Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காற்று விற்பனைக்கு – இழி நிலையை பாரீர்

விவசாயத்தை கைவிட்டுவிட்டு, எமக்கு தேவையான பொருட்களினை, முதலாளித்து நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறோம். எமது கிணறுகளை இழந்துவிட்டு, நீருக்காக போத்தலில் அடைக்கப்பட்ட நீரினையும் அவர்களிடமே இருந்து வாங்குகிறோம். தற்போது, உங்களுக்காக முதலாளித்துவம், தமது இலாப வெறிகொண்ட தீவிரவாத செயற்பாடுகளால், காற்றினை மாசுபடுத்தியதன் பின்னர், காற்றினையும் விற்க தொடங்கியிருக்கும், இழி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இன்னமும், வளர்ச்சியும், பணமும் சம்பாதித்து என்னத்தை காணப்போகிறோம்? யோசிக்கவைக்கும் ஆளமான செயற்பாடான, இயற்கையின் இலவசம் அனைத்தும், தற்போது முதலாளிகள் ஆக்கிரமிப்பு. நிமிர்ந்து, நாம் எம்மை அவ்வாறு, மயக்க நிலையில் வைத்து, எம்மையும், இயற்கை அன்னையினையும், எதிர்காலத்தையும் அழிக்கும் இவைகளை பற்றி, அறிந்து, உணர்ந்து, எதிராக, போராட‌,  எமது உரிமைகளுக்காக‌ போராட எப்போது வெளியே வரப்போகிறோம்?

மக்களின் பகுத்தறியும் திறன், இப்படி இழி நிலையில் இருக்கும் எனில் இயற்கை அன்னையின் சீற்றத்திற்கு ஆளாகியாக‌வே வேண்டும்.

நிறுவனங்கள், சீனாவில் இயற்கை வாயுவினை, காற்றினை மாசுபடுத்தியதனால், தற்போது அம்மாசில் இருந்து தம்மை காக்க மக்கள், காற்றினை பணம் கொடுத்து வாங்குகிறார்களாம். தமிழ்நாடு மற்றும் இலங்கையிலும் இதே போன்ற நிலை, நிறுவனங்களால் ஏற்படுத்தப்படும் அளவிற்கு, அவற்றின் செயற்பாடுகள் சூழலுக்கு அழிவினை ஏற்படுத்துகின்றன. இருந்த போதும், மக்களோ, அவை பற்றி எள்ளளவும் அக்கறையின்றி நடந்துகொள்வது கவலைக்குரியது என்பதுடன், அவ்வாறான நிறுவனங்களை வீழ்ச்சி அடைய செய்யும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தத்தினை தருகின்றது. சுன்னாகத்தில், வெலிவேரியாவில் மற்றும் உலக நாடுகள் எங்கும் நீரினை மாசுபடுத்தி, தற்போது நீர் மேலாண்மையினை மக்களிடம் இருந்து நிறுவனங்களிற்கு கைமாற்றியதை போன்று, தற்போது இலவசமாக கிடைக்கும் காற்றினை கூட அடைத்து விற்கும் அளவிற்கு நிறுவனங்களின் கொடிய தீவிரவாதம் எல்லை மீறி செல்கிறது. அதனை, ஊடகங்களின் உதவியுடன், வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதை போன்று மெதுவாக மக்களிடம் சேர்த்து, அதன் பாரதூர தன்மையை, மற்றும் சூழல் அழிக்கப்பட்டதை, அழிக்கப்படுவதை, மக்கள் ஏற்றும் கொள்ளும் அளவிற்கு இழிவான நிலைக்கு, மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது அப்பட்டமான உண்மை. நிறுவனங்களும், அவற்றினால் இயக்கப்படும் அரசுகளும், தாம் செய்யும் தீவிரவாதம் மிக்க, வெறுமனே இலாபத்தினை மட்டும் தரக்கூடிய செயற்பாடுகளை, ஏதேச்சகாரமாக, தம்மால் இயக்கப்படும் ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள் துணை கொண்டு, நிறுவன செயற்பாடுகள், மக்களிற்கும், நாட்டிற்கும், எதிர்காலத்திற்கும், நன்மையையும் இலாபத்தையும் தருவன என்று போலி வார்த்தை கூறி, அழிவினையே நியாயப்படுத்தி, மாபெரும் அழிவினை நடத்துவதை மக்களாகிய நாம் வெறும் பார்வையாளர்களாக, வாக்காளர்களாக ஏற்றுகொள்கிறோமா? ஆனால், அப்படி நாம் ஏற்றுகொள்கிறோம் எனும் போது அவற்றால் இயற்கை
அன்னை சீற்றம் அடைந்து, நம்மை அழிப்பதனையும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.

அத்துடன் விவசாயம், உணவு உற்பத்தியும் நிறுவனமயப்படுத்தப்பட்டு, உடன் உணவு எனும் போர்வையில், உணவும் நச்சூட்டப்பட்டு, உணவு மேலாண்மையும் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொதித்து எழுந்து போராடி, தமது உரிமையை வெல்லவேண்டிய மக்களோ, ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், நிறுவனங்களால் இயக்கப்படும் அரசுகள் மற்றும் அரசசார் நிறுவனங்களின் ஏமாற்று செய்திகள் மற்றும் தகவல்களை நம்பி, மயக்க நிலையில் தாம் ஏதோ சாதிப்பதாக நினைத்து, தாம் அழிக்கப்படுகின்றோம் என்பதனை கூட பகுத்து அறியாது, ஏமாளிகளாக இருப்பது கண்டு வருந்த மட்டுமே எங்களால் முடிகிறது.

ஏனெனில் போராட அழைத்தால், மக்கள் தமக்கு தமக்கு, பல வேலைகள் இருக்கிறது என்கின்றனர். வாழ்கின்ற சூழல் அழிக்கப்பட்ட பின்னர், நாம் பணத்தையோ, பண்டத்தையோ சப்பிடமுடியாது. மக்களே உணர்துகொள்ளுங்கள். நாம் தற்போது, நவீன உலகம் எனும் போலி மாயாக்குள் தள்ளப்பட்டு, உண்மையில், அழிவின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உணருங்கள். போராட வெளியே வாருங்கள்.

இது பற்றிய செய்தி குறிப்பு

  1. http://usuncut.com/climate/chinas-smog-is-so-bad-its-started-buying-bottled-air-from-canada/
  2. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/china/12051354/Chinese-buy-up-bottles-of-fresh-air-from-Canada.html?utm_campaign=Echobox&utm_medium=Social&utm_source=Facebook
Exit mobile version