இவ் உரிமை சோபாசக்திக்கும், அவர் சார்ந்த நபர்களுக்கும் உண்டு என்பதை நாம் பரிபூரணமாக அங்கீகரிக்கின்றோம்.
இதேவேளை; இவ்வாறான மக்கள் விரோத பிற்போக்கு கட்சிகளையும், இலங்கை பேரினவாத சக்திகளையும் அதன் அரசியலையும், ஒத்தோடித் தனங்களையும், கேள்விக்குள்ளாக்கும் எமது ஜனநாயக உரிமைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சோபாசக்தி நல்ல கதைசொல்லி.வாழ்க்கையிலும் சிறந்த நடிகர். இன்று திரையிலும் அதனை திறமையாக செய்துள்ளார்.வாழ்த்துக்கள்.
அவர் தனது தனிப்பட்ட “வளர்ச்சிக்காக” ,எத்தகைய “செயல்களையும்” செய்வார் என்பதும் எத்தகைய “எல்லைகளையும்” கடக்கக்கூடியவர் என்பதையும்கூட நாம் அறிவோம்.
கொரில்லா நாவல் வெளிவந்த காலத்திலிருந்து சோபாசக்தி ஒரு “குறிப்பிட்ட அரசியல்” நோக்கத்திற்காக உச்ச நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் என்பதையும் நாம் அறிவோம்.
பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு.
பல்வேறு நாடுகளுக்கு பயணம்.
புலிகள் “குழந்தைப் போராளிகளை” யுத்தகளத்திற்கு அனுப்புகிறார்கள் என்ற மனித உரிமை குற்றச் சாட்டை நிரூபிப்பதற்கு சோபாசக்தியின் நாவலும், சோபாசக்தியும் திறம்பட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டார்கள். சோபாசக்தியும் இந் நாடகத்தில் நடித்து சிறப்பாக அரங்கேற்றினார்.
நேற்று இரவு டான் தொலைக் காட்சியில், அவர் பேட்டி பார்த்தேன். வழமையான சோபாசக்தி. வாழ்த்துக்கள்.
சோபாசக்தியின் இப் பேட்டியை முன்வைத்து அவரிடம் சில கேள்விகள். ..
இதுவரை சோபாசக்தி, சுமார் 60 நாடுகளுக்கு பயணம் போய் இருப்பதாகவும் ,30 நாடுகளில் இரண்டு மாதத்திற்கு மேலாக தான் தங்கியுள்ளதாகவும் கூறுகின்றார். (பேட்டியில் 18 வது நிமிடத்தில்).
இப் பயணங்களுக்கான பணம் எங்கிருந்து எவரால் கொடுக்கப்பட்டது. இதன் பின்னணி என்ன?
கொரில்லா நாவலுக்கும் ,சோபாசக்திக்கும் “குழந்தைப் போராளி” என்ற ஆலோசனை வழங்கிய ,அவ் ஆயுதத்தை பயன்படுத்த தூண்டிய நபர்கள் யார்?
பிரான்சில் எவ்வித தொழிலும் அற்று அரசாங்க உதவிப் பணத்தில் வாழ்ந்த சோபாசக்தியால் எவ்வாறு இப் பயணங்களை மேற்கொள்ள முடிந்தது?.
பிரான்சில் நாள் ஒன்றிற்கு எட்டு மணித்தியாலங்கள் வேலை செய்யும் ஒரு நபரால் விடுமுறையைக்கழிக்க பக்கத்து நாட்டிற்கு செல்வதென்பதே பொருளாதார பிரச்சனையாகும்.
அப்படி இருக்க வேலை அற்ற சோபாசக்தி அறுபது நாடுகளுக்கு எப்படித்தான் பயணம் பண்ண முடிந்தது?
இதன் பின்னால் உள்ள அரசியலும், அதிகார சக்திகளும் எவை?
இவைகளே எமது கேள்விகள்.
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)
வலதுசாரிக் குழுக்கள் ஊடாக புலம்பெயர் நாடுகளில் நுளையும் இலங்கை புலனாய்வுத்துறை