Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோமாளித்தனமா? கொடுங்கோல் குணமா? : இராமியா

கடந்த 31.3.2012 அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை சென்னை நகா¢ன் முக்கிய வணிக வளாகங்களில் ஒன்றான ஸ்பென்ஸர் பிளாசாவில் உள்ள கடைகள் அனைத்திலும் கடைக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து விளக்குகளை அணைத்தனர். இந்த வைபவத்தைக் கொண்டாடுவதற்கு என்றே அங்கே வந்து குழுமியிருந்த ஆயிரக் கணக்கான மக்கள், தங்கள் கைகளில் மெழுகுவர்த்தியைப் பொருத்தி உலக நேர (earth hour) விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். இதைப் போன்று சென்னை நகா¢ன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல இடங்களில் கொண்டாடப்பட்டன.

சென்னை மக்களுக்கு டெல்லிவாசிகள் சளைத்தவர்களா? அங்கு வணிக வளாகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மட்டுமல்லாது, குதுப் மினார், செங்கோட்டை போன்ற சுற்றுலா ஸ்தலங்களிலும், குடியரசுத் தலைவர் மாளிகை உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இந்திய மக்களுக்கு மற்ற நாட்டினர் சளைத்தவர்களா? மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமொ¢க்கா, பி¡¢ட்டன், ஜெர்மனி என்று எல்லா நாடுகளிலும் ஒரு மணி நேரம் விளக்கை அணைத்து, உலக நேர விழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

ஆமாம், இந்த விழா எதற்கு என்று தொ¢யுமா? உலகில் வளர்ந்து கொண்டு வரும்ஆற்றல் பற்றாக்குறையைச் சா¢ செய்யவும்,புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, இவ்வுலகை அழிவில் இருந்து காப்பதற்கும் தான் (!) இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவைக் கொண்டாடுவதினால் ஆற்றல் பற்றாக்குறை தீர்ந்துவிடுமா? புவிவெப்ப உயர்வு பற்றிய விழிப்புணர்வு ஏற்கனவே மக்களிடம் உள்ளதே? இப்பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிகளைப் பற்றி விவாதம் செய்யாமல் விழாக்களைக் கொண்டாடுவதில் என்ன பயன் இருக்கிறது?

இப்பொழுது புவிவெப்ப உயர்வில் இருந்தும், சுற்றுச் சூழல் கேட்டில் இருந்தும் உலகைக் காக்க வேண்டும் என்ற பெயா¢ல் உலக அளவில் நடக்கும் அறிவியல் மற்றும் அரசியல் கருத்தரங்குகளில், புவிவெப்பத்தை உயர்த்தும் மற்றும் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் பொருட்களின் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும் என்று விவாதிப்பதே இல்லை. வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிவிட்டு கலைந்து போய்விடுகிறார்கள்.

இன்று உலகம் புவிவெப்ப உயர்வினால் அழிவுப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது. இந்த வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றால் புவிவெப்பத்தை உயர்த்தும் தனியார் வாகனங்கள், ஆயுதங்கள், மற்றும் இதைப் போன்ற பொருட்களின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு பேருந்தை இயக்குவதன் மூலம் நூற்றுக் கணக்கான தனியார் வாகனங்களின் இயக்கமும், ஒரு இரயில் வண்டியை இயக்குவதன் மூலம் ஆயிரக் கணக்கான தனியார் வாகனங்களின் இயக்கமும் தேவையற்றுப் போகும். ஆகவே பேருந்து மற்றும் இரயில் வண்டிகளை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டால் புவிவெப்ப உயர்வின் வேகம் மிகப் பெரும் அளவில் கட்டுப்படுத்தப்படும்.

அடுத்த நடவடிக்கையாக, விவசாயத்தையும் மரம் வளர்த்தலையும் பெருவா¡¢யாக மேற்கொண்டால் அது கா¢யமில வளியை (carbon di-oxide) உறிஞ்சி உயிர் வளியை (oxygen) வெளிவிடுவதன் மூலம் ஏற்கனவே உயர்ந்து இருக்கும் புவிவெப்பம் குறைவதற்கும் வழி வகுக்கும்.

ஆனால் உலகை அழிவில் இருந்து காக்கும் இந்நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கும் சக்தி எது? அது தான் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை.

தனியார் வாகனங்களின், ஆயுதங்களின், குளிர் சாதனங்களின் உற்பத்திக்காகவும், இவற்றின் இயக்கத்திற்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் நிறைய மூலதனத்தை முதலீடு செய்ய முடியும்; நிறைய இலாபமும் கிடைக்கும். பேருந்துகள் மற்றும் இரயில் வண்டிகளின் உற்பத்திக்கும் அவற்றை இயக்குவதற்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் அந்த அளவிற்கு மூலதனம் தேவைப்படாது. இலாபமும் அந்த அளவிற்கு இராது. இலாபத்தை குறைக்கவும், முதலீடு செய்யும் வழியைக் குறுக்கவும் செய்யும் இவ்வேற்பாட்டை முதலாளி வர்க்கமும், முதலாளித்துவ அரசும் ஒப்புப் கொள்ளவே செய்யாது.

அடுத்ததாகச் சொன்ன நடவடிக்கை, அதாவது, விவசாயம் மற்றும் மரம் வளர்த்தலை முதலாளிகளால் ஒப்புக் கொள்ளவே முடியாது. பேருந்து, இரயில் வண்டி இயக்கத்திலாவது இலாபம் குறைய மட்டும் தான் செய்கிறது; விவசாயத்திலும் மரம் வளர்த்தலிலும் நஷ்டத்தைத் தவிர்ப்பதே இயலாத கா¡¢யம். ஆகவே உலகை அழிவுப் பாதையில் இருந்து மீட்கும் தீர்வுகளை முதலாளி வர்க்கமும் முதலாளித்துவ அரசும் ஏற்றுக் கொள்ளாது என்பது மட்டுமல்ல; கடுமையாக எதிர்க்கவும் செய்யும்.

அப்படி என்றால் உலகைப் புவி வெப்ப உயர்வில் இருந்து காப்பாற்றும் வழி தான் என்ன? அது தான் உலக மக்கள் அனைவரும் சோஷலிச முறையை ஏற்றுக் கொள்வது.

முதலாளித்துவ முறையில் பொருள் உற்பத்தியில் உருவாகும் மிகை மதிப்பு, ‘இலாபம்’ என்ற பெயா¢ல் முதலாளியின் தனி உ¡¢மையாகச் சேர்ந்துவிடுகிறது. இது மக்களின் பொருளாதார நிலையில் அபா¢மிதமான ஏற்றத் தாழ்வை உருவாக்கி, தனியார் வாகனங்கள், ஆயுதங்கள், குளிர் சாதனங்கள், ஆடம்பரப் பொருட்கள் போன்ற புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களுக்கு நிறைய கிராக்கியை (demand) உருவாக்கி அவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

சோஷலிச முறையில் மிகை மதிப்பு மக்களுக்குப் பொதுவாகவே வைக்கப்படும். அது இன்றைய சமுதாயத்திற்கும், எதிர்கால சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் விதத்தில் பயன்படுத்தப்படும். ஆகவே புவிவெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவுமான பொருட்களின் உற்பத்தியில் மிகை மதிப்பை ஈடுபடுத்த, தடை இருக்காது மட்டுமல்ல; ஊக்கமும் இருக்கும். ஆகவே சோஷலிச முறையை இவ்வுலக சமுதாயம் ஏற்றுக் கொண்டால் இவ்வுலகைப் புவிவெப்ப உயர்வில் இருந்து காக்க முடியும்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் விவாதிக்காமல் வெறுமனே ஆண்டிற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்துவிட்டு, உலகைப் புவிவெப்பத்தில் இருந்து காக்கப் போவதாக மார்தட்டுவதைக் கோமாளித்தனம் என்பதா?

அல்லது, சோஷலிச முறையை ஏற்றுக் கொண்டால் உழைக்கும் மக்களை அடிமை கொள்ளும் சுகம் போய்விடுமே; அடிமை கொள்ளும் சுகத்தைத் தியாகம் செய்வதைவிட, இவ்வுலகம் அழிந்து போவதே மேல் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவதால் கொடுங்கோல் குணம் என்பதா?

Exit mobile version