இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் லைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பவர் கிரிஸ் ரூட்லி. இதற்கு முன்னதாக இந்த நிறுவனத்தின் இயக்குனராகக் கடமையாற்றிய மிலின்ட் கங்லே என்ற இந்தியர் இந்தப் பதவியிலிருந்தார். லைக்கா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இப்பதவிலிருந்த கங்லேயை கடாசிவிட்டு ரூட்லியைப் பதவியில் நியமித்திருப்பதெல்லாம் எமக்குத் தேவையற்ற விவகாரம். கங்லே பத்துவருடங்களின் பின்னர் பெப்ரவரி மாதம் 14ம் திகதி நிறுவனத்திலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டுவதற்காக இலங்கை அரசுடன் லைக்கா ஏற்படுத்திக்கொண்ட ஏமாற்று வியாபார வியாபார நிறுவனமான ஸ்கை நெற்வேர்க் நிறுவனத்தில் கூட கங்லே தான் நிர்வாக இயக்குனர். லைக்கா பரிவாரங்களுடன் சதா வலம்வந்த கங்லே காணாமல் போனதும் ரூட்லி-Chris Tooley- இன் ரூட் கிளியராகி அவர் அதி உச்ச நிலையை அடைந்துள்ளார்.
(Note: தமிழ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் விஜய் ரீவி என்ற தமிழ் மற்றும் ஆங்கிலக் கொலைச் சாதனத்தைப் பார்த்து ஆட்கொள்ளப்பட்டதால் சோளனின் தமிழில் ஆங்கிலம் புகுந்து விளையாடுவதற்கு மன்னிக்கவும்.)
கிரிஸ் ரூட்லியும் பணம் சுருட்டுவதற்காக ராஜபக்ச குடும்பம் ஆரம்பித்த ஸ்கை நெற்வேர்க்கின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து ‘பெருமைகள்’ பெற்றவர். நாமல் ராஜபக்ச என்ற கேவலமான ரவுடியுடன் இணைந்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு ஆங்கிலம் கூறும் நல்லுலகத்திற்குப் ‘பெருமைகள்’ சேர்த்தவரும் இந்த ரூட்லியே! லைக்காவின் இன்றைய பெரியவர் கிரிஸ் ரூட்லிக்கு லண்டனில் நடந்துதிரிய ஒதுக்குப் புறமான இடம் கிடக்காமல் இலங்கைக்குக் ரிக்கட் போட்டு நாமலுடன் நடைப்பயணம் போயிருக்கிறார். லைக்காவில் முக்கிய பதவி வகித்த் போது அந்த நிறுவனம் சார்பாகவே நடைபோட்டிருக்கிறார் ரூட்லி. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்த இந்த நடைப்ப்யணத்திற்கு பீபை பிக் வோக் என்று வேறு பேயர் சூட்டி சோளனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிவிட்டார்கள்.
புலம்பெயர் அமைப்புக்களால் ‘வெள்ளைத் தேசியத் தலைவராக்கப்பட்ட’ டேவிட் கமரனின் கட்சிக்கு மில்லியன்களை வாரி இறைத்து வரிகொடாமல் வயிறுவளர்த்த லைக்கா, தனது பணத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டி ராஜபக்ச குடும்பத்தையே சுற்றிச் சுற்றி வரும் மர்மத்தை செல்லச் சன்னிதி முருகன் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
நாமல் ராஜபக்சவுடன் நடந்துவந்து அலுவலகத்தில் குந்திய ரூட்லிக்கு வழங்கப்பட்ட பதவி தான் தலைமை நிர்வாக இயக்குனர்.
சேவை செய்கிறோம் என்ற தலைப்பில் எலும்புத் துண்டுகளை அப்பாவி மக்களுக்கு எறிந்துவிட்டு முழு மாட்டையும் சுருட்டிக்கொள்ளும் பல்தேசிய நிறுவனங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு லைக்காவின் சேவையின் தேவையைப் பற்றியும் தெரிந்திருக்கும். மல்ட்டி நாஷனல் கோப்ரட் வியாபாரிகள் என்றால் இப்படித்தான் என்று அமைதியாக இருக்கலாம். இங்கு பிரச்சனை அதுவல்ல, சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் உள்ளே நுளைந்து ராஜபக்ச கிரிமினல் குடும்பத்தோடு இணைந்து குத்தாட்டம் போடக் கோருவதுதான் சிக்கல்.
இந்த சிதைப்பின் அடுத்த கட்டம்தான் கத்திக்குத்து. ஏற்கனவே அழிந்து போயிருக்கும் தமிழர் பண்பாட்டின் முன்னேறிய பகுதிகளைக் கூட அழிக்கும் தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளை கையப்பிடித்து லைக்கா அழைத்து வருகிறது வியப்பிற்கு உரியதல்ல.
இதெல்லாம் என்னப்பா என்று கேட்டவர்களுக்கு லைக்காவின் சினிமா மாமாவான ஐங்கரன் நிறுவனத்தின் கருணாகரமூர்த்தி விளக்கம் வேறு அளித்துள்ளார்.லைக்கா குழுமம் இலங்கை விமானப்படை விமானத்தில் உலா வந்ததை மட்டும் ‘தெளிவுபடுத்தியுள்ளார்’. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் இலங்கை சென்று அவர் படித்த முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றோம் என்கிறார். அதுவும் படு பிஸியாகிவிட்டதால் இலங்கை அரச ஹெலிகொப்டரில் பிரயாணம் செய்தோம் என்கிறார். இலங்கை அரசாங்கத்துடன் வியாபாரம் செய்கிறோம் என்பதெல்லாம் வந்தந்தி என்கிறார். அக்கு வேறு, கறள் பிடித்த ஆணி வேறாக புட்டுப்புட்டு வைத்த பின்னரும் கருணாகர மூர்த்தி சென்னையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கத்தி படம் வந்தால் கப்சிப் ஆகிவிடுங்கள் என்று பழ.நெடுமாறனையும், சீமானையும் கேட்பதற்காக இயக்குனர் முருகதாசும், ஐங்கரன் மாமாவும் மேலுள்ள தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளனர். ஈழத் தாய் இறுதியாக ஈன்ற செல்வங்களுடன் நடந்த பேச்சுக்களில் நீங்கள் யாருக்கும் பயப்படத்தேவையில்லை என லைக்காவிற்குக் கூறப்பட்டுள்ளதாக ஐங்கரன் கருணாகரமூர்த்தி செவ்வாய் மலர்ந்தருளியுள்ளார்.
ஹெலிக்கொப்டரில் போய் இறங்கியது மட்டுமா பிரச்சனை? லைக்கா இலங்கை அரசாங்கத்துடன் எப்படியெல்லாம் குத்தாட்டம் போடுகிறது என்று பல தடவை கூறப்பட்டுள்ளது. ரூட்லி விவகாரம் ‘பில் இன் த பிளாங்ஸ்’ மட்டும் தான். இனக்கொலையாளி ராஜபக்ச பிரித்தானிய எஜமானர்களால் கொமல் வெல்த் தலைவராக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு லைக்கா பணம் வழங்கியதிலிருந்து தானே பிரச்சனையே தொடங்கியது.
கத்தி வருகிறது என்று கருணாகரமூர்த்தி பேஸ் புக்கிற்கு வெளியால் ஆட்களைப் பிடித்து லைக் போட முயற்சிக்கிறார்.லைக்கிற்கு லைக், பேஸ்புக் கலாச்சாரப் பண்பு என்பதால் நெடுமாறனும் சீமானும் மறு-லைக் போட்டுவிட்டார்கள்.
ஈழப் போராட்டம் லைக்காவும் இன்னோரன்ன வியாபாரிகளும் வழங்கும் பணத்தில் வீறு நடை போடுகிறது. இப்ப எல்லாம் போராட்டங்களுக்கு சனம் வராதபடியால் பஸ் கொம்பனி பிஸ்னஸ் கூட நடத்த முடியாமல் காலம் கெட்டுப்போய்க் கிடக்கு. இந்த நேரத்தில் உந்தக் குறுக்கால போன புலம்பெயர் தவளையள் லைக்கா கத்தி என்று கத்துகின்றன என நமது தேசிய வியாபாரிகள் நொந்துகொள்வது சோளனின் காதுகளில் கேட்கிறது.
மேலும் தெரிந்துகொள்ள: