Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னியில் சாரிசாரியாக மக்களைக் கொல்வதற்கு ஆலோசனை வழங்கிய அமெரிக்கா : ரமணா

lletterஅமெரிக்க ஏகாதிபத்திய அரசின் பசிபிக் கட்டளையகம் ஆசிய நாடுகளை மையமாகக் கொண்டு உலகின் அரைவாசிப் பகுதிக் கடற்பரப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு செயற்பட்டுவரும் இராணுவ அமைப்பாகும். இலங்கையில் பசிபிக் கட்டளையகத்தைச் சேர்ந்த இராணுவத்தின் ஒரு பகுதி நிலைகொண்டுள்ளது என்ற சில நாட்களின் முன்னர் இனியொருவில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கும் மேலாக வன்னியில் சாரிசாரியாக மனிதப்படுகொலைகள் நடைபெறுவதற்கு அமரிக்க அரசின் பசிபிக் கட்டளையகத் தலைமையகம் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதற்கான ஆதாரத்தை கொழும்பிலிருந்து வெளியாகும் தி ஐலன்ட் என்ற ஆங்கிலப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதுவும் இலங்கையில் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் சமாதான ஒப்பந்தம் நடைபெற்ற காலமான 2002 ஆம் ஆண்டு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது. அமெரிக்க அரசின் செல்லப்பிள்ளையான நோர்வே அரசும் அதன் பிரதிநிதிகளும் ஏன் புலிகளின் உள்ளிருந்தவர்களுமே 2002 ஆம் ஆண்டிலிருந்தே இனச்வழிப்பை ராஜபக்ச பாசிஸ்டுக்களோடு இணைந்து திட்டமிட்டிருக்கலாம்.

அமெரிக்க அரசின் புதிய வெளிவிகாரக் கொள்கைக்கு ஆசிய திரும்பல் புள்ளி என்ற கருத்து ஆதாரமாக அமைந்தது. ஒபாமா நிர்வாகத்தில் வெளிவிகாரத் துறையக் கையாண்ட ஹில்லாரி கிள்ங்டன் பின்வருமாறு கூறுகிறார்:

‘ஈராக் புயல் ஓய்ந்துவிட்டது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமரிக்கா தனது துருப்புக்களை விலக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் அமரிக்கா ஒரு திரும்பல் புள்ளியில் நிற்கிறது. அந்த இரண்டு நாடக அரங்குகளில் மகத்தான எமது வளங்களைச் செலவு செய்துள்ளோம். எதிர்வரும் பத்து வருடங்களில் நாம் ஒழுங்குபடுத்தப்பட்டும், கம்பீரமாகவும் எமது வலுவை எங்கு பயன்படுத்துவது என்பதைத் திட்டமிட வேண்டும். அப்போது தான் அமரிக்காவின் நலன்களையும்,

பெறுமானத்தயும், தலைமையையும் நாம் உறுதிசெய்யமுடியும். எதிர்வரும் பத்தாண்டுகளில் ஆசிய பசிபிக் பிராந்தியத்துல் பொருளாதார, தந்திரோபாய, ராஜதந்திர மற்றும் ‘வேறுவழிகளில்’ எமது முதலீட்டை மேற்கொள்வது அமரிக்க ஆட்சிக் கலையைக இருக்கவேண்டும்.’

இலங்கையில் சீனாவின் கடற்பிராந்தியத் தலையீட்டை முற்றாக நிறுத்துவதற்கும் தமது இராணுவத் தலையீட்டை அதிகரிப்பதற்கும் அமெரிக்க அரசு அழுத்தங்களை வழங்கி வருகிறது. இலங்கை ஒரு பகுதியை அமெரிக்க அரசிற்கு விற்பனை செய்தும், இன்னொரு பகுதியை இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்தும் தனது ஆட்சியை நடத்திவரும் மகிந்த ராஜபக்சவின் அரசு இன்று மீள முடியாத சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டுள்ளது.

அமெரிக்க அரசு இலங்கையில் ராஜபக்சவை நீக்கிவிட்டு தனது ‘ஜனநாயக மனிதாபிமான’ முகத்தைக் கட்டியெழுப்பி புதிய ஆட்சியாளர் ஒருவரினூடாக இராணுவமயமாக்கலை எதிர்ப்பின்றி நடத்த முடியும். இதுவரைக்கும் அமெரிக்க அரசின் கோர முகத்தை மறைப்பதற்குத் துணைபோன புலம்பெயர் மற்றும் தமிழக பிழைப்புவாதிகளின் வாயை அடைப்பதற்கும் இது பயன்படும்.

இதனை ராஜபக்ச அரசு தெரிந்துவைத்திருப்பதாலேயே அமெfரிக்கா அனைத்து ஆதரவை வழங்கினாலும் சீனாவையும் அரவணைத்துக்கொள்கிறது. பொதுவாக உள்நாட்டு அரசியலில் கருத்துரீதியாகத் தலையிடாத சீனா பொருளாதார இராணுவத் தலையீடுகளை நடத்துவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளது. ஆக, ராஜபக்ச அரசு ஒரு புறத்தில் சீனாவிற்கும் மறுபுறத்தில் அமெரிக்காவிற்கும் தனது நாட்டை சுரண்ட அனுமதித்துள்ளது.

ராஜபக்ச அரசு அமெரிக்க அரசிற்கு நாட்டைச் சுரண்டுவதற்கும் இராணுவமயமாக்குவதற்கும் ஏகபோக உரிமைய வழங்குமானால் அமெரிக்க அரசு வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்துவிடும். புதிய ஆட்சித் தலைவரை உருவாக்குவதை விட ராஜபக்சவை வைத்திருந்தால் மட்டுமே போர்க்குற்றங்களைக் காட்டி மிரட்டமுடியும். அதுவே இன்று நடைபெற்ற்க்கொண்டிருக்கிறது.
அமெரிக்க அரசிற்கோ சீனாவிற்கு தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களிலிலோ அன்றி ஏனைய மக்களின் நலன்களிலோ எந்த அக்கறையும் கிடையாது.

போர்ப் பிராந்தியாமாக ஆசியாவை மாற்றுவதற்கு இலங்கையை ஒரு தளமாகப் பயனபடுத்துவதே அவர்களின் நோக்கம்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்ட கொத்துக்குண்டுகளை இலங்கையில் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய அமெரிக்காவின் அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே தி ஐலண்ட் நாளிதழில் கோத்தாபய ஆதரவு ஊடகவியலாளரின் ஊடாக தனது நட்பு அரசான அமெரிக்கவைக் காட்டிக்கொடுக்க இலங்கை அரசு முயற்சிக்கிறது. எது எவ்வாறாயினும் அமெரிக்கா தலையிட்ட அனைத்து நாடுகளிலும் இரத்தத்தையும் சதையையும் எலும்புத் துண்டங்களையுமே கண்டிருக்கிறோம்.

இலங்கையில் அமெரிக்காவிற்கு வழியைத் திறந்துவிட்டது இலங்கை அரசாங்கமே. இந்தவிடயத்தில் இலங்கை அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கியது புலம்பெயர் மற்றும் தென்னிந்தியப் புலிசார் அமைப்புக்களே.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்தியங்களுக்கும் எதிரான மக்களின் போராட்டம். சிங்கள் உழைக்கும் மக்களின் துணையோடும், உலகம் முழுவதும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவோடும் இலங்கை அரசிற்கு எதிரான பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் மீட்சிபெற வேண்டும்.

தி ஐலண்டில் வெளியான ஆதாரம்:

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95664

இலங்கை அமெரிக்காவின் உத்வியுடன் இராணுவ மயமாவதற்கான ஆதாரம்:

உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் 
பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்
Exit mobile version