நான்கு தசாப்தங்கள் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரம் ஆயிரமாய் மக்களையும் போராளிகளையும் பலிகொடுத்த பின்னர் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளும் வகையில் நயவஞ்சகத்தனமாக நடத்தப்படும் தேர்தலில் தம்மை இணைத்துக்கொண்டுள்ள கட்சிகள் தேசியவாதக் கட்சிகள் அல்ல. போராளிகளதும் மக்களதும் தியாகங்களையும் இழப்பையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தும் பிழைப்புவாதிகளே.
தேர்தலில் வாகளித்தால்,
1. இலங்கைப் பேரினவாதப் பாசிச பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்வதாக உலகத்திற்கு அறிவிக்கப்படும்.
2. இதுவரை நடைபெற்ற பாராளுமன்ற வழிகளை ஏற்றுக்கொள்ளாத போராட்டங்களை நிராகரிப்பதாக உலகத்திற்குச் சொல்லப்படும்.
3. பாராளுமன்ற வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது, நடைபெற்ற ஆயுதம்தாங்கிய தற்காப்பு யுத்தம் போர்க்குற்றம் என ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் குற்றம் சுமத்த வாய்ப்பளிக்கபடும்.
4. பாராளுமன்ற வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது போராடி மடிந்தவர்களை பயங்கரவாதிகள் என சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
5. போலித் தேசியவாதிகளின் பேரழிவு நோக்கங்களை ஏற்றுக்கொண்டதாக உலகத்தின் மக்களுக்குச் சொல்லப்படும்.
6. 35 வருடங்களுக்கு முன்பிருந்த நிலைக்கு மக்கள் மீண்டுவிட்டதாக உலகமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
7. போருக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பாராளுமன்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதாக அமைந்துவிடும்.
தேர்தலைப் புறக்கணித்தால்,
1. பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை ஏற்றுக்கொள்ள்வில்லை என உலக மக்களுக்கு அறிவிக்கப்படும்
2. இதுவரை நடைபெற்ற பாராளுமன்ற வழிமுறைகளை ஏற்றுக்கொள்ளாத போராட்டங்களை மக்கள் நிராகரிக்கவில்லை என உலகத்திற்குச் சொல்லப்படும்.
3. ஆயுதம் தாங்கிய தற்காப்பு யுத்தம் போர்க்குற்றமல்ல என மக்கள் உலகிற்கு அறிவிப்பதாக அமையும்.
4. போராடி மடிந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல மக்களின் சொத்துக்கள் என சிங்கள மக்கள் உணர ஆரம்பிப்பார்கள்.
5. போலித் தேசியவாதிகளின் பேரழிவு நோக்கங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என மக்களுக்குச் சொல்லப்படும்.
6. 35 வருடங்களுக்கு முன்பிருந்த அரசியல் சூழ்நிலைக்கு மக்கள் மீட்சியடைய விரும்பவில்லை என்று உலக மக்கள் உணர ஆரம்பிப்பார்கள்.
7. கைதுசெய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டவர்கள் போருக்குப் பின்னான பாராளுமன்ற ஆட்சியால் விடுதலை செய்யப்படாமையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என சிங்கள மக்களும் உலகமும் உணர ஆரம்பிக்கும்.
போரை முன்வைத்துப் பிழைப்பு நடத்திய சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களின் பதவி மற்றும் வியாபார நோக்கங்களுக்கு எதிராக அவர்களின் முகத்தில் அறைந்தது போல வாக்களிப்பதைப் புறக்கணிப்பதே தேசியத்தின் இருப்பை உலகத்திற்குச் சொல்வதாக அமையும்.
மேலதிக பதிவுகள்: