Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விச வாயுவை இந்தியப் பழங்குடி மக்கள் மீது பயன்படுத்த பிரித்தானிய அரசு

weaponsofmassஇந்தியாவில் இந்திய அரசின் படுகொலைகளையும் கடந்து தமது வாழ்வுரிமைக்காகப் போராடுவது பழங்குடி மக்களே. அமரிக்காவையும் இந்தியாவையும் கூட்டிவந்து விடுதலை பெற்றுத் தருகிறோம் என்று பழபழப்பான ‘திருவோட்டோடு’ தெருத்தெருவாக ஈழத் தமிழ் தலைமைகள் அலையும் போது உலகின் மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்திய அரசிற்கு எதிராக தண்டக்காரண்யா காடுகளில் வீரத்துடன் போராடுகிறார்கள் பழங்குடி மக்கள். பிரித்தானியா இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இப் பழங்குடி மக்களை விச வாயு கொடுத்து அழிப்பதற்குத் தீர்மானித்திருந்த அளவிற்குஅவர்களின் போராட்டம் பிரித்தானியாவை அச்சுறுத்தியது.

‘இந்தியாவில் தென் வட முனைகளில் பழங்குடி மக்களை அழிப்பதற்கு விச வாயுவைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் மிகவும் தொந்தரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். விச வாயுவைப் பயன்படுத்தி அழித்துவிடுவோம்’ என்று இந்தியவில் வேலைபார்த பிரித்தானிய அதிகாரிகளுக்கு சேர்ச்சில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதே கடிதத்தில் மற்றொரு இடத்தில் ‘உண்மையில் விச வாயு பயன்படுத்துவதில் என்ன அருவருப்பு இருக்கிறதோ எனக்குத் தெரியவில்லை’ என்று குறிப்பிடுகிறார்.

இக்கருத்துக்களைத் தெரிவித்த வேளையில் வின்ஸ்டன் சேர்ச்சில் அரசியலில் செல்வாக்குள்ளவரக இருந்த போதும் பிரித்தானியாவின் பிரதமராக இருக்கவில்லை. போருக்கும் விமானப் படைக்குமான அரச செயலராகப் பதவி வகித்தார்.  இந்த உண்மையை பிரித்தனிய வரலாற்றாசிசிரியரான கைல்ஸ் மிலிட்டன் தெரிவித்துள்ளார்.

தவிர சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசப் போராளிகளான போல்ஸ்விக்குக்களுக்கு எதிராக பாரிய அளவில் விச வாயுவைப் பயன்படுத்துவதற்கு சேர்ச்சில் அனுமதி வழங்கியிருந்தார் என அவர் மேலும் தனது நூலில் ஆதரங்களுடன் தெரிவித்துள்ளார். விக்டன் நுல் வெளியீட்டு விழாவில் “Russian Roulette,” தனது என்ற நூலை வெளியிடும் போதே கைல்ஸ் மிலிட்டன் இத்தகவல்களைத் தெரிவித்தார். அவ்வேளையில் பிரித்தானியாவின் எதிர்காலப் பிரதமராகக் கருதப்பட்ட சேர்ச்சில் அரச த். உறைச் செயலராகவிருந்தார்

பிரித்தானிய அரசு என் டிவைஸ் என்ற பெயர் கொண்ட இரசாயன ஆயுதத்தைத் இரகசியமாகத் தயாரித்திருந்தது. ஒரு ஷெல் பொன்ற வடிவமைப்புக் கொண்ட இந்தக் கருவியின் நுனியில் விச வாயு இணைக்கப்பட்டிருந்தது. போட்டன் என்ற ஆய்வு கூடத்திலேயே இப் பயங்கர ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. அவ்வேளையில் ஆயுதத் தொழிற்சாலைக்குப் பொறுப்பாகவிருந்தவர் மிகவும் அதிக அழிவு தரக்கூடிய பேரழிவு ஆயுதம் இது எனத் தெரிவித்திருந்தார்.

சேர்ச்சில் ரஷ்யாவில் கம்யூனிசப் போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே இந்த ஆயுதங்களைத் தயாரிக்க உத்தரவிட்டிருந்தார்.

மாஸ்கோவில் போல்ஸ்விக்குகளின் வெற்றியின் பின்

1918 ஆம் ஆண்டு ஓகஸ்ட் செப்டெம்பர் மாதமளவில் விமானங்களூடாக இந்த ஆயுதங்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வடக்கு ரஷ்யாவில் போல்ஸ்விக்குகளால் விடுதலை செய்யப்பட்டிருந்த கிராமங்கள் மீது வீசப்பட்டன.
முதலாளித்துவப் பயங்கரவாத அரசுகள் மக்களுக்காகப் போராடிய பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்தை நிறுவ முற்பட்ட கம்யூனிசப் போராளிகள் மீது விச வாயுத் தாக்குதல்களை நடத்திய மறு புறத்தில் கம்யூனிசத்தை அழிப்பதற்கு உலகம் முழுவதும் அவதூறுப் பிரச்சாரங்களைத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட்டனர்.

இவ்வாறு மக்கள் போராட்டங்களதும் மக்களின் ஜனநாயகதிற்கும் வித்திட்டவர்களின் பயங்கரவாதம் இன்று வரை தொடர்கிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் போல்ஷ்விக் போராளிகள் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்தை முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக நிர்மாணம் செய்தனர்.

சிரியாவில் இதேவகையான விச வாயுக்களைப் பயன்படுத்தியு ஆதாக சிரியாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்று அமரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகள் கோரின. அண்மைக் காலங்களில் பொட்டாசியம் புலோரைட் மற்றும் சோடியம் புலோரைட் போன்ற கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு நிறுவனங்களுக்கு ஐந்து அனுமதிப் பத்திரங்களை பிரத்தானிய அரசு வழங்கியிருந்தது.

வின்ஸ் கேபிள்

பிரித்தானிய அரசின் வியாபாரச் செயலராகவிருன்ட்க்கும் வின்ஸ் கேபிள் இனால் இறுதியாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. சிரியாவில் பிரித்தானிய அமரிக்க ஆதரவுடன் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதப்போர் நடத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தோற்றத்துடனயே இரசாயனப் பொருட்களின் அனுமதியும் வழங்கப்பட்டது எவ்வாறு என தெளிவுபடுத்துமாறு பிரித்தானியப் பிரதமர் கமரூனை மனித உரிமை அமைப்புக்கள் சில கேள்வியெழுப்பின.

தவிர, சவுதி அரேபியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விச வாயு ஆயுதங்களைக் கொண்டு தாம் போரிட்டதாக அமரிக்க ஆதரவு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தெரிவித்துள்ளனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட நேர்காணல் ஒன்றில் இவர்கள் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

30 ஏப்ரல் 1930 இலும் 13 ஜனவரி 1993 இலும் இரசாயன ஆயுதங்களுக்கு எதிரான ஜெனீவா ஒப்பந்ததில் பிரித்தானியா கைச்சாத்திட்டது. இருப்பினும் உலகில் இரசாயன ஆயுதங்களைத் தொடர்ச்சியாகப் பரிசீலித்த நாடுகளில் பிரித்தானிய முதன்மை இடத்தை வகிக்கிறது.

1939 இற்கும் 1989 இற்கும் இடைப்பட்ட 80 வருட காலப்பகுதியில் போட்டன் ஆய்வுகூடத்தில் இரசாயன ஆயுதங்களைப் பரிசோதனை செய்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் பலர் தொடர்ச்சியாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

இலங்கையில் வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற 2008 காலப் பகுதியில் பிரித்தானிய அரசு 4.5 மில்லியன் பவுண்ட்ஸ் ஆயுதங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கியிருந்தது.

இலங்கை பாசிச அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது

இலங்கையில் பொட்டாசியம் பொஸ்பரஸ் குண்டுகளை இலங்கை அரசு பயன்படுத்தியதற்கான ஆதரரங்கள் பல முன்வைக்கப்பட்டிருந்தன.

எது எவ்வாறாயினும் அரச பயங்கரவாதிகளுக்கு அடியாள் படைகளாத் தொழிற்படும் பல சமூக விரோதிகள் தம்மை தேசிய்த்தின் காவலர்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

பிரித்தானிய அரசையும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தையும் ஜனநாயகம் என்று, போராடும் மக்களை அழித்தவர்களை கடந்து செல்வதிலிருந்தே மக்கள் சார்ந்த அரசியல் ஆரம்பிக்கும்.

Exit mobile version