இன்று மனித உரிமை அமைப்புகள் தொழில் நிறுவனங்களாக புற்றீசல் போல் முளைத்து உள்ள நிலையில், மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளின் அடிப்படையில் தனது வாழ்க்கையை மேலே உயர்த்திக் கொள்ளும் பிழைப்புவாதச் சூழல் உள்ள நிலையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர். பாலகோபால் 58 வயதில் அகால மரணமடைநி்தது கடும் பாதிப்பு ஆகும்.
அவர் ஆந்நி்திரப் பிரதேசத்தைச் சேர்நி்தவராக இருநி்தாலும் இந்நி்தியாவிற்கே ஏன் உலகத்திற்கே கூட அவருடைய மரணம் பெரிய இழப்பு தான்.
இன்று இந்நி்தியா எங்கும் சிவில் உரிமைகளும் மனித உரிமைகளும் ஜனநயக உரிமைகளும் காலில் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவரது இல்லாமை மேலும் பெரிய பாதிப்பு தான்.
யாருடைய சிவில், மனித, ஜனநaயக உரிமைகளுக்காகப் போராடினாரோ அவர்களைப் போலவே எளிய மனிதராக அப்பழுக்கற்ற மனிதராகவே வாழ்நி்தவர். மனித உரிமை பேசுபவர்கள் காரில் சுற்றிக் கொண்டு பங்களாவில் வாழ்நி்து கொண்டு இருக்கும் இநி்தியச் சூழலில் இதையெல்லாம் விரும்பாதவராக வாழ்ந்நி்தவர் அவர்.
ஆடம்பர பிழைப்புக்கு பாதிப்பு இல்லாமல் மனித உரிமை பேசுவதே ஆகிவிட்ட சூழலில் மனித உரிமை செயற்பாடுகளுக்காகவே ஆந்திராவில் உள்ள காகதீய பல்கலைக்கழகக் கணித பேராசிரியர் வேலையை 20ஆண்டுகளுக்கு முன்பேயே உதறிவிட்டு களத்தில் இறங்கியவர். வெறும் கணக்குகளை சொல்லிக்கொடுத்த. கணிதப் பேராசிரியர் அல்ல; கணித அறிவியலாளர் என்றே அவரைச் சொல்லாம்.
தரையில் படுத்து உறங்குவதையோ கடும் வெயிலில் அலைவதையோ கண்டு “அய்யய்யோ’ என்று அலறாமல் மனித உரிமைச் செயற்பாடுகளை ஒரு பொறுப்புணர்வோடு எடுத்துச் செயற்பட்டவர்.
ஒரு பெரிய அரசியல் கட்சியின் பலமான இளைஞர் அமைப்பின் வேகமான செயற்பாட்டை உடைய வகையில் ஆநி்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டியை 10-15 ஆண்டு காலம் கட்டியமைத்தவர்.
மக்களால் தேர்நி்தெடுக்கப்படாத அரசியல் நிர்ணய சபையானது பிரிட்டிஷ் அரசயில் சாசனத்திலிருநி்து இங்கொன்றும் அங்கொன்றுமாக பொறுக்கியெடுத்து உருவாக்கிய இந்நி்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகள் இந்தியாவின் எதார்த்தமாக உள்ள நிலவுடைமை பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு கட்டமைப்பில் செயற்படுத்தப்பட முடியாத முரணை எடுத்துச் சொல்லியமை சிவில் மற்றும் ஜனநயக உரிமை இயக்கத்திற்கான அவரது கோட்பாட்டு பங்களிப்பாக கொள்ளலாம்.
எந்தவொரு நிகழ்வையும் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே இந்திய ஆளும் வர்க்கம் பார்க்கும் நிலையில் இதற்கு ஒத்து ஊதுகின்ற வகையில் ஊடகங்களும் செயற்படுகின்ற நிலையில், பரந்துபட்ட அளவில் நடுத்தர மக்களின் ஒப்புதலை குறிப்பிட்ட அளவில் பெறப்பட்டுவிட்ட நிலையில், பாலகோபால் அதற்கு neர்மாறான வகையில், ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் மாற்றத்தின் பின்னாலும் உள்ள அரசியல், சக, பொருளாதார காரணங்களை வெளிக் கொணர்நி்தவர் ஆவார்.
மேலும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பரநதுபட்ட அளவில் நம்பகத்தன்மை பெறும் வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கும் அவர் பங்களித்து இருக்கிறார்.
ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும்பொழுது எல்லா அம்சங்களையும் பார்ப்பது; தான் சார்நதுள்ள கட்சி / அமைப்பு நிலைபாட்டிலிருநி்தோ கருத்தியலிலிருநி்தோ மட்டும் பார்க்காமல் புறவயமாக பார்ப்பது; ஆனால் பிரச்சனைக்கான வேர்களை பொருளாதார, அரசியல், சக, பண்பாட்டு தளங்களில் பார்க்க வேண்டும் எனவும் உண்மை அறியும் குழுவின் அறிக்கையையும் அவ்வாறே தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தி அதன்படியே செய்தும் காட்டினார்.
மேலும், அவர் மனித உரிமைச் செயற்பாட்டுடன் மட்டுமே குறுக்கிக் கொள்ளாமல் மார்க்சியம், கிழக்கு ஐரோப்பிய மாற்றங்கள், ஜனநயகம் குறித்த சிக்கல், பழங்குடிச் சிக்கல், பொருளியல், போன்றவற்றை பற்றியும் கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியுள்ளார். உரைகளையும் ஆற்றியுள்ளார்.
இந்நி்தியா முழுவதும் உண்மை அறியும் குழுவின் அங்கமாகவும் தலைமையேற்றும் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டிலோ 1988, 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் மக்கள் யுத்தக் கட்சியின் மீதான அரசு அடக்குமுறையை ஒட்டி உண்மை அறியும் குழுக்களை வழி நடத்திச் சென்றார்.
சென்ற ஜூலையில் பெங்களூருவில் நடைபெற்ற ஈழச் சிக்கல் தொடர்பான கலந்நி்துரையாடலில் பேசும்பொழுது இச்சிக்கலில் தான் தேவையான அளவிற்கு செயலாற்றி மக்களின் உயிரிழப்பை தடுக்க முடியாததற்கு குற்றவுணர்ச்சியுடன் இருப்பதாக வெளிப்படையாகவே சுயவிமர்சனம் செய்து கொண்டார்.
மேலும், சென்ற ஜூலை 4 அன்று “”இலங்கையில் போரை நிறுத்தி ஜனநaயகத்தை நிலை நாட்டுவதற்கான பிரச்சாரக் குழு” சார்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட 13ஆம் சட்டத் திருநி்தமானது இநி்திய அரசியல் சாசனத்தின் மோசமான பிரதியே என்றார்.
இவ்வாறு வீச்சோடு செயற்பட்டதால் தடாவில் சிறையில் அடைக்கப்பட்டார். போலீசால் கடத்திச் செல்லப்பட்டார். 1985ல் ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கமிட்டியின் நிர்வாகியாக இருநி்த மருத்துவர் இராமநாதம் என்பவரை சுட்டுக் கொன்று இவரைப் போன்றவர்களை அச்சட்ட முடியும் என்று ஆளும் வர்க்கம் அவ்வாறு செய்தது. ஆனாலும் டாக்டர் பாலகோபால் அதற்கெல்லாம் அசராமல் முன்னிலும் பலமடங்கு வீச்சுடன் செயற்பட்டார்.
மனித உரிமை அமைப்புகள் போலீஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் பற்றி வகுப்புகளை நடத்தி அவர்களுடன் கூடிக் குலவிக் கொண்டிருக்கும் கேவலமான சூழலில் டாக்டர் பாலகோபாலோ போலீசின் கடும் எதிர்ப்பிற்கு ஆளாகி மேலே பார்த்தவாறு பாதிக்கப்பட்டார்.
இநி்தியாவில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளாலும் தலித் அமைப்புகளாலும் பழங்குடி அமைப்புகளாலும் மதிக்கப்படக்கூடிய பாலகோபாலின் நிலைபாடுகளின் மீது மாறுபாடுகளை கொண்டிருநி்தாலும் அவரது செயற்பாட்டு வீரியத்தின் மீதும் நேர்மையின் மீதும் அளவற்ற மதிப்பை கொண்டிருநி்தன. 1998 வாக்கில் அரசு சாரா வன்முறை பற்றி அவர் மேற்கொண்ட நிலைபாட்டில் மக்கள் யுத்தக் கட்சியை சேர்நி்தோருக்கு மாறுபட்ட நிலைபாடு இருநி்தாலும் அப்பொழுது நடந்நி்த ஆந்திரப் பிரதேச சிவில் உரிமை கமிட்டியின் மாநாட்டில் அது குறித்து பல மணி நேரம் விவாதம் நடந்து அவரது நிலைபாட்டை தீர்மான வடிவில் தோற்கடித்தாலும் அவரையே அநி்த சிவில் உரிமை அமைப்பின் செயலராக தேர்நி்தெடுத்தார்கள்.
இத்தகைய பாலகோபால் உலக மனித உரிமை இயக்க வரலாற்றில் யாரும் மறக்க முடியாத இடத்தைப் பெற்று மறைநி்துவிட்டார். இனி அவரைப் போல செயலாற்ற முனைவோர் அவர் செய்த அளவிற்கு கஷ்டப்பட்டு செய்துதான் அதைத் தாண்ட முடியும். அவ்வாறு முனைவோர் இன்றைய அரசு பயங்கரவாதச் சூழலில் உயிரோடு இருக்க முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறி ஆகும். இதிலிருநி்து பார்த்தால் அவரது மரணம் எவ்வளவு பெரிய இழப்பு என்பது புரியும்.