ராஜ் பரால்.

முதலாளித்துவத்திற்கு எதிரான கருவிகளை -பெருந்திரளான தொழிலாளர்களை, நவீன தொழில் நுட்பத்தை, அறிவியலை – முதலாளித்துவமே உருவாக்கித் தன்னை அழித்துக்கொள்கிறது என்றால் கார்ல் மார்க்ஸ். இன்று அதே கருவிகளை தனது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தும் வேலையை திட்டமிட்டு மேற்கொள்கின்றது உலக முதலாளித்துவம்.

புரட்சிக்கும் மக்கள் போராட்டத்திற்கான சூழல் உலகம் முழுவதும் காணப்படுவதாகப் புரிந்துகொண்ட ஏகாதிபத்திய அரசுகளும் அவற்றை இயக்கும் பல் தேசிய நிறுவனங்களும் மக்கள் எழுச்சிகளையும் போராட்டங்களையும் தமது கட்டுப்பாட்டிற்கு உட்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

இவை இரண்டு வகைப்படும்.
1. உருவாகும் மக்கள் இயக்கங்களை, மக்கள் எழுச்சிகளை உள்வாங்கிக்கொள்ளல்
2. மக்கள் இயக்கங்கள் போன்றவற்றைத் தாமே உருவாக்குதல்.

ஏகாதிபத்தியங்களால் உள்வாங்கப்பட்ட அல்லது தோற்றுவிக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் பின்வரும் அடிப்ப்டைப் பண்புகளைக் கொண்டிருக்கும்.
1. அழிவுக்கும், விட்டுக்கொடுப்பிற்கும், சரணடைவிற்கும் தயாராக இருக்கும்.
2. ஏகாதிபத்தியங்களது நேரடி மறைமுக நோக்கங்களுக்கு எதிராக திசைப்படுத்தப்படாமல் இருக்கும்.

இவற்றிலிருந்து பல்வேறு நோக்கங்களை அவர்கள் நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
1. உலகில் புரட்சிகரச் சக்திகளையும் இயக்கங்களையும் இனம்கண்டு அழித்தல் அல்லது பலவீனமடையச் செய்தல்.
2. மக்கள் எழுச்சிக்கான சூழலை உருவாக்கி அல்லது உள்வாங்கி தமக்கு ஆதரவான அரசியலை முன்னெடுத்தல்.
3. புரட்சிகர அரசியல் தலைமை ஒன்று உருவாகும் அனைத்து சந்தர்ப்பங்களையும் அழித்தல்.
4. உலகம் முழுவதும் தமக்கு விசுவாசமான உளவாளிகளைத் தோற்றுவித்தல்.
5. போராட்ட சக்திகளைத் தனிமைப்படுத்தல்.
6. பாசிச அரசியல் போக்கு தோன்றும் நிலையை ஏற்படுத்தல்.
7. பொம்மை ஆட்சியாளர்களையும் அரசுகளையும் போராட்ட அழுத்தங்களை வழங்கி தோற்றுவித்தல்.

போன்ற பல நோக்கங்களை தன்னாவ நிறுவனங்களுக்கு ஊடாகவும், புரட்சி வியாபாரிகளுக்கு ஊடாகவும் ஏகாதிபத்தியங்கள் நிறைவேற்றிக் கொள்கின்றன. இவற்றிற்கு உட்படாத கட்சிகளும், தனி மனிதர்களும் தனிமைப்படுத்தப்பட்டும், பலவீனப்படுத்தப்பட்டும், கொலைசெய்யப்பட்டும் இல்லாமல் ஆக்கப்படுகின்றனர்.

உறுதியான வர்க்க அரசியல் தலைமையை உருவாக்குவதும் அத்தலைமை போராட்டங்களைத் தலைமை தாங்குவதுமே இவற்றை எதிர்கொள்ளும் கோட்பாட்டு வழிமுறை.

ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உறுதியான தலைமையற்ற எந்தப் போராட்டமும் பலம் மிக்க ஏகாதிபத்திய நிதி மூலதனத்தால் இலகுவில் உள்வாங்கப்படலாம் என்பது வால் தெருமுனையில் நாம் கற்றுக்கொள்ளும் பாடம்.

எது எவ்வாறாயினும் போராட்டங்கள் தோன்றும் போதும், எழுச்சிகள் உருவாகும் போதும் அதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார், அதன் அரசியல், சமூக மாற்றம் குறித்த அவர்கள் முன்வைக்கும் அரசியல், நிதி வளம், உள் நாட்டு வெளி நாட்டு அரசியல் தொடர்புகள், முக்கிய உறுப்பினர்களின் நிதி மற்றும் அரசியல் பின்புலம் போன்றவற்றின் அடிப்படையிலிருந்தே அவை குறித்த முடிவுகளுக்கு முன்வரலாம்.

21 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகப் போராட்டங்களையும், வர்க்கப்போராட்டங்களையும், புரட்சிகளையும் அழிக்கும் வழிமுறைகள் என்பன குறித்த மிகத் தெளிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வால் ஸ்ரிட் போராட்டங்கள் போன்ற பல போராட்டங்களை நாம் காண்கிறோம், இந்ப் போராட்டங்களில் பங்காற்றும் உழைக்கும் மக்கள் அப்பாவிகள். இவர்களைப் பயன்படுத்தும் ஏகாதிபத்திய முகவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்.
பாரிஸ் கம்யூன் புரட்சி தோற்றுப் போகும் என்று அறிந்திருந்தும் கார்ல் மார்க்ஸ் அப்போராட்டத்தில் தனது முழுமையான பங்களிப்பை வழங்கினார். இது சிறந்த முன்னுதாரணம். எமது காலத்தில் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு மத்தியில் சில விரிவாக்கங்களுடன் பாரிஸ் கம்யூன் அனுபவம் பின்பற்றப்பட வேண்டும்.

சமூக அக்கறை உள்ளவர்களும் போராட்டங்களை முழுமையாக ஆதரிப்பதும் பங்களிப்பதும் அவற்றை ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து விடுவிப்பதும் வால் ஸ்ரிட்டிலிருந்து கூடங்குளம் ஈறாக வன்னி வரை பொருந்தும்.

தொடர்புடைய பதிவுகள்:

‘புரட்சி’ வியாபாரம் – The revolution business
நேபாளப் புரட்சியின் பின்னடைவிலிருந்து படிப்பினைகள்
தன்னார்வ நிறுவனங்கள்(NGO) – எரியும் உலகம்!
சிவில் சமூகமும்; என்.ஜி.ஓ சமூகமும் :திருமுகன்
பின் – புலி அரசியல் – NGO களின் பொற்காலம்
இலங்கை இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் அமரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம்!
Against the NGO/INGO Project
Another article
The Drawback Of Nepal’s Revolution : The NGO’s Harvest

 

 

சில நிதிவழங்கும் நிறுவனங்களின் பண வலிமை கீழே தரப்படுகிறது. இது வெறுமனே ஒரு உதாரணம் மட்டுமே. 2012 ஆம் ஆண்டில் இவற்றின் வலிமை பலமடங்காகும்.

Funding From Foundations
& Corporations

Total Donated

Time Frame
Ford Foundation $2,612,500.00 1994 – 2006
Rockefeller Brothers Fund $2,320,000.00 1995 – 2005
Charles Stewart Mott Foundation $1,391,000.00 1994 – 2005
McKnight Foundation $1,056,600.00 1995 – 2005
Joyce Foundation $748,000.00 1996 – 2004
Bush Foundation $610,000.00 2001 – 2006
Bauman Family Foundation $600,000.00 1994 – 2006
Great Lakes Protection Fund $580,000.00 1995 – 2000
John D. & Catherine T. MacArthur Foundation $554,100.00 1991 – 2003
John Merck Fund $490,000.00 1992 – 2003
Harold K. Hochschild Foundation $486,600.00 1997 – 2005
Foundation for Deep Ecology $417,500.00 1991 – 2001
Jenifer Altman Foundation $366,500.00 1992 – 2001
Rockefeller Foundation $344,134.00 2000 – 2004
Educational Foundation of America $300,000.00 1991 – 2005
Wallace Global Fund $299,884.00 1998 – 2005
Warsh-Mott Legacy $240,000.00 1997 – 2004
Beldon Fund $225,000.00 2003 – 2005
Marisla Foundation $215,000.00 1999 – 2005
Turner Foundation $204,000.00 1995 – 2001
Energy Foundation $200,000.00 1999 – 2005
Pew Charitable Trusts $200,000.00 1994 – 1994
Surdna Foundation $200,000.00 2001 – 2003
Unitarian Universalist Veatch Program $195,000.00 1999 – 2004
Albert A. List Foundation $190,000.00 1997 – 2003
C. S. Fund $183,500.00 2001 – 2005
Jessie Smith Noyes Foundation $178,000.00 1991 – 1998
Blue Moon Fund $175,000.00 1998 – 2001
Doris Duke Charitable Foundation $150,000.00 1998 – 1998
Schumann Center for Media & Democracy $150,000.00 1992 – 1996
David H. Smith Foundation $150,000.00 2002 – 2002
Wallace Genetic Foundation $145,000.00 1995 – 2000
Richard & Rhoda Goldman Fund $135,000.00 2000 – 2005
Moriah Fund $115,000.00 2000 – 2003
U.S. Environmental Protection Agency $108,500.00 2001 – 2001
Carolyn Foundation $106,000.00 2000 – 2006
Heinz Endowments $100,000.00 1997 – 1997
Quixote Foundation $100,000.00 2002 – 2006
Winslow Foundation $95,000.00 1998 – 2004
Rockefeller Family Fund $82,500.00 1991 – 2003
Minneapolis Foundation $76,000.00 2001 – 2006
New Tudor Foundation $75,000.00 1999 – 1999
Rockefeller Philanthropy Advisors $71,774.00 1997 – 2001
Norman Foundation $65,000.00 1991 – 1992
Park Foundation $62,000.00 2000 – 2005
Summit Charitable Foundation $50,000.00 1999 – 1999
Prentice Foundation $45,000.00 1998 – 2000
Weyerhaeuser Company Foundation $45,000.00 2003 – 2004
Laird Norton Endowment Foundation $43,000.00 1998 – 2000
Minnesota Office of Environmental Assistance $40,305.00 2000 – 2001
Otto Bremer Foundation $40,000.00 1999 – 2002
Solidago Foundation $38,000.00 1997 – 1999
U.S. Department of the Interior $38,000.00 1998 – 1998
W.K. Kellogg Foundation $35,550.00 1992 – 1992
Ruth Mott Fund $35,000.00 1992 – 1992
Kurz Family Foundation $35,000.00 1998 – 1999
Farm Aid $29,200.00 1998 – 2004
Henry P. Kendall Foundation $25,000.00 1994 – 1994
Columbia Foundation $25,000.00 2003 – 2003
Home Depot Corporate Contributions Programs $25,000.00 2004 – 2004
Merck Family Fund $20,096.00 1997 – 1997
Laura Jane Musser Fund $20,000.00 2000 – 2003
Mitchell Kapor Foundation $20,000.00 1998 – 1998
Trust for Mutual Understanding $20,000.00 2002 – 2002
Mertz Gilmore Foundation $20,000.00 1991 – 1991
George Gund Foundation $20,000.00 1998 – 1998
James Ford Bell Foundation $20,000.00 1996 – 1998
Compton Foundation $15,000.00 1999 – 1999
CarEth Foundation $15,000.00 2000 – 2000
Samuel Rubin Foundation $15,000.00 1997 – 2006
North American Fund for Environmental Cooperation $13,000.00 1998 – 1999
Lazar Foundation $10,000.00 1999 – 1999
Shared Earth Foundation $10,000.00 2000 – 2000
Fred Gellert Family Foundation $10,000.00 2000 – 2000
Curtis & Edith Munson Foundation $10,000.00 2005 – 2005
Arca Foundation $10,000.00 1998 – 1998
J. M. Kaplan Fund $7,500.00 2003 – 2003
Patagonia, Inc. $7,000.00 2001 – 2001
Vanguard Public Foundation $5,000.00 2001 – 2001
Common Counsel Foundation $5,000.00 2005 – 2005
Gap Foundation $5,000.00 1998 – 1998
ZZYZX Foundation $5,000.00 2000 – 2000
Funding From Other
Activist Groups

Total Donated

Time Frame
Tides Foundation & Tides Center $323,678.00 1992 – 2002
Center for Health, Environment and Justice $146,527.00 1999 – 2001
Center for Public Interest Research $142,326.00 2000 – 2001
Environmental Defense $70,863.00 2001 – 2001
Exit mobile version