அழிவுகளிலிருந்து பல்தேசிய கொள்ளைகாரர்களின் மேற்கு அரசுகள் தம்மை மீட்டெடுக்க போரையும், படுகொலைகளையும் உலகம் முழுவதும் கட்டவிழ்ழ்து விட்டுள்ளனர். இவ்வாறான படுகொலைகளில் அதிர்ச்சிதரும் அண்மைய இனப்படுகொலை தான் லிபிய மக்கள் மீது அமரிக்காவின் வழிகாட்டலில் நேட்டோ நாடுகள் நடத்திய பேரழிவு. இலங்கையில் ராஜபக்ச அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நடத்திய வன்னிப் படுகொலைகளுக்கும் மேற்கு நாடுகள் லிபியாவில் நடத்திய படுகொலைகளுக்கும் பல ஒற்றுமைகளைக் காணலாம்.
-இரண்டுமே சாட்சியின்றி நடத்தப்பட்ட படுகொலைகள்.
-இரண்டிலுமே சாட்சிகளின் ஒரு பகுதி படுகொலைகளின் சூத்திரதாரிகளால் உள்வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டனர்.
-இரண்டிலுமே சாட்சியாக மாறவல்ல அனைத்துத் தடையங்களும் – மனிதர்கள் ஈறாக- அழிக்கப்பட்டன.
-இனப்படுகொலையயும் போர்க்குற்றங்களையும் தமது எஜமானர்களுக்காக நிறைவேற்றியவர்களையே ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி அவர்களைத் தண்டிக்கப் போவதாக மிரட்டி தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்வது இரண்டிலுமே போதுவானதாக அமைகிறது.
லண்டனிலிருந்து புதிய திசைகள் என்ற அமைப்பு வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றில் இனிமேல் நடபெறப்போகும் இனப்படுகொலைகளுக்கு வன்னிப்படுகொலைகள் பரிசோதனைக் கூடமா எனக் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. லிபியாவில் மேற்கு நடத்திய இனப்படுகொலை அதற்கு மறுக்க முடியாத சாட்சி.
இப் படுகொலைகள் கூட இலங்கையில் நடைபெற்றது போன்றே மிகவும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது ஒரு படிமுறையின் ஊடாக அவதானமாகத் திட்டமிடப்பட்டது.
முதலில் கடாபியின் காடைத்தனங்கள் அத்தனையியும் கடந்து லிபியாவிற்கு தாம் உதவுவதான விம்பம் மேற்கு நாடுகளின் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டது. எழுபது தன்னார்வ நிறுவனங்கள் திட்டமிட்டு லிபியாவிற்குள் லிபிய அரசின் அனுமதியோடு அனுப்பி வைக்கப்பட்டன.
இவற்றுள் மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட மனித உரிமை அமைப்புக்களும் அடங்கும். இவை அனைத்தும் இரண்டு வருடங்களுக்கு மேலாக போருக்கான தயாரிப்புக்களை மேற்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் கடாபி அரசோடு இணைந்தே இத் தன்னார்வ நிறுவனங்கள் செயற்பட்டன. நேட்டோவின் ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பமாவத்ற்குச் சற்று முன்பதாக 70 தன்னார்வ நிறுவனங்களும் மேற்கு ஆதரவு ஜனநாயக அமைப்புக்களும் இணைந்து 85 நிறுவனங்கள் அமரிக்காவையும் ஏனைய நாடுகளையும் லிபியாவில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தன.
அக்கோரிக்கையின் முழு வடிவத்தையும் இங்கே காணலாம்:
http://www.unwatch.org/site/apps/nlnet/content2.aspx?c=bdKKISNqEmG&b=1330815&ct=9135143
கடாபி மக்கள் மீது விமானக் குண்டுகள் வீசி கொல்கிறார் என்ற செய்தி மேற்கு ஊடகங்களிலும் அவற்றின் அடிமைகளான ஏனைய ஊடகங்களிலும் தன்னார்வ நிறுவனங்களாலும் பரப்பப்பட்ட அதே வேளை ரஷ்ய இராணுவக் கண்கானிப்பகம் ஆதரங்களின் அடிப்படையில் செய்தி ஒன்றை வெளியிட்டது.
எழுச்சிகள் உருவான காலப்பகுதியிலிருந்தே லிபியப் பகுதிகளை செய்மதி ஊடாகக் கண்காணித்து வருவதாகவும் கடாபி அரசின் விமானத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னார்வ நிறுவனனக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பெப்ரவரி 25ம் திகதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதி உரிமைகள் ஆணையம் லிபியாவிற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுகின்றது. எந்த வாக்களிப்பும் இன்றியே இத் தீர்மானம் நிறைவேற்றப்ப்படுகின்றது. மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பிரிவைத் தலையிடக் கோரும் தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாகவே சட்டப் பிரிவுகள் 1970 மற்றும் 1973 ஆகியவற்றின் அடிப்படையில் “லிபிய மக்களைப் பாதுகாக்கவென” விமான சூனியப் பிரதேசமாக லிபியாவின் பகுதிகள் அறிவிக்கப்படுகின்றன.
இத் தீர்மானத்திற்கு லிபிய மக்களின் பாதுகாப்பிற்கும் எந்த குறைந்தபட்சத் தொடர்பும் இருக்கவில்லை. ஆதாரமற்ற வெற்றுக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் திருட்டு நோக்கம் உடனடியாகவே வெளிச்சத்திற்கு வருகிறது. நேட்டோ நாடுகள் லிபியாவின் மீது குண்டுமழை பொழிய ஆரம்பிக்கின்றன.
அமரிக்க, பிரஞ்சு, பிரித்தானிய விமானங்கள் லிபிய மக்கள் குடியிருப்புகள் மீதும் தாம் சந்தேகிக்கும் இடங்கள் மீதும் விமானக் குண்டுகளைப் பொழிகின்றன.
மேற்கின் அத்தனை ஊடகங்களும் இவற்றைத் திட்டமிட்டு மறைக்கின்றன.
மக்கள் குடியிருப்புக்களை எவ்வாறு நேட்ட்டோ படைகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின. இதனை நேரடியகப் பார்வையிட்ட அமரிக்க காங்கிரஸ் பெண் ஒருவரின் சாட்சி:
இவை அனைத்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. பல்தேசிய நிறுவனங்களின் ஊடகங்கள் வேறு செய்திகளைக் கூறின.
நேட்டோ படைகளின் மக்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்களை செய்தியாக்க மறுக்கும் வியாபார ஊடகவியலாளன்:
அடுத பகுதி விரைவில் ….
முன்னைய பதிவுகள் :