உலகம் முழுவதும் அரசுகள் பாசிச சர்வாதிகார அரசுகளாக உருமாற்றம் பெற கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக்கொண்டன. வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான உரிமையையும், பணத்தையும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துவிட்டு அரசுகள் மக்களை ஒடுக்கும் சட்டங்களை நிறைவேற்றிகொண்டன. தொற்று தொடர்பான அறிவியல் ஆய்வு ஒன்றை முன்னெடுப்பதற்கு உலகின் எந்த அரசும் உயர்மட்டக் குழுக்களை நியமிக்கவில்லை; மாறாக மக்கள் மீதான வன்முறையைக் கடவிழ்த்துவிடுவதற்கே கொரோனா கடந்துபோன ஒரு வருடத்தை அரசுகள் பயன்படுத்திக்கொண்டன. உலகம் முழுவதும் பஞ்சம், வேலையின்மை, பட்டினி, உணவற்ற குழந்தைகள் என்ற அவலம் அதிகரிக்கத் தொடங்க ஆரம்பித்துவிட்டது.
இந்தியா,பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் சர்வாதிகார அரசுகள் மக்கள் அனுபவித்த குறைந்தபட்ச இருகட்சி முதலாளித்துவ ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்க தம்மாலான அனைத்தையும் செய்கின்றன. நேற்று பிரான்ஸ் முழுவது 200000 மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனி மழைக்கு நடுவில் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தையும் மரண நோயான கோரனாவை பயன்படுத்தி அடக்கிய மக்ரோனின் மைய அரசியல் அரசு பிரான்ஸ் முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் கறுப்பின இளைஞர் ஒருவர் தனது அலுவலகத்துள் நுளைந்துகொண்டிருந்த போது அங்கு சென்ற பிரஞ்சு நிறவாத போலிஸ் காரமின்றி அவர் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதல் சமூக ஊடகங்களில் வெளியானதும் பிரான்சில் மக்கள் தெருவிலிறங்கி போராட ஆரம்பித்தனர். இதன் பின்னர் இச சம்பவத்திற்காக தான் அவமானத்திற்கு உள்ளானதாகத் தெரிவித்த மக்ரோன், இன்மேல் பொதுமக்கள் யாரும் போலிசைப் படமெடுப்பதும், அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் கிரிமில் குற்றமாக்கப்படும் என்ற சட்டமூலத்தை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
அப்பட்டமான நிறவாத சர்வாதிகாரச் சட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடினர். நேற்று 16.01.2020 பிரான்ஸ் முழுவதும் பனியால் உறைந்திருந்தது. பொதுவாக இவ்வாறான சனிகிளமைக் கால நிலையின் போது மக்கள் விடுகளுக்குள் முடங்கியிருப்பது வழமை. நேற்று வழமைக்கு மாறாக பிரான்ஸ் முழுவதும் மக்கள் தெருவிற்கு வந்து சட்டமூலத்திற்கு எதிராகப் போராடினர்.
பல நகரங்களில் போலிஸ் கண்ணீர் புகை, தடியடித் தாக்குதல் நடத்தியத்து. 53 ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
6 மணிக்கு இரண்டு மணித்துளிகள் இருக்கும் போது திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. வணிக நிலையங்களை மூடுமாறு உத்தரவிடப்பட்டது. மறு நாள் காலை ஆறு மணிவரை தொடரும் இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டத்ற்கு கொரோனா வைரசே காரணம் என அரசு அறிவித்தது. கொரோனாவை மக்களை ஒடுக்குவதற்கான கருவியாகப் பயன்படுத்திக்கொண்ட அரசு மக்களின் பிணங்களின் மேல் நடத்தும் அரசியலை மக்கள் எதிர்கொள்வார்கள் என்பது நிச்சயம்.