Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வை.கோ திருந்தவில்லை : கருணாநிதி

தமிழர்கள் விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தெரிவித்து இருந்த வைகோவுக்கு பதில் அளித்துள்ள கருணாநிதி ”வைகோ இன்னமும் திருந்த வில்லை” என்பதைத் தான் கட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மூவரின் தூக்கை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென திமுக ஆட்சியில் கடைப் பிடித்த முறையை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் வைகோ.

நான் அப்போது செய்ததையும், இப்போது சொன்னதையும் அவர் நினைவூட்டிய போதிலும், என்னையும் ஜெயலலிதாவையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கூறி தனது ஆத்திரத்தைக் கக்கியிருக்கிறார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
தமிழ் இனவாத வியாபாரிகள் மக்களை ஏமாற்ற முன்வைக்கின்ற இனவாத முழ்க்கங்களும் அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலும் அழிக்கப்படும்வரை வை.கோ, ஜெயலலிதா, கருணாநிதி என்ற யாருமே திருந்தப்போவதில்லை. வன்னிப் படுகொலை நடைபெற்ற வேளையில் ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து அரருவருப்பான அரசியல் நாடகம் ஆடிய கருணாநிதி மேலும் தெரிவிக்கையில்,
கழகத்திலே ஆற்றிய பணிக்காக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி, அருகிலேயே வைத்திருந்து பாராட்டிய நானும் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்து கழுத்தறுப்பு வேலை செய்த ஜெயலலிதாவும் வைகோவுக்கு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக தெரிகிறார்கள் என்றால், அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதைத் தான் காட்டுகின்றது. பூனை இளைத்தால் எலி கூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழி அல்லவா?” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

மூவரையும் தூக்கிலிட வேண்டும் : ஜெயலலிதா அரசு – ராமதாஸ் கண்டனம்

காணவில்லை! : யுவகிருஷ்ணா

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் :  தோழர் மருதையன்

ஜெயலலிதாவின் வெற்றியின் பின்னான அரசியல் – ஒரு எச்சரிக்கை : கேசவன்

தூக்குக் கயிற்றில் தனது சுயரூபத்தைக் காட்டிய ஜெயலலிதா!

ஜெயலலிதா மறுபடி மாறிவிட்டார்?

சட்டமன்றத் தீர்மானம் – ஜெயாவின் கபட நாடகம் – புலி ரசிகர்களின் விசில்

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்-”ஜெ” யின் திருத்திய பதிப்பு – எதுவரை?

கே.பி யை வழிமொழியும் ஜெயலலிதா : மீண்டும் தவறிழைக்கும் புலி சார் அமைப்புக்கள்.

Exit mobile version