Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சகானா – இலங்கையை மையாமாக்கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பின் குறியீடு: நிவேதா நேசன்

அழிவு முகாமைத்துவம் ( disaster management) என்ற சொற்தொடர் அல்லது ‘சொல்லாடல்’ 2004 ஆம் ஆண்டின் இந்துசமுத்திரப் பிராந்திய சுனாமி அழிவுகளின் பின்பே தோன்றியது. சுனாமி அழிவுகளின் பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் புதிய வடிவங்கள் இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பரிசீலிக்கப்பட்டன. பங்களதேஷ் என்ற முழு நாடுமே யூனுஸ் என்ற தனிநபரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது. உலகில் வறுமையும் ஊழலும் நிறைந்த பங்களாதேஷ் நகரங்கள் இன்று புகை மண்டலமாகவே காட்சிதரும் அளவிற்கு சூழல் சூறையாடப்பட்டுள்ளது.
யூனுஸ் என்ற நபர் நடத்திய கிரஹ்மீன் என்ற தொண்டு நிறுவனமே பங்களாதேஷில் கைபேசித் தொடர்பு வலையமைப்பையும், இன்டர்னெட் சேவையையும் நடத்துக்கிறது.

யூனுஸ் இன் கட்டளைக்கு உட்படாமல் பங்களாதேஷ் அரசாங்கம் செயற்பட முடியாது. அவர் இன்று உலகின் பிரபல மில்லியேனேர்களில் ஒருவராகிவிட்டார். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த பங்களாதேஷ் இன்று வறிய நாடாகிவிட்டது. குழந்தைகளை அடிமைகளாக விற்பனைசெய்து மக்கள் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்றும் லைக்காவும் லெபாராவும் இலங்கையில் எலும்புத்துண்டுகளை வீசுவது போன்று யூனூஸ் வீசுகிறார். 2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் மைக்ரோ சொப்டின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் யூனுஸை முன்னுதாரணமாகக் கொண்டு தானும் மக்களுக்குப் ‘பணிவிடை’ செய்யப்போவதாக அறிவித்தார்.

2004 ஆம் ஆண்டின் பின்னர் தன்னார்வ நிறுவனங்களின் நிர்வாக முறை சற்று மாறுபட ஆரம்பித்தது. முன்னர் கோப்ரட் நிறுவனங்கள் தன்னார்வ நிறுவனங்களுக்கு நிதி வழங்கின. 2004 ஆம் ஆண்டின் பின்னர் கோப்ரட் நிறுவனங்களே தன்னார்வ நிறுவனங்களை நடத்த ஆரம்பித்தன. பில்கேட்ஸ் சொன்னார், அடிமைகள் செய்தனர் என்பதைப் போல உலகம் முழுவதும் இந்த மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

பொதுவாகத் தன்னார்வ நிறுவனங்களின் நோக்கங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

1. மக்கள் மத்தியிலிருந்து அரசுகளுக்கு அழுத்தங்களும் போராடங்களும் தோன்றும் போது அவர்களைச் சமாதானப்படுத்தும் தன்னார்வ நிறுவனங்கள் மக்களுக்கு சிறு உதவிகளை வழங்கி அரசுகளைக் காப்பாற்றுகின்றன.

2. அரசுகளுக்கு எதிராகப் போராடுவதற்கு படித்த மத்திய்தர வர்க்கத்திலிருந்தே இளைஞர்கள் உருவாகுவார்கள், இவர்கள் மக்களை அணிதிரட்டிப் புரட்சிக்குத் தயாராக விடாமல் தன்னார்வ நிறுவனங்கள் உள்வாங்கிச் சீரழிக்கும்.

3. கோப்ரட் நிறுவனங்கள் அரசுகளுக்கு வரி கொடுப்பதில்லை. இந்த வரி ஏய்ப்பின் ஒருபகுதியை சேவை என்ற பெயரில் ஏமாற்றிவிட்டு மறுபகுதியை தாமே ஏப்பம் விட்டுக்கொள்வார்கள்.

4. மக்களைப் போராடத் தெரியாத, தமது பணத்தில் தங்கியிருக்கும் மந்தைகளாக்கிவிட்டு அந்த இடைவெளிக்குள் எதிர்ப்புக்கள் இன்றி நாட்டைக் கொள்ளையடித்தல்.

2004 ஆண்டின் பின்னர் அவை புதி சில நோக்கங்களையும் சேர்த்துக்கொண்டன.

1. கோப்ரட் நிறுவனங்கள் இடைத் தரகர்கள் இல்லாமல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அறக்கட்டளைகளையும் நடத்துவது.

2. நாடுகளில் வர்த்தக ஆக்கிரமிப்பைச் செய்வதற்காகன ஒப்பந்தைங்களை மேற்கொள்வதற்கான நுளை வாசலாகத் தன்னார்வ நிறுவனங்களைத் தோற்றுவித்தல்

3. புரட்சிகரச் செயற்பாடுகளையும் நபர்களையும் கண்காணிப்பதற்கான மையமாகத் தன்னார்வ நிறுவனங்களை உருவாக்குதல்.

4. இராணுவ மயப்படுத்துவதற்கும் நாடுகளை ஆக்கிரமிப்பதற்கும் தன்னார்வ நிறுவனங்களைப் பயன்படுத்தல்.

இலங்கையில் லிபாரா லைக்கா போன்றவை உட்பட பல கோப்ரட் வியாபாரிகளின் தன்னர்வ நிறுவனங்கள் நிறுவனங்களைத் தோற்றுவிப்பதன் பின்னணியில் அரசியல் வர்த்தகமும் காணப்படுகிறது.

ஆசியாவை இராணுவமயப்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் இலங்கை மையப்பகுதியாகச் செயற்படுகிறது. அமெரிக்க இராணுவம் இலங்கையில் நிலைகொண்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் இணையங்களில் இவை தொடர்பான தகவலகள் உண்டு. இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு எதிராகப் போதுமான போர்க்குற்றங்களைச் சேர்த்துவைத்துக்கொண்டு மிரட்டி தமக்கு வேண்டியதை அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் பெற்றுக்கொள்கின்றன.

அதன் மறுபக்க்த்தில் இலங்கை முழுவதையும் பொருளாதார இராணுவ ரீதியாக ஆக்கிரமித்துக்கொள்கின்றன. புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகள் இது குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை. ஆக, இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராகாவும் அவை சுமத்தும் பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராகவும் இலங்கையின் உள்ளிருந்தே போராட்டங்கள் தோன்றும் வாய்ப்புக்கள் உண்டு. முப்பது வருடங்களுக்கு மேலாக போருக்குள் வாழப் பழகிக்கொண்ட தமிழர்கள் போராட ஆரம்பிக்கலாம் என்பது ராஜபக்சவினதும் மேற்கு நாடுகளதும் கணிப்பு. இதற்காகவே லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களை சேவை என்ற பெயரில் பிச்சைக்கார சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஏகாதிபத்தியங்கள் இலங்கையில் இறக்கியுள்ளன.

தெற்காசியாவை இராணுவ மயப்படுத்தும் நோக்கில் இலங்கையில் தகவல் தொழில் நுட்ப மையம் ஒன்றும் இயங்கி வருகிறது. சகானா மென்பொருள் தயாரிக்கும் இத் தன்னார்வ நிற்யுவனம் யூனுஸ் இன் மாதிரியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அழிவு முகாமைத்துவ மென்பொருளை உருவாக்கியுள்ள இந்த நிற்வனம் உலகில் அனர்த்தங்களும் அழிவுகளும் ஏற்பட்டால் பயன்படுத்தப்படும்.

இலங்கை இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் இத் தன்னார்வ நிறுவனம் உலகில் அழிவுகள் ஏற்படும் போது தலையிடும். ஆனால் மலையத்தில் நடைபெற்ற அரை இனக்கொலயான கொஸ்லந்த மண்ச்சரிவிற்குப் பயன்படுத்தப்படவில்லை. சகானா நிறுவனத்திற்கு அமெரிக்க உளவு நிறுவனங்களோடு தொடர்புடைய கூகிள் மற்றும் ஐ.பி.எம் ஆகியன நிதி வழங்குகின்றன. தவிர தெற்காசியவில் அமெரிக்காவில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பான தயரிப்புக்களை மேற்கொள்ளும் என்ற Naval Postgraduate School அமெரிக்க இராணுவப் பள்ளியும் சகானாவின் நிதிவழங்குனர்களில் அடக்கம்.

ஆக, இலங்கை அமெரிக்காவின் இராணுவ மயப்படுத்தும் திட்டத்தின் ஆசிய மையமாகச் செயற்படுகிறது என்பது தெளிவாகிறது. இனக்கொலையாளி ராஜபக்ச, அமெரிக்க அரசு, பிரித்தானிய அரசு, இந்திய அரசு ஆகியவற்றின் கூட்டு இனச்சுத்திகரிப்பைத் தீவிரப்படுத்துவது மட்டுமன்றி முழு இலங்கையையும் ஒட்டச் சுரண்டி மீள முடியாத இராணுவ சூனியப் பிரதேசமாக மாற்றப் பயன்படுகின்றது.

சகானா மின்பொருள் தொடர்பாக:

Sponsors

இலங்கையில் செயற்படும் லிபாராவின் தன்னார்வ நிறுவனம்:

http://www.lebara.com/supported-charities/lebara-foundation#Lgw3UU6kRcJLx7RC.97

மேலும்:

பலாலியைப் போன்று சோமாலியாவிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவம்:அதிகாரி ஒப்புதல்

அமெரிக்காவின் தொடரும் அரச பயங்கரவாதம் 1997 இல் திட்டமிடப்பட்டது-ஆதாரங்கள் இணைப்பு

இலங்கையில் குடிகொள்ள ஆரம்பித்துள்ள அமெரிக்க இராணுவமும் அமெரிக்கத் தீர்மானமும்

பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்

Exit mobile version