Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் கடல் பரப்புக்களில் பல் தேசிய நிறுவன‌ங்களின் ஆதிக்கம்…

பகுதி – பத்து

கட்டுரையாக்கம் – FoilVedanta

முதன்மை கட்டுரை – இணைப்பு

அக்கட்டுரையின் பொருளுடன் கூடிய‌ தமிழாக்கம் – பறை விடுதலையின் குரல்

( காலத்தின் தேவை கருதி, இக்கட்டுரை இணையத்தில் தரவேற்ற‌ப்படுகிறது. )

இந்திய நாட்டினை சுற்றியுள்ள கடல் பரப்பு, மற்றும் இலங்கை நாட்டினை சுற்றியுள்ள கடல்பரப்பினில், பல பல் தேசிய நிறுவனங்கள், தமது வளக்கொள்ளையினை முன்னெடுப்பது மட்டும் அன்றி, தங்கள் இலாப நோக்கு கருதி, செயற்பட்டுக்கொண்டு, தாங்கள் செய்யும், கொள்ளைகள் பற்றிய விபரங்களும், அவற்றினால் ஏற்படும் அழிவுகள் பற்றிய விபரங்களும், மக்களின் கைகளிற்கு செல்லாமல், தடுத்து நிறுத்துவதற்கு தேவையான சகல வழிகளையும், தமது ஊடக‌ பலத்தின் உதவியுடனும், தம்மை சார்ந்த அரசில் அங்கம் வகிக்கும், அரசியல்வாதிகளின் துணை கொண்டு, முன்னெடுப்பதுடன், தமக்கு தேவையான துறை சார் நிபுணர்களை, தம்மால் உருவாக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவதன் மூலம், அவர்களின் துணை கொண்டு, அழிவுகள் பற்றிய விபரங்கள் மக்களை சென்றடையாது தடுப்பதுடன், அவர்களின் துணை கொண்டும், தன்னார்வ நிறுவன‌ங்களின் துணை கொண்டும், மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை தோன்றவிடாது தடுத்து கொண்டு, தம்மை யாரும் இனங்காணா வகையில், யாரிடமும் பிடிபடாது, தமது வளக்கொள்ளைகளை முன்னெடுத்துக்கொண்டு, தாம், அரசுகளின் உதவிகளினால், அரச அதிகாரிகளிற்கு, இலஞ்சங்களை வழங்குவதன் ஊடாக, தாங்களே, அரசுகளின் நண்பர்களாக எப்போதும் இருந்துகொண்டு, தங்களினால் ஏற்படுத்தப்படும் அழிவுகளை பற்றி எதுவித கவலைகளும் இன்றி, தொடர்ந்தும், தமது வளக்கொள்ளைகளை முன்னெடுத்து, அழிவுகளை பற்றி சிறிதும் சிந்தியாது, இயங்கி, கடல் மற்றும், நில வளங்களை கையகப்படுத்தி, தாமே தம்மை சார்ந்த பொருளியளாலர்கள் துணை கொண்டு, மக்களின் நிலங்களை மதிப்பீடு செய்வதன் பெயரில், நிலத்தில் உள்ள வளங்கள் பற்றிய தன்மைகளை அறிந்து, பின்னர், அதன் துணை கொண்டு, தங்கள் ஆய்வாளர்கள் துணை கொண்டு, தங்கள் வள கொள்ளைகளிற்கு தேவையான உபகரணங்கள் உட்பட பல பாகங்களை, வெளிநாடுகளில் உள்ள தமது நிறுவனங்களின் உதவியுடன் வரவழைத்து, நாடுகளில் உள்ள விவசாய மற்றும் கடல் வளங்கள் அழிவதனை பொருட்படுத்தாது, தாங்களே, தமது வளக்கொள்ளைகளிற்கு, தலைவர்களாகவும், மத்தியஸ்தம் வகிப்பவர்களாகவும் இருந்துகொண்டு, வளங்களை தயவுதாட்சண்யம் இன்றி, கொள்ளையடிப்பதுடன், கொள்ளையடிக்கும் வளங்களை, தாமும், தம்மை சார்ந்த அரசுகளில் அங்கம் வகிக்கும், அரசியல்வாதிகளும், பங்கு போட்டுக்கொண்டு, தம்மை நம்பி தமக்கு வாக்களிக்கும் மக்கள் பற்றி, எதுவித அக்கறைகளும் இல்லாத அரசியல்வாதிகள், இவர்கள் செய்யும் பாரிய அழிவுகளை துச்சமென நம்பி, இடம்பெறும் அழிவுகளுக்கு துணை போய்க்கொண்டு, தம் நாடு பற்றிய எவ்வித அக்கறைகளும் இன்றி, தம் நாட்டினை கூறு போட்டு, இவ்வகையான நிறுவனங்களிடம் பிடிகொடுத்து விட்டு, தமது மக்களிற்கு சேரவேண்டிய, வளங்களை, விற்று வரும், இலாபங்களில், பங்குகளை பெற்று, சுக போக வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, தமது மக்களை சொல்லொணா துன்பங்களில் ஆழ்த்தி, விவசாய நிலங்கள் உட்பட கடல் வளங்கள் யாவற்றையும், அழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாட்டின் வட பகுதியில், சுன்னாகம் பகுதியில், நீரினை மாசுபடுத்திய நிறுவனமான, எம்.ரி.டி வோக்கர்ஸ் நிறுவனம், தம்மை யாரும் இனங்காணா வகையில் செயற்பட்டுக்கொண்டு, தாம் எங்கு இருந்து கொண்டு இயங்குகிறோம் என்பது பற்றிய, எந்தவித தகவல்களும் இன்றி, கொழும்பு பங்கு சந்தையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன், தம்மை யாரும் அடையாளங்காணா வகையில், தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு துணையாக, தாங்களே நிறுவன‌ங்களின் பட்டியல்கள் அடங்கிய கோவையினை, யாருக்கும் தெரியாமல் பேணிக்கொள்வதன் பெயரில், அவற்றை மக்களிடம் இருந்து மறைப்பதன் ஊடாக, தம்மை யாரிடமும் சிக்காது, தங்களுக்கு தேவையான சகல இலாப நட்டங்களையும் கணக்கில் காட்டாது, தாங்களே நிறுவன முகாமைத்துவ விடயங்களை கவனிப்பதன் ஊடாக, தங்கள் கொள்கைகளை இலகுவாக முன்னெடுப்பதுடன், தங்கள் நிறுவன செயற்பாடுகளை, தங்களுக்கு நன்கு தெரிந்த அரசியல்வாதிகளின் துணையுடன் முன்னெடுத்துக்கொண்டு, தம்மை சகல பிரச்சனைகளில் இருந்தும் காத்துக்கொள்வத்ற்கு, நீதித்துறை உட்பட, நாட்டின் அரச இயந்திரங்கள் யாவற்றையும் பயன்படுத்திக்கொண்டு, தம்மால் ஏற்படுத்தப்பட்ட அழிவான, வட பகுதி அழிவில் இருந்து தம்மை காத்துக்கொள்வதுடன், மக்கள் நீதி கோரி நடத்திய போராட்டங்களை, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதினிதிகள் துணைகொண்டு, மறைத்ததுடன் மட்டும் அல்லாமல், அம்மக்களிற்கு ஏற்பட்ட அழிவிற்கு பொறுப்பு கூறாது விட்டமையுடன், மக்களுக்கு எவ்வித இழப்பீடுகளையும் வழங்காது, பாதிக்கப்பட்ட மக்களிற்கு, நிவாரணங்கள் உட்பட எவ்வித வசதிகளயும் செய்து கொடுக்காது, தமது பலத்தால், இழைக்கப்பட்ட கொடூர குற்றத்தில் இருந்து, மிக இலகுவாக தப்பித்ததன் மூலம், தமது பலத்தினையும், மக்களை மந்தைகளாக்கும், அரசின் உண்மை முகத்தினையும், இனங்காட்டியதோடு மட்டும் அல்லாமல், தாமே முன்னின்று, வழக்குகளில், தமக்கு தெரிந்த புலனாய்வு உத்தியோகத்தர்களின் உதவியுடன், சாட்சிகளை அச்சுறுத்தியதன் ஊடாக, இழைத்த அநீதியை மறைக்க முற்பட்டதுடன், தாமே தங்களுக்கு தேவையான வழக்குரைஞர்கள் உட்பட அனைவரையும், அரச தரப்பிலும், எதிர்தரப்பிலும் ஆஜராக வைத்ததன் மூலம், வழக்கின் போக்கினை மாற்றி, வழக்கினை எவருக்கும் புரியாத கோணத்தில், திசைதிருப்பி, மக்களிற்கு, அந்நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்களை அடையாளங்காணா வகையில் செயற்பட்டு, வழக்கின் உண்மையை மக்களிடம் இருந்து மறைத்து, பேரழிவினை இன்னமும், தமக்கு நன்கு பழகிய வெளிநாட்டு அரசியல்வாதிகளின் துணை கொண்டு முன்னெடுத்து செல்கின்றது. இதற்கு பின் உள்ள பல முக்கியஸ்தர்கள் உள்ள போதும், மக்கள் அவர்களை அடையாளங்காணா வகையில், நிறுவனங்களின் கட்டமைப்புக்கள் அமைக்கப்பட்டு, மக்களிடம் இருந்து, உண்மையான குற்றவாளிகளான இம்முக்கியஸ்தர்களின் விபரங்கள் மறைக்கப்படுவதுடன், அவர்கள் யாருக்கும் தெரியாது எனும் அடிப்படையில், இன்னமும் தமது வளக்கொள்ளையினை, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை பொருட்படுத்தாது, முன்னெடுத்துச்செல்வதுடன், மக்களின் உண்மை செயற்பாட்டாளர்களை, தமது பலத்தால், பயமுறுத்துவதன் மூலமும், பணக் கொடுப்பனவின் மூலமும், தடுத்து நிறுத்தி, தமக்குரிய பாணியில், அரசுகளை கைவசப்படுத்துவதன் மூலம், அரசுகள், தமக்கு எதிராக எக்காலத்திலும் செயற்படாதவாறு தடுத்து நிறுத்துவதன் ஊடாக, தம்மை காத்துகொண்டு, பல காலமாக வளங்களினை கொள்ளை அடிப்பதுடன், இயற்கை அன்னையையும் அழித்து, தமது செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர். இன்றும் சுன்னாகத்தில் அழிவுகளை எதிர்கொண்ட மக்கள், இன்னமும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதியை பெற்றுக்கொள்ள முனைந்து வருவது பாராட்டகூடியது என்பதுடன், அவர்கள் தங்கள் செயற்பாடுகளை, இப்படியான பல் தேசிய நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட, வேற்றின மக்களின் உதவியுடன் முன்னெடுத்து செல்வது, இன்னும் பலத்தை கொடுக்கும் என்பதுடன், அம் மக்களுடன் இணைந்து செயற்படுவது, இனங்களிற்கு இடையில் ஒற்றுமையை வளர்த்து, இன்னமும் இனங்களிற்கு இடையில் உள்ள வேறுபாட்டினை, களைய உதவும் என்பதுடன், இனங்களிற்கு தேவையான பாதுகாப்புக்களை, மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் ஊடாக பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் இயங்கும் கெயர்ன் இந்திய நிறுவனம், இந்திய அரச அதிகாரிகளின் உதவியில், இலங்கையில் இயங்கும், கெயர்ன் லங்கா நிறுவனம் போன்று, வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பதுடன், அந்நிறுவனம், இந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள, கிருஸ்ணா கோதாவரி ஆற்று படுக்கைகளிலும், இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விவசாய பூமிகளிலும், எண்ணெய் வளங்களினை தோண்டுவதற்கு, தமக்கு தெரிந்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட, இயந்திரங்கள் மற்றும் வளங்களை பாவித்து, எவ்வித அழிவுகளையும் கருத்தில் கொள்ளாது, தமக்கே உரிய பாணியில் அரச அதிகாரிகளை இல‌ஞ்சங்களை கொடுப்பதன் மூலமும், தமது பலத்தின் மூலமும் விலைக்கு வாங்கி, அரச அமைப்புக்களை கைக்குள் போட்டுக்கொண்டு, போலியான சுற்று சூழல் சான்றிதழ்களை, தமது செயற்பாடுகளுக்கு பெறுவதன் ஊடாக, மக்களை முட்டாள்களாக்கி, அழிவுகளை மக்களிடம் இருந்து மறைப்பதற்கு ஏதுவாக, முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, தம்மை யாரும் இனங்காணா வகையில், தமக்கும் அழிவுகளுக்கும் எவ்வகையிலும் தொடர்புகள் இல்லாதது போன்று தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, தம்மால் ஆன சகல வழிகளிலும், மக்கள் போராட்டங்களினை முடக்கும் வகையிலும், மக்கள் போராட்டங்களை, தமது கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, தம்மால் போலியாக உருவாக்கப்பட்ட, தன்னார்வ தொண்டு நிறுவன‌ங்களின் உதவியுடனும், தம்மால்கொண்டு நடத்தப்படும் ஊடகங்களின் உதவியுடனும், செயற்பாடுகளை மேற்கொண்டு, தம்மை, யாரும் இனங்காணா வகையில், தம்மை பற்றிய எவ்வித குறிப்புகளும் இன்றியும், பல ஆபிரிக்க நாடுகளில் செயற்படுவதை போன்று, தமது பெயர் விபரங்களை வெளியாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அரச அதிகாரிகள் துணை கொண்டு, பதிவு செய்வதன் ஊடாக தம்மை யாரும் இனங்காணாது, செயற்படுகின்றனர். இந்நிறுவனம், தமது எண்ணெய் அகழும் செயற்பாட்டிற்காக, பாதுகாப்பான பொறிமுறைகளினை பயன்படுத்தாது, இலாப நோக்கு கருதி, அழிவு நிறைந்த, செயன்முறைகளை தேர்ந்தெடுப்பதுடன் மட்டும் அல்லாது, மக்களின் பயன் பாட்டுக்கு உதவும் விவசாய நிலங்களையும், மக்கள் தேவைகளிற்கு அவசியமான ஆற்றுப்படுக்கைகளையும், கடல் வளங்கள் உள்ள கடல் பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து, அழிவுகளை பொருட்படுத்தாது, தம்மை எவரும் கேள்வி கேட்காத வகையில், தமது கட்டுக்குள் இருக்கும் புலனாய்வு பிரிவினர் துணை கொண்டு, செயற்பாட்டாளர்களை செயற்படாத வகையில் தடுத்து நிறுத்தி, அவர்களை மக்களிற்காக எவ்வித செயற்பாடுகளையும் செய்யாதவாறு, தடுத்துக்கொண்டு, தமது வளக்கொள்ளையினை மட்டும் கருத்தில் கொண்டு, மக்களை பற்றி எள்ளளவும் அக்கறை கொள்ளாது, செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், ஆபத்து மிக்க தொழில்நுட்பங்கள் கொண்ட, நீரியல் விரிசல் முறையினை பயன்படுத்தியும் ( Offshore fracking ), பல பார உலோகங்களுடன் கூடிய, நஞ்சு மிக்க திரவங்களினை பூமிக்கு அடியில் செலுத்தி, எண்ணெய் அகழும், ஆபத்து மிக்க முறையான, “பொலிமர்” ( Polymer flood injection ) திரவ அழுத்த முறையை பயன்படுத்தியும், எண்ணெய் அகழ்வதுடன், இம்முறைகள் உலகின் பல பாகங்களில் பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சில நாடுகளில் சிறிய சிறிய நில நடுக்கங்களையும் தோற்றுவித்ததுடன், எண்ணெய் அகழ்வதற்காக பாறைகளை உடைக்கும் தொழில் நுட்பமானது, பல பயங்கர விளைவுகளை பூமிக்கு அடியில் தோற்றுவிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளாது, பொறுப்பு கூறல் எனும் நடவடிக்கைக்கு, அமெரிக்க நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனமான அமெரிக்க உதவி நிறுவனத்தின் உதவியுடன் (US Aid), அமைப்பினை தோற்றுவிப்பதன் ஊடாக, தம்மை சார்ந்த நிறுவன‌ங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளிற்கு அமைவாகவே செயற்படுகின்றது, என்கிற தோற்றத்தினை ஏற்படுத்துவதுடன் மட்டும் நில்லாது, தமது தேவைக்கு ஏற்ப, அரச கொள்கைகளை, மாற்றும் அளவிற்கு, அரசுகளில் தாக்கம் செலுத்துவதன் ஊடாக, தம்மை காத்துக்கொண்டு, தம்மாலான வழிகள் சகலவற்றையும் பயன்படுத்தி, தமக்கே உரிய பாணியில், வளக்கொள்ளைகளை முன்னெடுத்து செல்வதுடன், தம்மை மக்களிடம் இருந்து காத்து கொண்டு செயற்பட்டு, தம்ம அடையாளமே தெரியா வகையில் செயற்பட்டும் வருகின்றன. தாங்களே தம்மை செயற்பாட்டாளர்கள் என தம்பட்டம் அடிக்கும், செயற்பாட்டாளர்கள், அவர்களின் இக்கொள்ளைகளிற்கு துணை செல்வதுடன் மட்டும் அல்லாது, மக்களிற்காக இதய சுத்தியுடன் செயற்படும், சில தன்னார்வம் மிக்க இளந்தலைமுறையினரையும், தவறான பாதையில் வழி நடத்திச்செல்வது மட்டும் அன்றி, தம்மையே மக்களின் காப்பாளர்களாக முன்னிறுத்திக்கொண்டு, தம்மை அடையாளங்காணா வகையில், அரச அதிகாரிகளின் துணை கொண்டு இயங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களை போன்றவர்களை, மக்கள் அணி திரண்டு, தமக்கு தேவையான மக்கள் சார் கட்டமைப்புக்களை தோற்றுவித்து, அவற்றிற்கு தேவையான துறை சார் நிபுணர்களாக, தன்னார்வம் கொண்ட, மக்களில் அக்கறை கொண்ட, இளையவர்களில் தகைமை உள்ளவர்களை நியமிப்பதன் ஊடாகவும், தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாகவும், மேற்கொள்வதுடன், அரசுகளை ஆட்டங்காணும் வகையில், இக்கொள்ளைகளிற்கும், அழிவுகளிற்கும், பின் இருக்கும் கபடதாரிகளை, தம்மாலான சகல வழிகளிலும், ஊடகங்களில் பணி புரியும் நேர்மையான ஊடகவியலாளர்கள் துணை கொண்டும், செயற்பாட்டாளர்கள் துணை கொண்டும், வெளிக்கொணர்வதுடன், அம்முறையில், தாங்களே தம்மை ஆள்வதற்கான எதிர்கால அரசுகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துச்செல்லவும் வேண்டி நிற்பதுடன், எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி, இப்பேரழிவுகளில் இருந்து தம்மை காக்க முன்வருமாறும் கேட்டு நிற்கின்றோம். இது மட்டும் அன்றி இந்நிறுவனத்தின் கட்டுக்குள் இயங்கும், பல நிறுவனங்கள், தமிழ்நாட்டின், கூடலூர் கரைகளிலும், தென் மதுரை உட்பட கரையோர நதியான‌ காவிரி நதி பாயும் ஆற்றினை அண்டிய ஆற்றுப்படுக்கைகளில், எண்ணெய் அகழ்வதற்காக ஆபத்து நிறைந்த தொழில் நுட்ப முறையான, ஆழ் துளை இட்டு எண்ணெய் அகழும் முறையை பயன்படுத்தி, எண்ணெய் வளத்தினை, யாரும் அறியாது, இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம், பிரித்தானிய பெற்றோலிய நிறுவனம் மற்றும் அம்பானிகளின் கட்டுக்குள் இருந்து இயங்கும் நிறுவனமான, ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை கொண்டு, எண்ணெய் அகழ்வினை மேற்கொண்டு வருவது மட்டும் அல்லாமல், அவற்றின் காரணமாக, அக்கரையோரப்பகுதிகளில் ஏற்படுகின்ற சுற்று சூழல் மாசடைதல் பற்றிய எவ்வித அக்கறையும் இன்றி, தமது வளக்கொள்ளையினை, முன்னெடுத்து செல்வதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றை பற்றிய உண்மைகளை, மக்கள் விரைவாக, தம்மை சார்ந்த, துறை சார் நிபுணர்கள் உதவி கொண்டு கண்டுபிடிப்பதுடன் மட்டும் அல்லாமல், சகல மக்களிடமும் இவ் உண்மைகளை கொண்டு சென்று, தமது பிரதேசங்களினை பாதுகாப்பது, ஒவ்வொரு தனி மனிதர்களின் கடப்படாகும். இவை மட்டும் அல்லமல், தூத்துக்குடி செப்பு செப்பனிடும் தொழிற்சாலை ( இந்நிறுவனமும், கெயர்ன் இந்திய நிறுவனத்துடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது என்பதுடன், இவையே தமிழ்நாட்டினை சுற்றியுள்ள நிலம் மற்றும் கடல் பரப்புக்களை மற்றும் சூழலினை, மாசுபடுத்தி வருவதில் பின் நிற்கின்றன, என்பது வெளிப்படையான உண்மையாகும். ), மற்றும் கூடங்குளம் அணு மின்னிலையம் போன்ற நிறுவனங்களாலும் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு யுரேனியம் வழங்குவதற்கு பயன்படும் தூத்துக்குடி துறைமுகத்தின் மக்கள் நலனில் அக்கறை அற்ற‌ செயற்பாட்டினாலும், தமிழ் நாடு மற்றும் அதனை அண்டியுள்ள நில மற்றும் கடல் பரப்பு முற்றிலுமாக மாசு படுத்தப்படுவதுடன், இவை பற்றிய எவ்வித தாக்கமும் மக்களிடமும், செயற்பாட்டாளர்களிடமும் இல்லாதது கவலைக்குரியது என்பதுடன், மக்களும், ஊடகங்களும், செயற்பாட்டளர்களும், அமைதி காப்பது, இவை போன்ற, நாசகார செயற்பாடுகளிற்கு துணை போகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் என்பதுடன் இவற்றிற்கு எதிராக அரச சார்பற்ற, மக்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கும், சகாயம் ஐயாவினை போன்ற தனி நபர்களை போன்ற செயற்பாட்டாளர்கள், முன்வந்து செயற்படுவது மட்டும் அன்றி, உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களையும், பூமியையும் காக்க முன்வரவேண்டும்.

இந்திய, இலங்கை நாடுகளை சுற்றியுள்ள, கடல்வளங்கள் மற்றும் எண்ணெய் வளங்கள், தனியார் நிறுவனங்களால், இந்திய, இலங்கை அரசுகளில் அங்கம் வகிக்கும், அரசியல்வாதிகளின் துணை கொண்டு, அபகரிக்கப்படுவதுடன், இவற்றால், விவசாயம் உட்பட பல அத்தியாவசிய துறைகள் பாதிப்பதை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து, அனைவரும் செயற்பட முன்வரவேண்டும் என்பதுடன், மக்களே, தம்மை அழிவுகளில் இருந்து காக்க கூடிய, அமைப்புக்களை தோற்றுவித்து, போராட்டங்களின் ஊடாக, இவ்வகையான பிணக்குவியல்களினை கழுகுகள் தின்பதை போன்று, மனித உயிர்களை துச்சமாக கருதி, வளக்கொள்ளைகளினை முன்னெடுத்து செல்லும் நிறுவனங்களினை இனங்கண்டு, அவற்றினை வேரருப்பதற்கு, தம்மை சகல வளிகளிலும் தயார் படுத்தி, போராட முன்வரவேண்டும். அத்துடன் அதி பயங்கர நிறுவனங்களான “பிளக்ரொக்” ( Blackrock ) மற்றும் “ஜெ.பி. மோர்கன்” ( J.P Morgan ) நிறுவனங்கள், தமிழர் கடலிலும், தமிழர் பிரதேசங்களிலும், இந்திய, இலங்கை நாடுகளிலும், சதிகளின் துணையுடன், அழிவுகளை பொருட்படுத்தாது, மேற்கொள்ளும் வளக்கொள்ளைகளையும், அழிவுகளையும், ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்து, அவற்றின் கட்டுக்குள் இருந்து இயங்கும், இந்திய, இலங்கை அரசுகளை, தாக்கங்களை செலுத்துவதன் ஊடும், மற்றைய‌ இன மக்களின் உதவிகளுடன், இவை பற்றிய உண்மைகளை, பல வேறுபட்ட‌ இடங்களிற்கும், கொண்டு செல்வதன் ஊடாக, மக்களினை, இக்கோர அரசுகளின் பிடியில் இருந்தும், இப்பிணந்தின்னி நிறுவனங்களின் பிடியில் இருந்தும், விடுவிக்க போராடி, சகல இன மக்களும் வாழ்வதற்கு ஏற்ப, சுபிட்சமான நாடுகளை கட்டியெழுப்ப, அனைவரும் முன்னிற்கவேண்டும், எனவும் கோரி நிற்பதோடு, அண்மையில், எண்ணெய் அகழும், இன்னமொரு துணை நிறுவனமான, கெயில் நிறுவனத்தால், பாதிக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து, அந்நிறுவனத்தின் சதி திட்டமான, மீதேன் திட்டத்தின், பின் இருக்கும் விளைவுகள், சதிகாரார்கள், மற்றும் அரச அதிகாரிகளை, அம்பலப்படுத்துவதன் ஊடாக, அனைவரும் ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும். இன்றும், இக்கொடூர மீதேன் திட்டத்தினால், மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கையில், தமிழ் நாட்டில் உள்ள ஆர்வலர்கள், அமைதியுடன் வேடிக்கை பார்ப்பது, கவலைக்குரியது என்பதுடன், வழமையான துறை சார் பணிகளுடன் கூடிய அமைப்புக்கள், தமிழ் நாட்டில், மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதுடன், தம்மை தாமே ஆளும் வகையில், அரசினை கட்டியெழுப்ப, அனைவரும் முன்னின்று உழைக்க முன்வரவேண்டும், என்றும் கோரி நிற்கிறோம். இன்னமும் தாமதிக்க அனைத்து பிரதேசங்களும், வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசங்களாக, மாற்றப்பட்டு விடும் என்பதில், சற்றும் ஐயம் இல்லை என்பதுடன், இக்கட்டுரையின் உண்மை நோக்கம் அறிந்து, மக்கள் அனைவரும் இணைந்து செயற்படுங்கள்.

நன்றி – FoilVedanta

இக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆதாரங்கள் தொடர்பான‌ இணைய பதிவுகள்

  1. http://analysisreport.morningstar.com/stock/research?t=532792&region=IND&culture=en-US&productcode=MLE
  2. https://www.cairnindia.com/sites/default/files/transcripts/CairnIndia-Earnings-Transcript-21Oct-2014.pdf
  3. http://www.fractracker.org/map/international/worldwide-fracking-bans/
  4. http://antinuclear.net/2012/09/24/500-fishing-boats-protest-loading-of-uranium-for-kudankulam-nuclear-power-plant/
Exit mobile version