Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“Fake Encounter ரயாகரன்” – எமது சமூகத்தின் புரையோடிப்போன புண்கள் : சபா நாவலன்

வயிற்றைக் குமட்டும் அருவருப்போடு, எழுதுவதா இல்லையா என்று ஆயிரம் தடவைகள் யோசித்த பின்னர் எழுத விரும்பாமல் எழுதுகின்ற பதிவு இது. கோபத்தோடும், துயரத்தோடும், இன்னோரன்ன உணர்வுகளோடும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். முதல் தடவையாக எழுத விரும்பாமல் எழுதுகின்ற இந்தக் கட்டுரை யாருடைய எழுத்து முறைக்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது.

 சக போராளிகள் மீதும், அயலவன் மீதும், மனிதர்கள் மீதும் வெறுப்புக்கொண்ட விஷக் கிருமிகளை தவிர்க்கவியலாமல் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அருவருப்பைத் தருகின்றது.

இவ்வாறான எழுத்துக்களும் செயல்களும் எமது சமூகத்தின் சாபக்கேடோ என துயர்கொள்ளும் ஆயிரம் சமூகப் பற்றுள்ள மனிதர்கள் நடுவே, அரசியலற்ற “விடுப்புக் கட்டுரையை” எழுதுவதற்கு என்னையும் நிர்பந்தித்தது எமது சமூகத்தின் சிந்தனை முறையே. அச்சிந்தனை முறையின் உச்சப்ட்சப் பிரதிநிதிகளான ரயாகரன் போன்றோரே!

அதனை மாற்ற ஏனையவர்களோடு இணைந்து எனது பங்களிப்பையும் வழங்க வேண்டும் ஆர்வம் அதிகரிக்கிறது. இவ்வாறான கட்டுரைகளின் முதலும் இறுதியுமாக இது அமையட்டும் என விரும்புகிறேன்.

ரயாகரன் என்ற தனிமனிதன் இதுவரை பல தடவைகள் என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை தனது எழுத்து மூலமாக நடத்தியிருக்கிறார். இன்று வரை இவற்றிற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை.

இவர் போன்ற பலரும் இவ்வாறான தாக்குதல்களை வேவ்வேறு தளங்களில் தொடர்ச்சியாக நடத்திக் களைத்துப் போயினர். கருத்தை எதிர்கொள்ள முடியாத இவர்களின் நோக்கங்களில் ஒன்று இணையத் தளங்களில் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி தனிமனித இயல்புகள் குறித்த விவாதங்களைத் தூண்டி தமது இருப்பை நிலை நாட்டிக் கொள்வதாகும். அல்லது ஒருவரின் கருத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை முன்வைத்து அவர்களைத் தனிமைப்படுத்துவதாகும். இவர்களைக் கருத்தில் எடுத்துக் கொள்வதால் இந்த ஆசாமிகளின் நோக்கங்களுக்கு நாங்களும் பலியாகிவிடுவோமோ என அச்சம் கொண்டிருகிறேன்.

முதலில் இவர்களின் இந்த நோக்கங்களுக்கு நான் பலியாக விரும்பியதில்லை. எனது அரசியல் கருத்துக்களை மட்டுமே எழுதி வந்திருக்கிறேன்.

இரண்டாவதாக ஆயிரம் தத்துவார்த்த அரசியல் பிரச்சனைகள் குறித்த கற்றல்களிலும் விவாதங்களிலும் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்குப் பதிலாக எனது நேரத்தை இந்கக் கிசுகிசுப்புக் காரர்களோடு வீணடிக்க விரும்பவில்லை.

மூன்றாவதாகவும் முக்கியமானதாகவும், இலங்கையில் மரணத்தில் வாழும் மக்கள் கூட்டமோ,உலகம் முழுவதும் வாழுகின்ற மக்கள் பற்றுள்ள மனிதர்களோ இவ்வகையான குழாயடிச் சண்டைகளை எமது இணையங்களில் தேடுவதில்லை, ஆக்கபூர்வமான கருத்துக்களையே எதிர்பார்க்கிறார்கள்.

நான்காவதாக, இந்தக் கிசுகிசுப்புப் பேர்வளிகளுக்குப் பதில் சொல்லப் போனால் அவர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள். ஒரு விடையத்திற்கு நட்புரீதியான பதிலை முன்வைத்தால் இன்னொரு விடயத்திற்கு தாவி தொடர்ச்சியான தாக்குதல்களை முன்வைப்பார்கள். அசோக் இனியொருவில் ரயாகரனின் தாக்குதல்களுக்குப் பதிலாக எழுதிய கடிதத்திற்கு 35 தொடர்களை எழுதி, தேடல் ஆர்வமுள்ள இணைய வாசகர்களை வெறுப்புக்கு உள்ளாக்கிய ரயாகரன் இந்த இயல்புக்கு சிறந்த குறியீடு.

ஆக, இவர்களைப் புறக்கணித்தலே சிறந்த வழிமுறை என எண்ணியிருந்தேன். இந்நிலையில், நான் குகநாதன் என்பவரைக் கடத்திக் கப்பம் கேட்டதாக ரயாகரன் என்ற கிசுகிசுப்புக்காரன் தனது இணையத் தளத்தில் எழுதியிருந்தார்.

இவ்வாறான பல பொய்களை என்மீதும் ஏனையோர் மீதும் சுமத்திவந்த இந்தப் பேர்வழி இம்முறை மக்கள் கலை இலக்கியக் கழகத்தையும் தொடர்புபடுத்தியிருப்பது என்னைப் பதில் கூற நிர்பந்திருக்கிறது.

உண்மையில் நடந்தது என்ன?

சம்பவ தினத்தன்று காலை அருள் எழிலன் இனியொருவில் பதிவு செய்வதற்காக எனது மின்னஞ்சலுக்கு ஒரு கட்டுரை அனுப்பி வைத்திருந்தார். அதன் இறுதிப் பகுதியை மாலை அனுப்புவதாக கூறியிருந்த போதிலும் அது எனக்கு வந்து சேரவில்லை. மாலை பிரித்தானிய நேரம் ஐந்து மணியளவில் அருள் எழிலனின் கைத்தொலைபேசிக்கு அழைத்து கட்டுரை குறித்துக் கேட்டபோது, அவர்க் தான் கொமிசனர் அலுவலகத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அங்கே இலங்கைத் தமிழரான குகநாதனை தமது சட்ட முறைப்பாட்டின் பேரில் தமிழகப் பொலீசார் கைது செய்திருப்பதாகவும் அது தனது அண்ணனுக்குத் குகநாதன் தரவேண்டிய பணம்குறித்த முறைப்பாடு என்றும் தெரிவித்தார்.

குகநாதனுக்கும் அவரது அண்ணனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்ட போது, அதனை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று தொலை பேசியை குகநாதனிடம் கொடுத்தார். குகநாதன் தான் பெருந்தொகையான பணம் கொடுக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால் அதனைக் கொடுப்பதற்கு தன்னிடம் போதிய வசதிகள் இல்லை என்றும் என்னை அவர்களை சமாதானப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

குகநாதனை இதற்கு முன்னர் எனக்குத் தெரியாது என்றும் அருள் எழிலனின் அண்ணனையும் எனக்குத் தெரியாது என்றும் இதனால் இதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறினேன்.

அதற்கு, என்னை அவருக்குத் தெரியும் என்றும் நான் சுபாஸ் என்பவரின் நண்பன் என்பது தனக்குத் தெரியும் என்றும் சுபாஸ் என்பவரை பணத்திற்குப் பொறுப்பாக நிற்கும்படி என்னைக் கோருமாறும் கேட்டுக்கொண்டார்.

சுபாஸ் என்பவருடன் எனக்கு நீண்ட நாட்களாகத் தொடர்பில்லை என்பது தவிர நான் இந்த விடயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினேன்.

தவிர, அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை எனவும் இந்தப் பிரச்சனையில் எந்தக் காரணம் கொண்டும் நான் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினேன்.

இந்த உரையாடலின் மறு நாள் காலை மூன்று மணியளவில் எனது கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அது குகநாதனின் மனைவியின் அழைப்பு! அவர், எனது தொலைபேசி இலக்கத்தை பிரான்சில் வசிக்கும் ஒருவர் கொடுத்ததாகக் கூறினார்.

அருட் செழியனின் தம்பி எனது நண்பர் என்று அறிந்ததாகவும் அவரூடாக பணத்தைக் கொடுப்பதற்கு தவணை கேட்கும்படியும் என்னை கேட்டார். இப்போது முழுப் பணத்தையும் தர அவர்கள் வற்புறுத்தினால் தனக்குத் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

நான் இதில் தலையிட விரும்பவில்லை என்றும் வேண்டுமானால் எனக்கு ஒரு ஆலோசனை தோன்றுகிறது என்றும் கூறினேன். அதாவது இந்தியாவில் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால் பிரான்சில் உள்ள சர்வதேசச் சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொண்டு அவரூடாகப் பணம் தருவதற்கு ஒரு கால எல்லையைப் பெற்றுக்கொள்ளலாமே என்று கூறினேன்.

அவருடன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டதும், அருள் எழிலனிடம் இது குறித்துக் கூறினேன். அதற்கு அவர் இது தனது அண்ணனின் பிரச்சனை என்றும் என்னை இதில் தலையிட வேண்டாம் என்றும் ஏமாற்றப்பட்ட பணம் தராவிட்டால் சமாதானம் என்பது கிடையாது என்றும் பணம் தரப்பட்டால் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டிருப்பது தனது அண்ணன் என்றும் என்னை இந்த விடயத்தில் இனிமேல் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்வளட்வுதான் நடந்த சம்பவங்கள். இதனைத் வழமை போலத் திரிபுபடுத்தி கண், காது, மூக்கு எல்லாம் வைத்து, ம.க.இ.க போன்ற அரசியல் அமைப்புக்களையும் உள்ளே இழுத்து, ரயாகரன் எனக்கு எதிராக ஒரு சிறு கதையைத் தனது மொழியில் எழுதி இணையத்தில் உலாவவிட்டுள்ளார்.

இச்செய்தி கிடைத்ததுமே ரயாகரன் போன்ற நிலப்பிரபுத்துவ சிந்தனைச் சிற்பிகள் பலர் உற்சாகமாகிவிட்டார்கள். அவர்கள் நான் பிரித்தானியாவிலிருந்து தூண்டில் போட்டுக் குகநாதனைக் கடத்தியதாகவும் கப்பம் கேட்டதாகவும் அருவருப்பான புனைவுகளை எந்த குற்ற உணவுமின்றி கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

எனக்குத் தெரிந்தளவில் குகநாதன் உட்பட இலங்கை அரசிற்குச் சார்பான வியாபாரிகள் பலர் ஏற்கனவே எனக்கு எதிரான பிரச்சாரங்களை பல தளங்களில் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இலங்கை அரச ஆதரவாளர்களும் எந்தக் குறிப்பான அரசியலுமற்ற ரயாகரனும் ஒன்றுபடும் ஒரு புள்ளி எனது கருத்துக்களுக்கு எதிரான தனிநபர் தாக்குதல் என்பதாகும்.

இந்த சூழலில் குகநாதனின் மனைவியிடம் இரண்டு தடவைகள் உரையாடினேன் . அந்த உரையாடல்களை தவிர்க்க முடியாமல் பதிவுசெய்துள்ளேன். அப்பாவியான அந்தப் பெண்ணின் வாக்குமூலம் இங்கே பதிவிடப்படுகிறது.

Fake Encounter ரயாகரன்

நான் புலம் பெயர் நாட்டில் கட்சியோ இயக்கமோ நடத்தவில்லை. எனக்குத் தெரிந்த அல்லது நான் சரியானவை என்று நம்பும் கருத்துக்களை எழுதிவருகிறேன்.

இந்தக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத ரயாகரன் போன்றவர்கள் நடத்தும் என்கவுன்டர் தாக்குதல்கள் இனிமேல் நிறுத்த்ப்பட வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் காவற்துறை தன்னைப் புனிதமானவர்களாக பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு, தமக்கு எதிரானவர்களைக் கொலைசெய்யும் வழிமுறைதான் இந்த என்கவுன்டர். இதே வழிமுறையைப் பயன்படுத்தும் ரயாகரன் போன்றோர் எமது சமூகத்தின் புரையோடிப் போன புண்கள். ஆரம்பத்தில் இலங்கை அரச சார்பான தமிழ் இணையத் தளங்கள் என்மீது கிசுகிசு என்கவுன்டர் தாக்குதல்களை நடத்திவந்தன. அவற்றிற்கு நான் எதிர்வினையாற்றாமையால் நிறுத்தப்பட்டுவிட்டன.

ரயாகரன் என்னை குகநாதன் போன்ற இலங்கை அரச ஊதுகுழல்களை விடக் கேவலமாகச் சித்தரித்து எனது அரசியலை சாகடிக்க எண்ணுகின்றனர். ரயாகரனின் இந்தப் பொய்களின் பின்னால் பதுங்கியிருக்கும் பய உணர்வையும், தீய நோக்கங்களையும் குறித்துப் பேச இது சந்தர்ப்பமல்ல.

நான் புலம்பெயர் நாடுகளில் இருந்து எழுதுவதைத் தவிர எதையும் பெரிதாகச் சாதித்ததில்லை. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் பாசிச சூழலில் வாழுகின்ற அரசியல் நண்பர்கள் கூட இதே என்கவுண்டர்களுக்குப் பலியாகின்ற அபாயகரமான சூழல் காணப்படுகின்றது.

உதாரணமாக கனடாவில் வாழ்கின்ற நண்பர் ஒருவர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிபெற்றதாக இராணுவ உடையுடனான அவரது புகைப்படம் ரயாகரனது இணையத்தில் வெளியிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக,

அவதூறுகளையும் காட்டிக்கொடுப்புக்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது ஆராய்வது கட்டுரையின் இன்னொரு நோக்கம்.

எவ்வறு சைபர் அவதூறுகளையும் காட்டிக்கொடுப்புக்களையும் எதிர்கொள்வது?

1. இவற்றைப் புறக்கணிப்பது. ஒரு குறித்த எல்லை வரை இவற்றைப் புறக்கணிக்கலாம். ஆனால் அது எல்லை தாண்டும் போது அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குகநாதனிடம் அவர் இலங்கை அரசின் ஊதுகுழல் என்பதால் இச் சம்பவத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைக் கூறியிருந்தேன். இப்போது பொதுத் தளத்தில் அவரிடம் நானே கப்பம் கோரியதாக என்கவுண்டர் பதிவு எழுதப்பட்டுள்ளது. இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் இதே என்கவுன்டரைப் பாவித்து (தேவை ஏற்பட்டால் ரயகரன் குகநாத ஆகியோரின் வாக்குமூலங்களோடு) இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம். ஆக, அவதூறு என்பது காட்டிக்கொடுப்பு என்ற தளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இது எல்லை தாண்டிய விவகாரம்.

2. இணையங்களில் கட்டுரைகளூடாக எதிர்வினையாற்றல். குறிப்பான சந்தர்ப்பங்களில் இது தேவையான ஒன்றாயினும் இது இறுதியான தீர்வாக அமைய முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் ரயாகரன் தமிழக அரசியற் கட்சி ஒன்றையும் இதனுடன் தொடர்புபடுத்தியிருப்பதால எனது கட்டுரை அவசியமானதாகக் கருதினேன்.

3. மக்களைத் திரட்டி இவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவது.

புலம்பெயர் நாடுகளில் சாத்தியமற்ற ஒன்றாகவே இது கருதப்பட முடியும்.

4. சட்டரீதியான அணுகு முறை.

ஐரோப்பிய முதலாளித்துவச் சட்டங்களில் இதற்கான வழிமுறைகள் எல்லைக்கு உட்பட்டுக் காணப்படுகின்றன. புளொக் முறை உருவான காலத்தில் ஐரோப்பாவில் நடந்த இவ்வைகையான சம்பவங்கள் சட்ட வரம்பிற்கு உட்பட்டு கையாளப்ப்பட்டிருக்கின்றன.

நான் பெற்றுக்கொண்ட சட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

ஆக. எனது தனிப்பட்ட நலன்களுக்காக மட்டுமன்றி, பொதுவான நோக்கத்தில் ரயாகரன், அவரது இணையத்தள உரிமையாளர் போன்றோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளே ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரும் என நம்புகிறேன், இது குறித்து இனியொரு வாசகர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறான கட்டுரை ஒன்றை எழுதுதியதற்காக வாசகர்களிடமும், தோழர்களிடமும், எழுத்தாளர்களிடமும் மன்னிப்புக் கோரும் அதேவேளை அவர்களும் எனது இக்கட்டான சூழலைப் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கை கொள்கிறேன்.

குகநாதனின் மனைவியுடன்  எனது முதலாவது உரையாடல்  இங்கு பதியப்ப்படுகிறது. இவ்வாறு உரையாடல்களைப் பொதுத் தளத்தில் பதிவிடுதல் என்பது நாகரீகமானதாகக் கருதவில்லை என்றாலும் அருவருக்கத்தக்க அநாகரீகத்தைக் கையாள முதலாவதும் இறுதியுமாக ஒரு பதிவு வெளியிடப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. எனது நீண்ட இரண்டாவது உரையாடல் தேவையேற்பட்டால் மட்டும் வெளியிடப்படும். முதலாவது உரையாடல் பதியப்பட்ட திகதி 17.09.2010 பிரித்தானிய நேரம்  இரவு 11 மணி.

 


எனக்கு எதிராகத%8

Exit mobile version