Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரிக்கானா மனிதப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டம்:தமிழர்களுக்கு அழைப்பு

parai2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்க தங்கச்சுரங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் மீது அந்த நாட்டின் ஆயுதப்படைகள் நடத்திய மிலேச்சத்தனமாக நடத்திய துப்பாக்கிப் பிரையோகத்தில் 34 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 80 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மனித சமூகம் வெட்கித் தலைகுனியும் வகையில் நடத்தப்பட்ட இத் தாக்குதல் உலகத் தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்!

முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறியர்களின் தாக்குதல்கள் உலகின் அதிகாரவர்க்கத்திற்கு உற்சாகத்தை வழங்கியது.அமைதிப் போராட்டங்களை நடத்தும் மக்கள் மீது உலகெங்குமுள்ள ஆயுதம் தாங்கிய அரச படைகள் தாக்குதல்களை நடத்தின. இந்தியாவின் வங்க தேசத்தில் சிங்கூர் என்ற கிராமத்தில் டாட்டா நிறுவனத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய அப்பாவி மக்கள் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்தி அப்பாவிகளைக் கொன்றது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் கொழும்பிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெலிவேரியவில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தில் பலரைக் கொலைசெய்தது.

பங்களாதேஷ், எகிப்து, அமெரிக்கா என்று விரிவடையும் ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடத்தும் அரச பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்கள் விழிப்படைய ஆரம்பித்துள்ளனர். மக்கள் பற்றும் சமூக உணர்வும் மிக்க தமிழர்கள் இப் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றனர். எதிர்வரும் சனி 16ம் திகதி மாலை 2 மணியிலிருந்து லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் மரிக்கானா எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. -பறை – சுதந்திரத்திற்கான குரல்- உட்பட பல தமிழர்கள் இப் போராட்டத்த்ல் கலந்துகொள்ளவுள்ளனர். மனிதாபிமானமும் மக்கள் பற்றுமுள்ள தமிழர்களுக்கு போராட்டக் குழு அழைப்பு விடுக்கிறது.

மரிக்கானா படுகொலைகள் தொடர்பாக இனியொருவில் வெளியான ஆக்கங்கள்:

ஈழத் தமிழர்கள் உட்பட உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும் : ஆபிரிக்க புரட்சிகர முன்னணி

தென்னாப்பிரிக்காச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!

படுகொலைகளின் இரத்த வாடையோடு இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு

மனிதப்பிணங்களின் மேல் நடந்துசென்று தென்னாபிரிக்கா நோக்கி தேசியக் கூட்டமைப்பு

 

Exit mobile version