இதற்கு நேர் எதிரான மலையக கல்வி நிலைமை பயணித்துக்கொண்டிருப்பது வேதைனைக்குறிய விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் மலையகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில், இவ்வாறு நடந்தேரிக் கொண்டிருக்கும் போது வேறு விதமாக பணம் சம்பாதிக்கும் முறைமை ஒன்றினை மற்றும் ஒரு நிறுவனம் அரங்கேற்றி வருகின்றது.
யுனெஸ்கோ நிறுவனத்தின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டில் உலகின் அனைத்து சிறுவர்களுக்குமான ஆரம்பக்கல்வி என்னும் திட்டமும் அதனை தொடர்ந்து கல்வி என்பது சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி சுதந்திர கல்வி என்று அர்த்தப்பட்ட போதும் உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் படி சமூக, அரசியல், கலாசார பிரகடனங்களின் அடிப்படையில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும் கல்வி என்பது சுதந்திரம் அல்லது தேவை என்பதனை விட அது உரிமை என்று கூறப்பட்டுள்ளது. இந்த கல்வி உரிமை எங்கெல்லாம் எவ்வாறு மீறப்படுகின்றது அல்லது சுரண்டப்படுகின்றது என்று நோக்கும் போது மலையகம் இதற்கெல்லாம் மிகச் சிறந்த உதாரணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு அவர்களின் பரீட்சைக்கான அனுமதியினைக் கூட பணத்திற்கு விற்பனை செய்த பாடசாலை ஒன்று தொடர்பாக பெற்றோர்கள் தயங்கி தயங்கி தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். மலையகத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்தி சபை என்னும் பெயரில் பற்றுச்சீட்டு வழங்கி 1200 ரூபாய் பணத்தினை சுமார் 200 மாணவர்களிடம் அறவிட்டுள்ளனர். 1200×200 = 240000.00 மேற்படி பணம் கட்டாத மாணவர்களுக்கு பரீட்சைக்கான பணத்தினை வழங்காததன் காரணத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்பது மாத்திரம் இன்றி அவர்கள் வீடுகளுக்கு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 1200 ரூபாய் கட்டியப் பின்புதான் அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கட்டிய பணத்தினை பாடசாலை காரியாலயத்தில் கட்டியப்பின் பற்றுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி அதிபரிடம் இது போன்ற விடயங்கள் தொடர்பாக சில பழைய மாணவர்கள் கேட்டபோது முடியுமானால் என்னைப்பிடித்துக்காட்டுங்கள் என்றும் அமைச்சர் , கல்வி அமைச்சர், மத்தியமாகாணம் யாராலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். பழைய மாணவர்கள் இவர் தொடர்பாக கூறும் போது, அரசியல் செல்வாக்கு இருக்கும் பிரதேசத்தின் ஒரே அதிபர் இவர் என்பதனால் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறி விட்டனர். உண்மையிலேயே கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டங்களில் பகிரங்கமாக உரையாற்றிய மேற்படி அதிபர,; குறிப்பிட்ட தொழிற்சங்கத்திற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதன் காரணத்தினால் பல வருட காலமாக ஒரே பாடசாலையில் அதிபராக கடமையாற்றிவருகின்றார்.
இவரது பண வசூலிப்புக்கள் தொடர்பாக பேசுபவர்கள் எவரும் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வராததற்கு மேற்கூறிய காரணங்கள் மாத்திரம் இன்றி மேலும் பல விடயங்களை காணலாம்.
அண்மையில் பிரதேசத்தின் ஒரு பணக்கார மாணவன் தனது தந்தையின் காரை திருடிக்கொண்டு மற்றும் ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு ஓடி போய்விட்டான். ஆனால் பாடசாலை மட்டத்தில் தண்டிக்கப்பட்டது பணக்கார மகனுக்கு பதிலாக துணைக்கு போன ஏழை மாணவன் மாத்திரமே என்று ஏனைய பெற்றோர்கள் கூறி கவலைப் படுகின்றார்கள். குறிப்பிட்ட பணக்கார தந்தை அதிபருக்கு தனிப்பட்ட ரீதியில் பல உதவிகளை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்புச் சட்டத்தின் அத்தியாயம் ஒஎii இன்படி பொது மக்களிடம் இருந்து நிதியை சேகரிக்க பாளுமன்றத்தின் முடிவின் படி திரை சேகரிக்கும், திரை சேரி அங்கீகாரம் வழங்கும் திணைகளங்;களுக்கும் மாத்திரமே முடியும். ஆனால் 1940-1959 காலகட்டத்தில் இலவச கல்விக்கான சுற்றரிக்கை 5ஃ59 இன் மூலமூம் 1960-1972 இலவசக்கல்வி அறிமுகத்திற்காய் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதனையும், தொடர்ந்து பாடசாலைகளின் நிதி மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு பூரணப்படுத்தப்பட்டது. 1962 மார்ச் 30 ஆம் திகதி 9ஃ4ஃ28 என்னும் விசேட சுற்றரிக்கையின் படி பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை நிர்மானிப்பதற்கான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டது.
இந்த சட்ட திட்டங்கள் தொடர்பாக நோக்கும் போது ஒரு பாடசாலையில் குறிப்பிட்ட தொகை பணத்தினை அரவிடுவதாயின் கல்வி அதிகாரியின் கையொப்பத்துடனான பற்றுச்சீட்டு வழங்கப்படுவது அவசியம். அந்தப் பற்றுச் சீட்டை கட்டாயமாக பணம் வழங்குனருக்கு கொடுக்க வேண்டும். பற்றுச்சீட்டு வழங்கப்படாமல் பெறப்படும் அனைத்து பணமும், சட்டத்திற்கு முரணாக சேகரிக்கப்பட்ட பணமாகும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம் தொடர்பான சரியான இறுதி கணக்கினை கணக்காய்வாளர்கள் நாயகத்திற்கு வருட இறுதியில் அனுப்பி வைக்கப் பட வேண்டும்.
எது எவ்வாறிருந்த போதும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபன விதிக் கோவைக்கமைய இலங்கை கல்வி நிர்வாக சேவையில் பணியாற்றும் ஒரு அதிகாரி அரசியல் உரிமையற்றவராவார். அவருக்கு இரகசியமாக வாக்களிக்கும் உரிமை மாத்திமே உள்ளது. ஆனால் மேற்படி அதிபர்கள் அரசியல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக உரையாற்றி இருப்பதுடன் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்காக வாக்குகளை குறுக்கு வழியில் எவ்வாறு பெற்றுக் கொடுப்பது என்றும் உரையாடி உள்ளார்கள். இவ்வாறு உரையாடியதன் பதிவுகள் பலரிடமும் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. எனவே இலங்கை சட்டங்களுக்கு முரணாக தனது எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் மேற்படி அதிகாரிகளுக்கு எதிராக பொது மக்களும், பெற்றோர்களும் எது வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுக்க மலையகத்தின் கற்றவர்கள் முன் வர வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா?
மலையக மக்களின் கல்விக்கான உரிமைகளை பரிப்பவர்களுக்கு எதிராக பாரிய மக்கள் போராட்டங்களையும், எதிர்ப்பு நவடிக்கைகளையும் எடுப்பதுடன் இவ்வாறானவர்களின் முகத்திரைகளை கிழிக்க வேண்டியது மலையகத்தை நேசிப்பவர்களின் பொறுப்பள்ளவா?