Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரிக்கான பிணங்களைத் தாண்டி இலங்கை சென்ற நவி பிள்ளையும் செல்வம் அடைக்கலநாதனின் காத்திருப்பும்

யுத்தத்தின் காரணமாக சேதமாக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் யாழ். விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த வாகனங்களை அவர் காணமுடியாத வகையில் தற்போது மறைப்புச்செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

உடைக்கப்பட்ட வாகனங்கள் அவை உடையும் போதே செய்மதியில் அமரிக்காவும் அதன் உப கூறுகளில் ஒன்றான ஐக்கிய நாடுகள் நிறுவனமும் படம்பிடித்து வைத்திருப்பதாக ஒத்துக்கொண்டுள்ளன. நவி பிள்ளையின் சொந்த நாட்டில் மரிக்கானா படுகொலைகள் வன்னிப் படுகொலைகள் போன்றே நடத்தப்பட்டு ஒருவருடமும் ஒரு மாதமுமே முடிந்துள்ளது. அதுகுறித்து நவிப் பிள்ளை இதுவரை மூச்சுக்கூட விட்டதில்லை. செல்வம் அடைக்கலநாதன் ஈழ மக்களின் அவலங்களில் தனது பதவியித் தக்கவைத்துக் கொள்வது போன்றே நவிப் பிள்ளை உலக மக்களின் அவலங்களில் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்கிறார்.

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் இலங்கையில் நிலவும் முரண்பாடுகளின் அடிப்படையில் தவிர்க்க முடியாத நிபந்தனை. நவிப் பிள்ளையும் செல்வமும் அரசியல் நீக்கம் செய்யப்படுவதிலிருந்தே மக்கள் யுத்தமாக அது ஆரம்பமாகும்.

செல்வம் அடைக்கலநாதன் நவிப்பிள்ளையின் வரவுக்காக் காத்திருப்பதை விடுத்து மக்களின் காத்திருப்பிற்கு அரசியலை முன்வைத்தால் தன்னுரிமைக்கான போராட்டம் பல ஆண்டுகள் முன் நகர்த்தப்படும்.

ராஜபக்ச அரசிற்கு எதிரான ஒவ்வொரு கூறுகளும் ஒன்றிணைக்கப்படாலே தெற்காசியாவின் மக்கள் யுத்தத்திற்கு இலங்கை முன்னுதாரணமாக அமையலாம்.

படுகொலைகளின் இரத்த வாடையோடு  இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு
மனிதப்பிணங்களின் மேல் நடந்துசென்று தென்னாபிரிக்கா நோக்கி தேசியக் கூட்டமைப்பு
ஈழத் தமிழர்கள் உட்பட உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும் : ஆபிரிக்க புரட்சிகர முன்னணி
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
தென்னாப்பிரிக்காச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது! : குமார்
Exit mobile version