இப்பயணங்களின்போது மோடி உலகத்தலைவர்களிற்கு இந்தியாவின் பொக்கிசம் எனக்கூறி ஒரு பரிசுப்பொருளினை வழங்கிவருகிறார். அப்பரிசுப்பொருள்தான் பகவத்கீதை. மோடிதான் இப்படி என்றால் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மிதா சுவராச் பகவத்கீதையினை இந்தியாவின் தேசியநூலாக்கவேண்டும் என்கிறார். இவ்வாறெல்லாம் புகழப்படும் பகவத்கீதையின் யோக்கிதை என்ன என ஆராய்வதே இவ்வாக்கத்தின் நோக்கம்.
பகவத்கீதை என்றால் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது ……, கடமையினைச்செய் பலனை எதிர்பார்க்காதே போன்ற மேற்பூச்சுகள் பூசப்பட்டு எமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் அதன் நோக்கம், உட்கருத்து எல்லாமே இரண்டு விடயங்களேயாகும்.
1. வர்ண தர்மம்(சாதியமைப்பு) பேணல், பெண் அடிமைத்தனம்.
2. வன்முறையினை தூண்டல்.
இதில் வருணங்கள் பற்றிப்பேசும்போதெல்லாம் வருணங்கள் ஒருவருடைய செயல்கள், குணங்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்று மழுப்ப முயலலாம். ஆனால் பகவத்கீதையின் 9வது இயலின் 32வது பாடலில் பின்வருமாறு கூறப்படுகிறது.
கீதையின் 18 இயலின்44-47 வது பாடல்களில் நாலு வருணங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவற்றிற்கான தொழில்களும் குறிப்பிடப்படுகிறது. மேலும் வருணங்களை படைத்தது நானே என கிருஸ்ணர் சுயவாக்குமூலமே கீதையில் கொடுத்துள்ளார். கீதையின்படி ஒரு வர்ணத்தை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு தொழினை சிறப்பாக செய்வார் எனினும் தனது குலத்தொழிலினைவிட வேறு தொழில் செய்யக்கூடாது. இவ்வாறு வர்ண அமைப்பினை பேணுவதே கீதையின் அடிப்படை நோக்கம்.
கீதையின் இரண்டாவது நோக்கம் வன்முறையினை தூண்டல், அதாவது தமது நலன்களிற்காக கொலை செய்யத்தூண்டுவதாகும். போர்க்களத்தில் அருச்சுணன் தனது எதிர்தரப்பில் நிற்கும் தனது சத்திரிய உறவினர்களைப் பார்த்து தயங்கிநிற்கிறான். அப்போது அவனை கொலை செய்யத்தூண்டும்விதமாகவே கிருஸ்ணர் கீதையினை கூறுவதாக கூறப்படுகிறது. இங்கு யுத்தம் என்பது மக்களினை யார் ஆள்வது என்பதற்கான ஒரு ஆதிக்கப்போரே அது.
இதனை எவ்விதத்திலும் நியாயமான போராகக் கருதமுடியாது. இதில் பாண்டவர்கள் பக்கம் நியாயம் இருப்பதாக பலர் கருதலாம். ஆனால் பாண்டவர்கள் யாருமே பாண்டுவிற்கு பிறக்கவில்லை. (உதாரணமாக அருச்சுணன் இந்திரனின் மகனே). எனவே பாண்டவர்கள் பாண்டுவின் வழியில் ஆட்சியுரிமை கோரமுடியாது. இது நீதிக்கான போரல்ல.
இவ்விடத்தில் போரிற்கு அருச்சுணன் தயங்குவதற்கான காரணம் யாதெனில் போரின்போது சத்திரியர்கள் பலரும் இறப்பார்கள், இதனால் பின்பு சத்திரியப்பெண்களிற்கு உறவுகொள்ள சத்திரிய ஆண்கள் இல்மால்போய்விடுவார்கள், அவ்வாறான நிலையில் சத்திரியப்பெண்கள் வேறு வர்ண ஆண்களுடன் கலக்கவேண்டிவரும் என்றே தயங்குகிறான். (போர்க்களத்திலும் அருச்சுணனின் நினைப்பினை பாருங்கள்). அதன்போது கிருஸ்ணன் அவனிற்கு கூறுகிறான் அவ்வாறு தர்மம் (வர்ணாஸ்திர தர்மம்) அழியும் நிலை வந்தால் நான் வருவேன் என்று. இப்போது புரிகிறதா எந்த தர்மம் அழியும்போது கிருஸ்ணன் வருவான் என்று .
வன்முறையினை கீதை எவ்வாறு நியாயப்படுத்துகிறது என்பதற்கு கோட்சேயின் வரலாறே சாட்சியாகும். தீண்டாமைக்கு எதிராக போராடிய (கவனிக்கவும்: வர்ண அமைப்பிற்கு எதிராக காந்தி போராடவில்லை) காந்தியினை கொன்றதற்கு கீதையினையே கோட்சே ஆதாரம் காட்டினான்.
அண்மையில் இலண்டன் வெம்பிளி அரங்கில் மோடி உரையாற்றும்போது வேறுபாடுகளற்ற சமுதாயம், வன்முறை மற்றும் தீவிரவாத ஒழிப்புப்பற்றியெல்லாம் பேசினார். அவர் அவ்வாறு பேசும்போது டேவிட் கமரோன் மோடியால் பரிசளிக்கப்பட்ட பகவத்கீதையின் ஆங்கில வடிவத்கினைப் பார்த்துக்கொண்டிரந்தார். அக் கீதையோ சாதிப்பாகுபாடு, வன்முறை என்பவற்றினை நியாயப்படுத்திக் கொண்டிருந்தது . இதில் ஆச்சரியம் எதுவுமில்லை ஏனெனில் மோடி போன்ற மதவாதிகளின் சொல்லுக்கும் செயலிற்கும் எப்போதும் தொடர்பிருப்பதில்லை.