Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பங்கரா இசையும் வட்டுக்கோட்டைக்கு ஆண்டுத் துவசமும் : சோளன்

Vattukkottai-Logoஆண்டுத் துவசம் எங்கட ஈழத் தமிழர்களின் வரலாற்றுச் சொத்து! அதிலும் டை கட்டிய புலம்பெயர் தமிழர்களுக்கு ஆண்டுத் துவசத்தில் அலாதி பிரியம் பாருங்கோ. குழந்தையளுக்கு சாமத்திய வீடு, வயசுகளுக்கு ஐம்பதாவது பிறந்த நாள்(ஆண்களுக்கான சாமத்தியவீடு), பங்கரா மியூசிக் போட்டு கல்யாண வீடு என்று மக்கள் தங்கள் தேசிய அடையாளத்தைக் முக்கி முக்கி வளர்த்துக்கொண்டிருக்க புலம்பெயர் அமைப்புக்கள் அந்தியேட்டி, துவசம் என்று தேசிய அடையாளத்தை மூசி மூசி வளர்க்கினம் பாருங்கோ.

திருஞான சம்பந்தர் மூன்று வயதில தேவாரம் பாடி சுப்பர் சிங்கர் ஸ்டார் ஆனாரோ என்னவோ தெரியாது ஆனல் புலம்பெயர் தமிழ் குழந்தை ஒன்றை அவர் பாடிய தேவாரம் என்ன என்டு கேட்டதற்கு பங்கரா என்று பதில் சொல்லியிருக்காம் என்று சோளனுக்குக் காதோட கதை வந்து போயிருக்குப் பாருங்கோ.

அது மாதிரி ஈழப் போராட்டம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று கேட்டால் சம்திங் (something) கோட்டையில இருந்து என்று ஒரு தமிழ்த் தேசிய குழந்தை சொன்னதாகவும் சோளன் கேட்டுப் புல்லரித்துப் போனான் பாருங்கோ. வழமையான அலசல் போட்டு ஆராய்ஞ்சால், அப்டப் பாவவமே சம்திங் கோட்டை என்றது வட்டுக்கோட்டை என்று தெரியவந்ததில்லை, சோளன் இன்டலெக்சுவல் என்று தன்னையும் நம்பி சிலோ மோசனில ஈஸ்ட்ஹாம் வீதியால ஒருக்கா நடந்து போட்டு வந்திருக்கிறான் என்றால் பாருங்கோவன்.

ஊரில அவனவன் அல்லோல கல்லோலப்படேக்க வட்டுக்கோட்டைத் தீர்மனத்தை வைத்து ஆண்டுத் துவசம் நடத்தி புலம்பெயர் நாடுகளில் சிலாவிச் சிலாவி கூட்டம் வைக்கிறதின்ற எபக்ட் தான் சம்திங் கோட்டை என்று சோளனுக்குத் தெரிய நேரமாகேல்ல. சோளன் இன்டலக்சுவேல் இல்லாட்டிலும் சும்மா டுபாகூர் என்று மட்டும் நினைச்சுப் போடாதைங்கோ.

வட்டுக்கோட்டையின்ர வழியில வந்த விக்கியும் சம்பந்தனும் சிங்கக்கொடியோட டூயட் பாடேக்க அதுக்கு துவசம் நடத்தும் புலம்பெயர் குழுக்களை எப்படிக் குறை சொல்லி மாளுறது?

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்ற நாற்பதாவது ஆண்டு நிறைவும் என்று தான் ஆண்டுத் துவசத்துக்கு பேர் வைச்சிருக்கின்னம் கண்டியளே. நாற்பது ‘ரவுண்ட் நம்பர்’ என்பதில் சோளனுக்கு ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அதுக்காக ஏன் ஆண்டுத் துவசம் செய்ய வேண்டும் என்று தான் சோளன் புட்போல் மச் பார்த்தபடியே யோசிச்சதில்லை எந்தப் பதிலும் இதுவரைக்கும் கிடைக்கேல்ல. சம்திங் ரோங்க்!

சுய நிர்ணைய உரிமை என்றால் பிரிந்து போற உரிமை என்று யாரோ காத்து வாக்கில சொன்னமாதிரி ஞாபகம். வட்டுக்கோட்டைத் தீர்மானம் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை அல்ல அது பிரிவினைக்கான கோரிக்கை என்றது மட்டும் சோளனுக்கு புட்போல் மச் முடியேக்க தான் ஞாபகம் வந்தில, சம்திங் கோட்டையை பற்றி எழுதிப் பகிர வேணும் என்றது அவசியமாகப்பட்ட காரியம் எனலாம். அவங்களிட்ட பிரிஞ்சு போற உரிமையைத் தாங்கோ, நாங்கள் போறதா சேர்ந்து வாழுறதா என்றதைத் தீர்மானிப்பம் என்று சொன்னால், கோட்டு சூட்டுப் போட்ட அரசியல் வாதிகள் கூட அவ்வளவா முறுக முடியாது. உலகத்தில நடந்த சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் எல்லம் எங்கட வட்டுக்கோட்டையளப் போல பிரிவினைக்கான ஒன்றாக இல்லாமல் இருந்ததால தான் வெற்றி கிடைச்சிருக்கு என்று சோளனுக்கு ஒரு அட்வைசர் சும்மா சொன்னது ஞாபகம் வருகுது.

அப்ப புலம்பெயருகள் ஏன் வட்டுக்கோட்டையை தோண்டி எடுத்து ஆண்டுத் துவசம் செய்யின என்றால் சும்மா ஒரு இதுக்குத் தான் என்றது பதில். அப்பப்ப ரென்ஷன் ஆகேக்க பிரசர் டப்லட்டுக்குப் பதிலா இப்படி ஆண்டுத் துவசம் அந்தியேட்டி என்று நடத்தினால் கொஞ்ச நாள் கூட வாழலாம் என்று டாக்குத்தர் சொன்னவராம். அதுவும் சென்னையில் ஸ்டார் ஹொட்டலில இருந்து சீமான், நெடுமாறன், வை.கோ போன்ற வகயறாக்களை சந்தித்துவிட்டு அப்பலோ ஆசுப்பத்திரீல தமிழ்த் தேசிய டாக்குதரைச் சந்தேக்கேக்க தான் இந்த பலான ஐடியாவே கிடைச்சிருக்குப் போல.

Exit mobile version