Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முத்துக்குமார் மரணித்து ஐந்தாவது ஆண்டு நிறைவு:முத்துக்குமாரின் தியாகம் இன்றும் விற்பனையில்

இன்று முத்துக்குமார் தமிழகத்தில் தீக்குளித்து மடிந்து ஐந்தாவது வருடம். 29.01.2009 அன்று தன்னை எரித்து மரணித்த்துப் போன முத்துக்குமாரன் தியாகத்தை பிழைப்புவாதக் கும்பல்கள் தமக்காக எப்படிப் பயன்படுத்திக் கொண்டன் என்பதற்காக ஆதாரபூர்வமான சாட்சியங்கள் இனியொருவில் வெளியாகின. இயக்குனர் ராம், தோழர் மருதையன், வெண்மணி ஆகியோரின் சாட்சிகள் தோலுரித்தக் காடிய அதே சந்தர்ப்பவாதிகள் இன்றும் தேசிய முகமூடியுடன் தெருக்களில் நிர்வாணமாக அலைகின்றனர். மரணித்துப் போனவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் தமது சொந்த நலன்களுக்காக வியாபாரமாக்கிய கூட்டங்கள் எஞ்சியிருக்கும் மனிதத்தையும் புதைகுழிகளின் விழிம்பில் வைத்துக்கொண்டு விலைபேசுகின்றன. பணத்துக்காக மட்டுமே வாழப்பழகிக்கொண்ட தேசிய வியாபாரிகள், சோசலிச வியாபாரிகள், சாதி வியாபாரிகள் போன்ற இன்னோரன்ன சமூகத்தின் விரோதிகள் ஒரணியில் திரண்டுள்ள இந்த ஐந்தாவது முத்துகுமாரின் நினைவு நாளில் முன்னையவற்றை மீட்கும் பதிவுகள்:

நடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது. சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.

அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள்.

கட்டுரையின் முழுமை கீழே:

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

 கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலைக் காண அங்கே கொஞ்சம் இளைஞர்கள் கூழுமியிருந்தனர். அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மீது இளைஞர்கள் கோபத்தைக் காட்டினார்கள். அங்கே குழுமியிருந்த தலைவர்கள் முத்துக்குமார் தொடர்பாக என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நான் எனது பத்திரிகை நண்பரிடம் கேட்டேன். அவர் ஒரு முக்கியமான தலைவரிடம் பேசியதைக் கூறினார். அதன்படி முத்துக்குமாரின் உடலை கொளத்தூருக்குக் கொண்டு சென்று ஒரு மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்க தீர்மானித்திருப்பதை அறிந்தேன்.

ஆனால் அந்த நினைவுகளில் மனம் இன்னொறு முறை ஏமாற மறுக்கிறது. காரணம் தான் சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றுப் போனதைக் காண முத்துக்குமார் இல்லை. அவரது மரண சாசனத்தை வாசித்த நாம் மட்டுமே இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அந்த அறையை நான் கடந்து செல்லும் போதெல்லாம் பாதி எரிந்த அந்தக் கடிதம் என்னை தொல்லையுறுத்துகிறது. மரணத்தை ஆயுதமாகத் தந்து போராடு என்றவனுக்கு உயிரோடு இருப்பவர்கள், வாழ்க்கையை நேசிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் என்னைச் சித்திரவதை செய்கிறது. தோற்கடிக்கப்பட்டவனின், ஏமாற்றப்பட்டவனின் மனச்சாட்சியாய் உள்ளுக்குள் இப்போதும் குமைந்து கொண்டிருக்கிறேன்.

கட்டுரையின் முழுமை கீழே:

முத்துக்குமார் மன்னித்துவிடு.. சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !! : வெண்மணி

இந்த இரண்டு பதிவுகளையும் தவிர, இவற்றின் பின்புலத்திலுள்ள அரசியலை தோழர் மருதையனின் நேர்காணல் விபரிக்கின்றது.

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்

Exit mobile version