Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

Peace ல் இருந்து Piece ஆகும் பாலஸ்தீனியம் : ரதன்

பாலஸ்தீனியம் ஐக்கிய நாடுகள் சபையில் தன்னை ஒரு நாடாக அங்கீகரிக்கச் சொல்லி விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதனை இரு பிரதேச நாடு எனக் கூறலாம். மேற்கு வங்கிப் பகுதியிலும் காசாவிலும் பாலஸ்தீனியர் வாழ்கின்றனர். இது வரை காலமும் பாலஸ்தீனியம் ஒரு பார்வையாளராக வாக்களிப்பற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளது. பாலஸ்தீனியத்தின் கோரிக்கையை எதிர்க்கும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நிச்சயமாக இஸ்ரேல், அவற்றுடன் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளும் முன்னிலையில் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றன. அதாவது உலக சனத்தொகையில் 75 வீதமான மக்;கள் வாழும் நாடுகள் பாலஸ்தீனியத்தை ஆதரிக்கின்றன. இருந்தும் என்ன பயன்?

முன்னால் அமெரிக்க அதிபர் கிளின்டன் இவர் பாலஸ்தீனியரின் நண்பரல்ல. புரட்டாதி 23, 2011 இஸ்ரேல் பிரதமரின் ஐக்கிய நாடுகள் சபை பேச்சின் பின்னர் அவர் கூறியது இது “Netanyahu does not want negotiations… he’s just not going to give up the West Bank”. (இஸ்ரேலிய பிரதமருக்கு பேச்சுவார்த்தைகள் தேவையில்லை. மேற்கு வங்கிப் பகுதியை அவர் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.) இஸ்ரேலிய அதிகாரிகள் அடிக்கடி கூறிக்கொள்வது “Israel wants peace but cannot find a partner for peace..” இஸ்ரேலுக்கு peace தேவையில்லை. பாலஸ்தீனியத்தின் இன்னமொரு piece தான் தேவை. பாலஸ்தீனிய ஆலோசகர் Michael Tarazy கூறியது We are negotiating about sharing a pizza and in the meantime Israel is eating it.” ( நாங்கள் பீசாவை பங்கு போட பங்கு போட பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். அதே சமயம் அதே பீசாவை இஸ்ரேல் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றது)

2

சில பின்னோக்கிய நினைவுகள்

முதலாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானிய சாமராஜ்ஜயத்தில் ஒரு பகுதியாக பாலஸ்தீனியம் மாறியது. 1947 கார்த்திகை 29ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற வாக்களிப்பில் 55 வீதம் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் 44 வீதமான நாடுகள் பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தன. 1948 இஸ்ரேல் 78 வீதமான பாலஸ்தீனிய பிரதேசத்தை கைப்பற்றியது. ஜோர்டான் மேற்கு வங்கி பிரதேசத்தையும் எகிப்து காசாப் பிரதேசத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1967ல் நடைபெற்ற ஆறு நாள் போர் மேலும் பல பிரதேசங்களையும் சிரியாவின் GOLAN HEIGHTS பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது. Gaza Strip, Sinai Peninsula (Egypt) West Bank, East Jerusalem (Jordan)ஆகிய பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது. 1974 கார்த்திகை 22ம் நாள் non-state entity ஆக பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டது. 1993ல் பாலஸ்தீனிய அதிகார சபை உருவாக்கப்பட்டது. மேற்கு வங்கி, காசா ஆகிய பிரதேசங்களை நிர்வாகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் இஸ்ரேலுக்கான வரி செலுத்தல் போன்ற முக்கிய விடயங்கள் இஸ்ரேலின் கட்டப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன.

கடந்த காலங்களில் 1956இ 1967இ 1982இ 2006இ 2008இஸ்ரேல் அரபு நாடுகள் மீதும் பாலஸ்தீனியத்தின் மீதும் போர் தொடுத்;தது. இதன் விளைவாக பல பிரதேசங்களை கைப்பற்றியது. 1973ல் மாத்திரமே அரபு இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டது.

3

புரட்டாதி 23 ம் நாள் நியுயோர்க் நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தில் உரையாற்றிய பாலஸ்தீனிய அதிபர் முகமட் அபாஸ் “சமாதானத்திற்கும் எனது மக்களின் இறைமைக்கும் நல்லதொரு வாழ்விற்குமாக இதனை முன்வைக்கின்றேன்” என்றார். அவர் மேலும் பேசுகையில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இதே காலகட்டத்தில் இதே சபையில் உறுப்பினர்களால் ஒரு சமாதான முன்னெடுப்பு முன்வைக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் இந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபமா நேரடி கண்காணிப்பில், Quartet ( நால்வர் தொகுதி எனப் பொருள் படும். ஐக்கிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ய+னியன், ருசியா ஆகியன அடங்கும். 2002ல் மத்திய கிழக்கிற்கான நால்வர் தொகுதி மட்றீட்டில் நடைபெற்ற மாநாட்டில் அமைக்கப்பட்டது) மற்றும் எகிப்து ஜோர்டான் ஆகிய நாட்டு பிரதிநிதிகளுடன் வோசிங்கடனில் புரட்டாதி மாதம் ஆரம்பமானது. நாங்களும் திறந்த மனதுடன் பல பக்க நியாயங்களை கேட்கும் மனப்பான்மையுடன் உள்ளார்ந்தமாக கலந்து கொண்டோம். சமாதான மாநாடு தொடங்கி சில வாரங்களிலேயே இது முறிவடைந்து விட்டது. கடந்த காலங்களில் எங்களது மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. சூறையாடப்பட்டுள்ளன. 1993 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனிய ஒப்பந்தத்தின் பின்னர் பல தடவைகள் சமாதான நடவடிக்கைகள் முறிவடைந்துள்ளன. ஆனால் இன்னமும் எங்களுக்கு சமாதானத்தில் நம்பிக்கையுண்டு.

உலக சமாதானத்தில் எங்களுக்கு அக்கறையுண்டு. எங்களது மக்களுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் தைரியம் எங்களுக்கு உள்ளது. எங்களது மக்களுக்கு சரித்திரப+ர்வமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி தேவை.

நாங்கள் பாலஸ்தீன பிரதேசத்தை அமைக்க ஏற்றபோது 1967ல் இஸ்ரேலால் அபகரிக்கப்பட்ட நிலத்தின் 22 வீதமே எம்மிடமிருந்தது. அதனைக் கொண்டே பாலஸ்தீனிய பிரதேசத்தை அமைத்தோம். எங்களது நோக்கமே எங்களது மக்களின் இறைமை அங்கீகரிக்கப்படவேண்டும். கிழக்கு ஜெருசலேத்தை தலைநகரமாக் கொண்ட நாடு அமைக்கப்படவேண்டும். எங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலம் மீள கிடைக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத்தை எதிர்க்கின்றோம் அதனை ஆதரிக்கமாட்டோம். எங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, அவர்களது சுபீட்சமான அமைதியான பாதுகாப்புடன் வாழ்விற்காக போராடுகின்றோம். காவலரண்களையும் மதில்களையும் எங்களை பிரிப்பதற்கு பதிலாக இரு தரப்பு மக்களுக்கும் உரையாடல் மூலம் பாலமைப்போம். நான் பாலஸ்தீனிய மக்கள் சார்பாக இஸ்ரேலையும் இஸ்ரேலிய மக்களையும் கேட்டுக் கொள்வது நாங்கள் இணைந்து சமாதானத்தை ஏற்படுத்துவோம்;. (இது அவரது பேச்சின் நேரடி மொழிபெயர்ப்பல்ல, சுருக்கமே.) அதே சமயம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பலமின்மையும், குரலின்மையும் பாலஸ்தீனியம் கவனிக்கத் தவறவில்லை.

இவரது பேச்சு முடிந்த பின்னர் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இதன் பின்னர் பேசிய இஸ்ரேலிய பிரதமர் “நான் கைதட்டல் பெறுவதற்காக இங்கு பேசவில்லை. உண்மையை பேசவே வந்துள்ளேன்” என்றார்.

4.

இந்த கோரிக்கை பல படிகளில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானிக்கப்படும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முதலில் இதனை அங்கீகரித்து பின்னர் பாதுகாப்புச் சபைக்கு இதனை அனுப்பும். பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் அனைவரும் அங்கீகரித்த பின்னர் இது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையில் மூன்றில் இரண்டு அங்கத்தவர்கள் இதனை அங்கீகரிக்க வேண்டும். அங்கத்தவரற்ற அங்கத்தவராக வேண்டுமெனில் 193 பேர் கொண்ட பொதுச் சபையில் சாதாராண பெரும்பான்மை கிடைத்தாலே போதுமானது.

கார்த்திகை 1947ல் ஐக்கிய நாடுகள் சபையில் சரத்து 181 அங்கீகரிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாடு உருவானது. இன்று அதே சபையில் அதே சரத்தை மையமாக வைத்து பாலஸ்தீனியம் கோரிக்கை வைக்கின்றது.

தெற்கு சூடான் உருவாகி மூன்று மாதங்களில் பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் வழங்கிவிட்டது. வட கொரியா 46 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. Nauru பசுபிக் தீவு 21 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சிறிய நாடு. இந் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடு. அவுஸ்திரேலியா பல சமயங்களில் அகதி அந்தஸ்து கோருபவர்களை இந்த நாட்டில் தடுத்து வைத்திருந்துள்ளது. இவ்வாறு பல தமிழர்கள் இத் தீவில் தடுத்து வைத்திருக்கப்பட்டனர். Nauru போல மக்கள் தொகை குறைந்த Kirbati, Tuvalu, Vanuatuபோன்ற நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள். தைவான், கோசாவா நாடுகளும் காத்திருக்கின்றனர். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பாலஸ்தீனியத்தின் கோரிக்கை முக்கியமானது. அங்கீகரிக்கப்படவேண்டியது. 1933 ஆழவெநஎனைநழ Montevideo Convention on the Rights and Duties of States ன் படி ஒரு நாட்டிற்கு நிரந்தரமாக வாழும் மக்களிருக்க வேண்டும். திட்டவட்டமான எல்லைகளைக் கொண்ட பிரதேசம் இருக்க வேண்டும். அரசாங்கமிருக்க வேண்டும். மற்றைய நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளக் கூடியதாக இருத்தல் வேண்டும். 1967 பாலஸ்தீனிய எல்லைகளின் படி முதல் மூன்றும் பாலஸ்தீனியத்திடமிருந்தது. எனவே ஒரு நாட்டிற்குரிய அம்சங்கள் பாலஸ்தீனியத்திடமிருக்கின்றது.

5.

பாலஸ்தீனியத்தின் கோரிக்கையை இஸ்ரேல் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நேரடிக் காரணம் மிக நீண்டகால போர்ப்பகை கொண்ட பாலஸ்தீனியத்துக்கு “நாடு” என்ற அந்தஸ்து வழங்குவதை இஸ்ரேலியர்கள் ஒரு போதும் ஏற்கமாட்;டார்கள். இது மனோரீதியானது. இந்நிலை பாலஸ்தீனியத்துக்கு மாத்திரமல்ல, நாடாக அங்கீகரிக்கப்படின் 1967ல் அபகரித்த பல பிரதேசங்கள் மீள கொடுக்க வேண்டும். அபகரித்த பிரதேசங்களில் சுமார் ஆறு லட்சம் ய+தர்கள்; வாழ்கின்றனர். பாலஸ்தீனியத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக பாலஸ்தீனியம் வழக்குகளை தொடரும். ரோம் ரெரற்றி (Treaty of Rome- ஐரோப்பிய வர்த்தக வலயம்) யில் அங்கத்துவம் பெறின் பல இஸ்ரேலிய தலைவர்களை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கத் நிறுத்தும்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் நட்பு நாடுகளாக இருந்த துருக்கியும் எகிப்தும் இன்று எதிரணியில் உள்ளன. எகிப்திய மக்கள் கிளர்ச்சியின் தொடர்ச்சி இஸ்ரேலுக்கு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.

6.

ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீது பாலஸ்தீனத்துக்குள் கருத்து வேறுபாடுகுள் உள்ளன. A West Bank/Gaza state with East Jerusalem as its capital. இதுவே சாரம்சம் குயவயா (Fatah (the governing party of the Palestinian Authority in the West Bank,) the Popular Front for the Liberation of Palestine, the Democratic Front and the Palestine People’s Party (formerly the Communist Party), the Palestinian National Initiative, led by Mustafa Barghouti ஆகிய அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. காசாப் பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ் இதனை எதிர்க்கின்றது. இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மீது நம்பிக்கையி;ல்லை. ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பது ஹமாசின் கருத்து. Fatah அதாவது ஆளும் அமைப்பு தங்களுடன் கலந்துரையாடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் இரு நாட்டு சமாதானம் ஏற்புடையதல்ல. அத்துடன் வெளியே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆறு மில்லியன் பாலஸ்தீனியர் திரும்பிவரும் அதிகாரம் தெளிவுபடுத்தப்படவேண்டும் என மேலும் ஹமாஸ் தெரிவிக்கின்றது. Fatah கருத்தளவில் இஸ்ரேல் என்ற நாடை ஏற்றுக் கொள்கின்றது. ஹமாஸ் இஸ்ரேல் என்ற நாட்டின் இருப்பையே நிராகரிக்கின்றது.

அதே சமயம் மிகத் தெளிவாக இவர்கள் அனைவரும் ஒரு கருத்;தை தெளிவாகக் கூறுகின்றனர் “தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் பாலஸ்தீனத்துக்கு தீர்வை கொண்டு வராது. மேலும் பாலஸ்தீனத்தை பல கூறுகளாக உடைக்கும்” என்கின்றனர். அதே போன்று ஹமாஸை ஆதரிக்கும் ஈரானும் இந்தக் கோரிக்கையை எதிர்க்கின்றது. ஈரானின் பாலஸ்தீனியம் மிகப் பெரியது. இஸ்ரேல் தனதாக்குய பகுதிகளையும் உள்ளடிக்கியது. ஆனாலும் ஐ.நாவில் பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்கும்.

7.

பாலஸ்தீனிய கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பல விளைவுகள் ஏற்படலாம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குள் இஸ்ரேலிய மக்கள் புகுந்து இஸ்ரேலிய தூதரை இஸ்ரேலுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். அதே போல் ஐரோப்பாவின் புதிய பொருளாதார பலமான துருக்கியும் இஸ்ரேலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஈரானும் இஸ்ரேலை பதம் பார்க்கும். ஹமாஸ் அமெரிக்க எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும். இது வரை காலமும் சமாதானம் அமெரிக்கா என நினைத்த பாலஸ்தீன மக்களும் வன்முறைக்கு திரும்புவர். இது இன்று அரேபிய நாடுகளில் தோன்றியுள்ள மக்கள் எழுச்சியுடன் இணைந்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

பிரென்ச் அதிபர் Nicolas Sarkozy தனது உரையில் நேரடியாகவே அமெரிக்காவை சாடியுள்ளார். பாலஸ்தீனிய-இஸ்ரேல் சமாதானத்துக்கு ஒரு நாட்டை தங்கியிருக்க முடியாது. இது கூட்டு முயற்சி. அரேபிய நாடுகள் ஐரோப்பிய நாடுகள் இதில் பங்குபற்ற வேண்டும் என்பது இவரது கருத்து. இதற்கு முன்பாக நால்வர் தொகுதியில் இந்த நாடுகள் அங்கம் பெற்றிருந்தும் சமாதானத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை இவர் கவனிக்கத்தவறிவிட்டார். நால்வர் தொகுதி பிரதிநிதியாகவுள்ள முன்னால் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயரை பாலஸ்தீனிய அதிகாரி “இஸ்ரேலின் பிரிதிநிதி” என குற்றஞ்சாட்டியிருந்தார். இதிலிருந்து இவர்களது சமாதான ப+ச்சுக்கள் எந்தளவிற்கு இருந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். 1991 வரை அமெரிக்கா பாலஸ்தீனிய சமாதானப் பேச்சுக்கள் எதுவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா ஒரு போதும் உண்மையான சமாதான தூhராக செயற்படவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தெற்கு சூடான் சர்வசன வாக்கெடுப்புக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவ நாடாக தெற்கு சூடான் இடம் பெறவும் அங்கீகரித்தது. தனது சுய நலன்களுக்கான தூதராகவே அமெரிக்கா செயற்படுகின்றது. 2012ல் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் Rick Perry அதிபர் ஒபமாவை கண்டித்துள்ளார். இவர் பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட முடியாது எனக் கூறியுள்ளார். இவருக்கு 2009ல் னுநகநனெநச ழக துநசரளயடநஅ விருது இஸ்ரேல் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

ஒபமாவின் கருத்துக்களும்; தீர்க்கமற்றவை. கடந்த வைகாசியில் இவர் இஸ்ரேலின் இருப்பை பாலஸ்தீனியமும் அரபு நாடுகளும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்;றார். ய+த நாடு என்பதை பாலஸதீனியமும் அரபு நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும்;. இஸ்ரேல் எனப்படும் பகுதியில் 20 வீதமானவர்கள் ய+தர்கள் அல்லாதவர்கள். ய+த நாடு எனப்படும் பொழுது மற்றவர்கள் அந்நியப்படுத்தப்படுகின்றார்கள். இவர்கள் இஸ்ரேலின் பிரசைகளில்லையா?இஸ்ரேல் ஏற்கனவே ஒரு நாடாக உள்ளது. அப்படி இருக்க ஏன் இந்த ய+த நாடு என்ற கோசம்? யூதம் என்று பெயர் மாறும் பொழுது அதன் நிறமும் மாறுகின்றது. இன்றைய இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றனர். அதே போல் இஸ்ரேலிலும் ய+தர்கள் அல்லாதவர்கள் வாழ்கின்றனர். அவ்வளவே.

இப்பொழுது பாலஸ்தீனியத்தில் உள்ள அதிகாரங்கள் ஒரு மாநில அரசுக்குள்ள அதிகாரங்களை விடக் குறைவானவையே. பாலஸ்தீனிய அரசு பெறும் வரிகளை மேற்பார்வை செய்வது இஸ்ரேலே. தனது பிரதேசத்தைக் கூட வரையறை செய்ய முடியாத நிலையில் உள்ளது பாலஸ்தீனிய அரசு.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்களை நிறுத்த அமெரிக்கா இது வரை எதுவும் செய்யவில்லை. முதலில் 1967 எல்லைப் பிரகாரம் தீர்வு என்றார். பின்னர் மக்களின் பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றார். 2010ல் ஒபமா ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது அடுத்த வருடம் இந் நேரம் புதிய பாலஸ்தீனியம் மலர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என நம்பிக்கை தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் சில வாரங்களில் முடிவுக்கு வந்த போது மௌனமாக இருந்தார். 1993ல் இதே போன்று ஒஸ்லோவில் வாக்குறிதியளிக்கப்பட்டது. அமெரிக்கா இறுதி வரை இஸ்ரேலையே ஆதரிக்கும். இந் நிலை நீடிக்கும் வரை சமாதானப் பேச்சு வார்த்தைகள் வெறும் கண் துடைப்பு.

பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளை அமெரிக்கா மிரட்டவும் தயாராகிவிட்டது. போர்த்துக்கல் தனது தடுமாறும் பொருளாதாரத்துக்கான நிதியுதவியை முடங்கச் செய்யும் என அச்சம் தெரிவித்துள்ளது. இந்த மிரட்டல்கள் பாலஸ்தீனியத்தின் மீதும் செய்துள்ளன. இஸ்ரேல் பாலஸ்தீனியத்தின் வரிகளை கொடுக்காது. அதே போன்று அமெரிக்காவும் பாலஸ்தீனியத்துக்கான நிதி உதவிகளை நிறுத்தும். ஆனால் இவற்றை எதிர்பார்த்துதான் பாலஸ்தீனியம் களத்தில் இறங்கியுள்ளது.

8.

பாலஸ்தீனிய அதிபருக்கு; தான் முன் வைக்கும் கோரிக்கைக்கு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியும். பொதுச் சபை அங்கீகாரம் என்பது “முழுமையான நாடாக அங்கீகரிக்காவிடிலும்” வத்திக்கான் போன்ற வாக்களிக்க முடியாத நாடாக அங்கீகரித்தல் என்பது பெரிய வெற்றியே. தற்போதைய நிலையை விட ஒரு படி மேலானது. இது கிடைப்பதை பாதுகாப்புச் சபையால் தடுக்க முடியாது. மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி 75 வீதமான அங்கத்துவ நாடுகள் அங்கீகரிப்பின் மேற்கு நாடுகளுக்கு இது ஒரு இழப்பே. முக்கியாக இஸ்ரேலுக்கு பெரும் இழப்பாகும். இதளால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்துக்கு அழைக்கலாம்.

முழு நாடாக பாதுகாப்புச் சபை நிராகரிப்பின் உலகை நோக்கி ஒரு கேள்வியையும் சமாதான பேச்சுக்களின் நம்பிக்கையீனத்தையும் போலியையும் போட்டு உடைக்கின்றது. பாலஸ்தீனியத்தின் இந்த நடவடிக்கையின் வெற்றியே இது. அரபு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் தோன்றியுள்ள அமெரிக்க எதிர்ப்பானது அமெரிக்க வீற்றோவை பாவித்தால் மேலும் அதிகரிக்கும்.

பாலஸ்தீனியம் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஒரு இக்கட்டான கட்டத்தில் தள்ளியள்ளது. பாலஸ்தீனியத்தின் நிலை வாழ்வா? சர்வா? என்பது.

Exit mobile version