Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஈரான் அணு விஞ்ஞானி  மோசென் பக்ரிசாதே  படுகொலை!

This photo released by the semi-official Fars News Agency shows the scene where Mohsen Fakhrizadeh was killed in Absard, a small city just east of the capital, Tehran, Iran, Friday, Nov. 27, 2020. Fakhrizadeh, an Iranian scientist that Israel alleged led the Islamic Republic's military nuclear program until its disbanding in the early 2000s was “assassinated” Friday, state television said. (Fars News Agency via AP)

ஈரான் நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக விளங்கிய அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே   மர்ம நபர்கள் ஐந்து பேரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஈரானின் அப்சார்ட் நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது வழி மறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஈரானின் ராணுவ  ராஜதந்திரியான சுலைமானி கொல்லப்பட்ட பின்னர் ஈரான் அரசுக்குக்கு ஏற்பட்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய இழப்பாகும் இது. மோசென் பக்ரிசாதே  அடிப்படையில் இயற்பியல் பேராசிரியர். ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப்படையின் ஆலோசகராகவும் உயரதிகாரியாகவும் இருந்தார். ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில்  செல்வாக்கு மிக்க நபராக விளங்கியவர் மோசென் பக்ரிசாதே .மேலும் ஈரான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார்.

1989- ஆம் ஆண்டு அமத் என்ற பெயரில் ரகசியமாக துவங்கப்பட்ட ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு தலைமையேற்று அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்தவர்   மோசென் பக்ரிசாதே . இந்த திட்டத்தைத்தான் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்த்து வந்ததோடு ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளும் விதித்தன.

1989-ம் ஆண்டில், அமத் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட ரகசிய திட்டத்துக்கு இவர் தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த அமத் திட்டம் மூலம் தான், இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமத் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு கைவிடப்பட்டது என்கிறது சர்வதேச அணு சக்தி கழகம்.

ஆனால் அமத் திட்டம் ரகசியமாக தொடர்ந்தது என்று கூறும் இஸ்ரேல் பிரதமர், 2018-ம் ஆண்டில், இஸ்ரேல் திரட்டிய ரகசிய ஆவணங்களின் அடிப்படையில், மொஹ்சென் ஃபக்ரிஸாதே அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை முன்னெடுத்ததாகக் குறிப்பிடுகிறார்.

இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின்  நெதன்யாஹு ஒரு முறை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து பேசும் போது, “ ஈரானிய அணு ஆயுத திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே வின் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று வெளிப்படையாகவே பேசினார். அவர் பேசிய பின்னர் பக்ரிசாதேவின் பாதுகாப்பை ஈரான் அரசு வலுப்படுத்தியிருந்தது.

இந்த ஆண்டு துவக்கத்தில்  ஜனவரி 3-ஆம் தேதி  ஈரான்  அதி உயர் இராணுவ தளபது குவாசிம் சுலைமானி ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட பின்னர். ஈரான் அரசு நிர்வாகத்திற்குள் மொசாட் உளவாளிகள் எந்த அளவு ஊடுறுவியுள்ளார்கள் என்பது குறித்து விசாரிக்க ஈரான் உத்தரவிட்டது. குவாசிம் சுலைமானி  தொடர்பாக உளவுத்தகவலை பரிமாறிக் கொண்ட ஒருவருக்கு மரண தண்டனையும் விதித்தது ஈரான் அரசு.

இப்போது அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே  கொல்லப்பட்டுள்ளதற்கு பழிவாங்குவோம் என ஈரான் அதிபர் அயதுல்லா அலி கொமேனியின் ராணுவ ஆலோசகர்  ஹொஸ்ஸியன் தெரிவித்துள்ளார்.மேலும் ஐநாவுக்கான ஈரான் தூதர்  மஜித் தத்த் ரவன்சி இக்கொலை ப

ற்றி தெரிவிக்கும் போது,

“இந்த படுகொலை தெளிவான சர்வதேச அத்துமீறல் இந்த பிராந்தியத்தில் அழிவைக்  கொண்டு வரவே இந்த படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேல் நாட்டுக்கு முக்கிய பங்கு இருப்பதாகத் தெரிகிறது” என்கிறார்.

2015-ஆம் ஆணு ஐநாவின் நிரந்தர உறுப்பு நாடுகளோடு ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர்  தன்னிச்சையாக விலகினார்.  அது முதல் ஈரான் மீது  பொருளாதார தடை விதிக்கப்பட்டு வருவதோடு ஈரானின் முக்கிய நபர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இது மத்தியகிழக்கிலும் உலக அளவிலும் போர் சூழலை உருவாக்கலாம்.

Exit mobile version