
பரவலான வறுமை, அடக்குமுறை, அறியாமை என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சேகுவேரா பலமாக நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்க உருவாக வேண்டும் என்பது சேகுவேராவின் லட்சியமாயிற்று . இந்த பயணம் தான் சேகுவாரவை மாபெரும் புரட்சியாளனாக ஆக்கியது. இந்த பயணத்தின் போது உற்ற தோழனாக பயணித்தவர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ இவர் சே மீது எந்த அளவிற்கு அன்பு செலுத்தினார் என்றால் பயணத்தின் போது சேவின் பிறந்த நாளை கொண்டாட அனைவரும் தயாராகிறார்கள் ( ஜூன் 13 ) அன்று அமேசன் நதியின் மறுகரையில் இருக்கும் தொழுநோயாளிகளோடு தனது பிறந்த நாளை கொண்டாடப் போகிறேன், என்று நதியில் குதித்து நீந்தத் தொடங்குகிறார், அவர் கடுமையாக ஆஸ்துமா வின் பாதிப்பு உள்ளவர் , அமேசான் நதியோ மிகபெரியது என்ன செய்வது, அவருக்கு என்ன நேருமோ என்று தெரியாமல் கண்ணீர் விட்டு கதறுகிறார் கிரேனாடோ,சே நீந்தி கலைத்து போய் மறுகரையில் எழுகிறார், தொழு நோயாளிகளும் அவரை அன்போடு முகாமிற்கு தூக்கி செல்கின்றனர். அந்த உன்னதமான நண்பர்களின் பயணத்தின் போது இந்த மனித குலத்தின் மீது அளவற்ற அன்பு பெருக்கிறது, ஒரு சிலர் நலமாக வாழ லட்சகணக்கான மக்களை துன்பக்கடலில் ஆழ்த்தும் முதலாளித்தவத்தின் மீதும் ,ஏகாதிபத்திய அமெரிக்காவின் மீதும் , அதற்கு துணைபோகும் லத்தின் அமெரிக்க ஆட்சியாளர்கள் மீதும் பெரும்கொபம் கொள்கின்றனர் இருவரும் மக்களின் அறியாமையை நினைத்து பச்சாதப்படுகின்றனர்.இவை அனைத்துமே மார்க்சிய இலக்கியங்கள் மீதும் கம்யூனிசத்தின் மீதும் அவர்களுக்கு எல்லையையற்ற காதலை உருவாக்குகிறது. பயணத்தின் முடிவில் நண்பர்கள் பிரிய நேர்கிறது.
சேகுவேர ,பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்து கொரில்லா யுத்தத்தின் மூலம் மக்கள் விரோத சர்வாதிகாரியாக இருந்த படிஸ்டாவின் அரசை தூக்கி எரிகின்றனர். கியூபாவில் புரட்சி வீரர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புதிய உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி மலர்கிறது. 1960 சே தனது நண்பரை கியூபாவிற்க்கு வர அழைப்பு விடுக்கிறார். நண்பனின் அழைப்பை ஏற்று கியூபா வந்த
ஆல்பர்ட்டோ கிரெனாடோ ஹவானா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியமர்கிறார், பின்பு பல அறிவியல் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதோடு கியூபாவை மருத்துவ, கல்வி , அறிவியல் துறைகளின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றினார். சே வின் மறைவிற்கு பின்னரும் தனது உயிர் நண்பனின் நினைவாக அவர் மறையும் வரை கியூபாவிலையே தங்கி இருந்தார். தி மோட்டார் சைக்கில் டைரி என்ற திரைப்படம் வெற்றிப்படமாக அமைவதற்கு இவரின் பங்களிப்பு மிகவும் அதிகம் என்று கூறலாம். இவரது பயணக்குறிப்பில் சே என்ற மாபெரும் மனிதாபிமாணியை நாம் அருகில் இருந்து பார்க்க முடியும். இவர் 05.03.2011 அன்று தனது 88 வது வயதில் மரணத்தை தழுவினார். இவரை பார்க்கும் போதெலாம் சே எனும் மாபெரும் புரட்சியாளனை நாம் தரிசித்திருக்கிறோம். இவரின் இழப்பு அறிவியல் வளர்ச்சிக்கும், உழைக்கும் வர்கத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பேயாகும். சேவையும் அவரது நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோவையும் நினைவு கூறுவோம், அவர்களின் வழியில் சோஷலிச சமுதாயத்தை அமைக்கப்பாடுபடுவோ
-கு.கதிரேசன் வழக்குரைஞர் (advkathiresan@gmail.com)