இந்திய சிறுபான்மை தேசிய இனங்கள் பெரும்பான்மையாக வாழும் நிலங்களை ஊடறுத்து ஹிந்தி மொழி பேசும் மக்களை குடியேற்றும் உத்தியை இந்திய ஆளும் தரப்பு வெற்றிகரமாக செய்து வருவதன் மூலம் இந்திய அரசு சிறுபான்மை இனக் குழுக்களை இன அழிப்புச் செய்து வருகிறது.
தமிழ் அரசியல் வாதிகளான சம்பந்தன் , மற்றும் பொன்னம் பலம் வகையறாக்கள் இந்த நிலைமைகள் குறித்து குரல் கொடுப்பதில்லை. தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இன அழிப்புக்கு எதிரான செயல் முறை திட்டங்கள் எதுவும் இல்லைப் போலும். அவர்கள் நல்லாட்சி அரசை பாதுகாக்கும் நோக்கங்களுக்கு எதிராக எதுவும் செய்யப் போவதில்லை. இந்திய, அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து கனவான்? பேச்சுக்களை நிகழ்த்திவிட்டு பத்திரிகை களுக்கு அறிக்கை குடுப்பதுவே அவர்களின் அரசியலாகிறது.
சுன்னாகம் குடிநீர் திட்டம், முன்னை நாள் போராளிகள் உடலில் புற்று நோயை உண்டாக்கக் கூடிய மருந்துகளை உட்ச்செலுத்தியமை அதன் மூலமாக நூற்றுக் கணக்கான போராளிகள் மரணத்தை தழுவியமை, மற்றும் தமிழர்களை இலக்கு வைத்து கருத்தடையினை மேல் கொள்ளுதல் போன்ற இன்ன பிற இன அழிப்பு விடயங்கள் யாராலும் கவனத்தில் கொள்ளப் படவில்லை.
தமிழர் தயாகம் எங்கும் சிங்கள பௌத்த ஆதிக்கம் வெறித்தனமாக மேலாதிக்கம் செலுத்தி தமிழ் பேசும் மக்களை இன அழிப்புச் செய்து வருகிறது. சிங்களப் பேரின வாதத்தின் கலாச்சாரப் படுகொலையில் பல தமிழர்களின் பூர்வீக தொன்மைகள் அழிக்கப் பட்டு சிங்கள பௌத்த மேலாதிக்கம் நிலை நிறுத்தப் படுகிறது.
இந்திய ராணுவ கற்கை நெறிகளை பின்பற்றும் இலங்கை ராணுவத்தினருக்கு கிளர்ச்சி அடக்கும் உத்திகளில் ஒன்றாக இன அழிப்பு நடவடிக்கை குறித்த இந்திய அனுபவங்கள் போதிக்கப் படுகின்றது என்பதை எனது சிங்கள நண்பர்களின் மூலமாக நான் அறிந்தும் இருக்கின்றேன்.
தமிழர் விரோத இந்திய நிலைப்பாடு நடந்து வருவது இன்று நேற்றல்ல. தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின் தமிழர் விரோதம் இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் இன்று வீரியம் பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதி நிலைப்பாடே ஈழத்தில் தமிழர்களை இன அழிப்புச் செய்யும் இலங்கை அரசின் கரத்தை பலப் படுத்தும் செயலில் இந்திய அரசு ஈடு படுகிறது.
இவ்வாறு ஈழத்தமிழர்களை வட கிழக்கில் அழித்தொழிக்கும் செயல் பாடு இந்திய நலனுக்கு தேவை படுவதாக இந்தியாநினைக்கும் போது, உண்மை மறுவளமாக இந்தியாவை திருகத்தான் போகிறது என்பதை வரலாறு எண்பிக்கும். தமிழர்கள் மீதான இன அழிப்பு நிறைவுற்றவுடன் இலங்கை இந்தியாவை தூரவே வைத்திருக்கும். இலங்கை இந்தியாவிடம் இருந்து தன்னை பாது காக்கும் நோக்குடன் சீனாவை நெருங்கும் அப்போது, சீன ராணுவத் தளங்கள் வட கிழக்கில் ஏன் கச்சை தீவிலும் கூட அவைநிறுவப் படலாம்.
எப்போதும் இந்தியா இலங்கையை தனது கைக்குள் வைத்திருக்கலாம் என்ற இந்திய நம்பிக்கையில் மண் விழுந்ததே வரலாறு. இந்தியா காசு கொடுத்து தனது மண்டையை பிளக்கும் வேலையை, இலங்கை அரசை க் கொண்டு செய்கிறது. கூடவே தமிழர்களின் மண்டையும் பிளக்கப்படுகிறது.
ஒருகால் இந்திய மண்டை இலங்கையால் பிளக்கப் படும் நிலை வரும்போது ஈழத்தில் இந்தியாவுக்கு உதவிக்கு வர தமிழர் எவரும் இருக்க மாட்டார்கள்!, அவ்வாறு இருப்பினும் நொ(இற)ந்து போன தமிழர்களின் ஆத்மாக்கள் மாத்திரமே தவிர வெறேவையும் அல்ல, அவைகள் கூட இந்திய துரோகத்தை எண்ணி இந்தியாவுக்கு உதவிக்கு வரமாட்டா என்பது நியமான உண்மையாக இருக்கும்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதே புலிகளின் அழிவுக்கும் ஈழத்தமிழர்களின் படுகொலைக்கும் காரணம் எனச் சொல்லப் படுகிறது.
ஆனால் இதே இனிஒருவில் நான் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் ராஜீவ் காந்தி கொல்லப் பட்டதன் பின்னணியில் இலங்கை அரசின் பங்கு இருந்திருக்கும் என எழுதினேன். இன்று இந்தியாவில் பலர் இதே கருத்தை முன் வைக்கின்றனர்.
பிரேமதாசா மற்றும் லலித் வீரதுங்க போன்றோர்! அப்போது இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட குமரன் பத்மநாதன் மற்றும் மகேந்திர ராசாவுடன் செய்த கூட்டு ஒப்பந்தமே ராஜீவ் படு கொலை எனக் குறிப்பிட்டிருந்தேன். இதில் பிரபாகரன் ஈடு பட்டிருக்க வாய்ப்பில்லை! என்பது எனது நிலைப்பாடு அதுவே சரி என்பதுக்கு பல விடயங்கள் ஒத்துப் போகிறது.
புலிகளை பொறுத்த வரையில் தலைமையின் உத்தரவின்றி இவை நடக்க வாய்ப்புண்டா? என்ற கேள்விக்கு எனது பதில், இருவகையானது
ஓன்று, மகேந்திர ராசா எனும் மாத்தையா புலிகளின் பிரதி தலைவராக செயல் பட்ட காலத்தில் அவரின் நடவடிக்கை பிரபாகரனுக்கு பிரதி ஈடாகவே புலிகளாலும் தமிழ் மக்களாலும் நோக்கப் பட்டது. இதுவே மாத்தையாவுக்கு புலிகளின் தலைமையை கைப்பற்றும் மறைமுக சதி எண்ணத்துக்கு தூண்டு கோலாக இருந்தது.
மாத்தையா புலிகளின் தலைமையை கைப்பற்றிய பின், ராஜீவ் காந்தி மற்றும் அமுதலிங்கம் கொலைகளை பிரபாகரனின் தலையில் போடும் உத்தி மாத்தையாவாலும் இலங்கை அரசாலும் பின்னப்பட்டிருக்கலாம்.
மற்றையதை, விளக்க அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலை பற்றிய எனது அவதானம் ஒன்றை தருகிறேன்.
அமுதலிங்கத்தை படுகொலை செய்யும் திட்டம் பிரேமதாச அரசுடன் கூட்டுச் சேர்ந்தே அப்போதைய புலிகளின் பிரதித் தலைவரின் உத்தரவில் பேரில் செய்யப்பட்டது, என்ற பேச்சு அக்காலத்தில் எமது பிரதேசத்தில் பேசப் பட்டது. இப்படுகொலையை மேல் கொண்ட புலிகளின் உறுப்பினர் விசு எமது பிரதேசத்தைச் சார்ந்தவர் எமது பாடசாலையின் பழைய மாணவரும் கூட. கொல்லப்பட விசுவுக்கு விடுதலைப் புலிகள் அஞ்சலி செலுத்தவில்லை அவரை தமது போராளியாகவும் உரிமை கோரவும் இல்லை. இதனால் விசுவின் குடும்பத்தினர் வீதிக்கு வந்து எதிர்ப்பை காட்டினர். அப்போது புலிகளால் அவர்களின் குடும்பத்துக்கு சொல்லப்பட்ட பதில் இயக்கத்தின் உத்தரவின்றி விசு அமுதலிங்கத்தை கொன்றார் என்பதே. இவ்விடயம் வடமராச்சிப் பகுதியில் பலருக்கு தெரிந்த விடயம்.
மாத்தையாவை நம்பி விசு இயக்கத்துக்கு வரவில்லை பிரபாகரனை நம்பியே விசு போராட்டத்துக்கு வந்தார் என்ற கோசங்களும் விசு குடும்பத்தால் எழுப்பப்பட்டு பலத்த வாதப் பிரதி வாதங்களின் மத்தியில் பல நாட்களின் பின் விசு விடுதலைபுலிகளால் வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இச் செயல் பாடு அன்றைய காலத்தில் பிரபா, மாத்தையா உள் முரண்பாட்டை கோடி காட்டிய சம்பவமாக பலரால் பேசப்பட்டது.
இக்காலத்தின் முற் கூற்றிலே PLOTE அமைப்பின் முள்ளிகுள முகாம் பிரேமதாசா அரசின் வேண்டு கோளுக்கு இணங்க மாத்தையாவின் உத்தரவில் மறைந்த கெர்னல் பானு தலைமையில் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் இன்னும் சிலாகிக்கப் பட்ட விடயம் இலங்கை அரசுடனும் அதன் ராணுவ புலனாய்வு அமைப்புகளுடனும் தமது இயக்கம் தாண்டியும் இரகசிய தொடர்பை பேணிய PLOTE அமைப்பின் பின்னாள் இராணுவத்தளபதி மாணிக்க தாசனிடம் PLOTE இன் முள்ளிக்குள முகாம் பற்றிய தகவலும், அம்முகாமுக்கு உமாமகேஸ்வரன் வரும் விடயமும் பெறப் பட்டு அவ் விபரங்கள் இலங்கை ராணுவம் ஊடாக மாத்தையாவுக்கு பகிரப்பட்டே முள்ளிக்குள முகாம் புலிகளால் அழிக்கப்பட்டது என்றே அப்போது கூறப்பட்டது.
இவ்வாறு இலங்கை அரசுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மாத்தையாவும், அவர்களின் குழுவில் பேச்சு வார்த்தையில் பங்கு கொண்ட குமரன் பத்மநாதனும் சேர்ந்து செய்த கூட்டு ஒப்பந்த கொலை ராஜீவ் படுகொலை என்று பலராலும் நம்பப்படுகிறது. அந்த ஒப்பந்த கொலையை மறைக்கவே சுப்பிரமணிய சுவாமி இலங்கைக்கு ஓடோடி வந்து மகிந்தவுட னும், கோத்தாவுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி , புலிகள் அழிக்கப்பட்ட பின் ராஜீவ் கொலை குறித்து புலிகளிடம் இருந்து கைப்பற்றப் பட்ட தடயங்களை அழி நான் இலங்கை மீதான போர் குற்றம் குறித்த குற்றச் சாட்டுகளை உலக அரங்கில் இந்திய அரசுடன் சேர்த்து அழிக்கிறேன் என்பதாகும்.
இவ்வாறு விடுதலைப் போராட்டம் வீணாய்ப் போன விடயங்களுக்குள், போராட்டம் எனும் பெயரில் காலையும் வைத்தது. இவ்வாறான வீணான விடயங்களுக்குள் போராட்ட சக்திகள் காலை பதித்ததை அவ்வியக்கமும் அதன் தலைமையுமே பொறுப் பேற்க வேண்டும். இப்போது அவர்கள் இல்லை, நாம் மிக மோசமான அடக்கு முறைக்குள் உள்ளாகி வருகிறோம். இந்த நிலைமைகளில் இருந்து நாம் மீளும் முயற்சியில் இலங்கை, இந்திய கூட்டுச் சதிகளையும் தாண்டிப் பயணிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
ஒடுக்கப் படும் மக்களை, மேலும் ஒடுக்க, ஒத்(துழைக்கும்)தூதும் புலிப் பினாமிகளும்! ஊடகப் பினாமிகளும்!!
இவர்கள் தமது வேலையை சுலபமாகச் செய்ய தம்மை தீவிரமான தேசிய வாதிகளாகவும் புலிகள் ஆதரவு சக்திகளாகவும் காட்டிக் கொண்டு புலிகளின் பல்வேறு எல்லைகள் வரை சென்று, தகவல் திரட்டிகள், தகவல் குழப்பிகளாகச் செயல் பட்டனர். இன்றும் தமிழ் மக்களை குழப்ப அவர்கள் செயல் பட்டு வருகின்றனர் அல்லது புலனாய்வு அரசியல் செய்கின்றனர் .
இந்திய இலங்கை கொள்கை வகுப்பு அணிகளோடு சுமூகமாக பயணித்துக் கொண்டு மக்களை மந்தைகளாக மாற்றும் செயலூக்க நிகழ்வுக்கு தமிழ் அரசியல் வாதிகள் , மற்றும் ஊடவியல் சார்ந்தோர் ஆற்றும் சூழ்ச்சியான விடயங்கள் பலவும் சமகாலத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
உதாரணமாக பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்பதும், பொட்டு அம்மான் தப்பினார் அல்லது பொட்டு களத்தில் எனச் செய்திகளை வெளியிடுவதும், முகவரி இல்லா கட்டுரைகளை வெளியிட்டும் ஒருவகை நாதாரி செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஒருவகை கூட்டம், இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகளுடன் செயல் பட்டுக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியிலும் தேசிய வாதிகளாக வலம் வருகின்றனர்.
இந்திய இலங்கை உளவுத் துறையின் வெற்றிகளில் ஒன்றாக நன்கு பதியப் பட கூடிய வெற்றிகளில் ஓன்று பிரபாகரன் வாழ்கிறாரா?! இல்லையா?! என்ற வாதத்தில் தமிழ் மக்களை அமிழ்த்தி வைத்திருத்தல்.
தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்காக யார் குரல் குடுக்கிராரோ அவரை அமுக்கி முறியடிக்க பிரபாகரன் இருப்பை காரணங் காட்டி, தலைவர் இருக்கும் போது தலைவருக்கு எதிராக செயல் படுகிறார்கள் என தமிழ் பொது வெளியில் கூறி, தமிழ் மக்களுக்கு காத்திரமான தலைமையோ கட்சியோ உருவாகாமல் தடுப்பது.
இதில் நன்மை அடைவது இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகள் மட்டுமல்ல, புலம் பெயர் நாடுகளில் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் அதன் நிதி பொருளாதார கட்டமைப்புகளை பேணிய சக்திகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சேர்ந்து செயல் படும் புலிகளின் கட்டமைப்புகளும் தான். தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்தில் சேகரிக்கப் பட்ட நிதியை பதுக்கவும் மேலும் தமிழ் மக்களிடம் பிரபாகரனின் இருப்பை காட்டி மேலும் பணம் பறிக்கவும், பிரபாகரனின் இருப்பு இந்த சில தனி நபர் புலி பினாமி கொள்ளையர்களுக்கு தேவைப் படுகிறது.
இந்திய உளவு அமைப்பின் முதலாவது Assignment முடிந்தவுடன் (முள்ளி வாய்க்காலில் முடிவுற்ற), அடுத்த assignment க்காக சில இராயதந்திரிகளின் உதவியுடன் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பின்மையை காரணங் காட்டி இந்திய உளவுத் துறையின் பின்னணியில், மேற் குலகம் சென்ற ஊடகத் துறை சார்ந்த சிலர். அங்கு புலம் பெயர் அமைப்புகளின் வலுவைச் சிதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறனர். இவ்வாறு பலர் பல முனைகளில் இறக்கப் பட்டு உள்ளனர் அதில் வெற்றியும் அடைந்து உள்ளனர்.
இப்போது புலத்து மக்களும் புலம் பெயர் மக்களும் மிகவும் நிதானமாகச் சிந்திக்கவேண்டும். தமிழ் மக்கள் குறித்து , அம்மக்களின் உட் கூறுகள் குறித்து வரும் எந்தகைய கதை பின்னணிகளையும் நாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி எது சரி எது பிழை என நாம் சரி பார்த்து இயங்க வேண்டும். அதற்குரிய அறிவியலை நாம் வளர்க்க வேண்டும். எமக்கு ஒரு புலமை சார்ந்த பகுப்பாய்வு சார்ந்த ஒரு கட்டமைப்பு இல்லை. அவ்வாறு ஒரு கட்டமைப்பு இருப்பதை அல்லது உருவாவதை தமிழ் மக்களுக்கு எதிரான உளவு அமைப்புகள் கவனமாகச் சிதைத்து வருகிறது. தமிழ் மக்களை முற்று முழுவதுமாக கருத்தியல் சிதைப்புக்கு உள்ளாக்கி விட்டது என்றே கூற முடியும்.
ஒரு புரட்சிகர அரசியல் எத்தனம் புலத்திலும் களத்திலும் கட்டி எழுப்ப மிக அவதானமும் நுண் அறிவும் பொருந்திய தலைமைகள் வர வேண்டும். அது வரையில் பிணம் தின்னி கழுகுகளுக்கு கொண்டாட்டம் தான்.
மேலே நான் கோடி காட்டிய பல்வேறு உண்மைகள் எமக்கு படிப்பினைகள் பலவற்றைத் தரும் செய்திகள் என நான் நம்புகிறேன்.
ஈழத்தில் ஒடுக்கப் படும் தமிழ் மக்கள் தமது சிந்தனை புலன்களை ஒருமுகப் படுத்தினால், இன்றைய அடக்கு முறைச் சூழல்களை முறையாக எதிர் கொண்டு முறியடிப்பதன் மூலம் தெற்கு ஆசிய வட்டகைகளில் நிகழப் போகும் போட்டிகளையும் அதன் மூலம் வரும் அவலங்களையும் இல்லாமல் செய்ய முடியும். ஈழத்தமிழர்களும் சுதந்திரமாக வாழவும் முடியும்.