Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்

பொதுநலவாய மாநாட்டில் லைக்கா விளம்பரத்தோடு மகிந்த
பொதுநலவாய மாநாட்டில் லைக்கா விளம்பரத்தோடு மகிந்த

லைக்கா மோபைல் நிறுவனத்தின் உரிமையாளரும். சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பிரதான முகவரான லைக்கா பிளை, லைக்கா புரடக்ஷன் ஆகியவற்றை நடத்திவருபவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தமிழ் ஊடக மாபியாக்கள் கட்டுக்கதை ஒன்றை பரப்பினர். அதிர்வு இணையம், தீபம் தொலைக்காட்சி, தமிழ்வின் இணையம் ஆகியவற்றில் இப் பொய்ச் செய்தி பரப்பப்பட்ட, சீமான் கும்பல் அதனை உள்வாங்கிப் பிரசாரத்தில் இறங்கியது. கைதான செய்திய ஐரோப்பிய நேரம் இன்று மாலைவரை பரப்பிய இந்த ஊடகங்கள் இறுதியில் எதிர்பார்த்தபடி சுபாஸ்கரன் விடுதலையானார் என்ற செய்தியையும் வெளியிட்டன.
நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு இச் செய்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பரப்பப்பட்ட போதிலும் இறுதியில் மிகப்பெரும் ‘சொதப்பலில்’ முடிவுற்றது.

வெளியான செய்தியின் சாரம்:

‘மாலை தீவிலிருந்து லண்டன் விமான நிலையத்தை நோக்கிப் பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த பணக்காரர்களில் ஒருவரான சுபாஸ்கரனின் விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரித்து நின்றது. விமானத்தினுள் நுளைந்த இலங்கை அரச உளவுப்படை சுபாஸ்கரனையும் உதவியாளரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது.’

திருட்டுச் செய்தியின் ‘சொதப்பல்’ இதுதான்:

விமானம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும் போது இடையில் தரித்து நிற்கும் மூன்றாவது நாட்டின் இடைத்தங்கல் -Transit- பகுதி அந்த மூன்றாவது நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. அதாவது, மாலைதீவிலிருந்து பிரித்தானியா சென்ற விமானம் இலங்கையில் தரித்து நிற்கும் இடைத்தங்கல் பகுதி இலங்கை அரசின் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. அங்கு சர்வதேசச் சட்டத்திற்க்கு புறம்பன விடையங்களான கடவுச்சீட்டு மாறாட்டம்,போதைப்பொருட் கடத்தல், வெடிகுண்டுகளைப் பயன்படுத்தல் போன்ற விடையங்கள் மட்டுமே ஆராயப்படலாம். அதிலும் சுபாஸ்கரன் விமானத்தின் உள்ளே வைத்தே கைது செய்யப்பட்டார் என்கிறது பொய்ச் செய்தி. லண்டன் மில்லியனேரை விமானத்தினுள் வைத்துக் கைது செய்து தடுத்து வைத்தமைக்காக இலங்கை அரசிடம் பில்லியன் பவுண்ஸ்கள் நட்டைஈடு கோரலாம். அதுமட்டுமன்றி சர்வதேசச் சட்டங்களுக்குள் இலங்கை அரச விமானச் சேவைத் துறையைச் சிக்கவைக்கலாம்.

பிரித்தானியாவில் ஆளும் கட்சியின் முதல் பத்து நிதி வழங்குனர்களில் ஒருவரும், ராஜபக்ச குடும்பத்தின் வியாபாரப் பங்காளியுமான சுபாஸ்கரனை இலங்கை அரசு கைது செய்தது என்று அப்பாவி மக்களின் காதில் பூச்சுற்றுகிறார்கள். விட்டால் மகிந்த ராஜபக்ச வெள்ளவத்தைப் போலிசாரால் கைது செய்யப்பட்டு அண்ராயரோடு அடைக்கப்பட்டுள்ளார் என்று நாளை செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஊடக மாபியாக்கள் வெளியிட்ட செய்தியில்,

ஐரோப்பிய ஒன்றியன் புலிகளின் தடை நீக்கியது தொடர்பாக சுபாஸ்கரனிடம் இலங்கை அரசு கேள்வி எழுப்பியதாகக் கூறுகின்றன. Transit பகுதியில் தரித்து நின்ற விமானத்திற்குள் நுளைந்து ஒருவரை இலங்கை அரச விவாகரம் தொடர்பாகக் கேள்வியெழுப்ப முடியாது.

அப்பாவி மக்களை மந்தைகள் கூட்டம் என்று எண்ணிக்கொள்ளும் இந்த ஊடக வியாபாரிகளின் அருவருக்கத்தக்க பண வெறி லைக்காவைப் புனிதப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

பொய்ச் செய்தியைப் பரப்பிய ஊடகங்கள்:

1. அதிர்வு:

இலாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்டியங்கும் புலம்பெயர் ஊடகங்களில் அதிர்வு பிரதானமானது. மகிந்த ராஜபகசவைத் தலைவராக்கும் நோக்குடன் இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டிற்கு கோல்டன் ஸ்பொன்சராக லைக்கா பெரும்தொகைப் பணத்தை வாரி வழங்கிய காலப்பகுதியிலேயே சிங்கக்கொடியோடு லைக்கா விளம்பரத்தைப் பிரசுரித்த அதிர்வு அந்த நிறுவனத்திற்கு ஆதரவான செய்திகளையும் வெளியிட்டுவந்தது.
தென்னிந்தியாவில் கத்தி படம் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே லைக்காவின் ஊதாங்குழல் போன்று செயற்பட்ட இந்த இணையம் புலம்பெயர் போலித் தேசியவாதிகளின் ஆதரவைப் பெற்றது.

2.தமிழ்வின் இணையம்:

‘மகிந்த ராஜபக்ச அவர்கள் மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்தார்’ என்று ஆரம்பிக்கும் இனக்கொலை ஆதரவுச் செய்திகளையும் எந்தக் கூச்சமும் இன்றி வெளியிடும் தமிழ்வின்னைப் பொறுத்தவரை செய்தி என்பது காசு,பணம், துட்டு, மணிமணி….! இலங்கை அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வதற்காகவும், பிரித்தானியாவில் வரிகட்டாமல் தப்பித்துக்கொள்ளவும் லைக்கா இலங்கையில் வீசும் எலும்புத்துண்டுகளை சேவை என்று செய்தியும் கட்டுரையும் வெளியிட்ட தமிழ்வின் ஒடுக்கப்படும் சமூகத்தின் சாபக்கேடு.

3.தீபம் தொலைக்காட்சி:

ஏற்கனவே லைக்கா-லிபாரா மோதலில் லிபாரவோடு முரண்பட்டுக்கொண்டு லைக்கா விளம்பரங்களில் செயற்பட்டுவந்த தீபம் தொலைக்காட்சிக்கு ஊடகத் துறை என்பது வியாபாரத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஊடக தர்மம் என்ற அடிப்படை வரைபுகளைகளிருந்து மக்கள் சார்பு நிலை என்ற அனைத்தையும் பணத்தின் ஊடாகவே அணுகும் தீபம் தொலைக்காட்சி லைக்காவைப் புனிதப்படுத்த விரும்பியது வியப்பானதல்ல.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளியின்றிச் சூறையாடப்படும் ஈழத் தமிழத் தேசிய இனத்தின் மரண ஓலத்தைக்கூடத் தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் இவர்கள் இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. பச்சிழம் குழந்தைகளும், சிசுக்களைச் சுமந்த கர்ப்பிணைத் தாய்மார்களும். வரலாற்றின் சோகத்தைச் சுமந்த முதியவர்களும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட போது ராஜபக்சவோடு வியாபாரம் செய்துக்கொண்டிருந்த லைக்காவைப் புனிதப்படுத்தும் இந்த ஊடகங்களிடம் தர்மத்தையும் அறத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும். அவர்களைப் பொறுத்தவரை நாளாந்தம் கட்டவிழ்த்துவிடும் ஆயிரம் பொய்களில் இதுவும் ஒன்று. ஒரு வேறுபாடு – இதற்கு மட்டு சற்று அதிகமாகத் துட்டுக் கிடைக்கும். இந்த ஊடகங்களை காணும் மக்கள் அவமானத்தை உணரவேண்டும்.

லைக்கா தொடர்பாக ஊடகங்களில் பேசப்படுவது வெறும் கட்டுக்கதைகள் அல்ல, ஆதாரங்களோடு முன்வைக்கப்படும் ஆவணங்கள்!

லைக்காவை முதலில் அம்பலப்படுத்தியது தமிழ் ஊடகங்கள் அல்ல. ராஜபக்சவால் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் ஊடகமான் சண்டே லீடர். அபோதெல்லாம் லைக்காவை யாரும் கண்டுகொண்டதில்லை. லசந்த படுகொலை செய்யப்பட்ட போது லைக்கா-இலங்கை அரசு இணைந்த ஊழலான நூறு மில்லியன் டோலர்கள் வியாபாரம் ஒபந்த இலக்கங்களோடு சண்டேலீடர் வெளிக்கொண்டுவந்திருந்தது.

இனக்கொலை அரசிற்கு உலக அங்கீகாரம் வழங்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த லைக்கா பிரதான நிதிவழங்குனராகச் செயற்பட்டு அதில் கலந்துகொண்ட போது தான் இனியொருவில் ஆரம்பித்து தமிழ் ஊடகப்பரப்பில் லைக்காவின் அரசியல் தலையீடு பேசப்பட்டது. அதுவரை கண்டுகொள்ளப்படாமலிருந்த லைக்காவின் அரசியல் தலையீடு தொடர்பான ஆதரங்கள் பொது நலவாய நாடுகளின் பின்புலத்தில் வெளியாக ஆரம்பித்தன.

இலங்கை அரசுடன் அதுவும் ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து நூறு மில்லியன் டொலர் ஊழல், இராணுவ உலங்கு வானூர்தியில் லைக்கா உரிமையாளரின் உலா, கொமன்வெல்த் மாநாட்டில் லைக்காவின் தலையீடு போன்றன ஒரளவாவது மக்களைப் பற்றிச் சிந்திக்கும் ஊடகங்களால் வெளிக்கொண்டுவரப்பட்டன.

முதல் தடவையல்ல…

பிரிடிஷ் பிரதமருடன் சுபாஸ்கரன்

லைக்காவிற்கும் இனகொலை அரசிற்குமான தொடர்பை மறைப்பதற்கான முயற்சி முன்பும் இதே ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் பிசுப்சுத்துப் போனது. .2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லைக்காவைப் புனிதப்ப்படுத்தி அந்த நிறுவனம் இலங்கை அரசிற்கு எதிரானது என்ற நாடகத்தை அதிர்வு இணையமும் இலங்கை அரச ஊடகங்களும் இணைந்து நடத்த ஆரம்பித்தன. இச்செய்தியின் பின்னர் லைக்கா மோபைல் நிறுவனம் இலங்கை அரச விருந்தாளிகளாகச் சென்ற நிழல்படங்ள் வெளியானதைத் தொடர்ந்து அந்த நாடகம் தோல்வியில் முடிந்தது. இப்போது தமிழ்வின், தீபம் ஆகியவற்றின் துணையோடு மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது.

இலங்கை அரச ஆதரவோடு லைக்காவைப் புனிதப்படுத்தும் அதிர்வு இணையம்

ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தில் கலை, கலாச்சாரம், ஊடகம், அரசியல் என்ற அனைத்துத் தளத்திலும் லைக்கா செயற்படுகிறது. அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்ட நிகழ்வும் லைக்காவிம் பணத்திலேயே நடைபெற்றது.

சீமானும் லைக்காவும்:

லைக்கா தொடர்பான இவ்வளவு ஆதாரங்கள் வெளியான பின்பும் அந்த நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நன்றி தெரிவித்தும் அறிக்கைகள் வெளியிடும் சீமானிற்கு இவையெல்லாம் வெறும் பிழைப்பு மட்டுமே. பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் அருவருப்பான அரசியல் நடத்தும் சீமான், ஈழப் போராட்டத்தின் எதிரிகளும் ராஜபக்சவோடு வியாபாரம் நடத்தும் எஸ்.ஆர்.எம். பச்சைமுத்து, லைக்கா சுபாஸ்கரன் ஆகியவர்களின் கூட்டாளி. இவர்களுக்குத் தேசிய முகமூடி அணிவித்து வியாபாரத்தை இணைந்து நடத்தும் சீமான் என்ற அரசியல் கோமாளி ஈழப் போராட்ட அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

சுபாஸ்கரன் கைது என்ற பொய்ச் செய்தி வெளியானதும் சிமானின் வால்கள் முகநூலில் விசிலடிக்க ஆரம்பித்துவிட்டன. ரஜனியையும் விஜையையும் பார்த்தே அரசியல் கற்றுக்கொண்ட இவர்கள், ஈழப் போராட்டம் என்ற சினிமாக் கொட்டகையில் குவாட்டரோடு உட்கார்ந்துகொண்டு விசிலடிப்பதை அரசியல் என்று எண்ணுகிறார்கள். அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடும் இவர்கள் எமக்கு உள்ளிருந்து அதிகாரவர்க்கத்தைப் பலப்படுத்துகிறார்கள்.

சுபாஸ்கரன் கைது உண்மையானால்..

இரும்பைத் தங்கமாக்குதல், செத்தவனை உயிர்ப்பித்தல் போன்ற அற்புதங்களையெல்லாம் நம்பியே வளர்ந்த தமிழ் முட்டாள்களின் உலகம் எண்ணுவது போல மகிந்தவின் நண்பர் சுபாஸ்கரன் ஒருவேளை கைதாகியிருந்தால் என்ற கற்பனை கூடப் பொருந்தவில்லை.

இலங்கை அரசு நடத்தும் சிறீலங்கன் ஏர் லைன்சின் பிரித்தானிய முகவர் லைக்கா நிறுவனம்.

சரி, ராஜபக்சவிற்கும் சுபாசிற்கு ஊடல் என்றால் கூட இந்த நிறுவனத்தை முடக்குவதற்கு ராஜபக்சவிற்கு நாளாகாது. தவிர, லைக்காவிற்கு கொழும்பில் அலுவலகம் உண்டு, அங்கு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். நூறு மில்லியன் ஊழல் நிறுவனம் இன்னும் இயங்குகிறது. இவற்றையெல்லாம் ராஜபக்ச ஒரு நாளைக்குள் அழிக்க முடியாதா என்ன?
சுபாஸ்கரன் கைதானதாகப் பரப்பப்பட்ட வதந்தி லைக்காவைப் புனிதப்படுத்தவே! தென்னிந்தியாவில் சினிமாத் துறைக்குள் லைக்காவை நிரந்தரமாகப் புகுத்தவும், புலம்பெயர் நாடுகளில் தமிழர்களில் தலையில் மிளகாய் அரைக்கவும் இப் புனிதப்படுத்தல் தேவைப்படுகின்றது. இதற்கு ஊடகங்கள் துணை போகின்றன.

உண்மையை எழுதவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை பாசிச அரசின் பிடியில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் சிக்கிச் சிதைந்து போயினர். பலர் கொல்லப்பட்டனர். பலர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். பலர் மிரட்டப்பட்ட்டு நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டனர்.

இவ்வாறனா சூழல் புலம்பெயர் நயவஞ்சக ஊடகவிலாளர்கள் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சாபக்கேடுகள்.

தொடர்புடைய பதிவுகள்:

பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்

ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்

லைக்கா : குருதிபடிந்த கரங்கள்

இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா

லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு

சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

வியாபாரி! : விஜி.

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

 

Exit mobile version