பொம்பியோவின் இலங்கைப் பயணம் – கோத்தாபய மீண்டும் தூக்கில் போடப்படுகிறாரா?
இனியொரு...
மைக் பொம்பியோ என்ற எண்ணை வியாபாரியும், முன்னை நாள் அமெரிக்க மத்திய உளவுத்துறையின் இயக்குனருமான மைக் பொம்பியோ, இன்று 70வது அமெரிக்க அரச துறைச் செயலாளர்(இராஜாங்க செயலாளர்)! 2017 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆன் ஆண்டு வரைக்கும் டொனால் ரம் இனால் மத்திய உளவுத்துறையின் செயலாளராக பொம்பியோ நியமிக்கப்பட்ட மறுகணமே அவருக்கும் சீன அரசாங்கத்தினால் நடத்தப்படும் வியாபர நிறுவனத்திற்குமான தொடர்பு குறித்து ஊடகங்கள் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டன. தனது எண்ணை நிறுவனத்திற்கு சீன அரசின் இயந்திர உற்பத்தி நிறுவனத்திடமிருந்தே எண்ணை சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்கிக்கொண்டிருந்தார் என்ற தகவல்கள் ஆதாரபூர்வமான வெளியாகின. சீ.ஐ.ஏ இன் இயக்குனராகப் பதவியேற்கும் போதான நிபந்தனைகளின் கேள்விகளில் சீன நிறுவனத்துடனான தொடர்பை திட்டமிட்டு மறைத்ததாக பொம்பியோ மீதான குற்றங்கள் விரிந்தன.
28.20.2020 பொம்பியோ இலங்கைக்குப் பயணம் செய்த போது கோத்தாபய ராஜபக்ச முழுமையான சர்வாதிகாரியாகச் செயற்படுவதற்கான 20 வது திருத்தச்சட்டம் நிறைவேறியிருந்தது.
இத் திருத்தச்சட்டம் நிறைவேறுவதற்கான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அமெரிக்க விமனம் ஒன்று சத்தமில்லாமல் இலங்கையில் தரையிறங்கியிருந்தது. இந்த விமனத்திலிருந்து பல அமெரிக்க அதிகாரிகள் நாட்டுக்குள் நுளைந்த தகவல்களை இலங்கை அரசு வெளியிடவில்லை. நியூஸ் பெர்ஸ்ட் என்ற செய்தி நிறுவனம் பொம்பியோவின் வருகையைத் தயார் செய்வதற்கான அதிகரிகளை அழைத்துவந்த விமானம் என 24.10.2020 செய்தி வெளியிட்டிருந்தது. ஆக, பொம்பியோ வரும் முன்னரே அமெரிக்காவுடனான எல்லாப் பேச்சுக்களும் முடிந்திருக்கவே வாய்ப்புக்கள் உண்டு.
28ம் திகதி பொம்பியோ இலங்கைக்குள் நுளைந்தது வெறும் கண்துடைப்புப் பயணம் போலவே அமைந்திருந்தது. கோத்தாவின் குடும்பத்திலிருந்து மக்களுக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. சஜித் பிரேமதாச குழு கூட இதனை வெளியிடுமாடு ஆர்ப்பாட்டக்குரல் எழுப்பவில்லை, மாறாக இலங்கையின் இராணுவத் தளபதி அமெரிக்கா செல்வதற்கான தடையை நீக்கக் கோருமாறு கொச்சையான ஒரு கோரிக்கையை ராஜபக்சவிடம் முன்வைத்து தனது பேரினவதத்தை உறுதிப்படுத்திக்கொண்டார் சஜித்.
கோத்தாவையும், வெளிவிவகாரச் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்தித்த பொம்பியோ கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலையம் வழியாக இலங்கையிலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் சீனா தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்தார், இந்த முறை சீனா, இலங்கை போன்ற நாடுகளை வேட்டையாடுவதாகத் தெரிவித்தார். மத சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தாலாக சீனா அமையும் என்று மேலும் தெரிவித்த அவர், இந்தியாவைச் சுற்றுயுள்ள இலங்கை போன்ற நாடுகளை சீனா ஆட்கொண்டுவிட்டது போன்ற தொனியில் தனது கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையில் கோத்தாவுடன் எம்.சிசி என்ற ஒப்பந்தத்தைக் கைச்சாதிருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தச்ப் சென்றிருந்த பொம்பியோ, இலங்கைக்கு எதிராக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது அந்த நாட்டைப் பொறுத்தது என்று மட்டும் கருத்து வெளியிட்டார். இதன் மறுபக்கத்தில் கோத்தா எந்தக் கருத்தையும் மக்களுக்கு முன்வைக்கவில்லை. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என இது வரை கூறவில்லை.
பனிப்போர் காலத்தில் இருந்தது போலன்றி, இன்று இந்தியா முழுமையான அமெரிக்காவின் கொத்தடிமை ஆகிவிட்டது. அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் இராணுவத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு விற்பனை செய்துவிட்டது. ஜீ7 நாடுகள் என்பதை விரிவாக்கி அதனுள் இந்தியாவை இடம்பெறச் செய்து சீனாவைத் தனிமைப்படுத்துவது என்ற அமெரிக்காவின் திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இந்தியாவின் அனுமதியின்றியே இந்திய கடற்படை விமானப்படைத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள என்ற Logistics Exchange Memorandum Agreement ஒப்பந்தம் வழி செய்கிறது.
அமெரிக்காவின் இந்த நெருக்கத்தை முன்வைத்தே சீன இந்திய எல்லையில் மோதலைத் தூண்டிய இந்தியா சீனாவிடம் வாங்கிக்கட்டிக்கொண்டது.
சீனாவிற்கு எதிரான அமெரிக்கவின் போர் அச்சுறுத்தலுக்கு இந்தியா தான் பின் தளமாகச் செயற்படுகிறது. இந்தியாவின் இந்துத்துவம் அடிமையாகச் செயற்படுவதற்கான அத்தனை தத்துவங்களை மோடிக்கு வழங்கிவருகிறது என்பது ஒரு புறத்தில் இருக்க, இலங்கையை சீனா அடிமைப்படுத்தியிருக்கிறது என இந்தியாவை அச்சுறுத்தியே அந்த நாட்டின் அடிமைத்தனத்தைப் பேணிக்கொள்ள அமெரிக்கா திட்டமிடுகிறது.
மோடி அளவிற்கு முட்டாள்களான தமிழ்த் தேசிய அடிமைகள், இனிமேல் அமெரிக்காவைக் கூட்டிவந்து கோத்தாவைத் தூக்கில் போடலாம் எனக் கனவுகாண ஆரம்பித்துவிட்டார்கள். நாடுகடந்த அரசின் “பிரதமர்” உருத்திரகுமாரன் இலங்கை சீனாவின் அடிமை ஆகிவிட்டது என பொம்பியோவிற்கு கடிதம் வேறு எழுதியிருக்கிறார். இலங்கை எம்.சீ.சீ ஐ ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ, இந்தியாவுடன் இணையாமல் இருக்கும் வரை அமெரிக்காவிற்கு சேவை செய்யும். இந்திய மேலாதிக்க அரசு இனிமேல் அமெரிக்காவை முன்வைத்து இலங்கையை மிரட்டும். இதனை அமெரிக்கா வேடிக்கைபார்க்கும். இங்கு தோல்வியடைவது மக்களே.