Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்?

தமிழ் நாட்டில் தமது மண்ணின் மீதும் அது சார்ந்த மக்கள் மீதும் பற்றுக்கொண்ட மக்கள் வேதாந்தா – ஸ்ரெலைட் ஆலைக்கு எதிராகப் வீரம் செறிந்த்த போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். 13 நிராயுத பாணியான பொது மக்களும் போராளிகளும் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக அங்கு நடைபெறும் கைதுகளும் ஆள் கடத்தல்களும், இலங்கை வட கிழக்கின் 80 களை நினைவிற்குக் கொண்டுவருகிறது.

தெருக்களில் திரிவதற்குக் கூட சமூகப்பற்றும், மக்கள் பற்றும் உள்ள இளைய சமூகம் அச்சப்பட்ட காலம். சாட்சியின்றி போலீஸ் படை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தது. கைதான பலர் மீது வழக்குத் தாக்கல் கூடச் செய்யப்படுவதில்லை. சட்ட வல்லுனர்கள் நீதி மன்றத்தை நாட தயக்கம் காட்டினார்கள். சேவல் துயிலெழுப்புப்வதற்குப் பதிலாக போலிஸ் இன் காலடிச் சத்தங்க்களில் உறக்கம் கலைந்த காலைகள் பெரும்பாலானவை. தூத்துக்குடியின் நாளாந்த்த வாழ்க்கை மட்டுமல்ல, மத்திய அரசும் எடப்பாடி அரசும் இணைந்து நடத்தும் கூட்டுக் கொள்ளையின் பாதிப்பிற்கு உள்ளான எல்லாப் பகுதிகளிலும் நிலைமை இது தான்.

ஒரு சிறிய வேறுபாடு, தமிழகத்தில் மக்கள் யுத்தம் ஒன்றிற்கு மக்களை அரசு தயார் செய்கிறது. ஈழத்தில் ஆயுதம் தாங்கிய இளைஞ்ஞர்கள் தாம் போராடித் தருகிறோம் என்றார்கள்.

ஈழப் போராட்டத்தின் 30 ஆண்டுகால தீவிர ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட போது, அதனோடு இணைந்த கடந்தகால வரலாறும் சேர்த்தே அழிக்கப்பட்டது. அதன் துயர்படிந்த்த பாதைகள் ஊடாகக் கடந்த்து முள்ளி வாய்க்கால் வரையும் வந்த்தடைந்தவர்களாகட்டும், பயணத்தை நிறுத்திக்கொண்டு அன்னிய நாடுகளில் அகதிகளானவரக்ளாகட்டும், இன்றைய அவலம் -நிறைந்த்த அரசியல் சூழலுக்கு ஏதோ வகையில் பொறுப்பானவரக்ளே.

தமிழகத்தில் அரசின் அத்தனை ஒடுக்குமுறைக்கும் மத்தியில் மக்களின் போராட்டங்கள் நின்றாகவில்லை. ஆனால் 30 வருட ஆயுதப் போராட்டம் நடந்த நமது மண் மயான அமைதியுடன் காட்சி தருகிறது.

இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்க்கை அரசு சாரி சாரியாக மக்களை அழித்துவிட்டு ஜனநாயகத்தை மீட்டு விட்டதாக மார்தட்டிக்கொண்டது. பாராளுமன்ற அரசியல் இனிமேல் எந்தத் தடையுமின்றி நடைமுறைக்கு வந்துவிடும் என்றார்கள். மாகாண சபை, எம்.பிக்கள் என்ற அரசியல் குழாமைச் சுற்றித்தான் இனிமேல் முப்பது வருடகால அரசியல் நரகரும் என்று அப்போது யாரும் நம்பியிருக்கவில்லை. இனப்படுகொலை நடந்து 10 ஆண்டுகளாகிறது. வடக்கின் முதமலமைச்சர் யார் என்ற விவாதம் மட்டுமே ஈழ அரசியலின் இன்றைய உச்ச நிலை.

மாகாண சபை வேட்பாளர்களுக்கு ஆள் பிடிக்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது.

தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் இரண்டு மிகப்பெரும் சந்தர்ப்பவாதிகளான விக்னேஸ்வரன் எதிர் மாவை சேனாதிராஜா என்ற வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாக 30 வருட அரசியல் சுருங்கி சிதைவடைந்துள்ள அவலத்திற்கு வெறுமனே ஏகபோக நாடுகளையும் இலங்கைப் பேரினவாத அரசையும் மட்டுமே குற்றம் சுமத்திவிட முடியாது. ஆயினும் அவை இரண்டும் வெற்றி பெற்றுள்ளன என்பதே இங்கு உண்மையது.

தூத்துக்குடியையும் கோயம்புத்தூரையும் போலவே வடக்கின் சுன்னாகப் பிரதேசம் முழுவதும் அழிக்கப்படுவதற்குக் காரணமான வட மாகாண சபையின் ஐங்கரனேசன் இன்று அரசியலில் நேரடியாகத் தலையிடுவதில்லை. ஐங்கரனேசனூடு இணைந்து நிலக்கீழ் நீரை நீண்டகாலத்திற்கு மாசுபடுவதற்குப் பொறுப்பான நிறுவனத்தைப் பாதுகாத்த விக்னேஸ்வரன் புலம்பெயர் தேசியவாதிகளின் கதா நாயகன்.

2009 ஆம் ஆண்டு வன்னி இனப்படுகொலை வரையிலும் இலங்க்கைப் பேரினவாத அரசின் தமிழ் முகவராகச் செயற்பட்ட விக்னேஸ்வரன் இப்போது ஜெனிவாவில் பேசி உரிமை பெற்றுக்கொள்ளலாம் எங்கிறார்.

தூத்துக்குடி போலல்லாது நமக்கு மக்கள் போராட்டப் பாரம்பரியம் அழிந்துவிட்டது என்று வைத்துக்கொண்டாலும், நமது மண்ணும் நீரும் விக்னேஸ்வரன் நடத்திய மாகண சபையின் ஆசீர்வாதத்தோடு அழிக்கப்பட்ட போது விக்னேஸ்வரனை கடவுள் ரேஞ்ச்சிற்கு வளர்த்துவிட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என மார்தட்டிக்கொள்பவர்களை எப்படி மதிப்பிடுவது.?

இவை அனைத்திற்கும் மேலாக புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் இறுதிக்கால கவுரவ உறுப்பினருமான பசீர் காக்கா, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் விக்னேஸ்வரனின் முன்னால் கண்ணீர்வடித்த காட்சி இதுவரை கால இழப்பையும், வீரத்தையும் தியாகங்கக்ளையும் கொச்சைப்படுத்தியது.

விக்னேஸ்வரன் நீதிபதியாக கடமையாற்றிய காலத்தில் போராளிகள் என்பவர்களைப் பயங்க்கரவாதிகளாகச் சிறையிலடைத்த வரலாற்றை காக்கா போனவரக்ள் அறியாதவர்களாகவிருக்கலாம். சுன்னாகம் அழிப்பின் ஆழத்தை அறியாதவர்களாக இருக்கலாம். பிரித்தானியாவில் தமிழ் மக்கள் நிறைந்த பொதுக்கூட்டத்தில் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் அழிக்கப்படுவதற்கு முன்னர், ஜன நாயக வழிகள் அடைக்கப்பட்டிருந்தன என்று பேசியதைக்கூட தெரியாத அளவிற்கு காக்கா போன்றவர்கள் முட்டாள்கள் அல்ல.

தமிழரசுக் கட்சியின் முகத்திரை எண்பதுகளின் முன்பே கிழிக்கப்பட்டுவிட்டது என்பதை வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். இன்று சம்பந்தனும் சுமந்த்திரனும் இன்னும் மாவை சேனாதிராசாவும் இணைந்து நடத்தும் பேரினவாத அரசு சார்ந்த அரசியல் தொடர்பாகவும் மக்கள் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால், சம்பந்தனின் அரசியலோடு தொடர்புடையவர்கள் எவரின் முன்னாலும் காக்காவின் வழியில் கஏண்ணீர் வடித்தால் அது கேலிக்குரியதாகிவிடும். இங்குதான் விக்னேஸ்வரனின் ஆபத்து உறைந்துள்ளது.

ஒரு புறத்தில் சம்பந்தன் போன்ற வெளித்தெரியும் எதிரிகள், மறு புறத்தில் நண்பர்கள் போன்ற தோற்றப்பாட்டைத் தரும் எதிரிகள். இதில் யாருமே பொருத்தமான தெரிவல்ல என்பது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முன் நோக்கிச் சிந்திப்பவரகளின் கடமை.

இதுவே மைத்திரி – மகிந்த அரசியல் சமன்பாட்டிலும் பொருந்தும். மகிந்தவின் சர்வாதிகார, பேசினவாதத்தின் கோரத்தில் விரக்தியிலிருந்த ஜன நாயக முற்போக்கு சக்திகள் நல்லாட்சி என்ற தலையங்க்கத்தில் உள்வாங்கப்பட்டு இலங்கையை எந்த எதிர்ப்புமின்றி பல்தேசிய நிறுவனங்களுக்கு சில்லரை விலையில் விற்பனை செய்துவிட்டார்கள்.

இவை அனைத்திற்கும் அப்பாலான அரசியலில் புலம்பெயர் தமிழ் வியாபாரிகளின் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுப்பதில் கஜேந்த்திரகுமார் குழு தோற்றுப் போனதைத் தொடர்ந்து, விக்னேஸ்வரன் என்பவர் அவர்களின் தவிர்க்கமுடியாத தெரிவாகிவிட்டார். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து எழுதப்படும் உரைகளை வாசித்தே விக்னேஸ்வரன் ஒற்றை நட்சத்திரமான கதை வரலாற்றில் மறைக்கப்பட்டுவிடும்.

ஆக, இன்று இலங்கையின் நல்லாட்சி அரசு முழு இலங்கையின் மக்களதும் வரலாறு காணாத தோல்வி என்றால், தேர்தல் அரசியலை சுற்றி இயங்க வைக்கப்பட்ட தமிழ் அரசியல் பேரினவாதத்தின் வெற்றி.

முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல, அதற்கு முன்பான சண்முகதாசனின் மாவோயிச அரசியலிலிருந்து ஆரம்பித்தால் கூட, வாக்கு அரசியலுக்க் அப்பாலான புரட்சிகர அரசியல் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் சூனியத்திலிருந்தே அது ஆரம்பிக்கப்பட வேண்டும். சாம்பல் மேடுகள் கூட சந்தர்ப்பவாதிகளுக்கு உரமாகிவிட்டது.

விடுதலைப் புலிகளின் ஆயிரக்கணக்கான முழு நேரப் போராளிகள் மத்தியிலிருந்து ஒரு தனி மனிதனையாவது காணமுடியாத சூனியத்தைப் பற்றிப் பேசும் போது சண்முகதாசன் காலத்து மாவோயிச அரசியல் தொடர்ச்சி என மார்தட்டிக்கொள்பவர்களின் இன்றைய தொடர்ச்சி மகிழ்ச்சியானதல்ல. இனப்படுகொலையின் பின்னர் பசில் ராஜபக்சவோடு கிளிநொச்சி மண்ணில் உலாவந்த சந்திரகுமாரின் தேர்தல் பிரச்சாரத்தில் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி முழங்கும் போதாவது தனது பெயரில் பொதித்துக்கொண்ட மார்க்சிய லெனினியம் என்ற பெயரை ‘தூக்கியிருக்கலாமே’.

ஆக, வெற்றிடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டிய அரசியல் இனியாவது ஆரம்பியக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே இன்றைய தேவையே தவிர, தேர்தல் அரசியலில் வாக்குப் பொறுக்கிக்கொள்வதல்ல.

Exit mobile version