Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒரு மில்லியன் மரணம்,நிறுவனமயமாகும் பாசிசம்: அழிக்கப்படும் உழைக்கும் மக்கள்

Covid-19 நோய்த் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரு மில்லியன் மக்கள் மரணித்துள்ளனர். முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை அப்பட்டமான, நிர்வாணமான தோல்வியையே இந்த மரணங்கள் உணர்த்துகின்றன. சுவைன் காச்சல் என்ற அழைக்கப்பட்ட பெருந்தொற்றின் போது ஐந்து லட்சம் உயிரிழப்பு மட்டுமே பதிவு செயப்பட்டிருந்தது. இந்த வகையில் 21 ஆம் நூற்றாண்டில் அதிக இறப்பு வீதத்தைப் பதிவு செய்துள்ள பெரும் தொற்றாக கொரோனா கருதப்படுகிறது. இந்த தொகை கூட உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட இறப்புக்களே தவிர, பதிவு செய்யப்படாத இறப்புக்களை ஒன்று சேர்த்தால் இது இன்னும் அதிகமாகலாம் என்று குறிப்பிடுகிறார், மல்பேர்ண் பல்கலைக் கழகத்தின் தொற்று நோய் நிபுணரான பேராசியர் அலன் லூபேஸ்.

உலகப் பொருளாதாரம் இதுவரைக்கும் 3 வீத வீழ்ச்சியைச் சந்திதுள்ள நிலையில் 1930 ஆம் ஆண்டின் பின்னர் உலகம் சந்தித்துள்ள மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என ஐ.எம்.எப் தெரிவிக்கிறது.
உலகில் மரணிக்கிறவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையின் காரணத்தாலேயே இறக்கின்றனர் என்கிறது ஐக்கிய நாடுகளின் ஆவணம். கொரோனாவின் தாக்கம் 265 மில்லியன் மக்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளிவிடும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீடு.

இந்தியா அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் கொரோனாவின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட, அதிகமாகப் பேசப்படாத வியட்நாம், கியூபா போன்ற நாடுகள் நோய்த் தொற்றைக் கணிசமான அளவிற்குக் கட்டுப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் சிறிய வியாபார நிறுவனங்கள் அரச கடன்களின் உதவியுடன் சேடமிழுத்துக்கொண்டிருக்க பெரு நிறுவனனக்கள் அவற்றில் சிலவற்றை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அரசு புதிய மதவெறி பாசிசத்தை நிறுவன மயப்படுத்தும் சட்டத்திருத்தங்களை திருட்டுத்தனமாக நிறைவேற்ற அதன் மறுபக்கத்தில் விவசாயத் திருத்தச் சட்டத்தின் ஊடாக உற்பத்திப் பொருட்களின் உரிமையை பெரும் கோப்ரட் நிறுவனங்களிடம் கையளித்துள்ளது.

இலங்கையின் தன்னகத்தே தனி நபர் நிறைவேற்று அதிகாரத்தை பேரினவாத பாசிச அரசு மன்னராட்சிக்கு இணையான 20 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் காத்திருக்கிறது. இது தொடர்பான போராட்டங்களிலிருந்து மக்களைத் மடைமாற்ற கொரோனா அச்சத்தை அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் ராஜபக்ச அரசின் மறைமுகப் பினாமிகளான சுரேஷ் பிரேமச்சந்திரன் –

விக்னேஸ்வரன் கும்பல், இலங்கையின் வரலாறு தொடர்பான வகுப்பு நடத்துகின்றது. கொரோனா தொற்றின் தாக்கத்தையும் அதனைப் பயன்படுத்தி அரசு நடத்தும் வெறியாட்டத்தையும் குறித்துப் பேசுவதற்கு எதிரணியே இல்லாத அவலம் இலங்கையில் காணப்படுகிறது.

Exit mobile version