Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசியவர் ரஜனி கட்சியை வழிநடத்தும் முதலாவது நபர்

ரஜினி கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அர்ஜூனா மூர்த்தி என்பவர் தமிழக பாஜகவின் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறவர் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் அர்ஜூனா மூர்த்தி இவர் ஒரு ஐ.டி துறை தொழில் அதிபர் Yeldi Softcom Private Limited என்ற பெயரில் ஐ.டி நிறுவனம் நடத்தும் இவர் அந்நிறுவனத்தை தன் மகள் பொருப்பில் விட்டு விட்டு பாஜகவுக்கு வந்தார்.

ஆர்.எஸ். எஸ் தொடர்புகளைப் பேணும் இவர் பாஜகவில் இணைந்த உடன் இவருக்கு பாஜக அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் என்ற பதவி வழங்கப்படுகிறது. பாஜகவின் ஐ.டி பிரச்சாரங்கள், டிஜிட்டல் ஊடகப் பிரச்சாரங்களை இவர் ஒரு குழுவை வைத்து கவனித்து வருகிறார். கருப்பர் கூட்டத்திற்கு எதிரானப் போராட்டம், வேல் யாத்திரையில் பங்கேற்று கடுமையாகப் பேசியவர் இவர்.

ராமசுவாமி அர்ஜுனாமூர்த்தி என்ற இந்தப் பேர்வளி சாதாரண ஆள் கிடையாது. இவர் இந்த தொழில் நுட்ப நிறுவனத்தைத் தவிர GENIE FOODS LIMITED
ZUJUBI BAZAAR PRIVATE LIMITED
என்ற நிறுவனங்களையும் நடத்திவருகிறார்.

இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் ராமசுவாமி அர்ஜூனாமூர்த்தியின் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் முதலாவது கன்டார்க்டே இலங்கை அரசாங்கத்துடன் தான். 2016 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய அபிவிருத்தி (NDB) வங்கியின் பண மாற்று அட்டையைத் தயாரிப்பதற்கான முதலாவது ஒப்பந்ததில் 2 மில்லியன் அமெரிக்க டோலர் பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி தனது ரிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இவர், நரேந்திர மோடியே தமிழ் நாட்டை மாற்றுவார் எனவும் பதிவிட்டார். சிவாஜி ராவ் கேக்வர்ட் என்ற தமிழை முழுமையாகப் பேசக் கூடக் கற்றுக்கொள்ளாத ரஜனிகாந் என்ற நடிகரைப் போலவே இவரும் கர்நாடகாக் காரர்.

ஒரு தேசிய இனம் பல்வேறு இனக்குழுக்களை உள்வாங்கியே முழுமையடைவது வரலாறு. தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டு தமிழர்களாகப் பரிணாமடைந்து தமிழ்த் தேசிய இனத்தின் அங்கமாகிவிட்டவர்களை அன்னியப்படுத்தும் அரசியல் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது, இந்த அரசியலை பாரதீய ஜனதாக் கட்சியில் தோற்றுவித்து அதற்கு வலுச் சேர்த்தவர் அர்ஜுனாமூர்த்தி.

வீரபாண்டியக் கட்டப்பொம்மன் பரம்பரையை முன்வைத்து சுந்தர(த்) தெலுங்குக் கூடல் என்ற நிகழ்வையும் அமைப்பையும் இவர் உருவாக்கி, பா.ஜா.க இன் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தலைமை தாங்கியவர்.
இப்போது ரஜனியைக் கையாள பா.ஜ.க – ஆர்,எஸ்.எஸ் கும்பலால் உள்நுளைக்கப்பட்டிருக்கிறார்.

இவரைத்தான் ரஜினி தான் துவங்கப் போகும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவித்துள்ளார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சியில் இணைகிறவர்கள் அதை பகிரங்கமாக அறிவித்து முறையாக ராஜிநாமா செய்து விட்டு இன்னொரு கட்சியில் இணைவார்கள். ஆனால் ஆர்ஜூனா மூர்த்தி ரஜினி கட்சியில் இணைந்த பின்னர் இது சர்ச்சைக்குள்ளாக இப்போது பாஜக அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக கூறியிருக்கிறது. அர்ஜூனா மூர்த்தியே தான் ராஜிநாமா செய்து விட்டதாகக் கூறுகிறார். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ரஜினியின் அரசியலுக்குப் பின்னால் பாஜக இருப்பது மட்டும் மறைக்க முடியாத அளவுக்கு தெரிகிறது. அடுத்தடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான செய்திகள் இடம் பெறும்.

Exit mobile version