Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

300- கோடிச் செலவில் கிளம்பிற்று காண்! ஜால்ராக் கூட்டம் : மலர்.

சேர, சோழ, பாண்டிய, பராக்கிரம, பல்லவ மன்னர்களின் அவைகளில் ஜால்ரா அடித்து, பாட்டுப்பாடி, பல்லக்குத்தூக்கி பொற்கிளியும் பரில்களையும் வாங்கிச் சென்று வயிறு வளர்த்தது அந்தக் கால புலவர் கூட்டம். அதாவது தமிழறிஞர் கூட்டம். மக்களின் வரிப்பணத்தை எடுத்து தன்னைப் புகழ்கிற அல்லக்கைகளுக்கு வாரி வழங்கியது போக உழைப்பிற்கும் நிலத்திற்கும் தொடர்பே இல்லாத பார்ப்பனர், பார்ப்பனரல்லாத முற்போக்கு சாதிகளுக்கு வாரி வழங்கியதும் இந்த தமிழ் மன்னர்கள் செய்த வேலை.. உழைக்கும் மக்கள் நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஆண்டைகளின் வயல்களில் கூலிகளாக கைகட்டி நின்ற வரலாறு இந்த மன்னர்களிடமிருந்தே துவங்கியிருக்க வேண்டும்… 1948 –ல் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலந்து விட்டதாக காங்கிரஸ் காரன் காட்டிய படத்தில் இப்போதோ மன்னர்களுக்கெல்லாம் மன்னர்களான மக்கள் தலைவர்கள் உருவாகி விட்டார்கள். கொடநாடு, தைலாபுரம், கோபாலபுரம், பெங்களூர் பண்ணை வீடு என இந்த மக்கள் தலைவர்களுக்கு அந்தப்புரங்களும் உண்டு……… அரியாசன மண்டபங்களும் உண்டு…… நாற்காலிகள் மட்டுமே மாறியிருக்கிறது. ஜால்ரா சத்தங்கள் மட்டும் ஓயவில்லை. அன்றைக்குப் புலவர்கள் இன்றைக்கு கவிஞர்கள்……ஜாலரா சத்தங்கள் ஓயவில்லை. பரிசில்களாக அரசு நிலத்தையும் அரசு விருதுகளையும் எடுத்து இந்த எலும்புத் துண்டுகளாகப் போடுகிறார்கள் மக்களாட்சி மன்னர்கள்.. ஒருவர் குறைப்பதைப் போல இன்னொருவன் குறைக்க முடியாது.வைரமுத்துவைப் போல எப்படி வாலி குறைக்க முடியும். முத்துக்குமாரைப் போல எப்படி விவேகா குறைக்க முடியும்………ஆக வித்தியாசமாக குறைக்க வேண்டும்…..இந்த வித்தியாசம் கூடக் கூட பரிசில்களும் வேறுபடும்……இப்படி சில உபயோகமான வெளிநாட்டு தமிழறிஞர்களைத் தவிற நான்கு நாட்களாக போட்டி போட்டு வயது வித்தியாசம் இல்லாமல் குறைத்து ஓய்ந்திருக்கிறார்கள்…………..கவிஞர்களும், தமிழறிஞர்களும்….ஆய்வாளர்களும்……மாநாட்டுச் செய்திகளை கேள்விப்படும் போது குறைத்தல் என்ற சொல் மட்டுமே இவர்களுக்குப் பொறுத்தமாக இருக்கும் என்பதால் அச்சொல்லை இங்கு பயன்படுத்துவதை முழுக்க சரியென்ற நினைக்கிறேன்.

கருணாநிதியின் குடும்ப மாநாடு

வா.மு.சேதுராமன் என்ற தமிழறிஞர். இவர் தமிழறிஞரா? என்று தெரியவில்லை.. பட்டுச் சேலை சலசலக்க, தலை நிறைய மல்லிகைப் பூச்சூடி, மகன், மகள், பேரன், பேத்தி,கொள்ளுப்பேரன், பேத்தி என சுமார் 100 கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அரங்கை ஆக்ரமித்துக் கொண்டதாக எல்லா நண்பர்களும் சொன்னார்கள். இந்த உறுப்பினர்கள் வரும் போதும் போகும் போதும் கரைவேட்டிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்த அதுவே தமிழறிஞர்களுக்கு முகச் சுழிப்பாக இருந்ததாம். அது போல மேடையைப் பகிருந்து கொள்வதிலும் கருணாநிதி குடும்பத்தினரிடையே கடும் போட்டியாம். அழகிரிக்கும் ஸ்டானிக்கும் இடையே சேர் பிடிப்பதில் கூட போட்டி என்றால் ஒரு நல்ல விருந்துக்காக நாம் காத்திருக்கலாம். அது எப்போது நடக்கும் என்றுதான் தெரியவில்லை. கவிஞர்களும், தமிழறிஞர்களும் கருணாநிதியைக் கடந்து இந்த குடும்ப உறுப்பினர்களை கவர் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார்கள். ஆமாம் நாளை தங்களுக்கில்லா விட்டாலும் தங்களின் பிள்ளைகளுக்கு இந்த வாரிசுகள்தானே வாரி வழங்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம்மகன் அழகிரி மாநாட்டின் மையம், அழகிரி ஸ்டால் திறப்பாளர், கனிமொழிக்குப் பொறுப்பு, பேத்தியின் வீணை இசை, என மக்கள் வரிப்பணத்தில் நடத்திய செம்மொழி மாநாட்டிலும் குடும்ப ஆதிக்கம்தான்.

ஜால்ரா சத்தம்

அரசியல் வாடையற்ற செம்மொழி மாநாடு என்று மாநாடு முடிந்த பின் கருணாநிதி சொன்னார். ஆனால் மேடையில் பேசிய அல்லக்கைகள் அனைவருமே ஜெயலலிதாவையும் ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் தாக்கிப் பேசினார்கள். தமிழுக்காக போராடி சிறை சென்ற வழக்கறிஞர்களைக் கொச்சைப்படுத்திப் பேசினார் கி.வீரமணி. பசையுள்ள இடத்தில் ஒட்டுக் கொள்ளும் இவர்தான் முன்னர் ஜெயலலிதாவுக்கு சமூக நீதிகாத்த வீரங்கனை பட்டம் கொடுத்தவர் என்பது நமக்கு மறந்தாலும் கருணாநிதிக்கு மறக்காது என்று நம்புவோம். ஆனால் அரசியல்வாதிகளின் ஜால்ராக்களையே மிஞ்சி விட்டார்கள் கவிஞர்கள்…….கவிஞர் இளம்பிறை செம்மொழி மாநாட்டைக் கண்டித்து ஒரு கவிதை எழுதியிருந்தார். ஆனால் அதே இளம்பிறை செம்மொழி மாநாட்டில் வாய்ப்புக் கிடைத்த உடன் ஓடிப்போய் கவிதை வாசித்தார். ஈழப் படுகொலைகளின் போது கருணாநிதி நடந்து கொண்ட விதத்தைச் சுட்டிக்காட்டி பல பெண் கவிஞர்கள் செம்மொழி மாநாட்க்கு வரமாட்டோம் என்று தெரிவிக்க காலியான அந்த இடத்தை வைகைச் செல்வி போன்ற கனிமொழியின் ஜால்ராக்களும், ப்ரசன்னா ராமசாமி, ரோகிணி, போன்ற பார்ப்பனர்களும் பிடித்துக் கொண்டார்கள். முற்போக்கு நாடகவியளாராக கருதப்படும் மங்கை, அவரின் நாடக குழுவில் உள்ள முன்னாள் புரட்சிக் கவிஞரான இன்குலாப் கூட செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் பெற்றுக் கொண்ட பணத்திற்காக ஓடோடிச் சென்றார்கள். ஆக புறக்கணிக்கிற இடங்களை கைப்பற்றுகிற தந்திரங்களை இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஈழப் படுகொலைகளின் போது கருணாநிதியைக் கண்டித்து தமிழக அரசின் கலைமாமணி விருதை திருப்பி அளித்த இன்குலாப்பிற்கு அதே கைமாறை கருணாநிதி மீண்டும் செய்யக்கூடும்.

ஒரு கவிஞர் பிராந்தி பாட்டிலை மட்டுமே தெரிந்த எங்களுக்கு பிரதீபா பாட்டீலை காட்டியவன் நீ என்று புகழ ஒரு கட்டத்தில் ஒருவர் புகழ்வதை விட எப்படி சிறப்பாய் புகழ முடியும் என்பதில் போட்டி செம்ம்மொழித் தங்கமே, சிங்கமே, மனக்குகையே என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த புக்ழ் ஒலிகளைக் கேட்டு அய்யயோ நாம் இவனுங்களே இப்படி எல்லாம் புழந்து விட்டால் நாம் எப்படித்தான் புகழ்றது. இதை எல்லாம் மிஞ்சுகிற வகையில் புகழ்ந்தால் தானே வஃக்பு வாரியப் பதவி பறி போகாமல் இருக்கும்என்ற பதட்டத்தில் யோசித்து யோசித்து மாய்ந்ததில் அப்துல்ரகுமானுக்கு நெஞ்சுவலியே வந்து விட்டது. அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சுயநலனுக்காக நக்கிப் பிழைக்கும் இவர்கள் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதை கவிஞர்கள் பழநிபாரதி, முத்துக்குமார், நெல்லை ஜெயந்தா, வாலி, வைரமுத்து எல்லோரும் நிகழ்த்திக்காட்டினார்கள். நாளையே இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் வேண்டாம் தரையில் மண்ணைக் கொட்டுகிறேன் அதை உங்களால் நக்கித் துடையுங்கள் ஆனால் அப்படி நக்குகிறவர்களுக்கு விருதும் பரிசு உண்டு. சிறப்பாக நக்குகிறவர்களுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் கொடுப்பேன் என்று கருணாநிதி அறிவித்தா என்று வையுங்கள். அப்போதும் கூச்ச நாச்சமின்றி நக்கிப் பிழைப்பார்கள் இவர்கள்.

மாநாட்டுத் தீர்மானங்கள்

 

நான்கு நாள் கூத்தை முடித்து செம்மொழி நாயகன் கருணாநிதி பத்து தீர்மானங்களை வரிசையாக வாசித்தார். அத்தனையும் நீண்டகாலமாக தமிழார்வலர்களால் வைக்கப்பட்ட கோரிக்கைகள். 300 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் கோரிக்கைகளை வாசித்தார். கருணாநிதியின் மத்திய அரசுடனான அணுகுமுறையை மூன்றாகப் பிரிக்கலாம். தனது வாரிசுகளுக்குப் பதவி வேண்டும் என்றால் தள்ளுவண்டியிலேயே டில்லி நேரடியாகவே சென்று விடுவார். எவ்வித மரியாதை இல்லை என்றாலும் சொக்கத் தங்கம் சோனியாவின் வீட்டு வாசலில் காவல் கிடந்தாவது பதவியைப் பெறுவார். பெரும் மனிதப் படுகொலையில் போது மக்களைக் காப்பாற்ற போர் நிறுத்தம் கோரினால் அதற்காக கடிதம் எழுதுவார். மீண்டும் கேட்டால் கடிதம் எழுதுவார்……….கொஞ்சம் முக்கியமான பிரச்சனை என்றால் அமைச்சர்களை அனுப்பி வைப்பார். ஆக தமிழ் மொழிக்காக செம்மொழி மாநாட்டில் போட்ட தீர்மானங்கள் எல்லாம் கடிதங்களாகவே எழுதியிருக்க முடியும். வெறும் மூன்றே ரூபாயில் முடியும் விஷயத்துக்கு 300 கோடி செலவு செய்து கடைசியில் வெற்றுத் தனமான தீர்மானங்களைப் போட்டு அதை மத்திய அரசிடம் அனுப்பி…………..என்ன நடக்கும்……………..ஆக உங்கள் அரசியல் வாழ்வில் எத்தனை தீர்மானங்களைப் போட்டிருக்கிறீர். உமது அரசியல் வரலாற்றில் தமிழுக்கோ தமிழர்களுக்கோ நீர் என்ன செய்தீர்……..இரயில் ஓடாத தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததும் பாளையங்கோட்டை சிறையில் இருந்ததும்தான் சாதனையா? அல்லது கோவையில் அரசியல் சட்டத்தை எதிர்த்த மாணவர்களைக் காட்டுக் கொடுத்ததும். ஜெகன் குட்டிமணி தங்கதுரையைப் பிடித்து இலங்கை அரசிடம் ஒப்படைத்ததும்தான் சாதனையா? ஆக எதையுமே செய்யவில்லை கருணாநிதி.. ஆனால் மாநாடு பெரிய வெற்றி பெற்று விட்டதாக பீற்றிக் கொள்கிறார் கருணாநிதி. அரசு விளம்பரத்தின் மூலமும், அவர் கொடுக்கும் விளம்பரத்தின் மூலமும் பெரும் வருவாயை ஈட்டும் ஊடகங்கள்தான் மாநாடு பெரிய வெற்றி பெற்று விட்டதாக பீற்றிக் கொள்கிறார்கள். இந்த வெற்றுக் கூச்சல்களைத் தவிற இதில் தமிழுக்கோ தமிழகளுக்கோ என்ன இருக்கிறது?

 

நான் அறிந்த நவீன தமிழறிஞர்களளும் நவீன வரலாற்று ஆய்வாளர்களும்மான தொ,பரமசிவன், பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன், வெங்கடசலபதி ஆகியோர் இநத மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லையாம். அது போல திராவிட இயக்க அரசியல் விமர்சகளுக்குக் கூட அழைப்பில்லை. கருணாநிதியை விட தமிழுக்கு அதிகமாகத் தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளாரை நினைவில் கூட இல்லாமல் அழிக்கும் முயர்ச்சிகளும் நடந்திருக்கிறது. சிவத்தம்பியைக் கூட தமிழறிஞர் என்பதால் அழைக்கவில்லை. இனக்கொலை தேசத்தில் இருந்து வந்து அவர் கொடுக்கப் போகும் சான்றிதழுக்குத்தான் மரியாதையே தவிற சிவத்தம்பிக்கில்லை. ஆக மொத்தம் ஒரு இலட்சம் மக்கள் கொல்லப்பட்ட ஈழப் படுகொலை நினைவுகளை அழித்து தமிழர்கள் தலை நிமிருந்து நிற்பது போன்ற தோற்றத்தை 300 கோடி ரூபாயில் உருவாக்க முயன்றிருக்கிறார் கருணாநிதி. ஆனால் 300 கோடி அல்ல 3000 கோடி ரூபாய் செலவு செய்தாலும் ஈழத்தமிழர்கள் தொடர்பாக கருணாநிதி நிகழ்த்திய தூரோக நாடகங்களை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கவும் போவதில்லை, மன்னிக்கவும் போவதில்லை. விலை கொடுப்பதல்ல பிரச்சனை உங்களை வீழ்த்துவதே….உலகத் தமிழர்களின் ஒப்பற்ற துரோகி யார் எனக் கேட்டால் முள்ளிவாய்க்கால் நினைவிருக்கும் வரைச் சொல்வோம் கருணாநிதி என்று.

Exit mobile version