Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்கா விவகாரம் – தொடரும் கொலை மிரட்டல்களும் அழியும் ஊடக சுதந்திரமும்

ஜானகி விஜயரத்ன
ஜானகி விஜயரத்ன

லைக்கா தொடர்பான செய்திகளை வெளியிட்ட பின்பு ‘சேவை மறுப்புத் தாகுதல்களால்’ இனியொரு மற்றும் லங்காநியூஸ்வெப் ஆகிய இணையங்கள் முடக்கப்பட்டமை தெரிந்ததே. இந்த இரண்டு இணைய ஊடகங்கள் மீதும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெறுகின்ற போதிலும் இனியொரு இணையம் குறித்த செலவிலான முன்னரங்க பாதுக்காப்புச் சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் தலைமை என்று கூறிக்கொள்கின்றவர்கள் களியாட்டங்களிலும், சடங்கு நிகழ்வுகளிலும் பிஸியாகிவிட ஊடகங்களில் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் முற்றாக அழிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. மிரட்டல்களும், அனாமோதய மின்னஞ்சல்களும் கொலை அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன.

முடக்கப்பட்ட லங்காநியூஸ்வெப் சமூக வலைத் தளங்களின் ஊடாக வெளியிட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில், ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக 2005 ஆம் ஆண்டு லைக்கா 200 மில்லியன் ரூபாய்கள் தேர்தல் பணமாக வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜானகி விஜயரத்ன என்ற பெண் ஒருவர் ஊடாகவே பசில் ராஜபக்சவிற்கு 2005 ஆம் ஆண்டு இப் பணத்தொகை வழங்கப்பட்டதாக லங்காநியூஸ்வெப் செய்திகள் தெரிவித்தன.

ஜானகி விஜயரத்ன தொடர்பான செய்திகளைத் திரட்டிய போது அவர், லைக்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வெக்டோன் மொபைல் உடன் தொடர்புடைய பரபுளூ மற்றும் முன்டியோ ஆகிய நிறுவனங்களின் இயக்குனர் என்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் பிரபல நடிகையன ஜானகி விஜயரத்ன தனது லிங்டின் பக்கத்தில் முன்டியோவில் பணியாற்றுவதாகக் குறிப்பிடுள்ளார். பாஸ்கரன் அல்லிராஜா – சுபாஸ்கரன் அல்லிராஜாவின் மூத்த சகோதரர், இந்த நிறுவனத்தின் இயக்குனராகப் பல்வேறு காலப்பகுதிகளில் பதிவு செய்துள்ளார்.

லங்காநியூஸ்வெப் தகவல்களின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு குறித்த பணத்தொகை ராஜபக்ச குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் 2006 ஆம் ஆண்டளவில், ராஜபக்சவின் மத்துனருடன் இணைந்து இலங்கை அரச பணத்தில் 100 மில்லியன் டொலர்களை லைக்கா சுருட்டிகொண்டதாக சண்டேலீடர் தகவல் வெளியிட்டது. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் லைக்கா- சிறீலங்கா ரெலிகொம் ஊடாகவே புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்குத் தொலைத் தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றன.

ஆக, லைக்கா ராஜபக்ச குடும்ப உறவு இனப்படுகொலைக்குத் துணை போயிருப்பதையும், பல்தேசிய நிறுவனங்களின் நலன்களுக்காகவே இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதும் தெளிவாகின்றது.
இதன் பின்னர் இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டிற்கு லைக்காவ் பிரதான அனுசரணையாளராகச் செயற்பட்டமை தெரிந்ததே.

இனப்படுகொலையின் பின்னர் புலம்பெயர் ஊடகங்கள் அனைத்தும் லைக்கா – லிபாரா நிறுவனங்களால் உள்வாங்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனச்சுத்திகரிப்பைத் தொடர்ந்து நடத்தவும், இலங்கையைச் சூறையாடவும் பல்தேசிய நிறுவனங்கள் துணை செல்கின்றன. இவை சேவை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்பு கண்காணிக்கபடுவதில்லை.

2005 ஆம் ஆண்டிலிருந்தே இனப்படுகொலை அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் பொருளாதாரத் தளங்களில் இணைந்து செயற்படும் லைக்கா நிறுவனத்தின் நிதியைப் பெற்றுக்கொண்டு புலம்பெயர் நாடுகளில் அரசியல் விடையங்களில் உலாவரும் மாபியாக் கும்பல்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். இச்சட்டவிரோத மாபியாக்களில் ஒருவர் லங்காநியூஸ்வெப் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி ஒன்றின் வாயிலாகக் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களிலும் உள்நுளையும் இப் பல்தேசிய நிறுவனங்கள், கலை, கலாச்சாரம், செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சிகள், தொலைத் தொடர்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.
பல்தேசியப் வியாபார வெறியர்களின் பணத்தில் இயங்கும் ஊடகங்களைப் புறக்கணிப்பதும், மக்கள் சார்ந்த ஊடகம் ஒன்றை உருவாக்குவதும் இன்றைய அவசரத் தேவை. இதிலிருந்து தவறினால் எஞ்சியிருக்கும் சிறிய சுதந்திர இடைவெளியும் அழிக்கப்படுவது தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிடும்.

பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

லைக்கா : குருதிபடிந்த கரங்கள்

இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

வியாபாரி! : விஜி.

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

 

Exit mobile version