உயர்நீதிமன்றத்திற்கு பிரதம நீதியரசரை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி நியமிக்கும் போது, நியமனத்தின் சட்டவாந்தன்மை தொடர்பில் கேள்வியெழுப்பும் அதிகாரம், தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நீதித்துறைக்கே இருக்கின்றதன்றி நி.அ.கொ சனாதிபதிக்கு இல்லை மொகான் பீரிஸின் நியமனம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கிடப்பட்டது. அந்த நீதிமன்றத்தின் பிரதம நீதியரசரே மொகான் பீரிஸ்தான்) உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கவில்லை. சனாதிபதியின் ஆலோசகர்; தானே தனக்கு தீர்ப்பு வழங்கினார்.
தற்போதைய சனாதிபதியும் தவறாக வழிப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் உள்ள ஏற்கனவே தள்ளுபடி செய்த வழக்கை மீளாய்வு செய்து இதற்கான விசேட நீதியரசர்கள்; அமர்வின் முன் தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் இதுவே சட்டரீதியானது. அரசாங்கம் ‘நல்லாட்சி’ பற்றி பேசிவருகின்றது. கடந்த காலங்களில் யுத்தத்தின் பேரில் பல்லாயிரம் கணக்கானோர் கொல்லப்பட்டும்,
தருஸ்மன் அறிக்கையை மையப்படுத்திய மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை என்பன கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை உணர்த்துகிறது. உள்நாட்டில் இராணுவம் தருஸ்மன் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக தான் செய்த குற்றத்துக்கு விசாரணைக்குழுவை அமைத்து இலங்கை இராணுவம் யுத்த குற்றம் ஒன்றும் நடக்கவில்லை எனக்கூறியது.
வேடிக்கையான இந்த விளையாட்டை நடாத்தியவர் கோட்டாபாய ராஜபக்சதான். தான் செய்ததை ஏற்க எவ்வளவு பரந்த மனம் வேண்டும். உள்நாட்டு யுத்தம் தந்திரோபாயமாக, சட்டமுரணான வெற்றிகொள்ளப்பட்டது அல்லது தழிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கம் அதிகாரத்தினை இலங்கையரசாங்கம் பரித்துக்கொண்டது.
இதை அரசாங்கம் சுதந்திரமாகக் கொண்டாடி, தமிழர் மனங்களில் இரணங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றினை நல்லாட்சி பற்றி பேசும் அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது?
நல்லாட்சி என்பது சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, பொறுப்பு கூறல், Integrity , வினைத்திறன், மக்களின் பங்குபற்றல், responsive, effective , சமத்துவமும் சட்டவாட்சியும் எனும் பண்புகளைக் கொண்டுள்ளது. Consensus oriented ஊழல் மோசடிகளை குறைத்தல், சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்தல், பாதுகாத்தல், most vulnerable peopleகுரல் கேட்டல் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
நல்லாட்சி, அரசு, தனியார், மக்கள், சிவில் சமுகம் என மூன்று தரப்பினரிடையேயும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, நல்லாட்சியின் ஏனைய பாதிப்பு செலுத்தும் பங்குதாரர்கள், முதலாளிகள், பல்தேசிய கம்பனி, பணக்காரர் NGO, அரசியல் பலம் படைத்த குடும்பம், பாதாள உலக கோஸ்டி, இனவாதக் குழுக்கள், பயங்கரவாதக் குழுக்கள், போதை பொருள் விற்பனையாளர், தரகர் என எல்லோரும் பாதகமாகவும், சாதகமாகவும் நல்லாட்சிக்கு பாதிப்பு செலுத்தி வந்துள்ளனர்.
இனி இந்நிலைமைகளை எவ்வாறு மாற்றுவது எனவும், சட்டவாட்சியை எவ்வாறு பேணுவது எனவும் நோக்கும் போது சட்டம் எல்லா சந்தர்ப்பங்களில் சாதாரணமாக, நியாயமாக இருப்பதில்லை அது ஒரு தரப்பினருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் இருக்கும்.
மக்களுக்காகவே சட்டம் இயற்றப்படுவதில்லை இது பெரும்பான்மையானவர்களுக்காக, பணம்படைத்தவர்களுக்காக, பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்களுக்காக அரசாங்கத்திற்காக, வெளிநாட்டு கம்பனிகளுக்காக என உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக casino சட்டம், Colombo port city அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பன மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட மக்களுக்கு சம்பந்தமில்லாதவை இவை சட்டரீதியாக செய்யப்பட்ட மோசடிகள்.
தமிழர்களை நசுக்கவெனவும், ஊடகங்கள், எதிர்கட்சியினர் சமூக செயற்பாட்டாளர்களை நசுக்கவெனவும் சட்டங்கள் அமுலில் இருந்து வருகின்றன. இவற்றின் சட்டவாத்தன்மை பற்றி கேள்வியெழுப்பிய சந்தர்ப்பங்கள் பல உள்ளன அவற்றுக்கான பதில்கள்தான் விசித்திரமானவை.
வினைத்திறனான அரச சேவையை வழங்குவதற்காக இங்கிலாந்து மிகப்பெரிய பிரயந்தனத்தின் பின் பல்வேறு ஆணைக்குழுக்கள் நிறுவி இலங்கைக்கான அரச சேவை முறைமை பரிந்துரைத்தது, என்றாலும் இன்று சுதந்திரமான அரச சேவை வெறும் கனவாயுள்ளது. சுதந்திர ஆணைக்குழுக்கள் இல்லை. முழுமையான ஊழல் மோசடியால் ஊறிப்போன அரச சேவை மக்களை உறிஞ்சி மிச்சமுள்ளதையும் எடுத்துக்கொள்கிறது. அரசியல் அடையாளங்களே மேலோங்கியுள்ளன. அல்லாமல் திறமைகளும், தகுதியானவர்களும் அடிமைகளாய் அங்கிகாரம் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் சமகால பிரச்சினைகள் யாவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிமுறையுடன் சம்பந்தப்படாது ஆனால் அதனால் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளே. தற்போது நிலவும் முறைமையை பாராளுமன்றத்து தேசிய பட்டியல் முறைமை, மாகாண அதிகாரங்களை மத்தியரசு கொண்டிருந்தலும் கையளிக்காமையையும், பகிராமையும், பொலிஸ,; நீதித்துறையில் அதிகரித்த அரசியல் தலையீடு என்பன நி.அ.கொண்ட சனாதிபதியின் விளைவுதான். இவற்றினை பாராளுமன்ற சனநாயக முறைமையின் கீழ் மாற்றியமைக்க முடியும் எனக்கூறுவது அவ்வாறே ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் மக்களுக்கு பொறுப்பு கூறும் ஓர் பாராளுமன்றத்தால் செய்யமுடியுமாக இருந்தால் சனநாயகத்தினை வலுப்படுத்தலாம்.
அமெரிக்கா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகளில் சனாதிபதி தனது அதிகாரங்களை பிரயோகிக்கும் போது செயற்படுத்த வேண்டிய முறை மட்டுப்பாடுகள் காணப்படுவதோடு இரண்டாம் மன்றம் அவற்றை ஒழுங்கு செய்கிறது.
எதேட்சதிகாரமாக செயற்பட முனையும் சனாதிபதியை கட்டுப்படுத்துதல், முடிவுகளை மீளாய்வு செய்தல், நியமனங்களை அங்கிகரித்தல் போன்ற விடயங்களை அமெரிக்க காங்கிரஸ் மேல்சபை செய்கின்றது. சர்வதேச ஒப்பந்தங்களை 2/3 பெரும்பான்மையுடன் அங்கிகரித்தல் அல்லது நிராகரித்தல் போன்ற அதிகாரங்களும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விசாரணைகளை மேல்சபையே செய்கின்றது.
சட்டவாக்க, நிதி, அரசியலமைப்பு விவகாரம், நிறைவேற்று அதிகாரத்தினை மேற்பார்வைசெய்தல், சமஸ்டியையும் அரசியலமைப்பினையும் பாதுகாத்தல், நீத்தித்துறை சுதந்திரத்தை பாதுகாத்தல், நீதிபதிகள், சனாதிபதியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் மீதான விசாரணை ஆகியன இச்சபையினாலே செய்யப்படுகின்றன. எனவே தடையும் சமநிலையும் கொண்ட வலுவேறாக்க கோட்பாடு வெற்றிகரமாக செயற்பட முடிகிறது. இங்கும் சனாதிபதியின் ஆதிக்கம் இல்லாமல் இல்லை மாறாக வரம்பு மீற செனட் இடமளிப்பதில்லை எனலாம். யுத்தங்களின் போது எவ்வாறு படைகளை பாவிப்பது தொடர்பில் 1973 சட்டம் ஏற்பாடு செய்கிறது. அரச நியமனங்களின்போது சிவில் சேவை சட்டமும் திணைக்கள தலைவர்கள் நியமனத்தின்போது ஆநசவை முறைமையும் பாவிக்கப்படுகின்றது.
பிரான்ஸை பொருத்தமட்டில் சனாதிபதிக்கு அடுத்து அதிகாரம் கொண்டவர் செனட் தலைவர். மேல் சபையான செனட் தேசிய சபையை கட்டுப்படுத்தல், மேற்பார்வைசெய்தல், நிதி விடயங்கள் பொதுச்சேவை விடயங்களை ஒழுங்கு செய்கிறது. சமுக அரசியல் பிரச்சினைகள் தொர்பில் ஆணைக்குழுக்ளை நிறுவவும் அதிகாரம் கொண்டுள்ளது. அரசியலமைப்பு சபை இலங்கையில்போல் அல்லாமல் மிகவும் சுயாதீனமாக இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சனாதிபதி, தற்போதைய சனாதிபதியால் நியமிக்கப்படும் மூவர், தேசிய சபை தலைவரால் நியமிக்கப்படும் மூவர் செனட் தலைவரால் நியமிக்கப்படும் மூவர் என 10 பேர் அரசியலில் பங்குபெற்றாதவர்கள் அங்கம் வகிப்பர்.
இவ்வரசியலமைப்பு சபை அரசியலமைப்பினை பாதுகாப்பதுடன் சட்டமூலங்களை மீளாய்வு செய்யும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது. இலங்கையில்?
ரஸ்யாவிலும் சமஸ்டி கூட்டவை சனாதிபதியை கட்டுப்படுத்துகின்றது. இரண்டு சபைகளைக் கொண்ட இச்சபை State Duma எனும் கீழ்சபையையும் Federal Council எனும்; மேல் சபையையும் கொண்டுள்ளதோடு சனாதிபதி பிரதமர் என இருவரையும் கட்டுப்படுத்துகின்றது.
இலங்கையில் அவ்வாறு இல்லை 18ம் சீர்த்திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழித்தது 19 ம் சீர்த்திருத்தம் அரசியல்மயமாக்கியது…………………..
தொடரும்………
சட்டத்தரணி எஸ்.மோகனராஜன்
LL.B (Hons) (Colombo), DIE (Col), DAPS (UK)
முன்னையவை: