இலங்கையில் 1995, 1997, 2000ம் எனும் மூன்று சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு வரைபுகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 1995 ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரால் அமைச்சரவையில் சமர்ப்பித்ததன் பின்பு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு கதைத்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கும் அரசியலமைப்பினை புதுப்பித்து மாற்றம் கொண்டுவரவும் சுதந்திரக் கட்சி முன்வந்தபோதும் ஐ.தே.க எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. அவ்வரைவு பின் LTTE யினருக்கு முன்வைக்கப்பட்டதன் பின் அவர்களும் எவ்வித ஒருமைப்பாடும் ஏற்படாதநிலையில் 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் திகதி அரசியலமைப்பு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. பின் திருத்தங்களுடன் 1997 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம்; பாராளுமன்றதெரிவுக் குழுவால் திருத்தப்பட்ட அரசியலமைப்பு வரைபு பேராசிரியர் G.L. பீரிஸ் அமைச்சரினால முன்வைக்கப்பட்டது. ஆனால் 13 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி திருத்தங்கள் செய்யப்பட்டன ஆயினும் அதை ஏற்றுக்கொள்ள ஐ.தே.க முன்வரவில்லை. இந்த இரு அரசியலமைப்பு வரைவுகளிலும் ஐ.தே.க முன்வைத்த திருத்தங்கள் உள்வாங்கப்பட்டும் அவர்கள் வேண்டுமென்றே புதிய அரசியரலமைப்பு சபையில் சமர்ப்பிக்கும் போது வெளிநடப்பு செய்து இரு முயற்சிகளையும் தோல்வியடையசெய்தனர்.
2000 ம் ஆண்டு அரசியலமைப்பு வரைவு இதே விதமாக பாராளுமன்றதெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இதேவிதமான ஓர் விளையாட்டினை ஐக்கியதேசியக் கட்சி விளையாடியது. அந்நேரம் ‘அரசியலமைப்பிலே நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டினை இல்லாதொழித்துவிட்டதாக’ பொய்பிரச்சாரம் செய்தனர். பிராந்தியசபைகளை, வடக் கிழக்கிற்கான இடைக்கால சபையினை இவ்வாறுசுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் இது இன்றுநிலவும் மாகாணசபையை ஒத்த அதிகாரப் பரவலாக்கமாகவே இருந்தது. மாகாண சபை முறைமையை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பின்னரான 13ம் சீர்த்திருத்திருத்திலேயாகும். இதை அறிமுகப்படுத்தியதே ஐக்கிய தேசியக் கட்சி என்றாலும் சுதந்திரக் கட்சி அறிமுகப்படுத்தும் ஓர் அரசியலமைப்பு என்ற காரணத்தினால் மட்டுமே எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதை எதிர்த்தது.
இந்த அரசியல் நடவடிக்கை யொன்றும் இலங்கை வரலாற்றில் புதியதல்ல பண்டா–செல்வா உடன்படிக்கை, டட்லி – செல்வா உடன்படிக்கை என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஓர் கட்சியின் முயற்சியை அதில் உள்ள விடயம் நாட்டின் நலனுக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கின்றது என்பதைப் பாராது மற்றையகட்சி தனது சுயநலத்திற்காக எதிர்ப்பது வழக்கமான விடயமாகிவிட்டது. இது இலங்கையின்; எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்.
அத்தோடு 2000ம் ஆண்டு அரசியலமைப்பு வரைவு ‘இலங்கைக் குடியரசானது மத்தியினதும் பிராந்தியங்களினதும் நிறுவனங்களை அடக்கிய ஒருசுதந்திர இறைமைத்துவ தன்னாதிக்க அரசாகும்……’ எனக் கூறுகின்றது. ‘அரசு குடியரசின் தன்னாதிக்கத்தையும் இறைமையையும் ஒற்றுமையையும் ஆட்புலஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல் வேண்டுமென்பதுடன் இலங்கையின் சமுதாயத்தின் பல்லின, பல்மொழி, பல்மத இயல்பினை ஏற்றங்கரித்து ‘இலங்கையராம்’ அடையாளத்தை காத்தலும் முன்னெடுத்துச் செல்லுதலும் வேண்டும்.’ எனக் கூறுகிறது.
மேலும் ‘பிராந்தியசபைகள் குடியரசிலிருந்து தனிவேறாதல், பிரிந்துப் போதல் இடப்பரப்பின் எல்லைகளை மாற்றுதல், ஏதேனும் பிராந்தியத்திலிருந்து ஆள்புலத்தை தனிவேறாக்குதல் மூலம் அல்லது இரண்டு அதற்கு மேலதிகமான பிராந்தியங்களை ஒன்றிணைப்பதனால் புதியதொரு பிராந்தியத்தை அமைத்தலை, முயற்சிசெய்தல் ஊக்குவித்தல் அல்லது வேறுவகையாக எத்தனித்தல் ஆகாது.’ என ஏற்பாடு செய்கிறது. இது சுயாதீனமான பிராந்தியசபைகள் பிரிந்து போவதை தடுப்பதாகவும் ஓர் சமஸ்ட்டியாக செயற்படுவதாகவும் அமைந்துள்ளது. எனினும் சிறுபான்மையினரின் உரிமைகளை அபிலாசைகளை நசுக்கும் விதமாக தனது சனநாயக பலத்தினை ஐ.தே.க பிரயோகித்து 2000ம் ஆண்டு அரசியலமைப்பு வரைவை தடைசெய்தது சிறுபான்மையினருக்கு செய்த மிகப் பெரிய துரோகமாகும். இப்போது புதிய அரசியலமைப்பு வரைவு நாடகத்தை மேடையேற்றுகின்றது? 2000ம் ஆண்டு அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிமுறையினை இல்லா தொழிக்கவேண்டும் என்ற காரணத்தைக் காட்டி அப்போதைய ஐ.தே.க தலைவர் எதிர்க் கட்சி தலைவர், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவாதத்திலிருந்து விலகி பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.
கடந்த காலங்களில் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடக்கூடாது என பல்வேறு இனவாதக் கட்சிகளும் குழுக்களும் ஊழையிட்டிருந்தன. ஆனால் 2000 ம் ஆண்டு அரசியலமைப்பு வரைவு தேசியகீதத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பினையும் ஏற்றங்கரித்திருந்தது. 1978 ம் ஆண்டு அரசியலமைப்பினைப் போல் அல்லாமல் மனித உரிமைகள் நன்கு வளர்ச்சியடைந்த ஓர் நாட்டின் அரசியலமைப்பினைப் போல அடிப்படை உரிமைகள் பரந்த ஏற்பாடுகளைக் கொண்டிருந்தன. இது இலங்கையின் அரசியலமைப்புகளிலேயே அடிப்படை உரிமைகள் விடயத்தில் என்றும் எட்டமுடியாத விரிவான ஏற்பாடு எனலாம். உயிர் வாழும் உரிமை, சித்திரவதைக்கு, கொடுரமான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருக்கும் சுதந்திரம,; ஏதேட்சதிகரமான கைது, சட்டவிரோதமாக தடுத்து வைத்தலுக்கு எதிரான உரிமை, சமத்துவஉரிமை, நடமாடும் உரிமை, இரகசியஉரிமை, சிந்தனை, மதச்சுதந்திரம், தகவல், பேச்சு சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம், ஒருங்கு சேரும் சுதந்திரம,; கலாசாரஉரிமை, தொழில் உரிமை, ஆதனஉரிமை, சிறுவர் உரிமைகள் பாதுபாப்பான வேலை செய்யும் உரிமை, சமூகஉரிமை, என விரிவான அடிப்படை உரிமைகள் ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்தது.
பாராளுமன்றம், அமைச்சரவைக்கு அதிக அதிகாரங்களை கையளித்து பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படும் ஓர் சனாதிபதி, இரு உப சனாதிபதிகள் அரசின் தலைவராக செயற்படுவார் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு தடவைக்குமேல் தெரிவு செய்யப்பட முடியாது எனும் மட்டுப்பாடு, பிரதமரின் ஆலோசனையின்பேரில் ஈ:டுபடவேண்டும் எனும் ஏற்பாடுகள் காணப்பட்டன.
இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பினை மாற்றிசீரமைக்க வேண்டியதேவை உள்ளது. ஏற்கனவே நடைமுறையிலிருந்த குடும்ப நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம் ஆரம்பநீதிமன்றம் என்பன தனது நியாயாதிக்கத்தினை மாவட்ட நீதிமன்றமும், நீதவான் நீதிமன்றமும் பிரயோகிக்கூடிய முறையில் ஏற்பாhடுகள் செய்யப்பட்டதால் அவை இன்று ஒரு சில வளாகத்தலன்றி வேறு இடங்களில் நடைமுறையில் இல்லை. இன்று இலங்கையின் நீதிமன்றங்களில் தேங்கிகிடக்கும் வழக்குகளை குறைப்பதற்காக, அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விசாரித்து (Criminal Justice Administration) குற்றவியல் நீதியியல் நிர்வாகத்தினை இலகுப்படுத்தவும் வினைத்திறனாக்கவும் இந்தியா, ஐக்கிய இராச்சியத்தினைப் போல மேலும் சில நீதிமன்ற கட்டமைப்பினை உருவாக்கவேண்டும.; எவ்வாறாயினும் நீதித்துறைச் சுதந்திரம,; அரசியலமைப்பு பேரவை, சுதந்திரமான ஆணைக்குழுக்கள் விடயத்தில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் ஏற்பாடுகளைவிட நன்கு விரிவான ஏற்பாடுகள் 2000ம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எவ்வாறு நடாத்தப்பட்டார்கள், எவ்வாறு அரசியல் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தனர் என்பது பற்றி நாட்டு மக்களுக்கு தெரியும.; நீதிமன்றங்கள் மீதான தாக்குதல் உயர்நீதிமன்ற பிரதம நீதியரசரை மிகக் கேவலமாக நடாத்தியமை நீதிபதிகள் சட்டத்தரணிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பன நீதித்துறை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாதொழித்தது. இதில் அதிகாரம் படைத்தோறும், குற்றவாளிகளும் ஏன் சில நீதிபதிகள், சட்டத்தரணிகள் கூட நலன் பெற்றார்கள் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மை.
மேனிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பதவி நீக்கம் விடயத்தில் தெளிவான ஏற்பாடுகள் 2000 ம் ஆண்டு அரசியலமைப்பு வரைபில் காணப்படுகின்றன. உயர்நீதிமன்ற பிரதமநீதியரசர் பதவி நீக்க விடயத்தில் பொதுநலவாய நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளை கொண்ட விசாரணைக் குழுவினால் விசாரனை நடாத்தவும் குற்றம் நிருபிக்கப்பட்டாலன்றி பாராளுமன்றம் தலையிட முடியாத ஏற்பாடு பாராளுமன்றத்தின் தற்துணிவு அதிகாரத்தினை குறைத்து நீதித்துறை சுதந்திரத்தையும் தடையையும் சமநிலையையும் (check and balance) உறுதிப்படுத்துவதோடு அரசியலமைப்புவாதம் அல்லது அரசியலமைப்பிமாணியக் கோட்பாட்டினை மேம்பாட்டடையச் செய்கிறது.
ஏற்கனவே நீதிமன்றங்களிடமிருந்த அதிகாரங்களை ஓர் அரசியலமைப்பு அல்லது சட்டம் இல்லாதொழித்தல் சுதந்திர நீதித்துறையை பாதிப்படையச் செய்யும் கடந்த காலங்களில் உயரநீதிமன்ற தீர்ப்புக்கள் பல இதை நன்கு விபரித்துயுள்ளன. மக்களின் உரிமைகளையும் நீதிமன்றங்களின் சுயாதினத்தையும் பாதுகாப்பது நீதிமன்றங்களின் கடமை எனவே அரசியலமைப்பாயினும் சரி வேறு சட்டங்களாயினும் சரி மக்களிலிருந்து நீதிமன்றங்களிடமிருந்து பிரிக்க முடியாத விடயங்களை பிரித்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதனின் உயிர் வாழும் உரிமையை பிரிப்பதும் நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வு அதிகாரம,; நீதிமன்ற சுதந்திரம் என்பவற்றை பிரிப்பதும் ஒன்றே!
இலங்கை நீதிமன்றங்களில் வழக்குகளில் பல சட்டமாதிபர் திணைக்களத்தின் தாமதத்தால் தேங்கிக் கிடப்பதோடு சட்டமாதிபர் அறிக்கைகள் இன்றியே சிறைச்சாலைகளில் வாடும் அரசியல் சிறைக்கைதிகள், குற்றவியல் சிறைக்கைதிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். சட்டமாதிபர் திணைக்களம் சேயாவின் வழக்கிழும் தாஜூடினின் வழக்கிழும் மிகவிரைவாக னுNயு சுநிழசவ பெற்றுக்கொண்டு வழக்கினை துரிதப்படுத்தியதை நாம் வரவேற்கிறோம். இதேநிலைமை ஏனைய வழக்குகளிலும் பின்பற்றுவதற்காக சட்டமாதிபர் திணைக்களத்தின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து வழக்குகளை விரைவாக கொண்டு நடாத்த போதுமான சட்டஏற்பாடுகளை அரசியலமைப்பு உள்ளடக்குவது காலத்தின் தேவையாகும்.
உலகில், நாடுகள் தனது நாட்டில் நிலவிய பிரச்சினைகள் பலவற்றுக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வுகாண முயற்சித்துள்ளதுடன் வெற்றியும் கண்டுள்ளன. தென்னமெரிக்கா, நேபாளம், கனடா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்புகள் இவற்றுக்கு சிறந்த உதாரணங்களாக காணப்படுகின்றன. தென்னாபிரிக்க அரசியலமைப்பிற்கான ஆரம்பம் 1900ம் ஆண்டுகளில Anglo- Boer யுத்த முடிவுறுதல் உடன்படிக்கையில் ஆரம்பமாகி, பின்பு வெள்ளை கருப்பின முரண்பாடுகளுக்கு தீர்வுகாண முற்பட்டது. தென்னமெரிக்க அரசியமைப்பினை உருவாக்குவதற்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மிக முக்கிய பங்காற்றியுள்ளது.
1960 களில் ஆபிரிக்க தலைவர்கள் சமவாயத்தினால் அனைத்து மக்களினதும் உரிமைகள், அபிலாசைகளை பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1961யில் இளைஞர் யுவதிகள் சாதி வேறுபாடுகளற்ற இன வேறுபாடற்ற மக்களால் உருவாக்கப்படும் ஓர் அரசியலமைப்பின் தேவை பற்றி குரலெழுப்பினர். 1969 தொடக்கம் 1972ம் ஆண்டுகளில் தென்னாபிரிக்க மாணவர் ஒன்றியம் மற்றும் Black Consciousness Movement என்பன சமத்துவத்தினை வழியுறுத்தி போராட்டங்களை நடாத்தின. 1980ம் ஆண்டுகளில் நெல்சன் மண்டேலா ஏiஉவழச ஏழசளவநச சிறைச்சாலையிலிருந்து அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் தேவையை உணர்த்தினார். அந்நேரம் அவர் தென்னமெரிக்க கம்யூனிசக் கட்சியின் உறுப்பினராக இருந்து இன விடுதலைக்காக போராடியமைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்;. இவருடைய கோரிக்கை 1989ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நெல்சன் மண்டேலா இன்றைய சட்டத்தரணிகளைப்போல அல்லாமல் விடுதலை போராட்டங்களில் பங்குகொண்டதனால் ‘அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டமை’ எனும் குற்றச்சாட்டின் மீது சிறைவாசம் அனுபவித்தார,; மக்களுக்காக சிறை சென்றார்.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னமெரிக்க கம்யூனிசக்கட்சி உறுப்பினர்களுக்கெதிரான தடைகளை நீக்கிய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. பின்னர் இடைக்கால அரசும் அரசியலமைப்புப் பேரவையும் (புதிய அரசியலமைப்பினை வரைவதற்காக) நிறுவப்பட்டன. பின்னர் உயர்மட்ட தொழில்நுட்பக் குழுக்கள் அமைக்கப்பட்டு பின்வருமாறான உடன்பாடுகளுடனான புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு இணங்கியிருந்தனர்:
வலுவான தேசிய, பிராந்திய அரசாங்களுடனான அரசியலமைப்பு கொள்கை
அரசியலமைப்பு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு பேரவையில் உருவாக்கப்பட்ட மீயுயர் அரசியலமைப்பு
தேர்தல்
பாரபட்சமான சட்டங்களை திருத்துதல்
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இடைக்கால அரசியலமைப்பு தோற்றுவிக்க உடன்பாடு எட்டப்பட்டது
இதில் சனாதிபதி, இரு உப சனாதிபதிகள், அமைச்சரவை தேசிய ஐக்கியம், அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு நீதிமன்றம், இரு சபைகளை கொண்ட பாராளுமன்றம் நீதித்துறை சுதந்திரம், உள்ளுராட்சி மன்றங்கள் விகிதாசாரமான பிரதிநிதிகளை பேணுதல், பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிமாறுவதை தடுத்தல் மொழியுரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய 298 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அரசியலமைப்பு வரைவுக் குழுவில் இரமபோசா முக்கிய பங்குவகித்தார் அவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராக செயற்பட்டார். பொது மக்களுடைய பங்குபற்றலின் மூலமாக மக்களின் பங்குபற்றலுடன் அரசியலமைப்பு 11 மொழிகளில் வரையப்பட்டது. பின்னர். அவ்வரசியலமைப்பு 11 Million பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
நாட்டின் தேசியக் கொடி அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியவாறு அமைந்துள்ளது. அரசு கரும மொழிகளாக பதினொரு மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன அத்தோடு ஜெர்மனிய மொழி, கிரேக்க மொழி, குஜராத்தியமொழி, இந்தி, போர்த்துகேய மொழி, தமிழ்மொழி, தெழுங்கு, உருது, அரேபியமொழி, சமஸ்கிருதம் என்பனவற்றினை மேம்படுத்தவும், உறுதிப்படுத்தவும் தேசிய பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியலமைப்பின் உறுப்பினர் 6 கூறுகின்றது. மத்திய மாநில உள்ளுராட்சி மன்றங்கள் அவற்றின் அதிகாரங்கள் என்பன தெளிவாக வரையப்பட்டுள்ளதால் அரச இயந்திரம் மக்களுக்காக இயங்க முடியுமாகவுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு தற்போது 17ம் சீர்த்;;திருத்ததுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக சுமார் 125 இனங்கள், 127 மொழிகளுடன் வாழும் 30 மில்லியன் மக்களைக் கொண்ட ஓர் தெற்காசிய நாடான நேபாளத்தின் புதிய அரசியலமைப்பு உலகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. இந்து சாம்ராச்சியமாக திகழ்ந்த நேபாளம் எவ்வித அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கோ ஐரோப்பிய அரசியல் கலாசாரத்திற்கு முறைமைகளுக்கோ உட்படாமையால் 2015ம் ஆண்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கி ஏற்றுக்கொண்டது. இதற்கு முன் 1948ம் ஆண்டு தொடக்கம் 6 அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2007ம் அண்டு நேபாள மாவோஸ்ட்;கள் மன்னராட்சியை இல்லாதொழித்து இடைக்கால அரசியலமைப்பினை அறிமுகப்படுத்தி சனநாயகத்தினை உருவாக்கியனர். நேபாள அரசியலமைபு பாயிரம் ‘மக்களின் சுயாட்சி, சுயாதீனம், நேபாள சுதந்திரம், இறைமை புவியியல் ஒருமைப்பாடு, தேசிய ஐக்கியம், சுதந்திரம் கௌரவவத்தினை பேணிக்கொண்டு ஆயுத புரட்சி, மக்கள் இயக்கங்களின் வரலாற்றையும் நினைவு கூறிக்கொண்டு, அதற்காக அர்ப்பணித்த தலைவர்கள் காணாமல் போனோர், பாதிக்கப்பட்டோர், போன்றோரை ஞாபகமுட்டிக்கொண்டு சனநாயத்தினை பேணவும் …… சமஸ்டி சனநாயக குடியரசு அரசிலமைப்பினை உருவாக்குகிறோம்…’ எனக் கூறுகிறது.
‘நேபாள அரசியலமைப்பு’ நேபாளத்தில் பேசப்படும் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளாகும்’ எனக்கூறுகிறது. உறுப்புரை 19 – ஊடக சுதந்திரத்தினை அரசியலமைப்பில் உறுதி செய்துள்ளதுடன் தணிக்கை செய்தலை தடுத்துள்ளது. நீதிக்கான உரிமை மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டுள்ளது, மேலும் பாதிக்கப்டோர் உரிமை (Right of victim of crime)> Right Against Preventive Detention தடுத்து வைத்தலுக்குகெதிரான உரிமை, தீண்டாமை, பாரபட்சமின்றிருப்பதற்கான உரிமை, ஆதன உரிமை, தகவல் உரிமை, இரகசியத்திற்குற்கான உரிமை (Right to privacy)> சுரண்டலுக்கு எதிரான உரிமை, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமை, கல்வி உரிமை, தொழில் உரிமை, சுகாதார உரிமை, உணவுக்கான உரிமை (Right of food) வீட்டுரிமை ((Right of housing) ) பெண்களுரிமை, சிறுவர் உரிமை, தனித்துக்களுக்கான உரிமை, முதியோருக்கான உரிமை, சமூக நிதிக்கான உரிமை (சிறுபான்மையினர் உரிமைகள்) சமூக பாதுகாப்பிற்கான உரிமை, பாவனையாளர் உரிமை, நீதியும் தண்டனையும், சமூக நீதி, தொழில், பிரஜைகளின் அடிப்படை தேவைகள் இயற்கை வளங்கள் அபிவிருத்தி, விவசாயம், காணி மறுசீரமைப்பு, நிதி, கைத்தொழில் வர்த்தகம், நல்லாட்சி, தேசிய பாதுகாப்பு, ஐக்கியம், சர்வதேசம் உறவு தொடரர்பிலான அரசின் கொள்கைகள் எனும் பல்வேறு புதிய ஏற்பாடுகள் நேபாள அரசியலமைப்பில் உள்வாக்கப்பட்டுள்ளன.
மேலும் அரச அமைப்பு சமஸ்டியரசாங்கம், மாகாண அரசாங்கம், உள்ளுராட்சி மன்றங்களை உள்ளடக்கியதுடன், மாகாணங்கள் மாவட்டங்ளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளுராட்சி மன்றங்களும் காணப்படும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள், ஒதுக்கிய நிரல், மாநில, உள்ளுராட்சி அமைப்புகளுக்கான நிதி அதிகாரம், தேர்தல் கல்லூரியினால் செர்ந்தெடுக்கப்படும் சனாதிபதி, அவர,; சமஸ்டி பாராளுமன்றம், மாநில சபையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார.; இரண்டு முறைகளுக்கு மேல் சனாதிபதியாக வரமுடியாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உபசனாதிபதி, சனாதிபதி எந்த இனத்தினை, சமூகத்தினை பாலினை கொண்டுள்ளபரோ அந்த இனம், சமூகம் பாலினைச் சாராதவராக இருத்தல் வேண்டும். எனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமஸ்டி பாராளுமன்றம் பிரதிநிகளின் சபையையும் தேசிய சபையையும் கொண்டுள்ளதுடன், (2751055) 330 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் சபையின் 275 பேரில் 165 பேர் எளிய பெரும்பான்மை தேர்தல் மூலமும் 110 பேர் விகிதாசார தேர்தல்; மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன்போது பெண்கள், தலித்தியர், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பேணும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் காணப்படும் இன, மொழி, கலாசாரம் ரீதியான முரண்பாடுகளையொத்த பிரச்சினையை கொண்ட நாடுதான் பெல்ஜியம் 1831 இல் ஒற்றையாட்சி அரசியமைப்பை வரைந்துக்கொண்டு ஒல்லாந்துகாரர், பிரெஞ்சுக்காரர், ஜேர்மனியர், (Flemish, French, German) எனும் மூவருக்கும் இடையிலான முரண்பாடு பின்னர் பிராந்தியவாதமாக மாறியது. மறுபக்கம் வகுப்புவாதமும் காணப்பட்டது இந்நிலையில் பெல்ஜிய அரசியலமைப்பு 1980, 1983, 1988, 1989, 1993 ம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வந்ததோடு காணப்பட்ட இனப்பிரச்சினைக்கு தீர்வாக எந்தவோர் இனத்தையும் அழிக்கவில்லை மாறாக சமஸ்டி அரசியஷைலமைபப்பினை உருவாக்கிக்கொண்டது.
பெல்ஜியம் அரசியலமைப்பு மொழி, கலாசாரம், இன அடையாளம் என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்ததோடு அந்த அளவீட்டில் அதிகார பரவலாக்கத்தினை செய்தது பெல்ஜியம் தேசிய மட்டம், சமுதாய மட்டம், பிராந்திய மட்டம், மாகாணமட்டம், உள்ளுராட்சி மட்டம் என 5 மட்டங்களில் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட்ட ஓர் சமஸ்டி அரசியலமைப்பினைக் கொண்டுள்ளது. மிக விசேடமாக ஜேர்மன், பிரெஞ்சு, பிளமிஸ் மொழி பேசக் கூடியவர்களுக்கு தனித்தனியான சமூக அமைப்பு முறைகளை (Communities) கொண்டடுள்ளது. அவை தனக்கான சட்டங்களை உருவாக்கிகொள்ளும் இதே வேளை இணைந்த சமூக ஆணைக் குழுக்களையும் கொண்டுள்ளது. (துழiவெ ஊழஅஅரnவைல ஊழஅஅளைளழைn) பிராந்திய சபைகள் தனியாகவும், மாகாண சபைகள் தனியாகவும் இயங்குகின்றன. இந்நிறுவனங்களுக்கிடையிலான சட்டவாக்கம், சமஸ்டி அதிகாரங்கள் பற்றிய பிணக்குகள் நடுத்தீர்ப்பு நீதிமன்றத்தால் தீர்க்கும் ஏற்பாடு காணப்படுகிறது (Court of Arbitration)
இலங்கைக்கு இவ்வாறான ஓர் அரசியலமைப்பின் சாயல் பொருத்தமாக அமையும் என்றாலும்கூட மக்கள் விட்டுக்கொடுப்புடன் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக காணப்படுவது மிகவும் முக்கியமாகும். எமது நாட்டில் அரசியமைப்பு திருத்தங்கள் பெரும்பாலும் ஆட்சிக்கு வந்தோர் நலனுக்காக அவர்களின் தேவைக்கேற்ப மாற்றப்பட்டனவேயன்றி மக்கள் நலனுக்காக, நாட்டின் நலனுக்கான அரசியமைப்பில் எவ்வித திருத்தமும் ஏற்படுத்தப்படவில்லை குறிப்பாக அரசியலமைப்பிற்கான 1-19 திருத்தங்களிலும் மக்களின் வாழும் உரிமைகூட அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிக முக்கியமான சட்டங்களையும், அரசியலமைப்பு திருத்தங்களையும் அவசர சட்ட மூலங்களாக பாராளுமன்றில் சமர்ப்பித்து களவுத்தனமாக மாற்றிக்கொள்ளும் பழக்கம் ஆட்சியாளர்களிடையே இருந்து வருகின்றது. பாராளுமன்ற மீயுயர்தன்மையை இதற்கு சாhகமாக பயன்படுத்திக்கொண்ட விதத்தினை கடந்த காலங்களில் நாம் கண்டுள்ளோம் சிறுபான்மையின அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என எல்லோரும் செயற்பட்ட விதத்தினையும் நாம் நன்கு அனுபவித்துள்ளோம் இதை படிப்பினையாகக் கொண்டு இலங்கையின் அரசியலமைப்பினை அரசியலமைப்பு மீயுயர் தன்மை கொண்ட அரசியலமைப்பாக உருவாக்குவதோடு அரசியலமைப்பு திருத்தத்திற்கு இன மொழி ரீதியான அங்கீகாரங்களால் பெற்றுக்கொள்ளக் கூடிய இல்லாத பட்சத்தில் திருத்தம் செய்ய முடியாதவாறான ஏற்பாடுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான தேவையாகும.; பாராளுமன்ற மீயுயர் தன்மையான வலவேறாக்கக் கோட்பாட்டிற்கு முரணானது என்பதோடு பாராளுமன்றம் ஏதேட்சதிகாரமாக செயற்பட வழிவகுக்கின்றது. மக்களின் நீதித்துறை அதிகாரம்ஃ இறைமையினூடாக பாராளுமன்றத்தின் ஏதேட்சதிகாரம் மட்டுப்படுத்தப்படவேண்டும் இதை இலங்கையின் நீதித்துறை இதுவரை செய்யவில்லை மாறாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகிளன் நீதித்துறை தனது துரனiஉயைட யுஉவiஎளைஅ மூலம் மக்களின் இறைமை அதிகாரத்தினை பிரயோகித்து வந்துள்ளதுடன் மக்களையும் அரசியலமைப்பினையும் பாதுகாத்துள்ளது.
பெல்ஜியத்தின் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறைகளில் இன விகிதாசாரத்தின் அடிப்படையிலான பிரதிநிதித்துவம் பேணப்படுகிறது அமைச்சரவையிலும், நீதித்துறையிலும் பிளமிஸ், பிரேஞ்சு மொழியினர் 50:50 என்ற அடிப்படையில் பதவி வகிக்கின்றனர் இது வரவேற்கதக்க விடயமாகும்.
ஏதேனும் சமுதாயத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடிய ஓர் சட்டமொன்றை உருவாக்குவதை தடுக்க புசழரி ஏநவழஇ யுடயசஅ டீநடட எனும் ஏற்பாடுகள் இலங்கை போன்ற நாட்டிற்கு பயனுடையதாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஏனேனில் கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற கொடுமைகளே இதற்கு சாட்சி.
கோட்டங்களுக்கான அதிகாரங்கள், மத்தியரசுக்கான அதிகாரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டடுள்ளன. அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத ஏதேனும் விடயம் தொடர்பில் கோட்டம் நியாயாதிக்கம் கொண்டிருக்கும் யாப்பு சீர்திருத்தங்களின் போது கோட்டங்களின் அங்கீகாரம் கட்டாயமானது. கோட்டங்கள் தனியான இராணுவத்தினையும், Police படையையும் கொண்டிருப்பதோடு தனது ஆட்சிமுறைமையையும் தாமே தீர்மானிக்கும். ஒரு இலட்சம் மக்கள் கையொப்பமிடும் மனுவின் மூலம் அரசியலமைப்பு மாற்றம் வேண்டுமா? வேண்டாமா எனும் மக்கள் தீர்ப்பினைக் கோரலாம். இன்னும் சில விசேடமான விடயங்களை சுவிஸ் அரசியலமைப்பு கொண்டுள்ளது.
இது போல சூடான், கனடாவின் கியூபெக் மாநில பிரச்சினை என பல்வேறு சந்தர்ப்பங்களில் உலகில் அரசியலமைப்பு திருத்தங்கள் புதிய அரசியலமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த படிப்பினை எமது நாட்டிலும் சிறந்ததோர் அரசியலமைப்பினை உருவாக்க உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
இதேவேளை சர்வதேச ரீதியில் எமது நாடு ஏற்றுக்கொண்ட சர்வதேச சமவாயங்கள், மனித உரிமை சாசனங்கள் சர்வதேச சட்டங்களையும் எமது நாட்டின் கலாசாரம், இனங்களின் பல்லினத்தன்மை, மொழி, போன்ற பல்வேறு விடயங்களுடன் கலந்த காலங்களின் மிகவும் பகிரங்கமாக புரியப்பட்ட இனப்படுகொலை சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் சர்வதேச சட்ட மீறல் போன்றவற்றினை கருத்தில் கொண்டு உள்வாங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்றாலும் அது எமது நாட்டின் இறைமையை தன்னாதிகத்தை பாதிக்காத வகையில் அமைவது மிகவும் முக்கியமாகும்.
ஏற்கனவே சர்வதேச உடன்படிக்கைகள் சமவாயங்கள் மூலமாக நாம் எமது இறைமையையும் தன்னாதிக்கத்தையும் இழந்துள்ள நிலையில் சர்வதேசத்தின் தலையீடு தவிர்க்க முடியாதவிடயமாக மாறியுள்ளது. அரசியலமைப்பு உருவாக்குவதற்கான முனைப்பு நல்லாட்சி அரசாங்கம் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான ஓர் நாடகம் எனும் கருத்தும் நிலவச் செய்கின்றது. இதில் உண்மையும் இல்லாமல் இல்லை ஆனால் எப்போதும் அரசாங்கத்தை குறைக்கூறித் தெரியாமல் இம்முறை மக்கள் தனது நாட்டின் அரசியலமைப்பினை தீர்மானிக்கும் ஓர் வாய்ப்பினை பெற்றுள்ளனர் பலர், பல அமைப்புக்கள் தமது மும்மொழிவுகளையும் கருத்துக்களையும் கூறியுள்ளனர.; மக்கள் அரசியலமைப்பு குழுவின் மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
உண்மையில் அரசாங்கம் மக்களுக்கு நன்மை பயக்கும் ஓர் அரசியமைப்பினை வரையப்போவதில்லை அதில் அரசியல் நலன் இருக்கவேச் செய்யும் என்றாலும் ஏற்கனவே இருந்த அரசியலமைப்பைவிட சிறந்த, நாட்டின் வளர்ச்சி, அரசியலமைப்பு சனநாயகத்தின் உறுதிப்பாடு, விரிவான அடிப்படை உரிமைகள், என பல்வேறு நவீன விடயங்களைக் கொண்டிருக்குமானால் நாடு சுபீட்சம் பெறும்.
LLRC, காணாமல் போனார் ஆணைக்குழு, ஏனைய பல்வேறு ஆணைக்குழுக்களின் அறிக்கைப போலன்றி நடைமுறைப்படுத்தக் கூடியதான முமு;மொழிவுகளைக் கொண்ட மக்களுக்கான அரசியலமைப்பினை உருவாக்க அரசாங்கம் முனைப்புடன் செயற்பட வேண்டும் சனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும், தேசியம், சுயாட்சி, கலாசாரம் மக்களை இறைமையை மதித்து, பாதுகாக்க கூடிய, அரசியல் ஏதேட்சதிகாரத்தினை, இராணுவமயமாதலை தடுக்கும் ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியது நம் அனைவரினதும் தலையாய கடமையாகும்
புது யுகம் படைப்போம்
முற்றும்