வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 16 இளம் பெண்களையும் பார்வையிட இதுவரை எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோரமான மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள இனப்படுகொலையில் இராணுவத்தினர் வவுனியா இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரம் வரையான இராணுவத்தினர் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களின் வன்முறை கலந்த மனநோயின் காரணமாக அவர்கள் வைத்திய சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்திற்கு இணைக்கப்பட்ட பெண்கள் இராணுவ மனநோய் வைத்தியசாலையில் இராணுவ மனநோயாளர்களோடு பணியாற்ற கட்டளையிடப்பட்டதாகவும். அவர்களின் வன்முறை காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இனியொருவிற்கு தெரிவிக்கப்பட்ட தகவல் குறிப்பிடுகிறது.