
தான் தோன்றித்தனமான பிரித்தானிய அரசின் அனைத்துத் திட்டங்களையும் இனிமேல் பிரித்தானிய மக்கள் மௌனமகப் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை என்ற செய்தி ஆளும் தரப்பை அதிர்வடையச் செய்தது.
மானியங்கள், ஓய்வூதியம், ஊதியத் தொகை போன்ற அனைத்து அம்சங்களிலும் அரசாங்கம் அறிவித்த குறைப்புக்களுக்கு எதிரான மக்களின் ஏகோபித்த குரலாக இந்த ஆர்ப்பாட்டம் ஒலித்து. 1920 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக வாழ்க்கைத் தரத்தினைத் தாழ்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும் அரசின் நடவடிக்கைகளை பிரித்தானியவை உழைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
மக்களின் உணர்வுகள் குறித்துச் சிந்திக்காத அரசின் பொருளாதாரக் கொள்கை பிரித்தானிய மேல்தட்டு வர்க்கத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது என கார்டியன் பத்திரிகை விமர்சிக்கிறது.
ஆய்வாளர்கள் பலர் இன்றைய சூழலும் மக்களின் போராட்டங்களும், பிரித்தானியா 1970 ஆம் ஆண்டு சூழலுக்கு அழைத்துச் செல்லும் என்று கருதுகிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்கள் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்துச் சிந்திக்கின்றன.
மேற்கு நாடுகளில் நவ தாரளவாதக் கொள்கையும், அதன் உச்ச வடிவமான உலகமயமாதலும் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அங்கிருந்த உற்பத்தி நிறுவனங்கள் மலிவான கூலியை நோக்கமாகக் கொண்டு இந்தியா, சீனா, பிரேசில், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிற்கு இடம் பெயர்ந்துவிட்டன. 2000 ஆம் ஆண்டுகளின் பின்னான பத்தாண்டுகளில் மேற்கு நாடுகளில் சேவைத்துறையும், பண மூலதனத் துறையும் முதன்மைத் தொழிற் துறையாக மாற்றமடைந்தது. பத்தில் ஒரு பகுதி ஊழியர்கள் பண மூலதனத்தோடு தொடர்புடைய வேலைகளில் ஈடுபட்டனர். வங்கித் துறை, அசையாச் சொத்துக்களுக்கான முதலீடு போன்றன பொருளாதாரத்தின் இதயமாக அமைந்தது.
சொத்துக்களை வாங்கிக்கொள்ளவும், நாளாந்த வாழ்க்கைக்காகவும் வங்கிகளில் கடனைப்பெறுகின்ற கடன்பட்ட சமூகம் ஒன்றை இவர்களின் பொருளாதாரக் கொள்கை உருவாக்கியது. கடன் தொகை உச்ச நிலையை அடைந்ததும் கடன் பெற்றவர்கள் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு உள்ளானார்கள். வங்கிகள் அந்தப் பணத்தை மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசிடமிருந்து பெற்றுக்கொண்டு தப்பித்துக்கொண்டன.
தவிர, மூன்றாமுலக நாடுகளிலிருந்து சுரண்டப்படும் பணத்தின் அளவு 3 மடங்காகக் குறைந்தது. இதற்கு பல்வேறு தீர்மானிக்கும் காரணிகள் பின்புலத்தில் இருந்தன. என்பது வேறான ஆய்வுக்குரிய விடயம்.
எது எவ்வாறாயினும் மேற்கு நாடுகள் மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை ஆக்கிரமிப்பதும் அந்த நாடுகளின் வழங்களைச் சுரண்டுதலுமே அவர்களின் நீண்டகால திட்டமாக மாறிவருகிறது.
கிரேக்கம், ஸ்பெயின், பிரன்ஸ், பிரித்தானிய என்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் போராட்டங்கள் வழங்கும் அழுத்தங்களை இந்த நாடுகள் எதிர்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பிரித்தானிய அரசின் பொருளாதாரத் திட்டங்கள் நடைமுறைக்கு வருமானால் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் சிக்கலான நிலை வரை வளர்ந்து செல்லும் என்று பைனான்சியல் ரைம்ஸ் என்ற சஞ்சிகை எதிர்வு கூறுகிறது.
அரபு நாடுகளின் மக்கள் எழுச்சி ஐரோப்பிய அமரிக்க உழைக்கும் மக்களுக்குப் புத்துணர்ச்சியையும் தன்நம்பிக்கையையும் வழங்கியிருக்கிறது.
2
26.03.2011 நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தை உலகம் முழுவது கூர்ந்து கவனித்துகொண்டிருந்தது. தமது திட்டமிட்ட நிகழ்சி நிரலின் கீழ் இயங்கும் அரசுகளின் செயற்பாடுகளை அந்த அரசுகளைப் பலப்படுத்துவதன் ஊடாகவன்றி அவற்றின் மீதான மக்கள் திரள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் ஊடாகவே சிறிதளவேனும் மாற்றியமைக்க முடியும் என்பதை இப் போராட்டங்கள் உணர்த்துகின்றன.
இதே தினத்தில் பிரித்தானியாவிலிருந்து இயங்கும் புலி சார் வானொலியான உயிரோடை ஒரு மணி நேரத்தை அர்ப்பணித்து பிரித்தானிய தமிழ் போரம் (BTF) சார்ந்த உறுப்பினர்களோடு இணைந்து கலந்துரையாடல் ஒன்றை ஒலிபரப்பியது.
வானொலியில் பிரசன்னமாகியிருந்த மேற்கு லண்டனைச் சேர்ந்த ஒருவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்று தொடர்பான அந்த உரையாடல் மிகவும் சுவாரசியமாக நடைபெற்றது. பிரித்தானிய ஆளும் கட்சிக் கூட்டணியில் பிரதான கட்சியான பழைமை வாதக் (Conservative ) கட்சியின் தமிழ் உறுப்பினர் பழமை வாதக் கட்சிக்கான தமிழ்ர்கள் (Tamils for Conservative) என்ற அமைபை உருவாக்கி அதற்கான தமிழ் மக்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கு லண்டனில் ஏற்பாடு செய்திருந்தார்.
இதை அறிந்த உயிரோடை வானொலி அவரை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு அவருடனான கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. ஆளும் கட்சியில் சிங்களவர் ஒருவர் ஆளுமை செலுத்துவதால் தான் அவர்கள் இலங்கை அரசைப் பகைத்துக்கொள்கிறார்கள் இல்லை என்று ஆரம்பித்த இவரின் நகைச்சுவை பிரித்தானியத் தமிழர்கள் கொன்சர்வேட்டீவையும் ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கைகு ஊடாக நகர்ந்து சென்றது.
அவரது செயலை ஆதரித்த் பி ரி எப் பிரதானி, தமிழர்கள் பிரதான கட்சிகள் மூன்றிலும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அந்த மூன்று பிரிவினரும் பி ரி எப் இல் கூட்டாக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஒடுக்கப்பட்ட இனமான தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவல்ல, அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வலிமையுள்ள பிரிவினரின் அடிபடை எதிரிகளோடு ஒரே வரிசையில் அமர்ந்திருந்துகொண்டு, உலகம் இனப்படுகொலையே வேடிக்கை பார்க்கிறது என்று கூறிக்கொள்வதில் என்ன பயன்?
வன்னிப் படுகொலைகள் நடந்தபோது உலகம் கொல்லபட்டவர்களுக்கு ஆதரவாகக் ஏன் குரல் கொடுக்கவில்லை, மக்கள் எழுச்சிகள் உருவாகவில்லை என்பதற்கு பி ரி எப் உம், கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள் போன்ற அமைப்புக்களும் சிறந் உதாரணம்.