2012 இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பும் நடைபெற்ற நாடுகளின் பட்டியல் விரிவடந்துள்ளது. இப் படுகொலைகளை நடத்தும் உள்ளூர் அரசுகளின் பின்புலத்தில் பல்தேசிய நலன்கள் உள்ளடங்கியிருப்பதைக் காணலாம். பொதுவாக ஐரோப்பிய அமரிக்க பல்தேசிய நிறுவனங்கள் இனச் சுத்திகரிப்பினதும் இனப்படுகொலையினதும் பின்புலத்தில் செயற்படுகின்றன.
பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்கான அரசுகள் இனப்படுகொலையை நடத்தும் அதே வேளை இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களையும் அவர்களே கையகப்படுத்திக்கொண்டனர்.எதிப்புப் போராட்டங்களை அவர்களே இறுதியில் வலுவற்றதாக மாற்றிவிட்டனர்.
இலங்கையில் தமிழர்கள், மியான்மாரில் முஸ்லீம்கள், எதியோப்பியாவில் ஒராமோ, ஒகாடெனி, அனுயக் இனக் குழுக்கள், துருக்கியில் குர்தீஷ் இன மக்கள் 2012 இல் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட பிரதான இனக்குழுக்களாகக் கருதப்படுகின்றன. தவிர, ஐரோப்பாவில் ரோமா நாடோடி இனக்குழுக்கள் மீதான இனப்படுகொலையும் பேசப்படத்தக்கவகையில் அமைந்தது.
தென்னாபிரிக்காவில் போரெஸ் இனக்குழுவும், கஷ்மீரிலும், நாகாலாந்திலும், இந்தியாவில் பழங்குடி மக்களும் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.
இங்கெல்லாம் பொதுவான் சில பண்புகளைக் காணலாம்:
1. இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்டவர்களின் நிறுவனங்களே இனப்படுகொலைக்கு எதிரான மனித உரிமை குறித்துப் பேசினர்.
2. இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் இனக் குழுக்கள் இதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் பிழைப்பு வாதத் தலைமைகளல் கையாளப்பட்டனர்
3. இனப்படுகொலை அரசுகளோடு அழிந்து போகும் குழுக்களின் தலைவர்கள் ஒட்டிக்கொண்டனர்
4. இனப்படுகொலைக்கான மூல கானணங்களை விடுத்து குறிகிய அடையாளங்களை முன்நிறுத்தி அழித்தவர்களுடனேயே இணைந்துகொள்ளல்.
இந்தப் படுகொலைகளுக்கு எதிரான உறுதியான எதிர்ப்புப் போராட்டங்கள் இந்திய பழங்குடி மக்கள் மத்தியிலும், நாகாலாந்திலும், கஷ்மீரிகள் மத்தியிலிருந்துமே நடத்தப்பட்டன.
குர்தீஷ் தொழிலாளர் கட்சி அரசைப் பயமுறுத்தும் அளவிற்கு பலமடைந்துள்ளதால் இனப்படுகொலையின் கோரம் தணிந்திருந்தது.
பலஸ்தீனியர்களின் மீதான இனப்படுகொலை எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் தீவிரமடைந்தது.
எத்தியோப்பியாவிலும், தென்னாபிரிக்காவிலும் எதிப்புப் போராட்டங்கள் வலுவிழந்து போயின. இலங்கையிலும் பர்மாவிலும் எதிர்புக்கள் எதுவும் இன்றி இனப்படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டன.
இந்த அனைத்து நாடுகளிலும் அரசியல் சூழலை திட்டமிட்டுக் கையாள்வதன் ஊடாக 2013 இலும் இனப்படுகொலை தடையின்றித் தொடரும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2013 ஆம் ஆண்டில் இனப்படுகொலை கிழக்கு கொங்கோவிலும், ருவாண்டாவிலும், பிரேசிலின் அமசோன் நதிப்படுக்கைப் பகுதியிலும் எதிர்ப்புகள் இன்றி ஆரம்பிக்கபடும் என எதிர்வு கூறப்படுகின்றது.
தெற்காசியாவில் போரின் கோரத்தில் சிக்குண்டு சுரண்டப்படாமல் காணப்பட்ட இலங்கையில் வளங்கள் சுரண்டப்படுவதற்கு இனப்படுகொலை வழிவிடுக்கொடுத்திருக்கிறது.
கலாச்சார உலகமயமாக்கலின் தெற்காசிய முகமாகத் திகழும் இலங்கையை ஐரோப்பிய நாடுகளதும், இந்திய நுகரும் மேட்டுக்குடி வர்க்கப்பகுதியினரதும் சுற்றுலா மையமாக்குவதற்கான முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கையைச் சிறந்த சுற்றுலா மையமாக அறிவித்துள்ளது. பிரஞ்சுத் தொலைக்காட்சி இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி என்றும் அங்கு சுற்றுலாப் பயணிகளால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு போராளிகளுக்குப் புனர்வாழ்வு கொடுக்கப்படுகிறது என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்கின்ற அளவிற்கு விரிவடைந்துள்ளது.
மில்லியன்களை முதலீடு செய்திருக்கும் பல்தேசிய நிறுவனங்களின் தேவைக்கேற்ப இந்தப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னும் சில வருடங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் அடையாளம் அழிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மறு புறத்தில் தெற்காசியாவின் பாங்கொக் போன்ற சுற்றுலா மையமாக இலங்கை மாற்றமடையும் நிலை உருவாகிகொண்டிருக்கிறது. இதற்காகவே பெண்களைப் பாலியல் அடிமைகளாக மாற்றும் வேலைத்திட்டங்களை உள்ளூர் அரசு மேற்கொள்கிறது.
தமிழீழ புலிகள் அழிக்கப்படுவதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்ட இந்த முதலீடுகள், இன்று வெளிப்படையாக பல்தேசிய நிறுவனங்களுக்குப் பலன் வழங்க ஆரம்பித்துள்ளன.
பல்தேசிய நிறுவனனங்களின் திட்டங்களுக்கு உடனடி எதிர்ப்பாக அமையவல்ல இனக் குழுக்களையும் தேசிய இனங்களையும் பலவீனப்படுத்துவதும், சில வேளைகளில் அவற்றை முற்றாக அழிப்பதும் உள்ளூர் மற்றும் ஏகபோக அரசுகளின் தேவையாகின்றது.
பொதுவாக அழிக்கப்படும் எல்லா நாடுகளிலும் ஒரே வகயான வகை மாதிரியே பின்பற்றப்படுகின்றது. பெரும்பான்மை அடையாளத்திற்கு எதிரான தேசியக் குழுக்கள் அழிக்கப்படுகின்றன.
பல் தேசிய நிறுவனங்களுக்கு வியாபாரச் சேவை செய்யும் அனைத்து உள்ளூர் அரசுகளுக்கும் அவற்றின் கொள்கைவகுப்பாளர்களுக்கும், முழுமையாகத் தெரிந்தே இவை நடைபெறுகின்றன.
இந்தியாவில் பல்தேசிய நிறுவனங்களின் இந்தத் திட்டத்தை அறிந்து வைத்திருந்த மாவோயிஸ்டுக்கள் அரசிற்கு எதிராகத் உறுதியான போராட்டத்தை நடத்துகின்றனர். இலங்கையில் தவறக வழிநடத்தப்பட்ட போராட்டம் மிகப்பெரும் அழிவை விட்டுச் சென்றிருக்கின்றது. இன்று சுயநிர்ணய உரிமை என்பதே இனவாதம் என்ற கருத்து சாதரண மக்கள் வரை பரப்பபடுகிறது. அதற்குரிய அரசியல் இயக்கங்கள் அதன் ஆரம்ப நிலை உறுப்பினர்களுக்கே தெரியாமல்ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு நகர்த்தப்படுகின்றது.
இவ்வாறான புறச் சூழல் ஒன்றில் தேசிய இன அடையாளம் அழிக்கப்பட்டு தெற்காசியாவின் பாங்கொக்காக இலங்கையை மாற்றும் பல்தேசிய சதியை எதிர்கொள்ளும் அரசியல் திட்டம் இன்னும் முன்வைக்கப்ப்டவில்லை. ஆங்காங்கு முன்வைக்கப்பட்ட சில குறிப்பான நடவடிக்கைகள் கூட திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டன.
2013 இல் பின்வரும் நிகழ்வுகள் அதிக சாத்தியமானவையாகத் தென்படுகின்றன:
1.நேட்டோ நாடுகள் வளங்களைச் சுரண்டுவதற்கா ஈரான், சிரியா போன்ற நாடுகள் மீதான இராணுவத் தாக்குதல்களைத் தொடுக்கும். மத்திய கிழக்கில் நேட்டோ மேலும் அதிகமாகப் போர் நடவடிக்கைகளைக் கட்ட்விழ்த்துவிடும்.
2.எத்தியோப்பியாவில் இன மோதல்களை அதிகரிக்க ஆயுதங்களை வழங்கும்.
3. பலஸ்தீனத்தில் இனப்படுகொலை அதி வேகத்தில் நடைபெறும்.
4. ரோமா இனத்தவர் மீதான இனச் சுத்திகரிப்பைக் கணக்கில் கொள்ளாத ஐரோப்பிய நாடுகள் திருப்பியனுப்பும் படலத்தைத் தொடரும்.
5. புதிய தொழில் நுட்பத்தேவைக்கான கனிமங்களைச் சுரண்டுவதற்காக கொங்கோவில் இனப்படுகொலையையும் இன மோதல்களையும் அமரிக்க ஐரோப்பிய நாடுகள் அதிகரிக்கும்.
6.கஷ்மீரில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள்.
7. மத்திய இந்தியாவிலும் தண்டக்காரண்யா காடுகளிலும் மக்களின் போராட்டம் மாவோயிஸ்டுக்கள் தலைமையில் வலுப்பெறும்.
9. இலங்கையில் தமிழர்களின் ஒத்துழைப்போடு பேரினவாத அரசாங்கம் பல்தேசிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும். ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு அழித்துவரும் இனக் குழுக்கள் வரிசையில் தமிழர்கள் பிரதானமானவர்களாக இருப்பார்கள்.
கீழ் வரும் இனக்குழுக்கள் அழிவுகளைச் சந்திக்கும்:
1. ஏகாதிபத்திய அரசுகளோடு சமரசம் செய்து கொண்டு பேரம் பேச முனைபவர்கள்.
2. போராடும் குழுக்களோடு தம்மை இணைத்துக்கொள்ள முயலாதவர்கள்.
3. தயவு தாட்சண்யமற்ற விமர்சனம் சுய விமர்சனம் அடிப்படையில் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.
4. போராடும் வர்க்கங்களை இனம்கண்டு பலப்படுத்தாதவர்கள்.
5. வர்க்கம் சார் அரசியல் இயக்கத்தை நிராகரிப்பவர்கள்
பரிதாபகரமான இந்த சூழலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளத் தயாரற்ற நிலையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தை அதன் சந்தர்ப்பவாதத் தலைமைகள் வழி நடத்திக்கொண்டிருக்கின்றன.