அவ்வகையில், உலக பொதுவுடமை இயக்கத்தின் ஒரு பகுதியே இலங்கையில் வடபுலத்தில் தோன்றிய பொதுவுடமை இயக்கங்களாகும். அவ்வியக்கங்கள் உலக பொதுவடமை இயக்கத்தின் பொதுமையையும் இலங்கை பொதுவுடமை இயக்கத்தின் தனித்துவத்தையும் இணைத்து வளர்ந்த இடதுசாரி மரபொன்றை முன்னிறுத்துகின்றது. உலகளவில் இன்று இடதுசாரி இயக்கங்கள் பல நெருக்டிகளையும் பின்னடைவையும் சந்தித்து வருகின்றன. இருப்பினும் அங்காங்கே திட்டுகளாகவும், தீவுகளாகவும் செயற்பட்டு வருகின்ற இடதுசாரி இயக்கங்கள், வரலாற்று அரங்கில் சமூக இயக்கம், சமூக முரண்பாடுகள், சமூக ஒடுக்கு முறைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு உள்ளன என்பதை தோலுரித்துக் காட்டிய பொதுவுடமை இயக்கங்கள்; அதற்க எதிராக போராடவும் மக்களை வழிபடுத்தியது. ஆனால் அவ்வியக்கங்ககள், அவை சார்ந்த ஆளுமைகள் பற்றிய ஆய்வுகள் மிகவும் சொற்ப அளவிலே வெளிவந்துள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் பொதுவுடமை இயக்க வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாகவே காணப்படுகின்றது. அரசியல் வரலாறு என்பது ஆண்டபரம்பரையின் ஒரு வழிப்பாதை அரசியல் வரலாறாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
இன்னொருபுறத்தில், ஏகாதிபத்திய உலகமயமாக்கல், நாடுகளையும் மக்களையும் தமது கொடிய மூலதனச் சுரண்டல் மூலம் சூறையாடி வருகின்றது. இந்தப் பின்னணியில் பொதுவுடமை இயக்கத்தில் இடம் பெற்ற தவறுகள் தோல்விகளை மட்டுமே பிரதானப்படுத்தி அவ்வியக்கதை தாக்கவும் தகர்த்தவும் முற்பட்படுகின்றமை தற்செயல் நிகழ்ச்சியல்ல. எனவே நமது வரலாற்றை மீட்டெடுப்பதற்கும் அதனூடே நமது இருப்பு குறித்து சிந்திப்பதற்குமான வரலாற்று தேவையிலிருந்து இன்றைய சமூமாற்றச்செயற்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள் செயற்பட வேண்டியுள்ளது. இதுவே இன்றைய பொதுவுடமை இயக்கத்தின் முதன்மையான பணியாகவுள்ளது. தற்காலத்தில் பொதுவுடமை இயக்கங்கள் பற்றி வெளிவந்துக் கொண்டிருக்கும் நூல்களை நோக்கும் பொழுது மொத்தத்தில் ஏமாற்றமே எழுகின்றது. ஏலவே வெளிவந்துள்ள நூல்களை நோக்குகின்ற போதும் கூட ஆழமான முயற்சிகள் அருந்தலாகவே உள்ளன.
இவ்வாறானதோர் சூழலில் வடபுலத்து இடதுசாரிகள் சிலரைத் தேர்தெடுத்து பொதுவுடமை இயக்கங்களின் பங்களிப்பு அதன் பின்னணியில் இயங்கிய மனிதர்கள் அவர்களின் அனுபவங்கள் என்பனவற்றை பதிவாக்கும் சீரிய முயற்சிகள் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதனைக் காணலாம். மார்க்சிய முற்போக்கு அறிஞர்களே இத்தகைய பதிவுகளை வெளிக்கொணர்துள்ளனர் என்பது குறித்துக் காட்டத்தக்கதோர் விடயமாகும். இது விடயத்தில் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தினர்- நீர்வை பொன்னயன் அவர்களின் முன் முயற்சியால் ‘வடபுலத்து இடதுசாரி முன்னோடிகள்’ என்ற தலைப்பில் நூலொன்றினை வெளிக் கொணர்ந்துள்ளனர். கூடவே நூலின் சமர்பணமும் இலங்கையில் பொதுவுடமை இயக்கத்தின் வளர்ச்சிக்காக தம்மை அர்பணித்துக் கொண்டு செயற்பட்ட இடதுசாரி தோழர்களுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளமை இந்நூல் தொகுப்பாளர்களின் தன்முனைப்பற்ற நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றது.
நூலின் உள்ளே பன்னிரு இடதுசாரி முன்னோடிகள் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. அவை தனியொரு ஆசியரால எழுதப்படாமல் அவ்வாளுமைகள் பற்றி வௌ;வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக காணப்படுகின்றது. முறையே ‘வடபுலத்தில் முதல் கம்யூனிச விதையை ஊன்றிய தோழர் மு. கார்த்திகேசன்'(சண்முகம் சுப்பிரமணியம்), ‘அமரர் ஹன்றிபேரின்பநாயகமும் விடுதலைக் கருத்தியலும்'(போராசிரியர் சபா ஜெயராசா), ‘சிறந்த சிந்தனையாளர் தீவிர செயற்பாட்டாளர் தோழர் அரியம்'(நீர்வை பொன்னையன்), ‘வட இலங்கை இடதுசாரி முன்னோடிகளில் எம்.சி. சுப்பிரமணியம்'(வீ. சின்னத்தம்பி), ‘ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் தோழர் சீனிவாசம்'(நீர்வை பொன்னையன்), ‘வடபுலத்து இடதுசாரி இயக்க வளர்ச்சியில் முனனோடித் தோழர் இராமசாமி ஐயரின் பங்கு'(நீர்வை பொன்னையன்), ‘சிறந்த கல்விமானும் கம்யூனிச சிந்தனையாளருமான ஆசான் எஸ். கே. கந்தையா'(த.ந. பஞ்சாட்சரம், நீர்வை பொன்னையன்), ‘தோழர் ஆர். ஆர். பூபாலசிங்கம்’ (சிவா சுப்பிரமணியம்), ‘தொழிலாளி வர்க்கத் தோழர் ஜனாப் எம். எஸ். ஷேக் அப்துல் காதர்'(எம். ஜி. பசீர்), ‘வடக்கு பெற்றெடுத்த தொழிலாளர் தோழன் ‘ஜெயம்’ தர்மகுலசிங்கம்'(சி. தருமராசன்), ‘பொன். கந்தையா பற்றி என் நினைவுகளிற் சில….'(எம். குமாரசுவாமி). என இவ்வாளுமைகள் குறித்தும் அவர்களது சமூக பங்களிப்பு குறித்தும் காத்திரமான தகவல்கள் வெளிக் கொணரப்படகின்றது.
இவ்வாளுமைகளில் வெளிப்படும் மனிதாபிமானது, மனிதனுக்கு மதிப்பு தரும் மனிதாபிமானம். உழைக்கும் வர்க்கத்தை நேசிக்கும் மனிதாபிமானம்: அது முதலாளித்துவ மனிதாபிமானத்திற்கு எதிரானது. இதனால் தான் அந்த மனிதாபிமானத்தில் மனிதரது சுதந்திரம், நல்வாழ்வு, இன்பம், மனிதனின் சர்வாம்ச வளர்ச்சி என்பன அதன் அடிநாதமாக விளங்குகின்றது. முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் மேற்படி நூல் வீறுமி;க்க அந்தக் காலத்தையும் அதன் வெளிப்பாடான ஆளுமைகளாக விளங்கிய இடதுசாரி இயக்க முன்னோடிகளையும்; துலக்கமாக காட்டி நிற்கிறது. இவர்களின் வாழ்வும் வகிபாகமும் நூல் முழுமையும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாளுமைகள் மக்கள் போராட்ட களங்களோடு ஊடாடி, மக்கள் சக்தி விடுதலைத் திசைமார்க்கத்தில் வீறுட்டு எழுச்சிக் கொள்ள வழிப்படுத்தும் கொமியூனிஸ்ட் கட்சியுடன் உறவுபூண்டு, தம்; அறிவை நடைமுறை அனுபவங்கள் வாயிலாக பட்டைத் தீட்டி செழுமைப்படுத்தி முன்னேறியவாகள்.
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றிய தெளிவுண்வம் அவசியம். சமூகப் பிரச்சனைகளை தனியே வர்க்கபேதம் சார்ந்து மட்டும் பார்க்கும் ஒருமுனைவாதத் தவறுக்கு ஆட்படாது தேசிய-சாதி பேதங்கள் சார்ந்து அணுகித் தீர்வுக்கான போராட்டங்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் இவர்கள் கொண்டிருந்தமை தனித்துவமான அம்சமாகும். வர்க்கப் பிளவடைந்து உருவான ஐரோப்பிய சமூக அமைப்பு போன்று நமது இனக்குழு மரபு சமூகவமைப்பு காணப்படவில்லை. ‘சாதி என்பது எந்த சமயத்தின் கண்ட பிடிப்போ சதியோ பாவச் செயலோ அல்ல. எமக்கான ஏற்றத் தாழ்வுச் சமூக உருவாக்கம் இனமரபுக்குழுக்கள் வர்க்கங்களாய் பிளவடைந்து ஏற்படவில்லை; விவசாய வாய்ப்பை பெற்ற மருதத் தினைக் குரியதான இனமரபுக் குழு ஆளும் சாதியாகி, நிலத்தோடு பிணைக்கப்பட்ட தீண்டாதோர் எனும் ஓடுக்கப்பட்ட சாதிகளாயும், கைத்தெழில் சாதிகளாய் இடைச்சாதிகளாக்கப்படுதலாயும் ஏனைய திணைகளுக்குரிய இனமரபுக்குழுக்களை மாற்றிய சாதி வாழ்முறை எமக்கான பிரத்தியேகத் தன்மை உடையது. அத்தகைய புதிய வாழ்க்கைக் கோலமாகிய சாதி முறைமைக்கான கருத்தியலை வடிவமைக்கும் சாதியாக பிராமணர் உருவாகினரேயன்றி பிராமணச் சதியால் சாதி வாழ்முறை தேன்றி விடவில்லை. கருத்து வாழ்க்கை கோலத்தைக் கட்டமைப்பதற்கு முன்னதாக, வாழ்முறை வெளிப்பாடாகவே கருத்து பிறக்கிறது’. என்பார் ந. இரவீந்திரன் (ஒரு புலமைத்துவ ஆளுமையாக மட்டுமல்ல: இயக்க சக்தியாகவும் விளங்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி, இனியொரு.கொம்.05-05-2012).
இந்த பின்னணியில் உருவான சாதிய அமைப்பானது இனக்குழு மரபு சமுதாய அமைப்பில் பல்வேறுப்பட்ட ஒடுக்கு முறைகளுக்கும் சுரண்டலுக்கும் காரணமாக இருந்து வந்துள்ளது. ஏகாபத்தியம் எவ்வாறு தேசங்களை ஒடுக்கி உபரியை அபகரிக்கின்றதோ அவ்வாறே இனக்குழு சமுதாய அமைப்பில் அடக்கப்பட்ட சாதியினரை ஆதிக்கசாதியினர் ஓடுக்கி சுரண்டி வருகின்றனர். இலங்கையின் வடப்புலத்தில்; சாதிய அமைப்பு என்பது தமது சூழலுக்கு ஏற்ப தனித்துவ தன்மைக் கொண்டதாக விளங்குகின்றது என்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. எடுத்துக் காட்டாக இந்தியாவில் பிராமணர்களை போன்று இலங்கையில் சைவ வேளாள சாதியினரே பொருளாதார ஆதிக்கம் மிக்கவர்களாக காணப்பட்டனர். பழமைக்கும் வைதீகத்திற்கும் முதன்மைக்கொடுக்கும் நிலவுடமை சிந்தனையால் இறுக்கம் பெற்ற வடபுலத்து சமூகவமைப்பில் ஒடுக்கு முறையின் வடிவமாக சாதியமைப்பு காணப்பட்டமையால் வடபுலத்து மார்க்சியர்கள் இவ்வnhடுக்கு முறைக்கு எதிராக போராடினர். பாட்டாளி வர்க்க புரட்சியின் ஊடாக மலரும் சோசலிச சமூகத்தில் இரண்டாம் பட்ச முரண்பாடுகளான தேசிய, இன, மத, மொழி, பாலின, சாதி முரண்பாடுகள் என கனவுலகில் உலாவிய வரட்டு மார்க்சியர்களின் கூற்று வக்கற்ற வெறும் புலம்பல்களுக்கே இட்டுசென்றது. அத்தகைய வரட்டு தத்தவத்திலருந்து விடுபட்டு வடபுலத்து மார்க்சியர்கள் அப்போராட்டத்தை வெறும் குறுங்குழு வாதமாக முடக்கிக் விடாமல் ; சகல ஜனநாயக சக்திகளையும் அப்;போராட்டத்துடன் இணைத்தனர்.
இவ்வகையில் தோன்றிய சிறுப்பகாண்மை தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் என்பன ஆதிக்க சாதியினரை எதிரியாக கருதாமல் சுரண்டல் அமைப்புக்கும் சாதிய முறைக்கும் எதிராகவே போராட முனைந்தனர். இப்போராட்டத்தில் ஜனநாயக நல்லெண்ணம் கொண்ட ஆதிக்க சாதியினர் போக தேசிய ஜனாய சக்திகளும் (சிங்கள முஸ்லிம், தோழர்கள் உட்பட பொளத்த பிக்குகளும்) இணைந்திருந்தனர். இவ்வம்சம் இலங்கையில் தோன்றிய சாதியத்துக்கு எதிரான போராட்டத்தின் தனித்துவமான அம்சமாகும். இருப்பினும் அமைப்பு சார்ந்த போராட்டங்கள் முக்கியப்படுத்தபட்டளவு சாதிய போராட்டத்தை மார்க்சிய நிலை நின்று நோக்கும் கோட்பாட்டுருவாக்கம் நிகழ்ந்ததா என்பது மிக மக்கியமான கேள்வியே. சிறுப்hண்மை தமிழர் மகாசபை, தீண்டாமை வெகுசன இயக்கம் என்பனவற்றினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் வாயிலாக பெற்ற அனுபவங்களையும் இதுவரையான இந்திய அனுபவங்களையும் மற்றும் பெரியார், அம்பேத்கர், இரட்டைமலை சீவாசன், அயோத்திதாச பண்டிதர் இன்னும் இதுபோன்ற சிந்தனையாளர்களின், கோட்பாடு நடைமுறை என்பனவற்றை மார்சிய நோக்கில் விமர்சனததிற்குள்ளாக்கி அதனடிப்படையில் மக்கள் விடுதலைக்காக போர்க்குணத்தை கோட்பாட்டுருவாக்கத்தை நமதாக்கி கொள்வது காலத்தின தேவையாகும்.
இதற்கு மாறாக, இந்தியாவில் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை மார்க்சியர்கள முன்னெடுத்த போதும் அப்போராட்டங்கள் இலங்கையில் மார்சியர் முன்னெடுத்த போராட்டங்கள் போன்று தத்தவ தெளிவுடனோ அல்லது நடைமுறைவாழ்க்கை பிரச்சனைகளடனோ(எடுத்துக்காட்டாக ஆலய பிரவேச போராட்டம், தேனீர் கடை பிரவேச போராட்டம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்) தொடர்பு பட்டதாக இருக்கவில்லை என்பது முக்கயமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஒரு புறம் மார்க்சியத்தின் போதாமை காரணமாக சாதிப்பிரச்சனையை தலித்தியவாதபடபார்வையிலேயே அணுகவும் தீர்க்கவும் இயலும் என்ற எத்தனிப்புகள் முன்னெடுக்கப்பட்டு தோற்றுவிட்டமையை தலித் சிந்தனையாளர்கள் கூட இன்று ஏற்கும் நிலை உருவாகியுள்ளது. மறுப்புறம், வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டும் போதும் – சாதிப்பிரச்சனைத் தானே தீரும்; சாதியத்துக்கு எதிரான விசேடித்த போராட்டங்கள் வேண்டியதில்லை என்று இந்தியாவில் மார்க்சியர்கள் முன்னெடுத்த வறட்டுவாத நிலைப்பாட்டிலிருந்து மீண்டு, இன்று மார்க்சியர்கள் சாதிமுறை குறித்த ஆய்வுகளிலும் செயற்பாடுகளிலும் இறங்கியுள்ளனர்(ந. இரவீந்திரன் மே.கு.க). இன்னொருபுறத்தில், தமிழகத்தில் தலித் இயக்கங்கள் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை மார்க்சிய நோக்கில் இனம் காணத் தவறியமையினாலேயே அவை தனிமைப்படுத்த பட்ட போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு, உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக தோன்றிய தலித்தியம், பின்நவீனத்துவம் முதலிய எதிர்புரட்சிகரமான கோட்பாடுகளுக்குள் முடங்க வேண்டியதாகியது. இவர்கள் மார்சியத்தை இந்திய சூழலுக்கு எற்ப பிரயோகிக்க தவறியதன் விளைவாக மார்சியம் காலவாதியாகிவிட்டத எனவும் அத்தத்தவம் நமது சூழலுக்கான பிரச்சனையை அனுகுவதில் போதாமையாக உள்ளது என மார்க்சியத்திற்கு எதிரான சுலோகங்கள் பின்நவீனத்துவாதிகளால் தூக்கி பிடிக்கப்படுகின்றது. முன்னோர்வழி சுலோகங்களை பராயணம் செய்தும் உச்சாடனம் செய்தும் வந்த மார்சியர்கள் விட்ட தவறையம் இரசியா போன்ற சோசலிக நாடுகளின் சிதைவையும் பிரதானப்படுத்தி மார்சியத்தை தாக்கவும் தகர்த்தவும் முற்படுகின்ற மேதாவிகள் அமெரிக்காவின் மேலாண்மை சார்நத நடவடிக்கைளையும் ஏகாதிபத்திய ஆக்கரிமிப்புகளை பற்றியும் கவலைக்கொளளாதிருப்பது இவர்களின் அரசியல் நயவஞ்சகத்தை குறிக்கின்றது. இந்த தத்துவார்த்த போராட்டத்தில தமது தத்துவார்த்த குழறுப்படிகளின் காரணமாக ஜனநாயக சக்திகளும் முடங்கியமை இன்னொரு துரதிஸ்டவசமாக நிகழ்வாகும். இவ்வகையில் நோக்குகின்ற போது, இலங்கையில் வடபுலத்து மார்க்சியர்கள் சாதியத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பில் முன் வைத்த தத்துவம் நடைமுறை தெளிவானதோர் பார்வையைக் கொண்டிருந்தது. இவ்வம்சம் இந்நூலில் சிறப்பாக அடையாள் காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்நூலின் தொகுப்பில் கவனத்தில் கொள்ளப்படாத ஆளுமைகள் பற்றியும் கூற வேண்டியது அவசியமாகும். இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தொழிலாளி வர்க்க அரசியலை முன்னெடுத்த தோழர் சண்முகதாசன் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராகவும், நவீன திரிவுவாதத்திற்கு எதிராகவும் விட்டுக் கொடுக்காததோர் தத்துவ போராட்டத்தை முன்னெடுத்தவர். காலப்போக்கில் தோழர் சண்னில் வெளிப்பட்ட அகச்சார்பான தவறுகளும் அவற்றின் விளைவுகளும் இடதுசாரி இயக்கத்தை பல பின்னடைவகளுக்கு இட்டு சென்றது என்னும் விடயம் சுயவிமர்சன அடிப்படையில் நோக்கவேண்டியுள்ளது. அவ்வாறே பேரினவாதம் முனைப்புற்றிருந்த காலத்தில் அவர் தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி அதிகமான சிங்கள தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டிருந்தமையினால் சிங்கள மக்களின் உணர்வை நோகடிக்க கூடாது என்றவகையில் பேரினவாத ஓடுக்க முறைக்கு எதிராக போராடாதது மாத்திரமன்றி, தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமல்ல என்ற நிலைப்பாட்டிற்கே சென்றார். இந்ந பின்னணியில் இவர் பொறுத்த காய்த்தல் உவத்தல் அற்ற ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும். அவர் பொறுத்த எவ்வித தகவல்களும் இந்நூலில் உள்ளடக்கப்படாமை பெரும் குறைப்பாடாகவே உள்ளது.
அவ்வாறே சிறுப்பாண்மை மாகாசபையின் ஊடாக சாதியெதிர்ப்பு தொடர்பான போராட்டங்களையும் நடைமுறைசார்ந்த செயற்பாடுகளையும் முன்னெடுத்ததில் எம்.சி. சுப்ரமணியத்திற்கு முக்கய இடமுண்டு என்பதில் இரநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இருப்பினும் அவர் 1960களில் இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த பிளவில் திரிபுவாதமாக திகழ்ந்த மொஸ்கோ சார்புக்குள் புதைந்து பாரளுமன்ற சந்தரப்பவாதத்திற்குள் முழ்கியது துரதிஸ்டவசமான நிகழ்வாகும். இவ்விடயம் இந்நூலிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. மறப்புறத்தில் வீறு கொண்ட எழுச்சியடன் செயற்பட்ட இடதுசாரிகள் சீன சார்பை பின்பற்றியதுடன் தொடந்தும் புரட்சிகர பாதையில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த பின்னணியில் உருவாகிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமானது சகவிதமான தேசிய ஜனநாயக சக்திகளையும் அணித்திரட்டியிருந்தது. இப்போராட்டம் சீனசார்பு கொம்யூனிட்ஸ்டுகளாலயே முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு வழிகாட்டி நின்ற முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் தோழர் கே. ஏ. சுபிரமணியம். சாதியத்திற்கு; தீண்டாமைக்கும் எதிரான வெகுஜன எழுச்சியை தொடர்ந்து சட்டத்திற்குட்பட்டதும் சட்டத்திற்கட்படாதுமான போராட்ட தத்திரோபாயங்களை கடைப்பிடித்து நிதானமான தலைமைத்துவத்தை வழங்கியதில் இ;த்தோழருக்கு முக்கிய பங்குண்டு. எமது மண்ணுக்கும், வாழ்வுக்கும் மாறான கோட்பாடுகளை முன்வைத்து- மார்க்சிய அணிகள், முன்னோடிகளது வசனங்களை கோசங்களை முன் வைத்து முன்னெடுக்கப்பட்ட சமூகமாற்ற செயற்பாடுகள் மலட்டுதனமாக முடங்கிபோனதை வரலாறு எண்பித்திருக்கின்றது. இலங்கையின் இடதுசாரிகள் அவ்வாறின்றி எமது பிரயோக சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுக்க முனைந்ததன் விளைவே தீண்டாமை வெகுசன இயக்க போராட்டமாகும். அரசியல் அரங்கில் இந்த முரண்பாட்டை விளங்கிக் கொண்டு அமைபாக்க செயற்பாட்டில் ஈடுப்பட்டமை இவரது முக்கிய பங்களிப்பாகும். இதற்கப்பால் தொழிற்சங்க போராட்டங்கள்,விவாசய இயக்கங்கள் நடாத்திய போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் என பலமுனைப்பட்ட போராட்டங்களிலும் தம்மை அர்பணித்துக் கொண்ட நேர்மையான இடதுசாரியாக வாழ்ந்தவர் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம். காலப்போக்கி;ல் இவரது இயக்கம் சிதைந்து சின்னாப்பின்னமாகியிருப்பினும் வரலாறு அவரை கவனத்திலெடுக்கும். அவர் பொறுத்த வெளிவந்த நினைவு மலரைத் தவிர வேறு ஆய்வுகள் மதிப்பீடுகள் வெளிவந்தவையாக தெரியவில்லை. ஒருவகையில் அவர் மறைக்கப்பட்ட ஆளுமையாகவே காணப்படுகின்றார். இந்நூலிலும் அக்குறைபபாடு காணப்படுகின்றது.
1960களில் வடபகுதியில் சாதியத்திற்கு எதிரான போராட்டம் முனைப்புற்றுக் காணப்பட்டதை போல 1970களில் தமிழின ஒடுக்க முறை முனைப்பற்றுக் காணப்பட்டது. இந்நாட்டின் அதிகார வர்க்கமும் பேரினவாதிகளும் ஆரம்ப கால முதலாகவே தமிழர்களின் இனத்தனித்துவத்தை சிதைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதில் வட-கிழக்கு சார்ந்த அரசியல் தலைவர்களும் புத்திஐPகளும் இலங்கைத் தேசியம் குறித்து கவனம் செலுத்திருந்தமையினால் பேரினவாதம் பற்றி சிந்திக்க தவறிவிட்டனர். சேர்.பொன். அருணாசலம் போன்றோர் பேரினவாத்தை அடையாளம் கண்டிருந்த போதும் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அவரின் மறைவு துரதிஸ்டவசமானதொன்றாகி விடுகின்றது. பின் வந்த தலைவர்கள் அதனை கவனத்திலே எடுக்கவில்லை. உயர் மத்திய தர வர்க்க வாழ்க்கை முறைகள், அரசியல் சிந்தனைகள், அரச சலுகைகள் காரணமாக பேரினவாதம் குறித்து அவர்கள் சிந்திக்க தவறிவிட்டனர். முதன்முதலாக பேரினவாதத்தை அரசியல் தளத்தில் சரியாக அடையாளம் கண்டு அமைப்பு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளாவார். இதன் தொடர்ச்சியாகவே பண்பாட்டுத்தளத்தில், இனவாதத்திற்கு எதிரான முற்போக்கான செயற்பாடுகளை முன்னெடுத்தவர் திராவிட இயக்க முன்னோடியாக திகழ்ந்த ஏ. இயஞ்செழியன் அவர்கள்.
1950களில் ஏகாதிபத்திய சார்பு அரசியல் சக்திகள் தூக்கியெறிப்பட்டு தேசிய முதளாளித்துவ சக்திகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருந்த காலமாகும். தேசிய முதலாளித்துவம் அரசியல் அரங்கில் பிரவேசிக்கின்ற போது அது தன்னகத்தே சில முற்போக்கான பண்புகளை கொண்டிருக்கும் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தியிருக்கின்றது. அந்நிய முதலீட்டின் பிடிப்பும் அதன் தாக்கமும் தமக்கு பாதகமாக இருப்பதனை தேசிய முதலாளிகள் இனங்கண்டனர். இதற்குமாறாக தேசிய முதலாளித்துவம் தத்தமது நாட்டில் கைத்தொழில் துறையினையும் வர்த்தக அபிவிருத்தியினையும் மேற்கொண்டது. இது தமது நாட்டினை அபிவிருத்தி செய்வதாக அமைந்நிருந்தது. தமது நாட்டினை காலணித்துவ ஆட்சிக்குட்படுத்தி அதனூடாக நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்துக் கொணடிருந்த குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிராக அவ்வுணர்வு இருந்த அதேசமயம், நவீன கொள்ளைக்காரர்களான ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவும் செயற்ட்டமை அதன் பிரதானமான அம்சமாகும். இதன் தாக்கத்தை நாம் இலங்கையிலும் காணக்கூடிதாக இருந்தது. இருப்பினும் அதன் வர்க்க நலன் காரணமாக அது வெகு விரைவிலேயே ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து மக்கள் விரோத செயற்பாடுகளிலும் ஈடுப்படத் தொடங்கியது. அதன் ஒரு அம்சமாகவே இனவாதமும் அது தொடர்பான சிந்தனைகளும் வளரத் தொடங்கின்.
இந்த முரண்பாட்டை இலங்கையில் இடதுசாரிகள் சரியாக அடையாளம் கண்டிருப்பார்களாயின் சாதிய எதிர்ப்பு போராட்டத்திலிருந்து தனிமைப்பட்டிருந்த பிற்போக்கு சக்திகளை முறியடித்தவாறு இடதுசாரிகள் தமிழ் தேசியத்துடன் இணைந்து ஆரோக்கியமான வரலாறு படைத்திருக்க முடியும். துரதிஸ்டவசமாக இடதுசாரிகள் இதனைக் கவனத்திலெடுக்க தவறியமையினால் தமிழ் தேசிய இனவொடுக்கு முறையை அரசியல் அரங்கில் முற்போக்காக இனங்கண்டிருந்த தமிழ் தமிழரசுக் கட்சியினர் தமது வர்க்க நலன் காரணமாக பிற்போக்கு சக்திகளின் கூடாரமாகி அப்போராட்டத்தை தவறான வழியில் இட்டுசெல்வதற்கு காரணமாக அமைந்தனர். ‘ யாழ்பாணத்தில் அறுபதுகளின் பிற்கூறில் எரியும் அரசியல் – சமூக கொந்தளிப்பாக வெளிப்பட்டுத் தமிழர் வரலாற்றிலும் தமிழிலக்கியச் செல்நெறியிலும் புதிய வளர்ச்சிகளை எட்ட உதவிய போராட்டம் தமிழ் தேசியத்தின் முற்போக்கு குணாம்சமாக அமைந்ததோடு இலங்கைத் தமிழ் தேசியத்தின் அரவணைப்புக்கு உதவுவதாயும் இருந்துள்ளது. அதற்கு எதிராக சென்ற வலதுசாரிப் பிற்போக்கு தமிழ் தேசியம் தனக்கும் பெரும் கேடாக அமைந்ததுடன் இலங்கைத் தேசியத்தின் இறைமையும் சுயாதிபத்தியமும் அந்நிய சக்திகளின் காலடியில் மிதிப்படவும் இடமேற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. மீண்டும் இலங்கைத் தேசியம் தனது இறைமையை மீட்டெடுத்து சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து- அவற்றோடு ஒன்றுப்பட்டு மேலாதிக்க சக்திகளுக்கு எதிராய்ப் போராடியாக வேண்டும்'(இரவீந்திரன்.ந.2011, முற்போக்கு இலக்கிய எழுச்சி, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு, ப. 145)
இந்திய தேசிய போராட்டத்தில் காலனியாதிக்கத்திற்கு எதிரான தேசிய போராட்டமும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும் எவ்வாறு பிளவுப்பட்ட தேசியமாக இருந்துள்ளது என்பதை ஆனந்த் டெல்டும்ப்டே போன்ற ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டியள்ளனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் அரசியல் பண்பாட்டத்தளத்தில் முன் வைத்தவர் பாரதி. அதனால் தான் தற்கால விவாதத் தளத்தில் முக்கிய கோட்பாடன இரட்டைத்தேசியத்தின் முன்னோடியாக பாரதி திகழ்கின்றார். இந்த பின்பலத்தில் இலங்கையை நோக்குகின்ற போது சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான இடதுசாரிகளின் போராட்டமும் தமிழன ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழரசுக் கட்சியனரின் தமிழ் தேசிய போராட்டமும் பிளவுப்பட்ட தேசியமாக இருந்துள்ளதை அவதானிக்கலாம். இத்தகைய அனுபவங்களிலிருந்து வீழ்ச்சியிருந்து கற்று எமது சூழலுக்கு பொருத்தமான மார்க்சிய பிரயோகம் சார்ந்த கோட்பாட்டை உருவாக்க வேண்டியுள்ளது. ‘இரட்டைத் தேசியம்’; என்ற கோட்பாடு எமது சூழலுக்கான மார்க்சிய பிரயோகமே. இக் கோட்பாட்டை தற்காலத்தில் அறிமுகப்படுத்தி அதனை விருத்தி செய்தவர் ந. இரவீந்திரன்(அவருடைய இரட்டைத்தேசிய பற்றிய கட்டுரைகளை வாசிப்பதால் இது பற்றிய மேலதிக விளக்கங்களைப் பெறலாம்). இந்த பின்னணியிலே இலங்கையின் இடதுசாரிகள் செயற்படவேண்டியுள்ளது.
இறுதியாக ஒன்றை கூறி வைத்தல் அவசியமான ஒன்றாகும். மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள், வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு பொது மக்கள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒவ்வnhரு இடதுசாரி முன்னோடிகளுக்கு பின்னாலும் இடதுசாரி அமைப்பொன்றிருந்திருக்கின்றது. கட்சியமைப்பில் அங்கம் வகிக்காத இடதுசாரி உணர்வுக் கொண்ட செயற்பாட்டாளர்களும் ஏதோ ஒருவகையிலும் அளவிலும் அவ்வமைப்பின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களாகவே காணப்படுவர் என்பது வரலாற்று நியதி. அந்தவகையில் இவ்வமைப்புகள் மற்றும் ஆளுமைகளின் வெற்றிகள் மாத்திரமல்ல தோல்விகள் கூட அடுத்த தலைமறையினருக்கு ஆதர்சனமாக அமையும். இந்நூலில் அடங்கியுள்ள பன்னிரெண்டு இடதுசாரி இயக்க முன்னோடிகளின் அர்பணிப்பு மிக்க வாழ்க்கையிலும் அரசியற்-சமூகஈடுபாடுகளிலும் இதுவரை அறியப்படாதிருந்த பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து வருகின்றவையாக சிலப் பதிவுகளும், – கூடவே அவர்கள் பற்றிய சில விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய விளக்கங்களுடே தொழிற்பட்டு நிற்கும் கருத்து நிலைகளை நோக்கும் போது அவற்றில் சில பதிவுகள் அவ்வாளுமைகளை கொண்டு இடதுசாரி இயக்க பாரம் பரியத்தை நிலைநிறுத்த முனைகின்றவையாகவும் வேறுசில புரட்சிகரமான சமூகமாற்றத்திற்குற்காக செயற்படக் கூடிய இடதுசாரி கட்சியமைப்பை உருவாக்குவதற்கான எத்தனிப்பாகவும் உள்ளன.
இத்தகையதோர் மானுட அணியில் கால் பதித்து புதியதோர் சமுதாயத்தை நோக்கி நகர்வதே இன்று வடபுலத்து இடசாரிகள் சார்ந்து எழுகின்ற ஆய்வுகளின் தேவையாகும். இடதுசாரி இயக்க முன்னோடிகள் பற்றிய காய்த்தல் உவத்தல் அற்ற ஆய்வுகள் வெளிவரவேண்டியுள்ளது. ஆழமான நுட்பமான மார்க்சிய ஆய்வுகளின் ஊடாகவே அத்தகைய அய்வுகள் சாத்தியமாகும். இந்நூல் இடதுசாரி இயக்க முன்னோடிகள் ஆய்வில் மாத்திமல்லாது இடதுசாரி இயக்க வரலாற்றாய்வுப் பிரச்சனையொன்று தொடர்பாகவும் முக்கியத்துவமுடையது. பொதுவுடமை இயக்கம் சாந்த அமைப்பாக்க பணிகளை முன்னெடுத்து செல்கின்றவர்களுக்கும் தத்துவார்த்த தளத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும் இது பற்றிய முழுமையான தேடுதல் அவசியமானதாகும். இப்பணி மிகவும் சிக்கலானதும் கடினமானதும் ஆகும். இப்பணிக்காக அர்பணித்துக்கொண்ட ஆய்வாரள்கள், நிதி, கால அவகாசம் என்பன போக மணிதர்களுக்கு இருக்க இயல்பாக இருக்க கூடிய மறதியுணர்வும் கூட இப்பணியினை சிக்கலாக்கியுள்ளது. இவ்வாறானதோர் சூழலில், இன்னொரு விடியலுக்காய் மனித சமூகத்தின் சிகரத்தை எட்டிப் பிடிக்க கடின உழைப்பை மேற்கொள்ளும்; வரிசையில் வடபுலத்து இயடசாரி முன்னோடிகள் என்ற இந்நூலும்; தன் வரவை பதிவ செய்துக் கொள்ளும் என நம்புகின்றேன். அந்தவகையில் வட பலத்து இடதுசாரிகள் பற்றிய தேடலையும் ஆய்வினையும் வெளிக்கொணர்வதற்கான முதலடியாகவும் இந்நூலை கொள்ளலாம். தொடர்ந்;து வெளிவர வாழ்த்துக்கள்.