Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்(வீடியோ)

இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலர் மருதையனுடனான உரையாடல் இது.

ஈழப் போராட்டம் குறித்தும் இன்றைய உலகின் பல்வேறு தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பாகவும் தோழர் மருதையனுடனான உரையாடல் பல்வேறு பிரச்சனைகளுக்கு விடை தருகிறது.

வாக்குப் பொறுக்கும் பாராளுமன்ற அரசியல் பாதையை முற்றாக நிராகரித்து 21 ஆம் நூற்றாண்டின் வர்க்க அரசியல் சூழலை தெளிவாக முன்வைக்கும் தோழர் மருதையன் ஈழப் போராட்ட அரசியலில் நீண்டகால அனுபவம் மிக்கவர். எண்பதுகளில் இந்தியாவில் நிலை கொண்டிருந்த இயக்கங்களின் தலைவர்களில் பொதுவாக அனைவரோடும் தொடர்பு கொண்டிருந்த தோழர் மருதையன் ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகள் தொடர்பாகவும் தெளிவான பார்வை கொண்டவர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தையும் அதன் தோழமை அமைப்புக்களையும் தடை செய்யக் கோரி கடந்த ஆண்டில் பல்தேசிய நிறுவனங்கள் பல தமிழக அரசிற்கு மனு அனுப்பியிருந்தன. அணிதிரட்டப்பட்ட மக்கள் திரள்களின் பலத்தின் முன்னால் அதிகாரவர்க்கம் போராட்ட அமைப்புக்கள் மீது தடைச்சட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. மூன்று தசாப்தங்களாக மக்கள் உழைக்கும் மக்களை அணிதிரட்டிப் போராடும் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஈழப் போராட்டத்தைப் புரட்சிகரமானதாக மாற்றுவதற்கு தன்னாலான பங்களிப்பை வழங்கி வருகிறது.

வாக்குப் பொறுக்கி, கட்சி உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான மக்கள் ஆதரவையும் உறுப்பினர்களையும் கொண்டிருந்த போதும் பாராளுமன்றப் போலி ஜனநாயகம் உழைக்கும் மக்களுக்கானது அல்ல என மக்கள் கலை இலக்கியக் கழகம் நிராகரிக்கிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் மக்களை அணிதிரட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்திவருகிறது. மக்களைப் புரட்சிக்குப் பயிற்றுவிக்கும் களங்களாக ஒவ்வொரு போராட்டங்களும் அமைந்துள்ளன. ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களும் அவர்களின் தலைமைகளும் தோழர் மருதையனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றன.

தெற்காசியாவின் புரட்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வினவு என்ற இணையத்தளம் அதன் குரலாக அமைந்துள்ள வேளையில் கீழைக்காற்றுப் பதிப்பகம் பல்வேறு வெளியீடுகளை வருடம் தோறும் வெளியிடுகிறது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் என்ற இரண்டு மாதாந்த அரசியல் கலாச்சார ஏடுகள் தமிழ் நாடு முழுவதும் வினியோகிக்கப்படுகின்றது.

ஒரு மணி நேரம் தொடரும் தோழர் மருதையனின் நேர்காணலைச் செவிமடிப்பது புதிய இனிமையான இலக்கியச் சுவை கலந்த அரசியல் அனுபவம். விடை காணப்படாத பல பிரச்சனைகளின் தீர்வை இலகுவான அரசியலாக முன்வைக்கிறார்.

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்
அகதிமுகாம் என்ற அறிவிக்கப்படாத கொடுங்காவற் சிறை : தோழர் மருதையன் உரை (வீடியோ)
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!
Exit mobile version