லீ ஆட்சிக்கு வந்ததும், கருத்துச் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன. ஊடக சுதந்திரம் அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. குடும்ப ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க் கட்சிகள், விமர்சித்தவர்கள் எல்லாம் சிறையிலடைக்கப்பட்டனர்.
சிங்கப்பூரில் பணம் படைத்தவர்கள் வியாபாரம் செய்வதற்கும், வாழ்வதற்கும், சுற்றுலாப் பயணம் செய்வதற்கும், அவர்களுக்கு வேலையாட்களை வைத்துக் கொள்வதற்கும் உரிமை வழங்கப்பட்டது. மாற்றுக் கருத்துக்களுக்கும், அரசியலுக்கும் சிங்கப்பூரில் சுதந்திரம் வழங்கப்படவில்லை.
இலங்கையில் கடந்த பத்து வருடங்கள் ஆட்சி நடத்திய ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்கு ஈடான ஒரு ஆட்சி முறைமையே லீ குவானின் ஆட்சி காலத்தில் நிலவியது. அதிலும் முதல் பத்தாண்டுகளில் அழிந்து போனவர்கள் பலர்.
முன்னைய சோசலிச நாடான சீனா சிங்கப்பூர் போன்ற சர்வாதிகார ஆட்சி முறையையே தனது புதிய ஆட்சி முறையாகக் கொண்டிருக்கிறது என்று பல்வேறு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
லீ குவான் யூ இன் மகனும் பிரதமரின் ஊடகச் செயலாளருமான லீ ஹெசியன் லூங் 23.03.2015 காலை 3:18 இற்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் லீ மரணமடைந்து விட்டதாக அறிவித்தார்.
மக்கள் நடவடிக்கைக் கட்சி என்ற் கட்சியைத் தோற்றுவித்த லீ, 1959 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பிரதமாரானார். சிங்கப்பூரில் அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனங்களுக்குச் சேவை செய்வதற்காக, தனியர் மயப்படுத்தப்பட்ட ஆங்கில மூலக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க மூலதனம் சிங்கப்பூரில் பல தொழில்களை ஆரம்பிக்கப் பயன்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள் ஆரம்பிக்கபட்டன. பெற்றோலியச் சுத்திகரிப்பு ஆலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பல மூலதனக் கொள்ளைக்காரர்கள் மறு விசாரணையின்றி சிங்கப்பூரில் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா, பங்களாதேஷ், மியான்மார், மலேசியா, சிம்பாப்வே போன்ற நாடுகளில் கருத்துச் சுதந்திரம் சிங்க்ப்பூரை விட சிறந்தாக இருப்பதாகக் குறித்துக்காட்டப்பட்டிருந்தது. இன்று வரைக்கும் எதிர்க்கட்சிகளும் மாற்றுக் கருத்தாளர்களும் சிங்கப்பூரில் அனுமதிக்கப்படுவதில்லை. ‘சிங்கப்பூரை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்கள் கையில் இரும்பை வைத்திருக்க வேண்டும்’ என்ற லீ குவானின் கூற்று இன்றும் பிரபலம் வாய்ந்தது.
சிங்கப்பூர் என்ற சிறிய நகரத்தை தனது தேவைக்காக நாடாக மாற்ற அமெரிக்கா லீ குவானை பிரதமராக நியமித்தது. ஆசியாவின் சிறிய நகரத்தை பணம் படைத்த நகரமாக மாற்றியமை வளர்சியோ முன்னுதாரணமோ அல்ல.
ஈழத் தமிழர்களைப் பற்றி ஒரு நேர்காணலில் லீ குவான் கூறியதை வைத்துக்கொண்ட் அவரைத் தமிழ் உணர்வாளராக்கிவிட்டனர் தமிழ் தேசியக் கோமாளிகள். நாளை ராஜபக்ச புலிகள் வாழ்க என்றால் அவருக்கும் அஞ்சலி செய்த்தத் தயங்கமாட்டார்கள்.
உலகில் மக்களுக்காகப் போராடி மரணித்துப்போன ஆயிரக்கணக்கானோரை கண்டுகொள்ளாத மனிதாபிமானற்ற தமித் தேசிய வியாபாரிகள், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே வெற்றிகான பாதையில் நடந்து செல்ல முடியும்.