Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: சுதர்சன்

amirதமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு நேற்று -26/08/2015- தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையின் இன்று நடத்தப்பட்டது.

1949 ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்ட இளைஞன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1952 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பாராளுமன்றம் செல்வதற்காகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்புசார் அரசியல் தலைவர்கள் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் நடுத்தரவக்கக் குடும்பத்திலிருந்து தோன்றிய உள்ளூர்த் தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற ஆரம்பித்திருந்தார்.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற அமிர்தலிங்கம் மரணிக்கும் வரை பாராளுமன்ற அரசியல்வாதியாகவே காலத்தை நகர்த்தினார்.

1977 ஆம் ஆண்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகித்தார்.

இந்திய அரசு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இராணுவக் குழுவை தமிழர் விடுதலைக் கூட்டணி ஊடாக உருவாக்க முற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆயுதப் போராட்டக் குழுவாக இந்திய அரசு இக்குழுவைப் பயிற்றுவிக்க முனைந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகர்த்தா எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசன் ஊடாக இந்திய அரசு இராணுவப் பயிற்சி வழங்குவதற்கு கூட்டணியிடமிருந்து 500 இளைஞர்களைக் கோரியது. 1982 ஆம் ஆண்டு இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. .
தமிழர் விடுதலக் கூட்டணியால் இளைஞர்களைத் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டதும், ஏற்கனவே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறிய இராணுவக் குழுக்களை இந்திய அரசு சந்திரகாசன் ஊடாக அணுகியது.

ஒவ்வொரு குழுக்களும் தமது பலத்தை இந்திய அரசிற்குக் காண்பிக்கும் நோக்குடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஈ.பி.ஆ.எ.எப் தனது மாணவர் அமைப்பான கெஸ் ஊடாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது, வடக்குக் கிழக்கு எங்கும் சுவரொட்டிகளை ஒட்டிற்று. பல வெளியீடுகள் ஊடாக தமது பலத்தை நிறுவ முற்பட்டது.
ரெலோ அமைப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது தலைவர்களை விடுவிக்க முயற்சி செய்து இராணுவப் பயிற்சி முகாமொன்றில் பயிற்சியெடுக்க ஆரம்பித்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலாலி வீதியில் இராணுவத் தொடரணி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி தமது பலத்தை நிறுவ முற்பட்டனர்.

அதன் பின்னர் 1983 ஆம் ஆண்டு ரெலோ, ஈ.பீ.ஆர்.எல்.எப், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்திய இராணுவப் பயிற்சியை எதிர்த்து புளொட் அமைப்பு வங்கம் தந்த பாடம் என்ற நூலை வெளியிட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் மக்கள் அமைப்புக்களான கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் மன்றம், ஈழப் பெண்கள் முன்னணி ஆகியவற்றின் மத்தியில் இந்திய அரச தலையீட்டுக்கு எதிரான கடுமையான போராட்டங்கள் தோன்றின.

ஈ,பி,ஆர்,எல்,எப் தலைமையிலிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பத்மநாபா ஆகியோருடன் இவ்வமைப்புக்களில் பணியாற்றிய பலர் முரண்பட்டு உட்கட்சிப் போராட்டங்களை ஆரம்பித்தனர், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிற்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் அதிகாரப் போட்டி ஏற்பட்டது.

இந்திய இராணுவப் பயிற்சியால் வீக்கமடைந்த இயக்கங்கள் அரசியலற்ற இராணுவக் குழுக்களாக மாறின. இயக்கங்களிடையே சிறிய மோதல்கள் ஆரம்பித்திருந்தன.

அதே வேளை இந்தியாவிலிருந்து யாழ்பாணம் திரும்பிய அமிர்தலிங்கம் நல்லூரில் பொதுக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார். அக்கூட்டம் தமிழீழ விடுதலை புலிகளால் கைக்குண்டு வீசிக் கலைக்கப்படது.

அதன் பின்னர் கொழும்பில் சென்று குடியேறிய அமிர்தலிங்கம் 1987 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இன்று கஜேந்திரகுமார் குழு ஒரு நாடு இரண்டு தேசம் என்று தேர்தலில் குதித்தது. அன்று அமிர்தலிங்கம் தமிழீழம் என்பதே முடிந்த முடிபு என்றார். அதற்காக உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அஜீவன் என்பவரின் இணையத்தில் காணக்கிடைத்த அமிர்தலிங்கம் அவர்களின் நேர்காணல் கீழே தரப்படுகிறது.

அன்னிய தேசங்களின் அடிமைகளாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தை அடகுவைக்கும் நிகழ்ச்சி இனப்படுகொலைக்குப் பின்னர் தீவிரமடைந்தது. இன்று முழுமையாக ஏகாதிபத்தியங்களின் காலடியில் முழுத் தமிழர்களின் பலி கடாக்களாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version