Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்

வாக்குக் கட்சிகளால் மக்களுக்கான எதையும் சாதித்துவிட முடியாது. அதிலும் இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பிரித்தானிய காலனியாதிக்க வாதிகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் மக்கள் விரோத ஆட்சிகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. இந்த ஒட்டு ஜனநாயகத்தின் மத்தியிலிருந்து தோன்றிய விரல்விட்டு எண்ணக்கூடிய சீர்திருத்த வாதிகள் சிலர் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும், பின் தங்கிய சமூக உற்பத்தியை புதிய நிலைக்கு நகர்த்தவும் தம்மாலான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். வெனிசூலா நாட்டின் சனாதிபதியாக தனது இறுதிக்காலம் வரை பதவிவகித்க ஹுகோ சவேஸ் இன் சீர்திருத்தக் கருத்துக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் எதிரொலித்தது. புரட்சிகர இயக்கங்கங்களுக்கான வித்துக்களின் விளை நிலமாக அந்த நாடுகள் மாற்றமடைவதற்கு சாவேஸ் இன் ஆட்சி வழிவகுத்தது. சீர்த்திருத்த வாதம் என்பது சமூக மாற்றத்திற்கு எதிரானதாகவே பல சந்தர்ப்பங்களில் அமைந்துவிடுகிறது.

இருப்பினும் சில குறிப்பான சூழ்னிலைகளில் அது முற்போக்கான பாத்திரத்தையும் வகிக்கிறது என்பதற்கு சாவேஸ் ஆட்சி செய்த சீரழிந்து போயிருந்த நில உடமைச் சமூகம் சிறப்பான உதாரணம்.

ஆசிய உற்பத்தி முறை சமூகத்தின் முன் நோக்கிய நகர்வைத் தடுத்திருந்தது. அங்கிருந்த சாதி அமைப்பு முறையைம் அதனை கவனமாகப் பாதுகாத்த இந்துத்துவா அமைப்பு முறையும், அதன் உச்சியில் அமர்ந்திருந்த பிராமணர்களும் மாற்ற மடையாத சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்கவே பயன்பட்டன. சாதி அமைப்புபிற்கான கோட்பாட்டு வடிவமான இந்துத்துவா சாதி ஒடுக்கு முறையினால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களாலும் ஏற்றுக்கொள்ளும் அவல நிலையே இந்தியாவின் பின் தங்கிய நிலைக்கும் அதன் தொடச்சியான இருப்பிற்கும் காரணமாகியது, இவ்வாறான சூழலில் பெரியாரும் அம்பேத்கரும் முன்வைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் உண்மையிலேயே புரட்சிக்கான வித்துக்கள்.

பெரியார் அம்பேத்கரை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டு ஆட்சியைக் கையகப்பட்ய்த்திய இரண்டாவது தலைரான கருணநிதி ‘தமிழர் அல்லாத’ ஈழத் தமிழர்களுக்கு எதிரான தமிழினத் துரோகியா என்பதே இன்றைய சமூக வலைத் தளங்களில் உலாவரும் பலரது குறுகிய விவாதப் பொருள்.

ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த 80 களின் ஆரம்பங்களில் திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழ் நாட்டின் ஆதரவு நிலையிலிருந்தன. தி.க மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற இயக்கங்களின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை ஈழப் போராட்டத்தை அறிந்து வைத்திருந்தனர்.

எமது தொடர்புகள் அனைத்தும் திராவிட இயங்கள் மட்டுமே. ஈ.பி.ஆஎ.எல் போன்ற இயக்கங்களுக்கு சில இடதுசாரி இயங்களுடன் பிற்காலத்தில் தொர்புகள் ஏற்பட்டிருந்தன.

80 களில் ஈழத்திலிருந்து வேதாரண்யம் கடற்கரையில் படகுகள் ஊடாக தமிழ் நாடு செல்லும் போராளிகள் அனைவருகும் வேதாரணியம் தி.மு.க எம்.எல்.ஏ மீனாட்சி சுந்தரத்தின் வீட்டில் தங்கியே சென்னை செல்வது வழமை. மீனாட்சிசுந்தரத்தின் வீடு இயக்க ஒற்றுமைக்கான மையமாக அமைந்திருந்தது தமிழகத்தில் இயங்களின் நுளை வாசல் கூட திராவிட இயக்கங்கள் தான். புளட், என்.எல்.எப்.ரி போன்ற இயக்கங்கள் நக்சல்பாரி குழுக்களோடும் தொடர்புவைத்திருந்தமைக்கன தகவல்கள் உண்டு.

80 களில் படிப்படியாக வளர்ச்சியடைந்த ஈழப் போராட்டத்தை ஆயுதங்களை வழங்கி வீக்கமடையச் செய்து அழிக்கத் திட்டமிட்ட இந்திய அதிகாரவர்க்கமும் அதன் உளவுத் துறையும், பாராளுமன்றக் கட்சியான  தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தொடர்புகொண்டு இராணுவப் பயிற்சிக்கு இளைஞர்களை ஏற்பாடு செய்துதருமாறு கேட்டுக்கொண்டன. அதன் தொடர்ச்சியாக 1982 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை உருவாக்கிக்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தி.மு.க இன் ஆதரவு கிடைத்திருக்கவில்லை. மறுபக்கத்தில் பயிற்சிக்காகக் கேட்கப்பட்ட 500 பேரில் 50 இளைஞர்களைக் கூடத் திரட்டிக்கொடுக்க முடியத தமிழர் விடுதலைக் கூட்டணியை கைவிட்ட இந்திய உளவுத்துறை அதே கட்சியைச் சேர்ந்த சந்திரகாசன் செல்வநாயகம் ஊடாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களை அணுகியது. அப்போது, டெலோ, ஈ.பி.ஆ.ர்.எல்.எப், ஈரோஸ்,தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்களுக்கு பயிற்சி வழங்குவதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

80 களில் இயக்கத் தலைவர்களுடன் கருணாநிதி

அப்போது தான், வடக்குக் கிழக்கிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழ் நாட்டிற்கு இராணுவப் பயிற்சிக்காக அழைத்துவரப்ப்பட்டனர். தமிழ் நாட்டில் அவர்களைப் பாதுகாப்பதற்கும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கிக்கொள்ளை மற்றும் பணத் திரட்டல் போன்ற நடவடிக்கைகளை இயக்கங்கள் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றன. அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் திராவிடர் கழகம் போன்றவற்றினதும் நிதி மற்றும் அது சார்ந்த உதவிகள் இயக்கங்களுக்கு வலுச்சேர்க்கின்றன.
திடீரென 84 ஆம் ஆண்டளவில் விடுதலை இயக்கங்கள் – தி.மு.க இடையிலான விரிசல் ஆரம்பிக்கிறது. அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான கருணாநிதியைச் சந்திக்கச் செல்லும் குழுவில் விடுதலைப் புலிகள் அமைப்பு திடீரென மறைந்து போனது. அதற்கான காரணம் எம்.ஜீ.ராமச்சந்திரன். அன்று காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான உறவைப் பேணிக்கொண்ட எம்.ஜீ.ஆர், ஏனைய இயக்கங்களைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப் புலிகளுக்கு மட்டும் 2 கோடி இந்திய ரூபாய்களை முதலமைச்சர் நிதியிலிருந்து வழங்கியமை இயக்கங்களைப் பிரித்தாளும் முதலாவது இந்திய உளவுத்துறையின் தந்திரம்.

விடுதலைப் புலிகளுக்கும், ஏனைய மூன்று இயக்கங்களுக்கும் எம்.ஜி.ஆர் ஊடாக பிளவை ஏற்படுத்திய இந்திய உளவுத்துறை, திராவிட இயக்க எல்லைக்குள் இருந்தும் விடுதலைப் புலிகளைப் பிரித்தெடுத்தது.

83 இன் இறுதியில் தி.மு.க விலிருந்த வை.கோ எழுதிய யமுனைக் கரையில் ஈழப் புயல் என்ற நூலை அனைத்து இயக்கங்களும் ஈழத்தில் விற்பனை செய்தன. அது கூடப் பணத்தேவையை ஓரளவு பூர்த்தி செய்தது. எம்.ஜீ.ஆர் இன் பணம் வழங்கப்பட்ட பின்னர், வை.கோ இன் நூல் விடுதலைப் புலிகளால் விற்பனை செய்யப்படுவதில்லை.

திராவிட இயக்க எதிர்ப்பையே தமது அடிப்படைக் கோட்பாடாகக்கொண்ட நெடுமாறன் போன்றவர்கள் விடுதலஒ புலிகளோடு தொற்றிக்கொண்டார்கள்.

70 களிலிருந்து ஈழவிடுதலை ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த திராவிட இயக்கங்களை அதிலிருந்து அன்னியப்படுத்தும் செயலை எம்.ஜீ.ஆர் இன் 2 கோடி ரூபாய்கள் உடாக கச்சிதமாக நடத்தி முடித்தது இந்திய உளவுத்துறை.

அக்காலப்பகுதியில் கருணாநிதியைச் சந்திப்பதையும் திராவிட இயக்கங்களோடு தம்மை அடையாளப்படுத்துவதையும் விடுதலைப் புலிகள் கவனமாகத் தவிர்த்துவந்தனர். இந்திய உளவித்துறையின் அங்கீகாரம் இல்லாமல் 2 கோடி ரூபாயை அள்ளி வழங்கியிருக்க எம்.ஜீ.ஆர் ஆல் முடிந்திருக்காது என்பது ஒருபுறமிருக்க பின்னாளில் இயக்கங்களுக்கு இடையேயான மோதலும் இதிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு.

இந்தியாவின் இந்துதுவ அதிகாரவர்க்கத்தை திராவிட இயக்கங்கள் அச்சுறுத்திய அளவிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட அச்சுறுத்தியதில்லை. இந்திய உற்பத்தி முறையின் அடிப்படைக் கோட்பாட்டை அதன் வேர்கள் வரை சென்று விசாரித்த திராவிட இயக்கங்களின் சீர்திருத்தவாதம் தமிழ் நாட்டை தூக்கலாக உயர்த்திக்காட்டியது.

தி.மு.க மற்றும் திரவிட இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் கருணாநிதி முதல்வரான காலத்திலிருந்தே அதிகமாகியிருந்தது. கருணாநிதி முதல்வரான போது, வட இந்தியப் பத்திரிகைகள் “தமிழ்த் திவிரவாதி” முதல்வராகிறார் என எச்சரித்தன. அதன் தொடர்ச்சிகயாகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை திராவிட இயக்கங்களிலிருந்து அன்னியப்படுத்த இந்திய உளவுத்துறை திட்டம் வகுத்தது. 2 கோடியில் ஆரம்பித்த இந்திய அதிகாரவர்க்கத்தின் சதி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது….

தொடரும்….

Exit mobile version