Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

நடுநிலைமைத் தேசியவாதியின் பின்னால் புதைந்திருக்கும் மர்மங்கள் : ஈழ மாறன்

cvw1985/86 காலப்பகுதி... தொடர்ச்சியான உண்ணாவிரதங்கள், பகிஸ்கரிப்புகள் மூலம் இலங்கை அரசை பணிய வைத்து பயங்கரவாத்த் தடைச் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப் பட்ட எங்கள் மீது விசாரணை மேற்கொள்ள வைக்கிறோம். அங்கிருந்த பலருக்கு குற்றப் பத்திரிகை வருகிறது. வெலிக்கடை சிறையில் தமிழ் பகுதியில் நாம் எல்லோரும் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறோம்.
என்னுடன் சேர்த்து இன்னும் சிலர் ஒரே குற்றத்தின் கீழ் 1984 மாசி மாத்த்தில் கைது செய்யப் பட்டோம். என்னை விசாரிக்கும் நீதிமன்ற எண் மூன்று. நீதிபதியின் பேர் சேனநாயக்க. ( பேர் சரியாக ஞாபகம் இல்லை) என்னுடன் பிடிபட்ட இன்னொரு இளைஞனை விசாரிக்கும நீதிமன்ற எண் ஆறு. ( இலக்கம் சரியாக ஞாபகம் இல்லை) நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன்.
எம்மீது சுமத்தப் பட்ட குற்றம். ஏதேனும் சுடுபடைக் கலங்களை வைத்திருந்தமை, அல்லது வைத்திருந்தவர்களைத் தெரிந்திருந்தும் மா..... (இடத்தின் பெயரைத் தவிர்க்கிறேன்) என்ற நியாதாதிக்க எல்லைக் குட்பட்ட பிரதேசத்தில் உள்ள பொலிசில் அறிவிக்கத் தவறியமை என்பதே. எனக்கும் என் நண்பனுக்கும் வழங்கப் பட்ட குற்றப் பத்திரிகையில் இவ்வாறே இருந்தது. இது பிரிஏ 13 ஆவது பிரிவில் ஆ பிரிவுக்குள் வருவதால் நீதிபதி ஒரு நாளில் இருந்து அதிக பட்சம் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கலாம்.
என் மீதான தீர்ப்பை வழங்கிய சேனநாயக்க இவ்வாறு சொன்னார்" நீர் ஒரு மாணவன் என்பதாலும், உமக்கு ஒரு வளமான எதிரகாலம் உண்டு என்பதாலும், இனிமேல் இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிப்பதோடு, படிப்பைத் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு இரு வார கால சாதாரண சிறைத் தண்டனை அளிக்கிறேன்" என்பது.
அதே குற்றத்திற்கு எனது நண்பனுக்கு தீர்ப்பளித்த விக்னேஸ்வரன், " அரசுக்கெதிரான மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடு பட்டமைக்காக( வசனம் முழுமையாக ஞாபகம் இல்லை) உமக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறேன்"

மேற்குறித்த தகவல்  உறுதி செய்த பின்பே வெளியிடப்படுகிறது. ஈழமாறனின் தகவல்க்ளை வெளியிடுவதற்கான பொறுப்பை இனியொரு... ஏற்றுக்கொள்கிறது.

சுத்திச் சுத்தி கடைசில கஜேந்திரன் பொன்னம்பலத்தின்ர படலைக்கே சைக்பிள் ஓடுறார் நடுநிலை தவறாத பழைய நீதிவான் விக்கி. அம்மாவாணை, ( கஜேந்திரனுக்குத்தான் அம்மாவாணை என்று சத்தியம் செய்யேலுமே) ஏன் இந்தாளை முதலமைச்சர் வேட்பாளராய் கொண்டு வந்தாங்கள், ஓடி ஓடி கூட்டம் வைச்சு ஏன் முதலமைச்சராக்கினாங்கள் எண்டு இண்டை வரைக்கும் விளங்கேல்லை.

இந்தாளின்ர சட்டம் சம்பந்தமான அறிவை அகற்றிப் போட்டு மீதி இருக்கிறது என்ன என்று பார்த்தால் மிஞ்சிறது களி மண் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தெரியாத்து அந்தக் களி மண்ணில ஒரு காளான் கூட முளைக்காது என்பது. ஐயா இன்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அதில பிரதானமாக அவர் சொல்வது, தான் இந்தத் தேர்தலில் நடுநிலமை வகிக்கிறாராம்.

அம்மாவாணை நடுநிலமை என்றால் என்ன? உங்கள் செயல், நடவடிக்கைகள், கருத்துக்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ ஒருவரை,ஒரு குழுவை அன்றி ஒரு தரப்பை சாடுவதாகவோ அல்லது ஆதரிப்பதாகவோ அமையாது இருப்பது தானே. அட ஓலெவல் ஒண்டுக்கு மூண்டுதடவை பெயில் பண்ணின எனக்கு விளங்குது உங்களுக்கு விளங்காதே. அப்ப இந்த முன்னாள் நீதிபதிக்கு நான் வகுப்பெடுக்கேலுமே எது நடு நிலமை என்று.

இப்பதான் விளங்குது இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியா இருக்கும் போது எப்பிடி நடுநிலையிலிருந்து தீர்ப்பு வழங்கினவர் என்று. அதுக்கு முதல் ஐயாட நடுநிலமையை கொஞ்சம் பாப்பம்.

” இதனால் தான் நான் கட்சிக்கு அப்பால், கொள்கை நிலை கொண்ட நேர்மையான, பற்றுறுதி கொண்ட விலைபோகாத, தூரநோக்குப் பார்வை கொண்ட…….” கனம் கோட்டார் அவர்களே தொடர்ந்தும் இந்த இத்துப் போன அறிக்கையை வாசித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை. ஐயா எனக்கு சட்டம் தெரியாது. ஆனால் மேல் குறிப்பிட்ட வாக்கியங்களை சுலோகங்களாக்க் கொண்டு பரப்புரை செய்யும் கட்சி புலம் பெயர் வியாபாரிகளின் முகவர் கஜேந்திரனின் கட்சி. அப்படியான கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறினால் கனம் கோட்டார் அவர்களே, இது பக்க சார்பான அறிக்கை இல்லையா?

இப்படியே கஜேந்திரன் புலம் பெயர் வியாபாரிகள் எடுத்த வாந்தியை யாழ்ப்பாணத்தில கொட்ட அதை அள்ளித் தின்று வாந்தி எடுக்கும் இவரது நடுநிலமையை என்ன சொல்வது?

1985/86 காலப்பகுதி. தொடர்ச்சியான உண்ணாவிரதங்கள், பகிஸ்கரிப்புகள் மூலம் இலங்கை அரசை பணிய வைத்து பயங்கரவாத்த் தடைச் சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப் பட்ட எங்கள் மீது விசாரணை மேற்கொள்ள வைக்கிறோம். அங்கிருந்த பலருக்கு குற்றப் பத்திரிகை வருகிறது. வெலிக்கடை சிறையில் தமிழ் பகுதியில் நாம் எல்லோரும் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறோம்.

என்னுடன் சேர்த்து இன்னும் சிலர் ஒரே குற்றத்தின் கீழ் 1984 மாசி மாத்த்தில் கைது செய்யப் பட்டோம். என்னை விசாரிக்கும் நீதிமன்ற எண் மூன்று. நீதிபதியின் பேர் சேனநாயக்க. ( பேர் சரியாக ஞாபகம் இல்லை) என்னுடன் பிடிபட்ட இன்னொரு இளைஞனை விசாரிக்கும நீதிமன்ற எண் ஆறு. ( இலக்கம் சரியாக ஞாபகம் இல்லை) நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன்.

எம்மீது சுமத்தப் பட்ட குற்றம். ஏதேனும் சுடுபடைக் கலங்களை வைத்திருந்தமை, அல்லது வைத்திருந்தவர்களைத் தெரிந்திருந்தும் மா….. (இடத்தின் பெயரைத் தவிர்க்கிறேன்) என்ற நியாதாதிக்க எல்லைக் குட்பட்ட பிரதேசத்தில் உள்ள பொலிசில் அறிவிக்கத் தவறியமை என்பதே. எனக்கும் என் நண்பனுக்கும் வழங்கப் பட்ட குற்றப் பத்திரிகையில் இவ்வாறே இருந்தது. இது பிரிஏ 13 ஆவது பிரிவில் ஆ பிரிவுக்குள் வருவதால் நீதிபதி ஒரு நாளில் இருந்து அதிக பட்சம் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கலாம்.

என் மீதான தீர்ப்பை வழங்கிய சேனநாயக்க இவ்வாறு சொன்னார்” நீர் ஒரு மாணவன் என்பதாலும், உமக்கு ஒரு வளமான எதிரகாலம் உண்டு என்பதாலும், இனிமேல் இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிப்பதோடு, படிப்பைத் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு இரு வார கால சாதாரண சிறைத் தண்டனை அளிக்கிறேன்” என்பது.

அதே குற்றத்திற்கு எனது நண்பனுக்கு தீர்ப்பளித்த விக்னேஸ்வரன், ” அரசுக்கெதிரான மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடு பட்டமைக்காக( வசனம் முழுமையாக ஞாபகம் இல்லை) உமக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறேன்”

நடுநிலமை மாறாத ஐயாவின் விளையாட்டு விளங்குதோ இப்ப. அன்று சிங்கள நீதிபதி இரண்டு வாரம் கொடுத்த அதே குற்றத்திற்காக அதி உச்ச தண்டனையான ஐந்து வருடங்களைக் கொடுத்த நடுநிலமையாளர் இவர். அமெரிக்கா வந்தவர் லண்டன் ஊடாக போகும் போதே அவரது நடுநிலமை படு மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது என்பதை ஊகிக்க உலக வங்கி ஆளுனர் வர வேண்டியதில்லை.

அப்படியாயின் இவர் கஜேந்திரனுக்கு ஏன் சைக்கிள் ஓட்டுறார். கணக்கு வெரி சிம்பிள். மகிந்த ஆட்சிக்கு வரவேணும். அதுக்கு தமிழ் மக்களின்ர வாக்கு சிதறி பிரதிநிதித்துவம் குறையோணும். அப்பிடி நடந்தா மகிந்தவை இனவாதம் பேச வைக்கலாம். அப்பிடிப் பேசினா ஈழத்தில மக்கள் மத்தில கொதி கிளம்பும். கிளம்பினா அமெரிக்கா தீர்மானம் அது இது எண்டு ஏதாவது கொண்டுவரும். கொண்டு வந்தா புலம் பெயர் புலி அழிச்ச வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். பிடிச்சா பங்காளியள் எல்லாருக்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.

நரிக் கதை ஞாபகம் இருக்கா?

நாலு நரிகள். ஒரு நரிக்கு ஒரு மேல் வீட்டு நாய் நல்ல பழக்கம். அந்த நாயை சந்தித்த போது அது நரியிடம் சொன்னதாம், என் எஜமானின் மகளுக்கு கலியாணம். வீட்டுக்கு ஒரு இரவு வா நல்லாப் பலகாரம் சாப்பிட்டுப் போகலாம் என்று. நரி கேட்டதாம் எப்படி உள்ளே வருவது? நாய்: இரண்டு நாள் பட்டினி கிட, மெலிந்து விடுவாய் யன்னல் வழியாஉ உள்ளே வரலாம். யாரும் காணமாட்டாரகள் என்று.

நரி மற்றைய மூன்று நரிகளிடம் விடயத்தைச் சொல்லி கேட்டது. மூன்றும் ஒரே மூச்சில் மறுக்க இந்த நரி மெலிந்து பலகாரம் உண்ண சென்றது. யன்னல் ஊடாக உள்ளே சென்ற நரி பலகாரத்தைப் போட்டுவாங்கியது. நரியின் குணம் என்ன. வயிறு நிறைந்தால் ஊழையிடும். இந்த நரியும் ஊழை இட்டது.் எஜமானுக்கு கேட்டதால் விரைந்து அறைக்குள் சென்றால் அங்கு நரி. கையில் கிடைத்த கட்டையால் செம சாத்து. வயிறு முட்ட சாப்பிட்டதால் யன்னல் வழியாக தப்பிக்க முடியவில்லை. பின்னர் கதவைத் திறந்து விட ரத்தம் வழிய வழிய மற்றைய நரிகள் இருந்த இடத்திற்கு போனது. இந்த நரியைப் பார்த்த மற்றைய மூன்றும்,.

நரி1: கூடாத கூட்டங்கள் கூடுவானேன்

நரி2: கூடினாலும் பரவாயில்லை, கூடங்கள் மாடங்கள் ஏறுவானேன்

நரி3: ஏறினாலும் பறுவாயில்லை நாதங்கள் கீதங்கள் இசைப்பானேன்.
இங்க ஒருத்தர் நாதங்கள் கீதங்கள் இசைத்திருக்கிறார். கூடாத கூட்டத்துக்கு வாக்களிக்கச் சொல்லி. அன்று உச்ச தண்டனையில் இருந்து என் போன்ற நூற்றுக் கணக்கான இளைஞர்கள் தப்பிக்க முடியவில்லை. நடுநிலையில் நின்று தீர்ப்புச் சொல்ல வேண்டியவர் படு மோசமான மனநிலையில் நின்று, தனித் தமிமீழம் கோரி, சுயநிர்ணய உரிமை கேட்டு சிறைப் பட்ட எங்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுத்து அரச விசுவாசத்தைக் காட்டியவர் இன்று வடக்கு கிழக்கு மக்களுக்கு சுயநிர்ணயம் பற்றி வகுப்பெடுக்கும் கேவலம் வேறெங்காவது நடந்திருக்கிறதா மக்களே.

இந்த நடுநிலை பிறள்ந்த நீதவானுக்கு 17 ஆம் திகதி நல்ல தீர்ப்பை மக்களே நீங்கள் வழங்கினால் நாம் அடைபட்டுக் கிடந்தது போல் நீங்கள் சிறைப்பட வேண்டி வராது.

கஜேந்திரனின் பொறுப்பு எரிப்பது, புடுங்கிற பொறுப்பு புலம்பெயர் நாடுகளில்:ஈழமாறன்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் - இரத்தக் கறைபடிந்த வரலாறு
வல்லூறுகள் எச்சரிக்கை!... ஏன் தேர்தலைப் புறக்கணிப்பது அவசியம்?
தேர்தலில் வாக்களிப்பது தேசியத்திற்கு எதிரானது!
Exit mobile version