Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அரசியல் நீக்கத்தின் அரசியல் ( The politics of depoliticization )

‘என்னடா தலைப்பு படுமேதாவித்தனமா இருக்கே’ எண்டு யோசிக்கிற ஆக்களுக்கு ஒண்டு சொல்ல விரும்பிறன். லண்டன் பாபா ஹரோ மேயர் ஆகினபிறகு எல்லாம் மேதாவித்த‌னமாத்தான் நடக்குது. லண்டன் பாபா TCC உறுப்பினர்களுக்கு மாவீரர் தின உரையை Londonல வழங்கிட்டு, உடனடியா கொழும்பு சென்று, இலங்கை பிரதமர சந்திக்கிற அளவுக்கு அரசியல வளந்துபோச்சு பாருங்கோ. ஆனா சத்தியமா நான் இப்ப சொல்ல வாற விசயம் லண்டன் பாபாட மாவீரர் தின உரைய கேட்டாக்களிற்கானது அல்ல.

நான் இப்ப கதைக்க போறது, இந்த புதிதாக தொடங்கப்பட்ட‌ தமிழ் மக்கள் பேரவைய “Tamil Peoples Council (TPC)” பற்றி . இவய பற்றி கதைக்க முதல் இவயின்ட எதிர்தரப்ப பற்றி கதைக்கவேணும். இவயின்ட எதிர்தரப்பெண்டா, யாரும் சிங்கள இனவாத அரசு எண்டு நம்பினா, இப்பவே என்ர கதைய கேக்கிறத விட்டுட்டு லண்டன் பாபாட படம் ஒண்ட எடுத்துபாருங்கோ. அதுக்குத்தான் நீங்க இலாயக்கு.


இவயின்ட ‘தமிழ் மக்கள் பேரவை’ எதிரிகள் யார் எண்டா, சுமந்திரன் சார்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA). டேய், இதல்லாம் ‘நீ சொல்லியா எங்களுக்கு தெரியோணும்’ எண்டு யோசிச்சா, நீங்க கட்டாயம் என்ர கதைய கேக்கோணும். நான் ‘இந்த இரண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இல்ல’ எண்டதத்தான் சொல்லவாறன்.

இவை சுமந்திரன் குழு, வெளிப்படையா தற்போதைய உலக ஒழுங்கோட ஒத்து ஓடுறது மட்டுமல்லாமல் உலக வல்லரசுகளின்ர வியாபார, அரசியல் நலன்களின் பாதுகாவலர்களாய் செயற்படுறீனம். அதில எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. உந்த பழைய புளியோதரைகள் எல்லாம் ஒன்டு சேர்ந்து, தமிழ் மக்கள் பேரவை எண்ட பெயரில (Tamil Peoples Council (TPC) ) மக்கள் அரசியல் ,மாற்று அரசியல் எண்டு, திருப்பி, மக்கள மந்தைக்கூட்டம் ஆக்கப்போறாங்கள் என்டுறதுதான் என்ட‌ பிரச்சனை. மக்கள் உண்மையாய் அரசியல் மயப்பட்டு, மாற்று அரசியல் உருவாகாமல் தடுத்துவருவதுதான் இவையின்ட திட்டம்.

தனி வழி…

இவயின்ட புலம்பெயர் பிரதிநிதிகள், யாரென்டு பார்த்தியல் என்டால், கொஞ்சப்பேர் அமெரிக்காவின்ர ஏவலாளிகள். அவை புலிகள்ன்ட காலத்திலை, விடுதலை புலிகளை அழித்தொழிப்பதற்காக, தமிழ் மக்கள், புலம்பெயர் நாடுகளில் அரசியல் மயப்படாமல் பார்த்துகொண்டவர்கள். அதோட அவை விடுதலை போராட்டத்திற்கு உலகமக்களின் ஆதரவு கிடைக்காமலும் பார்த்து கொண்டு இருந்தவை. அதில ஒருத்தர், Red Dieselல ஊழல் செய்து, இங்கிலாந்தில நாலுவருசம் சிறை தண்டனை பெற்ற வர்த்தகர் மங்களேஸ், மற்றவர் அவரின்ர பங்காளி ராஜ்குமார், அடுத்தது Richard Armitage என்ட அமெரிக்க உலக மகா திருடன் ஓட உறவுள்ள, ஒரு தமிழ் ஊடக குடும்பம். இந்த நிலையில தமிழ் மக்கள் பேரவை “Tamil Peoples Council (TPC)” மக்கள் அரசியல், மாற்று அரசியல் எண்டு மக்கள திரும்பியும் மாட்டு மந்தைகள் ஆக்கி, அரசியல் செய்ய‌ வெளிக்கிட்டீனம். டேய் இதெல்லாம் ஒரு பிளைப்பாடா. பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி கிடக்கு. அரசியல அசிங்கப்படுத்தி கொண்டு……..

-செங்கோடன்-

Exit mobile version