ஆங்கிலப் படங்களிலை, ஆரம்பக் காட்சிகளில் கேம் விளையாடுற, ஒரு கணனியில் புகுந்து விளையாடும் ஒரு அப்பாவியிக் காட்டுவார்கள். இறுதிக் காட்சியில் அந்த அப்பாவியை கதாநாயகன் உபயோகித்து அமெரிக்காவை அழிவில் இருந்து காப்பாத்துவார். வல்வெட்டித்துறையில விசயம் எதிர்மறையில் நடந்திருக்கிறது. விளக்குக் கொழுத்தி கூட்டதைத் தொடங்யிருக்கிறார்கள். அதன் மறைபொருள், தமிழர்களுக்கு விரைவில் கொள்ளி வைக்க புலன்(ம்) பெயர்ந்த புலிக் குஞ்சுகளுடன் சேர்ந்து திட்டம் ஒன்றை வைத்திருப்பதை காட்டுவதற்காகச் செய்யப் பட்ட முன் ஏற்பாடு என்பதை விளங்கிக் கொள்ள அப்துல் கலாமிடம் பயின்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது(ஆறாம் வகுப்பு வரை முருங்கைக் காயும் பிலாப்பழமும் கொடுத்து வகுப்பு முன்னேற்றப் பட்டுள்ளார் என்று
றிப்போட் வாங்கியவன்) விஞ்ஞான வாத்தி கேட்டார் நான் என்னவாக விரும்புகிறேன் என்று. விஞ்ஞான வாத்தியை குளிர்விக்க நான் விஞ்ஞானியாக விரும்புகிறேன் என்று உற்சாகமாக பதிலளித்தேன். அதன் பின் தண்ணீரின் மூலக் குறியீடு என்ன என்று கேட்கவும், நான் முழிக்கவும் வாத்தி எனக்கு பின்பக்கம் துவரம் தடியால் குறி வைக்கவும் அன்றிலிருந்து ஆங்கிலம் மட்டுமல்ல விஞ்ஞானப் பாடமும், விஞ்ஞானப் பாடம் மட்டுமல்ல “விஞ்” என்று எது ஆரம்பித்தாலும் எனக்கு குமட்டிக் கொண்டு வரும் . நேற்று முகநூலிலை இந்தக் கட்சியின் தேர்தல் விஞ்ஞானம் மன்னிக்கவும், விஞ்ஞாபனம் வெளியிடப் பட்டிருந்தது.விஞ் ஞை கண்டவுடன் எனக்கு என்ன நடக்குமோ அதற்கு இந்தக் கட்சி பொறுப்பு எடுக்க வேண்டும் என்று கனம் கோட்டார் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் .
சரி விஞ்ஞானம் தான் விளங்கேல்லை, விஞ்ஞாபனம் ஆவது விளங்குதோ பாப்பம் என்று பகீரதப் பிரயத்தனம் செய்து வாசிக்கத் தொடங்கினால், மூன்று மாதப் பிள்ளைத் தாச்சிகள் மாதிரி, மூண்டு நாலு தடவை வாந்தி எடுக்க வேண்டியதாய் போச்சுது. இருந்தாலும் அம்மாவாணை எங்கை இருந்துதான் தைரியம் வந்துதோ தெரியேல்லை, வாந்தி எடுக்கிறதும் வாசிக்கிறதுமாய், பகல் ஒரு மணிக்கு தொடங்கின வாசிப்பு இரவு ஒன்பது மணிவரை நீடித்தது என்பதை புரட்சிகர கட்சிக்கு தெரியப் படுத்த வேண்டியது என் கடமை என்பதை இங்கு அறிவிக்க விரும்புகிறேன்.
பல்கலைக் கழகத்தில் படிச்ச ஆக்களுக்குத் தெரியும் ஆரும் எழுதிய கட்டுரைகளில் கொஞ்சத்தை விட்டிட்டு மீதியை வெட்டி எங்கடை விளையாட்டையும் கொஞ்சம் சேத்து கட்டுரை எழுதிற மாதிரி அண்ணைன்ர கட்சியும் ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தின் அரசியல் திட்டத்தை கொப்பி பண்ணி சிலதை விட்டு ஒரு விஞ்ஞாபனம் தயாரித்திருக்கிறார்கள். அதில விடு பட்ட பகுதில ஒன்று பிரதேசவாதம். அது விடு பட்டுதோ இல்லை விடப்படப் பட்டுதோ தெரியேல்லை. அதை விட்டதும் ஒரு வகையில நல்லது தான். உந்தப் பாயில ஒட்ட வைக்கிற மட்டக்களப்பானோடையும், படிப்பறிவில்லாத வன்னிக் குரங்குகளோடையும் எப்பிடித்தான் இந்தப் படிச்ச வேளாள உயர்குடி யாழ்ப்பாணத்து வாரிசுக் குஞ்சுகள் அரசியல் நடத்திறது?
பரிஸ்ரர் படிப்புப் படிச்சிட்டு போயும் போயும் வன்னியானோடைவயும், மட்டக்களப்பானோடையும் அரசியல் நடத்திறதோ? இதை விஞ்ஞாபனத்தில சொன்னா யாழ் வேளாளக் குஞ்சுகள் புள்ளடி போடுவினமோ சொல்லுங்கோ?
எனக்கு சுகர் ஏறுது போல கிடக்கு, கொஞ்ஞம் இருங்கோ இரண்டு மெற்போமின் போட்டிட்டு வாறன். சரி எங்கை விட்டனான்? ஓ பிரதேசவாதம். இதை விட இன்னும் நிறைய விஞ்ஞானப் பாடம் போலவே ஏதோ எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். மாவோ செத்திட்டாரா? என்று வாய்விட்டுக் கேட்கும் அளவுக்கு விஞ்ஞாபனம் வெளுத்து வாங்கியிருக்கு? பெண்களுக்கு உரிமை கிடைக்க வேலைத் திட்டங்களை உருவாக்குவார்களாம்? எப்பிடி? அதைக் கேட்கக் கூடாது. திமிழர் பேரவை ஒண்டும் இயங்குமாம். அதுக்கும் அதிகாரம் வழங்கப் படுமாம். எப்பிடி அதைக் கேட்கக் கூடாது . இப்பிடி வழங்கல், கொடுக்கல், செய்தல், பிரட்டல் என்று யோ கர்ணன் கூட்டமைப்புப் பற்றி கூறியது போலவே கலவை எண்டா கேஎவ்சி சிக்கின் ரெசிப்பி மாதிரி யாராலையும் கண்டு பிடிக்கேலாது. முதல்ல கட்சி அலுவலங்களில வேலை செய்ய இரண்டு பேரை உருவாக்குங்கோ தல.
புலன்பெயர் ஆக்களோடையும் சேந்து உள்ளூரில இருக்கிற ஆக்களோடையும் சேந்து அமெரிக்காவை உலுப்பு உலுப்பி,இந்தியாவைஆட்டு ஆட்டெண்டு ஆட்டி ( இதுக்குள்ள ரோ இவையளைப் பின் தொடருதாம். ) இலங்கை அரசை சின்னாபின்னமாக்கி இரண்டு தேசத்தை உருவாக்கிற பிளான் இருக்கெண்டு சொல்லுகினம். வடிவேலு கொமடி தலைக்கு நல்லாப் பிடிக்குமோ? எதையும் பிளான் பண்ணாம்ப் பண்ணக்கூடாது என்பதனால், எல்லாத்துக்கும் பிளான் இருக்காம்.
சரி, முல்லத் தீவில, மட்டக் களப்பில, திருகோணமலையில ஏன் பருத்தித்துறையில கூட கட்சியின் அலுவலகம் முந்தநாள் துறந்தநீங்கள், எப்பிடி இந்தப் பெரிய திட்டத்துக்கு ஆள் திரட்டுவியள். வ்வுனியாவில திறந்த அலுவலகத்தில இருக்கிறதுக்கு ஒருவரும் இல்லாம பூட்டிக் கிடக்கு. இந்த லட்சணத்தில மக்களை அணிதிரட்டி தூய்மையிலும் தூய்மையான புலம்பெயர் புலிப் பினாமிகளிடம் விலை போன விலைபோகாத தலமை தமிமீழம் எடுத்துக் குடுப்பினமாம். ஊரில சொல்லுவாங்களே கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானத்தில ஏறி… அந்தக் கதைமாதிரி எல்லோ இருக்கு விஞ்ஞாபனம்.
கடவுளிலை நம்பிக்கை இல்லை எண்டாலும், கடவுளை நம்பின ராஜகோபுரனை மீள்கட்டுமாணம் செய்து வியாபாரத்தைப் பெருக்க திட்டம் போட்டிருக்கும் களவாணிக் கும்பலிட்டைக் கேக்கிறன், நாகபூசணி அம்மாளாணை கேட்கிறன் வெளிநாட்டிலை யாவாரத்தைக் கூட்ட நீங்கள் போடுற நாடகத்தில நடிகிற வேட்பாளர்கள் எத்தினபேருக்கு அவையின்ர பக்கத்து வீட்டில இருக்கிற விதவைப் பெண்ணின் கணவன் சுடப்பட்டதுக்கு, காணாமல் போனதிற்கு உங்கட வேட்பாளர் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாய் இருந்தினம் எண்டும் அவைக்கு உங்கட வேட்பாளர்கள் ஒண்டுமே செய்யேல்லை எண்டும்.
இரண்டு லட்சம் பேருக்கு மேல் சாக்க் காரணமாய் இருந்த இயக்கம், குஞ்சு குருக்கானில இருந்து இந்தியா சீனா ஐரோப்பா ஈறா கொலை செய்து பயங்கரவாத இயக்கம் எண்டு பேர் எடுத்த இயக்கம், கிடைக்க கூடிய அத்தனை தீர்வையும் தட்டிக் கழித்த இயக்கம், மாற்று இயக்கங்கள், முற்போக்குச் சக்திகள், கொட்டாவி விட்டவன், கோழி களவெடுத்தவன் வரைக்கும் சுட்டுத் தள்ளி வீராப்படைந்த இயக்கம், தப்பிக்க முயற்சி செய்த மக்களைச் சுட்டுக் கொன்ற இயக்கம், தங்களப் பாதுகாக்க மக்களைக் கேடயமாக்கிய இயக்கம், ஒன்றையும் பெற்றுக் கொடுக்காமல் ஒரு துண்டுக் காணிக்குள் மாத்திக் கட்ட துணியில்லாமல் நிர்க்கதியாய் நின்று கொண்டு ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று கதறி அழுத இயக்கம், அழிந்த பின் மிஞ்சியது பதினைந்து நாடு சேந்து அழிச்சுப் போட்டாங்கள் என்று ஒப்பாரி வைத்த இயக்கத்தின் வரலாற்றைப் புகழ் பாடி வல்வெட்டித் துறையில சிம்போலிக்கா கூட்டம் போட்டா ஏமாந்து போக மக்கள் ஒன்றும் குமாருகள் அல்ல.
அதற்குத் திட்டம் போடுவோம், இதுக்கு பிளான் போடுவோம், சர்வதேசத்தை கூட்டிக் கொண்டு வருவம். மகிந்தவை தூக்கில போடுவம். மண்ணை மீட்பம். ஆமியைக் கலைப்பம். காணியை உழுவம். சாதியை நசுக்குவம் என்று நாய் பிடிக்கிற முனிசிப்பல் காரன் மாதி தீர்வுத் திட்டத்தோட வந்தா யாபாரம் சூடு பிடிக்காது என்று ஆரும் புலம் பெயர்ந்த பரிஸ்ரர் மார் ஆலோசனை சொல்லேல்லையா? அட உண்ணாணைக் கேட்கிறன், சர்வதேசம் எண்டா ரொரன்ரோவில, லாச்சப்பேலில, ஈஸ்ராமில விக்கிற முருங்கை காயோ அண்ணை குறைச்சுப் போடமாட்டியளோ எண்டு கேட்கிறமாதி கேக்கிற விசயமே சர்வதேசம்.
கடைசியா ஒண்டு சொல்லுறன். உழுற மாடு ஊருக்குள்ள உழும். புலன்பெயர் புலிப் பினாமிகளினர கலப்பைலதான உழும் எண்டா அது உழப்போவது தமிழர்களின் தாயகத்தை அல்ல மக்களின் வாழ்வாதாரத்தை. யாழ்ப்பாணத்தில ஒரு சீற் கிடைக்கும எண்டு சொல்லுறாங்கள். அம்மாவாணை 17 ஆம் திகதி உங்களுக்கு வியளன் போய் சனி மாறுது எண்டு நினைச்சு புள்ளடியைப் போடுங்கோ. அடுத்த கலவரம் வந்தா கறுப்புக் போவணமும் கிடையாது. சொல்லிப் போட்டன். பிறகு அமரிக்ன் உதவி செய்திட்டான். இந்தியன் இறங்கி அடிச்சுப் போட்டான். எண்டு ஒப்பாரி வைக்க கஜேந்திரன் நாட்டில இருக்காது. 40’000 சவப்பெட்டி தயார் பண்ணுங்கோ எண்டு சொன்னவர் படகில ஏறி பறந்திடுவார். வெளிநாட்டுக் குஞ்சுகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். வீடு, கடை மண்டபம் எண்டு வாங்கப் பிளான் வைச்சிருக்பிறவைக்கு குரு உச்சத்தில நிண்டு விளையாடும். பாத்துப் போடுங்கோ புள்ளடியை.